சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Today at 5:48

» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Today at 5:45

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44

» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

சமூக சிந்தனை கவிதைகள்  Khan11

சமூக சிந்தனை கவிதைகள்

Go down

சமூக சிந்தனை கவிதைகள்  Empty சமூக சிந்தனை கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon 10 Oct 2016 - 18:38

நல்ல பழங்களை .....
தட்டில் அடுக்கி வைத்து .....
நலிந்த பழங்களை.......
கொடையாய் கொடுக்கும் .....
கலியுக தர்மவான்கள்.......!!!

பகட்டுக்கு பிறந்தநாள் .....
பலவிதமான அறுசுவை .....
உணவுகள் - நாலுபேர் .......
புகழாரம் .......
விடிந்த பின் பழைய சாதம் .....
ஏழைகளுக்கு அள்ளி....
கொடுக்கும் .......
கலியுக தர்மவான்கள்.......!!!

&
சமூக சிந்தனை கவிதைகள் 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சமூக சிந்தனை கவிதைகள்  Empty Re: சமூக சிந்தனை கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon 10 Oct 2016 - 19:13

ஓடுகின்ற பேரூந்திலே 
ஓடி ஓடி  ஏறினாய் ....
ஒற்றை கையால் உன்னை ....
நீயே செல்ஃபி  எடுத்தாய் ....!!!

வேகமாய் வரும் ரயிலை ......
எதிராய் நின்று உன்னை ....
நீயே செல்ஃபி  எடுத்தாய் ....!!!

பாழடைந்த கிணற்றுக்குள்  ......
நுனிவிரலில் நின்றுஉன்னை 
நீயே செல்ஃபி  எடுத்தாய் ....!!!

ஊட்டி வளர்த்த தாயை ..........
நினைத்துப்பார்த்தாயா ...?
தூக்கி வளர்த்த தந்தையை ....
நினைத்தாயா...?

உன்னை ......
நீயே செல்ஃபி  எடுத்தாய் ....!!!
உன்னை நாம் புகை படமாய் ......
பார்க்கிறோம் .......!!!

&
சமூக சிந்தனை கவிதைகள் 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சமூக சிந்தனை கவிதைகள்  Empty Re: சமூக சிந்தனை கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue 18 Oct 2016 - 17:14

எத்திசை பார்த்தாலும் .....
செத்து கொண்டிருக்கிறது.....
உலகம்- குற்றுயிரும்.....
குறையுயிருமாய் 
செத்துகொண்டிருக்கிறது......
உலகம்........!!!

பத்திரிகையை விரித்தால்....
பத்துவயது சிறுமி ......
வண்கொடுமை .........
தொலைக்காட்சியை போட்டால்.....
கள்ளதொடர்பால் .......
மனைவி வெட்டிகொலை ......
சமூகதளங்களை.......
பார்த்தால் கூட்டமாக.....
சுட்டுகொல்லும் வீடியோ...........!!!

வயிற்றை நிரப்ப பட்டினி போராட்டம்.......
தற்பெருமை பேசிய அரசியல் போராட்டம்.....
மதவெறி போராட்டம்......
இனவெறி போராட்டம்......
சுயநல போராட்டம்......
சுயநலத்துக்காய் அரசியல் போராடம்.......!!!

எத்திசை பார்த்தாலும் .....
செத்து கொண்டிருக்கிறது.....
உலகம்- குற்றுயிரும்.....
குறையுயிருமாய் 
செத்துகொண்டிருக்கிறது......
உலகம்........!!! 

&
சமூதாய கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சமூக சிந்தனை கவிதைகள்  Empty Re: சமூக சிந்தனை கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed 19 Oct 2016 - 17:09

வறுமையின் நிறம் கொடுமை
-------------

பத்து பாத்திரம் .....
வீடு வீடாய் கழுவுவத்தும் ....
எனக்கு ஒரு சுகம் ....
இருக்கத்தான் செய்கிறது .....
கழுவும் வாசனையில் ....
என் மனமும் வயிறும் .....
நிரம்புகிறது .........!!!

&
வறுமையின் நிறம் கொடுமை 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சமூக சிந்தனை கவிதைகள்  Empty Re: சமூக சிந்தனை கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed 19 Oct 2016 - 20:01

எவ்வளவு தான் ...
முயற்சித்தாலும் வெற்றிக்கு ..

என் 
வாசல் படி தெரியவில்லை ...
குட்டியை வீடு வீடாக வாவிவரும்
பூனைபோல் தோல்வி மட்டும் ..

தொடர்ந்து வருகிறது ..
விடமாட்டேன் ...?

விஞ்ஞானிகள் ....
பலரின் வாழ்க்கையை....
கற்றிருக்கிறேன் தோல்வி ....
என்னும்...
கயிற்றில் தூக்கு ....
போட்டு வென்றவர்கள் ....!

&
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சமூக சிந்தனை கவிதைகள்  Empty Re: சமூக சிந்தனை கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu 20 Oct 2016 - 18:07

இயந்திர உலகில் .........
ஓடிக்கொண்டிருப்பது ..
கடிகாரமில்லை ...!

நீதான்
பெரியமுள் - உன் ஆயுள்...
சிறியமுள் -உன் உயர்வு...
வினாடி முள் -உன் முயற்சி...
வேக வேகமாக முயற்சி செய் ..
நேரம் பொன்னானது .....
முன்னோர் சொன்னது ..!!!

&
சமுதாய கவிதை 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சமூக சிந்தனை கவிதைகள்  Empty Re: சமூக சிந்தனை கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu 20 Oct 2016 - 18:20

இதயத்தை .....
கிள்ளிப்பார்த்துவிட்டு ......
வலிக்கிறதா என்று கேட்டால் ...
காதல் ...!!!

இதயத்தை ......
கிள்ளிப்பார்காமலே ...
வலிக்கிறதா என்று கேட்டால் ...
நட்பு ...!!!

இதயத்தில் ....
இருந்துகொண்டு ....
கிள்ளிக்கொண்டே ....
இருந்தால் .......
மனைவி ..........!!!

&
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சமூக சிந்தனை கவிதைகள்  Empty Re: சமூக சிந்தனை கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu 20 Oct 2016 - 18:30

நண்பா ....
அறிவுரை கேட்பாயா ...?
மனம் திறந்து பேசு ....
மனதில் பட்டதெல்லாம் ..
பேசாதே ....
சிலர் புரிந்து கொள்வார்கள் ...
சிலர் பிரிந்து செல்வார்கள் ....
இரண்டிலும் நன்மைகளும் .....
தீமைகளும் உண்டு .....

&
கவிப்புயல் இனியவன் 
நட்பு  கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சமூக சிந்தனை கவிதைகள்  Empty Re: சமூக சிந்தனை கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu 20 Oct 2016 - 18:45

காதல் ஒரு காவியம்.......
காவியகதைகளில்.........
சோகங்கள் உண்டு........ 
சோகத்தை தாங்க .........
தயாராக இரு .............!!!

காதல் ஒரு சமுத்திரம்......
விழுந்தால் மூழ்குவாய்.......
மூழ்காமல் இருக்க......... 
கற்றுக்கொள் .............!!!

காதல் ஒரு கத்தரிக்காய்.......
சிலவேளை புரியும் ...............
சில வேளை ருசிக்கும் ...........
சில வேளை கருகும் ............!!!

காதல் ஒரு கானல் நீர்....
உண்மைபோல் .....
சில விடையங்கள் தெரியும் ........
ஆனால் அது முழுப்பொய்..........!!!

காதல் ஒரு கண்ணாடி ........
உன்னையே நீ பார்த்து........ 
சிரிப்பாய் அழுவாய் ........!!!

காதல் ஒரு கற்பூரம்............
காதல் வெற்றியோ தோல்வியோ............ 
அடைந்தால் இறுதியில் ................
ஒன்றுமே இல்லை என்று ...............
உணரப்பண்ணும்.........!!!

காதல் ஒரு காற்று..............
தென்றலும் உண்டு ..............
புயலும் உண்டு ...............!!!

காதல் ஒரு நட்பு ...........
தியாகம் செய்யத்தயாராக ............
இரு நட்புதான் கலங்காமல்.......... 
தியாகம் செய்யும்..............!!!

காதல் ஒரு கற்பு ...........
உடலும் உணர்வும் தண்டவாளம்...........
போன்றது காதலிக்கும் ............
போது இவை இணையக்கூடாது ......!!!

காதல் ஒரு கலாச்சாரம் .........
காதலின் பண்பாடும் ............
பழக்கங்கலும் மரபு வழியாக ..............
கடத்தும் பண்போடு..............
காதலிக்கவும் .................!!!

காதல் ஒரு ஆசான் .......
வலியாலும் வெற்றியாலும்...............
வாழ்க்கை வரும் அதனால் ...............
உனக்கு கவிதையும் வரும்..............
தமிழ் தாய் வளர்தெடுப்பாள்...........!!!

காதல் தான் ...............
உலக வாழ்க்கை ................
காதலில்லாமல் வாழ்ந்திடாதே ............
வாழவும் முடியாது ............!!!

&
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சமூக சிந்தனை கவிதைகள்  Empty Re: சமூக சிந்தனை கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu 20 Oct 2016 - 19:10

மழலைப் பருவத்தில் நட்பு : 
-------------
உனக்கு என்னைத்தெரியாது .......
என்னை உனக்கு தெரியாது...........
நீயும் கையசைத்தாய் நானும் ......
கையசைத்தேன் .......
அதில் புரியாத சுகம்.........!!!

குழந்தைப் பருவத்தில் நட்பு : 
------------
நீயும் நானும் விளையாடுவோம் .....
கிடைத்தவற்றால் அடிபடுவோம்.... 
மீண்டும் சந்திப்போம் ......
பகமையென்றால் ....
என்ன என்றே தெரியாத நட்பு ..!!!

காளைப் பருவத்தில் நட்பு :
----------
சுற்றுவதற்கு நட்புத்தேவை .....
வீண் சண்டைக்கு நட்புத்தேவை ..
இளங்கன்று பயமறியாத நட்பு ...!!!

வாலிபப் பருவத்தில் நட்பு : 
_________
என் வலியையும் சுகத்தையும் ....
சொல்லவும் கேட்கவும் ஆறுதல் ....
தரவும் நட்புத்தேவை ....!!!

முதிர்ந்த பின் நட்பு :
------------
வாழ்க்கையின் துன்பங்கள் ...
துயரங்கள் இழப்புக்களை ...
அனுபவங்களைப்பகிர்ந்து ....
கொள்ளஒரு நட்பு தேவை ..!

&
நட்புடன் 
உங்கள் 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சமூக சிந்தனை கவிதைகள்  Empty Re: சமூக சிந்தனை கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu 3 Nov 2016 - 17:08

புகையிரத பாதை .....
சமாந்தரமாக செல்கிறது .....
மின்சார வடமும் .....
சமாந்தரமாக செல்கிறது .....
சமாந்தரங்கள் சந்தித்தால் ......
அழிவுதான் ......
வாழ்க்கையை சமந்தரமாய் .....
கொண்டு செல்லாதீர்கள் .....
விரக்தியில் முடிந்துவிடும் .....!!!
&
சமூக சிந்தனை கவிதைகள் 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சமூக சிந்தனை கவிதைகள்  Empty Re: சமூக சிந்தனை கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon 7 Nov 2016 - 17:04

தொடர்ச்சியான வரட்சி ....
மறு புறம் விவசாய கடன்....
நதிநீர் பிரச்சனை ....
நியாய விலை இன்மை ...
விவசாயி எங்களை 
என்ன செய்ய சொல்லுகிறீர்கள் ...?

நாங்கள் பொறுத்தது போதும் ..
போராடப் போகிறேம்  ......
நாளை முதல் என் மனைவியும் .....
பிள்ளைகளும்......
வீதிக்கு வருவார்கள் .....!!!

எங்களுக்கு துப்பாக்கி தாருங்கள்...
அரசுக்கு எதிராக போராட என்று .....
கேட்கமாடோம் ........!!!

ஒரு நெல் மூடை தாருங்கள் ......
இல்லையே ஆக குறைந்தது.......
ஒரு பானை சோறு தாருங்கள் .....
எங்கள் வறுமையோடு ......
போராடுவதற்கு ..................!!!

&
பொருளாதார கவிதை 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சமூக சிந்தனை கவிதைகள்  Empty Re: சமூக சிந்தனை கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu 17 Nov 2016 - 18:38

இளைஞனே ....!
முடியாது என்று நீ 
நினைப்பதையெல்லாம் .....!!!

உலகில் ஏதோ ஒரு .....
மூலையில் யாரோ ஒருவன் ..
செய்துகொண்டிருக்கிறான் .....
நீ அறியாமல் யாரோ .......
செய்து விட்டான் ...

விமானத்தை .......
கண்டுபிடிக்க முடியாது ..
அணுவை பிரிக்க முடியாது ...
என்றுதான் உலகம் சொன்னது ...
கண்டுபிடிக்கப்படவில்லையா ...?
விழித்துக்கொள் ...!
உன் வெற்றி பறிபோய்விடும் ..?
&
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சமூக சிந்தனை கவிதைகள்  Empty Re: சமூக சிந்தனை கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Fri 25 Nov 2016 - 18:41

சிதறி ....
கொட்டி கிடப்பவை.... 
குப்பைகள்மட்டுமல்ல ....
நீ அறிந்ததும்.......
அறியாததுமான ......
நோய்களும் தான் .......!!!
நீ கொட்டுவது ......
குப்பை மட்டுமல்ல ...?
உன் ஆயுளையும் ....
உன் சந்ததியின்........
ஆயுளையும்தான் ....?

&
சமுதாய கவிதை 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சமூக சிந்தனை கவிதைகள்  Empty Re: சமூக சிந்தனை கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Fri 25 Nov 2016 - 18:49

காதல் பைத்தியம் 
-------
காதலரின் பெயரை சுவரில்
மற்றும் கையில் எழுதுபவர்கள் ..!

காதல் முட்டாள்கள் 
-------
காதலருடன் சண்டையிட்டபின்
காயங்களை ஏற்படுத்துபவர்கள் 
தனக்கு தானே கையை வெட்டுதல் 
.மற்றும் சூடு வைத்தல்..!

காதல் கோழைகள் 
--------
காதலில் தோற்றதும் 
தற்கொலை செய்பவர்கள் ...!

காதல் வெறியன் 
--------
காதலின் பெயரில் ஏமாற்றி 
கற்பை சூரையாடுபவன் ...!

காதல் கொலைகாரன் 
--------
காதல் நிறைவேற்றவில்லை
என்றவுடன் பழிவாங்க துடிப்பவன் ...!

காதல் பயங்கரவாதி 
---------
காதலியின் முகத்தில்
அசிட் வீசுபவனும் 
கொலைசெய்பவனும்...!

&
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சமூக சிந்தனை கவிதைகள்  Empty Re: சமூக சிந்தனை கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Fri 25 Nov 2016 - 19:21

நான் பறித்த கடைசி பூ
கவிப்புயல் இனியவன் 2013 
-----------
சாமிக்கு பூ பறித்து ..
வைப்பதை பழக்கமாக கொண்டவன் ..
சட்டென்று ஒருநாள்-பூவை
பறித்த என்மனதில் ஒரு -சஞ்சலம்
மரத்தை பார்த்தேன் -அதன் அழுகையை
மலரை பார்த்தேன் -அதன் ஏக்கத்தை
தாயையும் பிள்ளையையும் பிரித்த சோகம்
இதுதான் நான் பறித்த கடைசி பூ
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சமூக சிந்தனை கவிதைகள்  Empty Re: சமூக சிந்தனை கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Fri 25 Nov 2016 - 19:40

இவன் ....
காதல் தோல்வியால் ...
கவிஞனாக வில்லை ...
எல்லாவற்றிலும் ...
காதல்  கொண்டதால் ...
கவிஞன் ஆனவன்.....!!!

&
கவிப்புயல் இனியவன்
இதுதான் உண்மை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சமூக சிந்தனை கவிதைகள்  Empty Re: சமூக சிந்தனை கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Fri 25 Nov 2016 - 19:51

கடலளவு ....
கற்பனையுடன் ...
காட்டாற்று ...
வெள்ளமாய்க்கரை...
புரண்டு ...
வந்த வார்த்தைகள் ...
எல்லாம் கன்னியவள்.... 
கன்னக்குழிக்குள் ...
கச்சிதமாய் மறைந்து விட்டன .....!!!

சொல்ல நினைத்துத் ...
துடித்தவை தொண்டைக்... 
குழிவறை வந்து ...
இருதலைக்கொள்ளிபோல் ...
திணறிக்கொண்டு ...
தடுமாறுகிறது ....! 

ஒத்திகை பார்த்து 
வந்த வசனங்களும் உன்
ஓரவிழிப் பார்வைக்கு 
முன்னே ஓடியேவிடுகின்றன.

கண்டவுடன் 
எப்படி மறைந்து கொள்ளலாம் 
என வெட்கப்படும் உன்னால் 
என் பாடு சொல்ல வழியில்லையே?

இப்போது சொல் பெண்ணே!
என் காதலை உன்னிடம்
எப்படிச் சொலவது?

&
கவிப்புயல் இனியவன் 
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சமூக சிந்தனை கவிதைகள்  Empty Re: சமூக சிந்தனை கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sat 26 Nov 2016 - 12:07

ஒரு கல்லை எடுத்தேன் ..!
நண்பன் சொன்னான் ....
மரத்துக்குஎறியப்போகிறான் ..
என்றான் .....!!!

நண்பி  சொன்னால் ....
அருகில்குட்டைக்குள் ...
எறியப்போகிறான் ......!!!

கையில் இருந்த கல் ...
கெஞ்சியது என்னை ....
ஒருமுறை வானத்தை நோக்கி ....
எறிந்து விடு .........
எனக்கும் உயரபோக .....
விருப்பம் இருகிறது ..............!!!

நாம் ....
பிறர் விருப்பத்தையும் .....
நம் விருப்பத்தையும் ......
நிறைவேற்றுகிறோம் ......
நம்மோடு இருப்பவர்களின் .....
விருப்பத்தை நிறைவேற்ற.... 
தவறுகிறோம் ...............!!!

கணவனின் விருப்தத்தை .....
உறவினர் விருப்பத்தை .....
நிறைவேற்றும் மனைவியின் .....
விருப்பத்தை கண்டறிவோர் சிலரே .......!!!

&
சமூக சிந்தனை கவிதைகள் 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சமூக சிந்தனை கவிதைகள்  Empty Re: சமூக சிந்தனை கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sat 26 Nov 2016 - 12:21

முட்டை ....
கூடை சுமப்பவனே ..!
கவனம் நீ சுமப்பது ....
வெறும் முட்டை அல்ல....
எங்கள் வருங்கால சந்ததி ...!!!

&
சின்ன கவிதை 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சமூக சிந்தனை கவிதைகள்  Empty Re: சமூக சிந்தனை கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sat 26 Nov 2016 - 12:37

இன்று ......
குடும்பங்களின் நிலைமை....
குடும்பத்துடன் போசுவதே ........
கிடையாது ......!!!

இருந்தால் .......
போல் தனியே இருந்து ....
சிரிக்கிறார்கள் ...
மௌனமாக ஓரக்கண்ணீர் .....
வடிக்கிறார்கள் .........!!!

உரத்த குரலில் 
திடீரென கத்துகிறார்கள் ....
உறவினரை கண்டால் ....
வாய்க்குள் ஒரு சிரிப்பு ...........!!!

இத்தனைக்கும் ஆட்டிப்படைக்கிறது ....
தொலைக்காட்சி .....!!!

&
சமூக சிந்தனை கவிதைகள் 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சமூக சிந்தனை கவிதைகள்  Empty Re: சமூக சிந்தனை கவிதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum