சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை
by rammalar Tue 15 Oct 2024 - 21:41

» அது சைஸைப் பொறுத்தது!
by rammalar Sun 13 Oct 2024 - 4:58

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17

» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08

» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44

» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35

» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30

» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32

» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Mon 7 Oct 2024 - 5:43

» வீணை வாசிக்கறது ரொம்ப ஈஸி!
by rammalar Mon 7 Oct 2024 - 4:44

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-6
by rammalar Sun 6 Oct 2024 - 20:22

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4
by rammalar Fri 4 Oct 2024 - 19:17

» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28

» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25

» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24

» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23

» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19

» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18

» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16

» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12

» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06

» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59

» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57

» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58

» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54

» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35

7. என்னைப் பற்றி நான் - துளசி / கீதா Khan11

7. என்னைப் பற்றி நான் - துளசி / கீதா

Go down

7. என்னைப் பற்றி நான் - துளசி / கீதா Empty 7. என்னைப் பற்றி நான் - துளசி / கீதா

Post by சே.குமார் Sun 5 Mar 2017 - 6:19

7. என்னைப் பற்றி நான் - துளசி / கீதா NAAN'என்னைப் பற்றி நான்' என்ற தலைப்பில் எழுதச் சொல்லிக் கேட்டதும் உடனே அனுப்பிக் கொடுத்தார்கள்... என்னைப் பற்றி நான் என்னும் தலைப்பை 'எங்களைப் பற்றி நாங்கள்' என மாற்றிக் கொள்கிறோம் என்ற அன்போடு... இவர்களைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. அனைவரும் அறிந்த பதிவர்கள்... எல்லாரும் விரும்பும் பதிவர்கள்... ஒரு தளத்தில் எழுதும் ஒத்த அலைவரிசை கொண்ட நண்பர்கள்... அவர்களைப் பற்றி ரொம்ப விரிவாக அவர்களே சொல்லிவிட்டதால்  நான் தனியாகச் சொல்ல வேண்டியதில்லை...

நாம் விரும்பும் பதிவர்களான அண்ணன் துளசிதரன் அவர்களும் கீதா அக்காவும் தங்கள் பாணியில் கலக்கியிருக்கிறார்கள். இனி தில்லையகத்தாரின் (THILLAIAKATHU CHRONICLES) அருமையான... ரசனையான... மிக நீளமான பகிரவின் மூலமாக அவர்களையும் அவர்களின் குடும்பத்தைப் பற்றியும் அறியலாம்.... 
7. என்னைப் பற்றி நான் - துளசி / கீதா 1

"எங்களைப் பற்றி நாங்கள்"

ன்பார்ந்த நண்பர்கள், சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் வணக்கம்.
கற்றது விரல் நுனி அளவே கல்லாதது இவ் அண்டவெளி அளவு! ஏனென்றால் அதற்கு முடிவு இல்லை!
என்னைப் பற்றி என்று நம் நண்பர்/தம்பி குமார் அவர்கள் ஒவ்வொரு பதிவரும் தங்களைப் பற்றிச் சொல்லி அதைப் பதிவிடுவதை நாங்களும் தொடர்ந்து வாசித்து வந்து கொண்டிருக்கிறோம். நல்லதொரு முயற்சி என்றால் மிகையல்ல. இது நம் ஒவ்வொருவரைப் பற்றியும் அறிந்து கொள்ளவும், முகமறியா நட்பும், நேரில் பார்க்காமலேயே நல்லிணக்கமும் உருவாகும் என்பதிலும் ஐயமில்லை. தம்பி குமாரைக் கூட தளத்தின் மூலம் தான் தெரியும். இப்போது எங்களையும் அவர் கேட்டதால் இந்த உறவு இன்னும் நெருங்கியது போன்று தோன்றுகிறது. இருங்கள் ஏதோ குரல் கேக்குதுல…..எல்லாம் அந்த நான் ஸ்டாப் சாட்டர் பாக்ஸாத்தான் இருக்கும்….
கீதா: துளசி! ஓகே நீ ஆசிரியர் என்று இங்கு எல்லோருக்கும் தெரியும். கொஞ்சம் நம்மைப் பத்தியும் சொல்லுவோம்.
துளசி: சரி, அப்ப குமார், எங்களைப் பத்தினு இங்க மட்டும் தலைப்பை வைத்துக் கொள்வோமா?
குமார்: அண்ணே! என்ன கேள்வி? இது இப்ப உங்க ஏரியா பூந்து விளையாடுங்க.
துளசி: கீதா நம்மள பத்தி என்ன சொல்ல? என்னனு சொல்லறதுக்கு எங்கருந்து தொடங்கறது? சொல்றதுக்கு என்ன இருக்குனே தெரியலையே..
கீதா: ஆமா! எனக்கும் அப்படித்தான் தோணிச்சு. ஆனா நாம ரெண்டு பேரும் பேச ஆரம்பிச்சோம்னா ஏதாவது வரும்ல அதை சொல்லுவோம்..
துளசி: நாம காலேஜ் பண்ணினப்ப நிறைய கல்லூரி நிகழ்ச்சிகள், போட்டிகள்ல எல்லாம் கலந்துகிட்டுருக்கோம் இல்லையா. ட்ராமா, ஃபேன்சிட்ரெஸ் நு எல்லாம்…
கீதா: நீ நல்லா மிமிக்ரீ பண்ணுவனு யாருக்கும் இங்க தெரியாதே! 
துளசி: ஐயையோ அதை சொல்லிடாதே… அதெல்லாம் அந்தக் காலம். விட்டு ரொம்ப நாளாச்சே. சரி! நண்பர்களே இது உங்களுக்குத் தெரியுமா தெரியாதானு தெரியல. கீதா இலங்கையில இருந்தப்ப, “நான் இலங்கை வானொலி நிலையத்தில் நிகழ்சிகள் செய்து வந்த ராஜேஸ்வரி சண்முகத்தோட மடில உக்காந்து கதை சொன்னேன். அவங்க எங்க வீட்டுக்கு எதிர்வீட்டில இருந்தாங்க, மயில்வாகனன் அவர்களுடன் விளையாடியிருக்கேன், ஒன்னாங்க் க்ளாஸ்ல ரேடியோல கதை சொல்லிருக்கேன்னு அப்பப்பக் கதை விடுவா.
கீதா: ஹேய் அது உண்மைதான். அப்புறம் நீயும் தான் டிராமா எல்லாம் டைரக்ட் பண்ணுவ, உன்னைய உன் ஃப்ரென்ட்ஸ் எல்லாரும் நீ எதிர்காலத்துல டைரக்டரா வருவனு சொல்லிட்டே இருப்பாங்களே….அப்ப அதுவும் உட்டான்ஸு??!! ட்ராமாதான்…
துளசி: அதெல்லாம் ஒரு காலம். அப்புறம், நாகர்கோயில் ரேடியோ நிலையம் தொடங்கின அன்னைக்கு ஒலிபரப்பான முதல் குரலே உன்னோட குரல்தானே! பூதப்பாண்டி அருள் மிகு பூதலிங்கேசுவரர் கோயில் பத்தின உரைச்சித்திரம் நீதானே பண்ணின. உன் குரல் ரொம்பப் பிடிச்சு போயி அப்புறம் மூணு நிகழ்ச்சி உன்னையே தயாரிக்கச் சொன்னாங்க இல்ல? உரைச்சித்திரம் பண்ணினியே. 
கீதா: ம்ம்ம் அட போப்பா அதெல்லாம் கானல் நீர். நீ கூடத்தான் என் சீனியர் பாடின வில்லுப்பாட்டுக்கு ஆமாம் சாமி போட்டியே! (மக்களே இதுலருந்து என்ன தெரியுதுனா நம்ம துளசி சரியான ‘ஆமாம்’ சாமி ஜால்ரா பார்ட்டி!!!!) அப்புறம் அவர் பாடின நாட்டுப்புறப் பாடலுக்கு விளக்கம் கொடுத்தியே! (யாருக்காவது க்ளீனிங்க் பௌடருக்கு விளம்பரம் வேணும்னா துளசிய கூப்பிட்டுக்கலாம்!!)
துளசி: ஹேய்! ரொம்பத்தான் கலாய்க்காத.
கீதா: என் க்ளாஸ் பசங்க எல்லாம் நீ ஹாஸ்டல்ல என்ன பண்ணுவ எப்படி இருப்பனு எங்கிட்ட வந்து போட்டுக் கொடுத்ததச் சொல்லட்டுமா
துளசி: ஆஆஆஆ! 
கீதா: கேட்டுக்கோங்க, துளசி ஹாஸ்டல்ல தனியா ஏதோ கோட்டைய பிடிக்கப் போற யோசனைல அங்கயும் இங்கயும் நடந்துகிட்டே இருப்பாராம். அமைதியா இருந்தாலும், அதே சமயம் செமையா கலாய்ப்பாராம் ஜாலியா… (ஹும் அது அப்ப. இப்ப நான் ஏதாவது ஜோக் சொன்னா மட்டும் இல்ல நகைச் சுவைப் பதிவுகள் வாசிக்கும் போது இல்ல வீட்டுல பிள்ளைங்க யாராவது கலாய்ச்சுப் பேசினா சிரிப்பாரு. ஆனா, அவரா ஜோக் எல்லாம் அடிக்கறதே இல்லை!!!) அதே மாதிரி யோசிச்சுட்டே நடக்கறதும் இல்லை..
துளசி: நம்ம ஈடுபாடு, சிந்தனைகள், எல்லாம் ஒரே மாதிரி இருந்து, கலை நிகழ்ச்சிகள், போட்டிகள் அப்படினு வானில் கோட்டைகட்டி பல கனவுகள் வளர்த்து இருந்தோம் இல்ல?. எத்தனையோ இடர்கள், தடங்கல்கள் வந்து கனவுகள் காத்துல போயிடுச்சு. ஆனால், நட்பு எனும் கோட்டை மட்டும்……இப்பவும் அப்படியே…
கீதா: ஆமா நம்ம நட்புல இப்பவும் இடர்கள், தடைகள் இருக்கத்தானே செய்யுது….இருந்தாலும் இறைவன் அருளாலயும், நம்மளோட உறுதியான நிலைப்பாட்டினாலும் தொடருது.
துளசி: தொடர வேண்டும் என்பதே பிரார்த்தனையும். நமக்குள்ளும் கருத்து வேறுபாடுகள், விவாதங்கள் வருமே அதையும் சொல்லிப்போம். ஆனா, அதெல்லாம் ஜுஜூபி! அப்படியே காணாமப் போயிடுமே!
கீதா: ம்ம் அப்படியே அதனாலதானே சரி நம்ம கல்லூரிக் காலத்துக் கனவுகளில் ஓரிரண்டு சிதைந்து போயிருந்தாலும், அப்போது இருந்த எழுத வேண்டும் என்ற கனவை மட்டுமேனும் நிறைவேற்றிக் கொள்ள எழுதலாமே என்ற விருப்பத்தினால்தானே, 2013 ஜூன் மாதம் தொடங்கியதே 
துளசி: ஆமாம்! அதிலும் பல தடங்கல்கள். எனக்கு இணையம் மற்றும் எழுதுவது என்பதில் யதார்த்த ரீதியில் பிரச்சனைகள் உண்டு என்பதால், வலைப்பூ தொடங்கியது, தொழில்நுட்பம் முதல் அனைத்தையும் கீதா என்னிடம் கலந்து ஆலோசித்து அப்புறம், அவ்வப்போது டிடி அவர்களைத் தொடர்பு கொண்டு செய்துவிடுவார். அதனால் அவர் இருப்பிடமான சென்னை வீடுதான் எங்கள் தலைமையகம். நான் எழுதுவதை பாலக்காட்டில் இருக்கும் போது அலைபேசி வழியாக வாசித்தால் கீதா அதைக் கணினியில் அடித்துப் பதிவிட்டுவிடுவார். அதே போன்று பின்னூட்டங்கள் நான் வாசித்தவற்றிற்கு தமிழை ஆங்கிலத்தில் எழுதி அனுப்பிவிடுவேன். இருவருக்கும் ஒரே கருத்தாகப் பொதுவாக இருக்கும் அப்படி இருந்தால் தனித்தனியாக இல்லாமல் பின்னூட்டம் இடுவதுண்டு. கீதாவுக்குத் தனி கருத்துகள் இட வேண்டும் என்றால் அவர் பெயரிட்டுக் கருத்தை இடுவதுண்டு. அவர் மட்டுமென்றாலும் அப்படியே. எங்களுக்குத் தெரிந்ததை ஏதோ எழுதிவருகிறோம். 
கீதா: துளசி நிறைய படங்கள் பார்ப்பார். பாலக்காட்டில் இருக்கும் போது திரைப்படம் தான் அவருக்குப் பொழுதுபோக்கு. அவர் இருக்கும் இடத்திலிருந்து டவுனுக்குப் போய் அங்கு நல்ல ஆங்கிலப் படம் வெளியாகியிருந்தால் முதலில் அது அல்லது தமிழ்சினிமா வெளியாகியிருந்தால் முதலில் தமிழ்சினிமாதான் பார்ப்பார். என்னடா படம் பார்த்தனு நான் கேட்டால்…அது மலையாளமாக இருந்தாலும் சரி, தமிழாக இருந்தாலும் சரி…ஆங்கிலப்படமாக இருந்தாலும் சரி…..”ம்ம்ம் அது என்ன அது…இவன் நடிச்ச படம்…நம்ம இவன் இல்ல…அவன் பேரு என்னடா..அதுல வந்தானே…” இப்படி நீட்டி முழக்கிட, அப்புறம் நான் க்ளூ கொடுத்துக் கேட்க வேண்டும்…
துளசி: இப்படிப் பொது வெளில சொல்லி…சரி சரி ரெக்கார்டை மாத்து…
கீதா: இப்போது குமார் சகோ எங்களையும் கேட்டு மின் அஞ்சல் கொடுத்துத் தொடர்பு கொண்டதால், இத்தனை நாட்கள் தளத்தில் மட்டுமே சந்தித்த எங்களுக்கு இப்போது அவருடனான இவ்வுறவு இன்னும் நெருங்கியுள்ளது போல் உள்ளது. அதற்கும் நன்றி குமார். 
துளசி: மட்டுமல்ல நம்மை எல்லோரையும் இணைத்த இந்த இணையத்திகும், வலைப்பூக்கும் நன்றி. ஒவ்வொரு பதிவரின் வலைத்தளமும் ஒரு வலைப்பூ. இந்த வலைப்பூக்கள் அனைத்தும் இணைந்து என்றென்றும் நல்ல மணம் வீசும், வாடா வலைத்தோட்டமாக, எப்புயலிலும் வீழ்ந்திடாத, பூத்துக் குலுங்கும் தோட்டமாக இருக்க வேண்டும் என்பதே எமது, நமது அவா. இணையம் எங்களுக்குப் பல நண்பர்களைப் பெற்றுக் கொடுத்திருக்கிறது, சரி, கீதா, இனி என்னைப் பத்தியும், உன்னைப் பத்தியும் கொஞ்சம் சொல்லிக் கொள்வோமா? நீ முதலில் சொல்றியா?
கீதா: நீ முதலில் சொல்லு.
துளசி: என்னைப் பற்றி என்றால், நான் கேரளத்தைச் சேர்ந்தவன் என்றாலும், பிறந்தது தேனி அருகிலுள்ள ராசிங்கபுரத்தில். 26 வயது வரை வளர்ந்தது, படித்தது எல்லாம் தமிழ்நாட்டில். பள்ளிப்படிப்பு ராசிங்கபுரத்தின் அருகிலுள்ள உயர்நிலைப் பள்ளியில் படித்தேன். கல்லூரிப் படிப்பு மதுரையில் மெஜுரா கல்லூரியிலும் (மதுரைத் தமிழன் எனக்கு ஜூனியர்!!!!ஆனால் அவர் கல்லூரியில் என்ட்ரி எனக்குப் பிறகு) நாகர்கோவில் தென்திருவிதாங்கூர் கல்லூரியிலும் படித்தேன். எனவே எனது தாய்மொழி தமிழ்தான் என்றால் மிகையல்ல. என் பெற்றோர் மலையாளத்தில் பேசினாலும் நான் தமிழில் தான் பேசிவந்தேன். கேரளத்திற்குச் சென்ற பிறகுதான் பிறப்பாலான மொழியான மலையாளத்தையே கற்றேன். எனவே கடந்த 21 வருடங்களாக மலையாளமே ஆகிப் போனதால் இப்போது சில சமயம் நான் பேசும் தமிழில் மலையாளக் கரையோரக் காற்று அடிக்கிறது என்று கீதா அடிக்கடிச் சொல்லிக் கலாய்ப்பதுண்டு. ஒரு அண்ணா, அக்கா, நான். அண்ணன் சமீபத்தில் இறைவனடி சேர்ந்தார். அக்கா என்னுடன் இருக்கிறார்.
தற்போது பாலக்காட்டில் ஆங்கில ஆசிரியராக வேலை பார்த்து வருகிறேன். குடும்பம் நிலம்பூர் அருகில் எடக்கரா எனும் இடத்தில் இருக்கிறது. எனவே பாலக்காட்டில் தங்கியிருந்து வார இறுதி மற்றும் விடுமுறைக்கு ஊருக்குச் சென்று வருகிறேன். தளத்தில் எழுதுவது குறைந்திருக்கிறது. ஆனால், கீதா அனுப்பும் சுட்டிகளில் சில வாசிக்க முடிகிறது. சில நேரமின்மையால் வாசிக்க முடிவதில்லை. பாலக்காட்டில் பள்ளிக்கு அருகில் ஒரு வீட்டின் ஒரு சிறு அறையில் தங்கியிருக்கிறேன். தனியேதான் சமையல். வித விதமாக எல்லாம் சமைப்பது கிடையாது. ஏதோ சமைப்பேன். பல நேரங்களில் உப்புமாதான். என்னைப் பற்றி மற்றவை எல்லாம் எங்கள் தளத்தில் அவ்வப்போது வந்துவிடுவதால் உங்களுக்குத் தெரிந்திருக்கும் என்பதாலும் வேறு ஒன்றும் சொல்லுவதற்கில்லை என்பதாலும்….கீதா இனி நீ சொல்லு…உன்னைப் பற்றி
கீதா: அதற்கு முன், துளசியின் அக்கா பற்றி.....துளசியின் அக்கா பிறவியிலேயே பேசும் திறன்,  கேட்கும் திறன் அற்றவர். திருமணம் செய்து கொள்ளவில்லை. துளசியுடன் தான் இருக்கிறார். சமையலிலிருந்து வீட்டைப் பராமரித்துக் கவனித்துக் கொள்வது வரை அனைத்தையும் அவர்தான் செய்து வருகிறார். துளசியும் அவரை அக்கறையுடன் கவனித்துக் கொள்கிறார்.
இப்போது என்னைப் பற்றி…..என்னைப் பற்றி என்ன சொல்ல? குறிப்பிட்டுச் சொல்வதற்கு எதுவும் இல்லை. திருநெல்வேலிதான் அடிப்படை என்றாலும் பிறந்து வளர்ந்தது, படித்தது எல்லாம் நாகர்கோவில் அருகிலுள்ள கிராமத்தில். 3 ஆம் வகுப்பு வரை இலங்கையில் வாசம். எத்தனை வேதனைகள் வந்தாலும், என்னை மகிழ்வாக வைத்துக் கொள்ளத்தான் பிடிக்கும். நேர்மறைச் சிந்தனைகளுடன், சிரித்துக் கொண்டே இருப்பது ரொம்பப் பிடிக்கும். அதனால்தான், மதுரை சகோ, கில்லர்ஜி, அதிரா, ஏஞ்சலின் எல்லோரையும் கலாய்ப்பது மிகவும் பிடிக்கும். மதுரை சகோ, அதிரா, சித்திரா எல்லோரும் என்னைக் கலாய்ப்பதையும் மிகவும் ரசித்துச் சிரிப்பேன். யார் கலாய்த்தாலும்! இணையம் வழியாக நல்ல நண்பர்களை, தோழிகளைப் பெற்றிருக்கிறேன் என்றால் அது மிகையல்ல. இப்படிப் பெறுவதற்கு முக்கியக் காரணக் கர்த்தா துளசிதான் என்றால் துளியும் மிகையல்ல. 
இயற்கை, பறவைகள், விலங்குகளின் காதலி என்பதாலோ என்னவோ எல்லாவற்றிலும் நுனிப் புல் மேய்ச்சல்தான்! எனக்கும், மகனுக்கும் எந்த விலங்குகள் அமைப்பிலும் ஆர்வமோ, நம்பிக்கையோ இல்லை. எனக்கு இரு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். கண்ணழகி, ப்ரௌனி. அவர்களுக்குள் பங்காளிச் சண்டை/ஆல்ஃபா பிரச்சினை உண்டு. ஆனால், எங்களிடம் மிக மிக அன்பானவர்கள், அன்பிற்குக் கட்டுப்படுபவர்கள். 
என்னைப் பற்றி வேறு என்ன சொல்ல? இதுவே அதிகம் என்று தோன்றுகிறது. 
எங்கள் இருவருக்கும் எங்களைப் பற்றிச் சொல்லிக் கொள்ள ஒரு வாய்ப்பு அளித்த குமார் அவர்களுக்கு நன்றியும், மொக்கையைப் பொறுமையாக வாசிக்கும் வலையுலக உறவுகள் அனைவருக்கும் எங்கள் உளமார்ந்த நன்றி!
நம்மைப் பலர் நேசிப்பதை விட நாம் பலரையும் நேசிப்போம்
நட்புடன்,
துளசிதரன் - கீதா

கேட்டதும் அனுப்பிக் கொடுத்ததற்கு இருவருக்கும் நன்றி. ஒவ்வொரு வாரமும் மிகப் பிரபலமான பதிவர்களைப் பற்றி அறியக் கொடுத்து வைப்பது மிக்க மகிழ்ச்சி. இது இன்னும் தொடரும்..
அடுத்த வாரம் மற்றொரு வலையாசிரியர் மனசில் பேசுவார்...
-'பரிவை' சே.குமார்.
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum