சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Today at 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Today at 11:55

» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Today at 11:44

» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

தெற்கு ரெயில்வேயில் தண்ணீர் தட்டுப்பாடு: ரெயில் பெட்டிகள் தூய்மை பணியில் தொய்வு Khan11

தெற்கு ரெயில்வேயில் தண்ணீர் தட்டுப்பாடு: ரெயில் பெட்டிகள் தூய்மை பணியில் தொய்வு

Go down

தெற்கு ரெயில்வேயில் தண்ணீர் தட்டுப்பாடு: ரெயில் பெட்டிகள் தூய்மை பணியில் தொய்வு Empty தெற்கு ரெயில்வேயில் தண்ணீர் தட்டுப்பாடு: ரெயில் பெட்டிகள் தூய்மை பணியில் தொய்வு

Post by rammalar Tue 23 May 2017 - 3:29

தெற்கு ரெயில்வேயில் தண்ணீர் தட்டுப்பாடு: ரெயில் பெட்டிகள் தூய்மை பணியில் தொய்வு EKHPlNk3RM2hQlb0Ijbh+201705222112506050_Water-scarcity-in-Southern-Railway-Train-boxes-clean-up_SECVPF
-
சென்னை,

ரெயில் பெட்டி கழிவறைக்கு குடிநீரை பயன்படுத்தும் நிலைக்கு 
பயணிகள் தள்ளப்பட்டுள்ளனர்.

50 கோடி பயணிகள்
இந்தியன் ரெயில்வே நாட்டில் 17 மண்டலங்களாக செயல்பட்டு 
வருகிறது. இதில் சென்னை சென்டிரலை தலைமை இடமாக 
கொண்டு தெற்கு ரெயில்வே இயங்குகிறது. சென்னை, திருச்சி, 
மதுரை, சேலம், பாலக்காடு, திருவனந்தபுரம் ஆகிய 6 கோட்டங்கள் 
தெற்கு ரெயில்வேயில் இடம் பெற்றுள்ளன.

தெற்கு ரெயில்வேயில் நாள் ஒன்றுக்கு 6 லட்சத்து 20 ஆயிரம் 
பயணிகள் வீதம் என ஆண்டுக்கு சுமார் 50 கோடி பயணிகள் 
ரெயிலில் பயணிப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 2016–17–ம் நிதி ஆண்டில் பயணிகள் வருவாய் மூலம் 
ரூ.3 ஆயிரத்து 565 கோடி பெற்று இந்தியன் ரெயில்வேயில் 
தெற்கு ரெயில்வே முதல் இடத்தை பிடித்தது.

வெந்த புண்ணில்...
தெற்கு ரெயில்வே மூலம் மத்திய அரசுக்கு அதிக வருவாய் 
கிடைத்தாலும், ரெயில்வே பட்ஜெட்டுகளில் தெற்கு ரெயில்வே 
கண்டு கொள்ளப்படுவது இல்லை என்பது நிதர்சனமான உண்மையாக 
இருந்து வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் ரெயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் 
நேரத்தில், தமிழகத்தில் தென் மாவட்டங்களுக்கு கூடுதல் ரெயில்கள்
அறிவிக்கப்படுமா? பழைய ரெயில் பெட்டிகளுக்கு பதிலாக புதிய 
ரெயில் பெட்டிகள் வழங்கப்படுமா? என்று பயணிகள் ஆவலுடன் 
எதிர்பார்ப்பதும், கடைசியில் ஏமாற்றமே மிஞ்சுவதும் சம்பிரதாயமாக 
இருக்கிறது.

தெற்கு ரெயில்வேயில் பெரும்பாலான ரெயில் பெட்டிகள் மிகவும் 
பழமை வாய்ந்ததாக இருப்பதால் ரெயில்கள் வேகமாக இயக்கப்படும் 
நேரங்களில் பெட்டிகள் தடதடவென்று பயங்கர சத்தத்துடன் அதிர்கின்றன. 
இதனால் குழந்தைகளும், வயதான, நோயுற்ற பயணிகளும் அவதிக்கு 
உள்ளாகின்றனர். குறிப்பாக இரவு நேர ரெயிலில் பயணிக்கும் போது 
அதிர்வு சத்தம் பயணிகளின் தூக்கத்தை தொலைப்பதாக அமைந்துள்ளது.


இது ஒருபுறம் இருக்க எலி, வி‌ஷ பூச்சிகள் ஆதிக்கமும் ரெயில் 
பயணிகளை பெருந்துயரத்தில் ஆழ்த்துகிறது. தெற்கு ரெயில்வேயில் 
பயணிக்கும் பயணிகள் இதுபோன்ற இன்னல்களை அனுபவித்து வரும் 
வேளையில், ‘‘வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது’’ போன்று தண்ணீர் 
பிரச்சினையும் அமைந்துள்ளது.

சொல்லொண்ணா துயரம்


தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வறட்சியால் நிலவும் குடிநீர் தட்டுப்பாடு 
தெற்கு ரெயில்வேயிலும் கடும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. 
ரெயில் பெட்டி கழிவறைகளில் தண்ணீர் விரைவில் தீர்ந்து விடுவதால், 
இயற்கை உபாதையை கழிக்க செல்லும் பயணிகள் சொல்லொண்ணா 
துயரம் அடைகின்றனர்.

குடிப்பதற்காக பாட்டில்களில் கொண்டு செல்லும் தண்ணீரை கழிப்பறைக்கு 
பயன்படுத்த வேண்டிய நிர்ப்பந்தமும் ஏற்பட்டுள்ளது. மேலும் ரெயில்வே
பணிமனைகளில் ரெயில் பெட்டியை சுத்தம் செய்யும் பணியிலும் தொய்வு 
காணப்படுகிறது.

தண்ணீர் தேவை

இதுகுறித்து ரெயில்வே தொழிற்சங்கத்தை சேர்ந்த ஒருவர் கூறியதாவது:–

தெற்கு ரெயில்வேயில் 6 ஆயிரத்து 300 ரெயில் பெட்டிகள் பராமரிக்கப்படுகிறது. 
24 பெட்டிகள் கொண்ட ஒரு ரெயிலை சுத்தப்படுத்த 21 ஆயிரத்து 600 லிட்டர் 
தண்ணீர் தேவைப்படுகிறது. இதில் ஒரு பெட்டியின் உள் பகுதியை தூய்மைப்படுத்த
100 லிட்டர் தண்ணீரும், வெளிப் பகுதியை தூய்மைப்படுத்த 250 லிட்டர் 
தண்ணீரும் செலவாகிறது.

ரெயில் பெட்டி கழிவறை, வாஷ்–பே‌ஷன் ஆகிய பயன்பாடுகளுக்காக 
ஒரு பெட்டியில் 900 லிட்டர் தண்ணீர் நிரப்பப்படுகிறது. 300 கி.மீட்டர் 
ரெயில் சென்ற பின்னர் தண்ணீர் தேவைக்கு ஏற்ப மீண்டும் தண்ணீர் 
நிரப்பப்படும். தற்போது நிலவி வரும் தண்ணீர் தட்டுப்பாட்டால்
20 முதல் 30 சதவீதம் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. 

இதனால் ரெயில் பெட்டிகளை அரை குறையாக சுத்தம் செய்ய வேண்டிய 
நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் ரெயில் பெட்டி கழிவறை பயன்பாட்டிற்கான 
தண்ணீரும் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக ரெயில்கள் சிறிது தொலைவு சென்றவுடனே 
கழிவறைகளில் தண்ணீர் தீர்ந்து விடுவதால் பயணிகள் கோபத்துக்கு 
ரெயில்வே ஊழியர்கள் ஆளாகுகின்றனர். ரெயில்வே ஊழியர்கள் மீது
பயணிகள் அதிருப்தி அடைகின்றனர். 

எனவே ரெயில் பணிமனைகளில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை
போக்க தேவையான நடவடிக்கைகளை தெற்கு ரெயில்வே நிர்வாகம் 
மேற்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி போராட்டங்கள் 
நடத்தவும் நாங்கள் திட்டமிட்டு வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

கசப்பாகும் பயணம்

-
ரெயில் நிலையங்களில் இருந்து ரெயில்கள் புறப்படும் நேரத்தில்,
‘உங்கள் பயணம் இனிதாகுக...’ என்று ஒலிக்கும் வாசகங்கள்,
தற்போது தெற்கு ரெயில்வேயில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாட்டால் 
கசப்பானதாகவே அமைந்துள்ளது என்று சொன்னால் மிகை ஆகாது.
-
தினத்தந்தி
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25142
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics
» பாகிஸ்தானில் ரெயில் என்ஜின் தட்டுப்பாடு
» மெட்ரோ ரெயில் பெட்டிகள் சென்னைக்கு வந்தன: விரைவில் சோதனை ஓட்டம்
» தாம்பரம் ரெயில் நிலையத்தில் இருந்து நெல்லை, செங்கோட்டைக்கு தினமும் முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் ரெயில்
» அருள்வாக்கு – தூய்மை!
» அடடே… ஆஸ்திரேலியாவுக்கு மெட்ரோ ரயில் பெட்டிகள் அனுப்பி இந்தியா சாதனை!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum