சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27

» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23

» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58

» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43

» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30

» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07

» எஸ்.பி.பி-யின் மகள் இவ்வளவு பாடல்களை பாடி இருக்கிறாரா!.. இது தெரியாம போச்சே!.
by rammalar Sun 21 Apr 2024 - 17:38

» பிரச்சினையை எதிர்த்து உற்சாகமாக போராடுங்கள்
by rammalar Sun 21 Apr 2024 - 15:38

கொத்தமல்லி சாதம் Khan11

கொத்தமல்லி சாதம்

Go down

கொத்தமல்லி சாதம் Empty கொத்தமல்லி சாதம்

Post by rammalar Wed 31 May 2017 - 10:24

[ltr]
கொத்தமல்லி சாதம் 100_2888-
-
எங்க அம்மா ”கொத்தமல்லி சாதம்”  செய்து தருவாங்க! அவங்க செஞ்சாங்கன்னா ”வாவ்” எனச் சொல்ல வைக்கும் தனி டேஸ்ட் தான். திருமணமான பிறகு நானும் நிறைய தடவை செய்து பார்த்துட்டேன்.   ஆனாலும், அம்மாவோட கைப்பக்குவம் அளவுக்கு வரலை. அதுக்காக ”நல்லா இருக்காதா?”ன்னு எல்லாம் கேட்கக்கூடாது. ரொம்பவே நல்லா இருக்கும். அம்மா பண்ணும்போது சாதம் தனியா வடிச்சுட்டு கலவைய போட்டு கலப்பாங்க. ஆனா நான் இங்கு குளிர்காலங்களில் தனித்தனியா செய்தா ஆறிடும்கறதனால, கீழ்க்கண்ட முறைப்படி பண்ணுவேன். உங்களுக்கு எப்படி வசதியோ அது மாதிரி செய்து  சாப்பிடுங்க.
-
தேவையான பொருட்கள்:-
அரிசி – 1 தம்ளர்
கொத்தமல்லி – 1 கட்டு
வரமிளகாய் – 4 (அ) 5
சீரகம் – 1 டீஸ்பூன்
புளி – சிறிதளவு
உப்பு – தேவைக்கேற்ப
எண்ணெய் – தேவைக்கேற்ப
பச்சைப்பட்டாணி – 1 கையளவு
தாளிக்க:-
கடுகு – சிறிதளவு
கடலைப்பருப்பு – அரை டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு – அரை டீஸ்பூன்
பெருங்காயம் – சிறிதளவு
செய்முறை:-
அரிசியை களைந்து தண்ணீரை வடித்து விட்டு 1 டீஸ்பூன் நெய் விட்டு பிசறி வைக்கவும்.  நீரில் அலசி சுத்தமாக்கிய கொத்தமல்லி, புளி, சீரகம், வரமிளகாய், உப்பு ஆகியவற்றை மிக்சியில் போட்டு சிறிது தண்ணீர் விட்டு மைய அரைக்கவும். அடுப்பில் குக்கரை வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்துக் கொள்ளவும். 

பிறகு பச்சைப் பட்டாணியை போட்டு இரண்டு நிமிடம் வதக்கியதும் அரைத்த கொத்தமல்லி விழுதையும்  போட்டு நன்றாக வதக்கவும். பச்சை வாசனை போனதும், 1 தம்ளர் அரிசிக்கு 2 தம்ளர் தண்ணீ்ர் என்கிற விகிதத்தில் விட்டு கொதிக்க விடவும். கொதித்தவுடன் அரிசியை சேர்த்து குக்கரை மூடி 1 விசில் வந்ததும் அடுப்பை மிதமான சூட்டில் [சிம்மில்] 5 நிமிடங்கள் வைத்திருந்து அடுப்பை  நிறுத்தி விடவும்.

-
பத்து நிமிடங்களுக்குப் பிறகு குக்கரைத் திறந்தால் சுடச்சுடச் சுவையான கொத்தமல்லி சாதம் தயார்!  இந்த கொத்தமல்லி சாதத்தினை தனியாகவோ, வெங்காயத் தயிர் பச்சடியுடனோ சாப்பிடலாம்.
-
எப்போதும் எலுமிச்சை சாதம், தேங்காய் சாதம் போன்ற கலவை சாதங்களையே சாப்பிட்டு போரடித்து இருக்கும் எல்லோரும் இதை “வாவ், இது ரொம்ப நல்லா இருக்கே!” என்று உங்களுக்குப் புகழாரம் சூட்டுவாங்க![/ltr]
[ltr]-[/ltr]
[ltr]படித்ததில் பிடித்தது[/ltr]
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 23938
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum