Latest topics
» இதற்கோர் விடிவு?by rammalar Yesterday at 6:34
» மனங்கள்
by rammalar Yesterday at 6:33
» கவிதைச் சோலை – கோணங்கள்
by rammalar Yesterday at 6:32
» கவிதை – கவிஞர் அன்றிலன்
by rammalar Wed 4 Dec 2024 - 16:40
» இதயம்- கவிதை
by rammalar Wed 4 Dec 2024 - 16:39
» கவலைகளை தீர்த்து வை இறைவா!
by rammalar Wed 4 Dec 2024 - 16:38
» உறவுகள்!- கவிதை
by rammalar Wed 4 Dec 2024 - 16:37
» மன வலிகள்!
by rammalar Wed 4 Dec 2024 - 16:36
» இவள் மனதில் இடம் பிடிக்க வா நீ!
by rammalar Wed 4 Dec 2024 - 16:35
» பார்த்தால் அழகு! -ஹைகூ
by rammalar Wed 4 Dec 2024 - 16:34
» பலி ! – கவிதை
by rammalar Wed 4 Dec 2024 - 16:32
» அசதியாகும் அச்சுப் பிரதிகள்!
by rammalar Wed 4 Dec 2024 - 16:31
» புள்ளி – ஒரு பக்க கதை
by rammalar Fri 29 Nov 2024 - 18:18
» டாஸ்மாக் கடைக்கு வழி கேட்பவர்கள் அதிகம்! – வலையில் வசீகரித்தவை
by rammalar Fri 29 Nov 2024 - 18:14
» தமிழ் நாவலின் தந்தைதான் விஜய் ஆண்டனியின் கொள்ளு தாத்தா…
by rammalar Fri 29 Nov 2024 - 18:12
» ஞானம் என்பது…
by rammalar Fri 29 Nov 2024 - 18:11
» எதார்த்தத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்!- வலையில் வசீகரித்தவை
by rammalar Fri 29 Nov 2024 - 18:10
» வலையில் வசீகரித்தது!
by rammalar Fri 29 Nov 2024 - 18:09
» தொழிலும் விவசாயமும் என்றும் கை கொடுக்கும்!
by rammalar Fri 29 Nov 2024 - 17:47
» Cloud Coffee! — தித்திக்கும் மழை காபி
by rammalar Fri 29 Nov 2024 - 17:46
» “அடுப்பூதும் பெண்களுக்கு படி பூ எதுக்கு ”
by rammalar Fri 29 Nov 2024 - 17:44
» சுமக்காதீர்கள்!
by rammalar Fri 29 Nov 2024 - 17:43
» தொட்டால் பூ மலரும்
by rammalar Wed 27 Nov 2024 - 15:38
» உன் பெயரையே விரும்புகிறேன் - கவிதை
by rammalar Wed 27 Nov 2024 - 8:28
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
ரமலான் நோன்பு சிறப்புக் கட்டுரை: வீசும் காற்றைப் போல் தர்மம் செய்பவர்
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
ரமலான் நோன்பு சிறப்புக் கட்டுரை: வீசும் காற்றைப் போல் தர்மம் செய்பவர்
அது ஒரு காலை நேரம். நபிகளாரின் திருச்சபையில் நபித்தோழர்கள் அமர்ந்திருக்க, சிலர் முரட்டுக் கம்பளியைப் போர்த்திக்கொண்டு அங்கு வந்தார்கள். முளர் குலத்தைச் சேர்ந்த அவர்களது உடலின் பெரும் பகுதி நிர்வாணமாக இருந்தது. அவர்களின் ஏழ்மைக் கோலம் நபிகளாரைப் பாதிக்க அவருடைய திருமுகம் வருத்தத்தால் வாடிவிட்டது.
நபிகளார் வீட்டுக்குள் சென்றார். அதன்பிறகு வெளியே வந்தார். இதற்குள் தொழுகை நேரம் வந்துவிடவே தோழர் பிலாலை அழைத்து, தொழுகைக்கான அழைப்பு விடுக்கும்படி பணித்தார். தொழுகை முடிவில் நபிகளார் சிற்றுரையாற்றினார். அந்த உரையில் திருக்குா் ஆனின் சில முக்கிய வசனங்களை ஓதிக் காட்டினார்.
“மனிதர்களே! உங்களை ஓர் ஆன்மாவிலிருந்து படைத்த உங்கள் இறைவனுக்கு நீங்கள் அஞ்சுங்கள். அதே ஆன்மாவிலிருந்து அதனுடைய துணையை அவன் உண்டாக்கினான். அவை இரண்டின் மூலம் உலகில் அதிகமான ஆண்களையும் பெண்களையும் பரவச் செய்தான்.
எந்த இறைவனின் பெயரைக் கொண்டு நீங்கள் மற்றவரிடம் உரிமைகளைக் கோருகிறீர்களோ, அந்த இறைவனுக்கு அஞ்சுங்கள். ரத்த பந்த உறவுகளைச் சீர்குலைப்பதிலிருந்து விலகி வாழுங்கள். திண்ணமாக, இறைவன் உங்களைக் கண்காணித்துக் கொண்டிருக்கிறான் என்பதை அறிந்துகொள்ளுங்கள்”
மனிதர்கள் அனைவரும் ஒரே இறைவனால் படைக்கப்பட்ட ஒரே தாய்-தந்தை வம்சாவழியினர். ரத்த பந்த உறவுமுறையினர். அதனால், ஒவ்வொருவரும் அடுத்தவரிடம் பரிவுடனும் இரக்கத்துடனும் நடந்து கொள்ள வேண்டும். தேவையுள்ளோரின் தேவைகளைத் தீர்த்து வைக்காமலிருப்பது இறைவனின் கோபத்தைப் பெற்றுத் தரும் என்று அறிவுறுத்தும் வசனம் இது.
அடுத்ததாக , “இறைநம்பிக்கை கொண்டவர்களே! இறைவனுக்கு அஞ்சுங்கள். ஒவ்வொரு மனிதனும் நாளைய தினத்துக்காக எதைத் தயார் செய்து வைத்திருக்கிறான் என்று பார்க்கட்டும்.
இறைவனுக்கு அஞ்சிய வண்ணம் இருங்கள். நீங்கள் செய்யும் செயல்கள் அனைத்தையும் திண்ணமாக இறைவன் அறிபவனாக இருக்கிறான்” என்ற வசனத்தை நபிகளார் ஓதினார். இதன் மூலமாக ஏழை, எளியோருக்காகச் செலவிடப்படும் செல்வம் மனிதனுக்கு மறுமை நாளில் அழியாத சேமிப்பாக மாறுகிறது என்ற கருத்தைச் சுட்டிக் காட்டினார்.
இந்த வசனங்களை ஓதிய பின், மக்கள் இறைவழியில் தர்மம் செய்ய வேண்டும். அதற்காக, பொற்காசுகளையும் வெள்ளிக்காசுகளையும் வழங்கிட வேண்டும். துணிமணிகளை அளித்திட வேண்டும். கோதுமை ஒரு மரக்காலும் பேரீச்சம் பழம் ஒரு மரக்காலும் தந்துதவ வேண்டும்.
அதுவுமில்லாதவர் ஒரு பேரீச்சம் பழத்தின் பாதித் துண்டையாவது தந்திட வேண்டும்!” என்று அறிவுறுத்தினார்.
உணர்ச்சி மிக்க இந்த உரையைக் கேட்டதும் நபித்தோழர்கள் ஒருவர் பின் ஒருவராகத் தர்மம் செய்ய ஆரம்பித்தார்கள். கடைசியில் தானியங்கள், துணிமணிகள் என்று இரண்டு குவியல்கள் சேர்ந்துவிட்டன.
மக்களின் அறப்பணிகளுக்கான ஆர்வம் கண்டு நபிகளாரின் திருமுகம் மகிழ்ச்சியால் பொன்னிறம் பூசியதுபோல மலர்ந்து பிரகாசிக்கலாயிற்று.
அதேபோல, மற்றோர் இடத்தில், ரமலான் மாதத்தின் சிறப்புகளை உணர்த்தி அதற்கு முந்தைய மாதமான ஷ அபான் மாதத்தின் கடைசியில் நபிகளார் உரையொன்றை நிகழ்த்தினார். அந்த உரையின் கடைசிப் பகுதியாக, ரமலான் மாதம் சமுதாயத்திலுள்ள ஏழை, எளியோர் மீது அனுதாபமும் பரிவும் காட்ட வேண்டிய மாதம் என்று குறிப்பிட்டு வலியுறுத்துகிறார்.
தேவையுள்ளோர்க்கு வாரி வழங்கும் பண்பினரான நபிகளார் ரமலான் மாதத்தில் வேகமாக வீசும் காற்றைப்போல தான, தர்மங்களை விரைந்து செய்பவராக இருந்தார்.
----------------------------
இக்வான் அமீர்
தி இந்து
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25332
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» வளைகுடா நாடுகளில் ரமலான் நோன்பு துவக்கம்.
» நோன்பு பெருநாள் தர்மம்! - மறக்கடிக்கப்பட்டதும், தவறுதலாக புரிந்துகொள்ளப்பட்டதும்!
» நோன்பு கால சமையல்-1 - நோன்பு கறி கஞ்சி
» சிறப்புக் கவிஞராய் மகுடம் சூடிய பாயிஸை வாழ்த்துவோம்.
» வசந்தம் வீசும்
» நோன்பு பெருநாள் தர்மம்! - மறக்கடிக்கப்பட்டதும், தவறுதலாக புரிந்துகொள்ளப்பட்டதும்!
» நோன்பு கால சமையல்-1 - நோன்பு கறி கஞ்சி
» சிறப்புக் கவிஞராய் மகுடம் சூடிய பாயிஸை வாழ்த்துவோம்.
» வசந்தம் வீசும்
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum