Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
கொசு... உயிரை பறிக்கும் 'பிசாசு' இன்று உலக கொசு ஒழிப்பு தினம்
Page 1 of 1

ஆகஸ்டு 20
-
உருவத்தில் சிறியதாக இருக்கும் கொசுக்கள், அவை மனிதர்களுக்கு ஏற்படுத்தும் பாதிப்புகளில் முதலிடத்தில் உள்ளன. மலேரியா, டெங்கு உள்ளிட்ட நோய்கள் ஏற்படுவதற்கு கொசுக்களே காரணம். இதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஆக., 20ல், உலக கொசு ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது.
எப்படி வந்தது
'அனாபெலஸ்' பெண் கொசுக்கள் மூலம் தான் மலேரியா நோய் மனிதர்களுக்கு பரவுகிறது என்பதை 1897 ஆக., 20ல் கண்டுபிடித்தார் டாக்டர் ரொனால்டு ரோஸ். இவரது இந்த அரிய கண்டுபிடிப்பை அங்கீகரிக்கும் விதமாக இத்தினமே, உலக கொசு ஒழிப்பு தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
மூன்று
கொசுக்களில் 3000 வகை இருந்தாலும், மலேரியாவை
உருவாக்கும் 'அனாபெலஸ்', டெங்குவை உருவாக்கும்
'ஏடிஸ்', யானைக்கால் நோய், மூளைக்காய்ச்சலை
உருவாக்கும் 'குளக்ஸ்' ஆகிய மூன்றும் தான் கொடியவை.
இதன் பாதிப்புகள் மற்றும் தடுக்கும் முறைகள் குறித்த
விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இத்தினத்தின் நோக்கம்.
யார் இவர்
ரொனால்டு ரோஸ், 1857ல் உத்தரகண்டின் அல்மோராவில் பிறந்தார்.
இவரது தந்தை ஆங்கிலேய ராணுவ அதிகாரி. பள்ளி மற்றும் கல்லுரி
படிப்பை லண்டனில் நிறைவு செய்தார். படிப்பை முடித்து இந்தியா
திரும்பிய பின், மலேரியாவை பற்றிய ஆராய்ச்சியில் 1882 - 1899 வரை
ஈடுபட்டார்.
1897ல் மலேரியாவுக்கான காரணத்தை கண்டுபிடித்தார்.
இதற்காக இவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. பிரிட்டன்
சார்பில் நோபல் பரிசு வென்ற முதல் நபர் இவரே.
மலேரியாவால் என்ன பாதிப்பு
'பிளாஸ்மோடியம்' என்ற ஒட்டுண்ணி 'அனோபிலிஸ்' எனும் பெண் கொசுவின் வயிற்றில் தொற்றிக் கொள்கிறது. இந்த கொசு ஒருவரை கடிப்பதன் மூலம், மலேரியா பரவுகிறது. இது ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவக் கூடியது. இது உடலில் கல்லீரலை தாக்குகிறது. பின் ரத்த சிவப்பு அணுக்களை தாக்கி அழிக்கிறது. மரணத்தை விளைவிக்கும் அளவு பயங்கரமானது.
எப்படி தடுப்பதுபொதுவாக கொசுக்கள் நீர்நிலைகளில் தான் முட்டையிட்டு உருவாகின்றன. எனவே வீடுகளின் அருகில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
* டயர்கள், தகரங்கள், பலகைகள், பிளாஸ்டிக் பொருட்கள் போன்றவற்றில் மழைநீர் தேங்காமல் அப்புறப்படுத்த வேண்டும்.* சீரான இடைவெளியில் தண்ணீர் சேர்த்து வைக்கும் பாத்திரங்களை சுத்தமாக கழுவி தலைகீழாக வெயிலில் காய வைக்க வேண்டும்.
* தண்ணீர் தொட்டிகளை மூடி வைக்க வேண்டும்.
-
உலகளவில் 2015 கணக்கின் படி, 21.2 கோடி பேர் மலேரியாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 4.2 லட்சம் பேர் உயிரிழந்துள்ளர் எனவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது. இதில் 90 சதவீதம் ஆப்ரிக்க நாடுகளில் தான் ஏற்படுகிறது
-
மலேரியாவை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கையினால், 2010 லிருந்து 2015 வரை, உலகளவில் மலேரியாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 29% குறைக்கப்பட்டுள்ளது.

rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum