சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஆண்களின் சாபம்!!
by rammalar Today at 6:04

» இன்னைக்கு லஞ்ச் என்னம்மா...!
by rammalar Today at 5:53

» ரகசியமா சொன்ன பொய்கள் நம்பப்படுகிறது..!!
by rammalar Today at 5:46

» பேசாதிரு...!
by rammalar Yesterday at 19:29

» நகைச்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 19:18

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 19:17

» பூ எங்கே? -கவிதை
by rammalar Yesterday at 19:15

» வண்ணத்துப் பூச்சி
by rammalar Yesterday at 18:26

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 13:02

» பிணி அகற்றும் ஆவாரை
by rammalar Yesterday at 11:09

» கட்டில் குட்டி போட்டது, தொட்டில்!
by rammalar Yesterday at 11:04

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே...!!
by rammalar Wed 17 Apr 2024 - 19:23

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by rammalar Wed 17 Apr 2024 - 19:20

» போராடி கிடைக்கிற வெற்றிக்கு மதிப்பு அதிகம்
by rammalar Wed 17 Apr 2024 - 16:26

» மருத்துவ குறிப்புகள்
by rammalar Wed 17 Apr 2024 - 15:46

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by rammalar Wed 17 Apr 2024 - 1:27

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by rammalar Tue 16 Apr 2024 - 20:05

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by rammalar Tue 16 Apr 2024 - 20:00

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by rammalar Tue 16 Apr 2024 - 19:58

» ஸ்ரீ ராம நவமியை எப்படிக் கொண்டாட வேண்டும்?
by rammalar Tue 16 Apr 2024 - 18:27

» காதோரம் நரைத்த முடி சொன்ன செய்தி!
by rammalar Tue 16 Apr 2024 - 18:24

» கேளாத காது!
by rammalar Tue 16 Apr 2024 - 12:50

» கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க மாப்பிள்ளை!
by rammalar Tue 16 Apr 2024 - 8:30

» இராமனும் பயந்தான்...!
by rammalar Tue 16 Apr 2024 - 8:01

» கலவரத்தை ஏற்படுத்துகிறார்... நடிகர் விஜய் மீது டிஜிபி அலுவலகத்தில் அதிர்ச்சி புகார்!
by rammalar Tue 16 Apr 2024 - 4:17

» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:13

» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:07

» சலம்பல்- செவல்குளம் செல்வராசு
by rammalar Mon 15 Apr 2024 - 18:26

» எழுந்திரு, விழித்திரு...
by rammalar Mon 15 Apr 2024 - 18:11

» ஆன்மிக சிந்தனை
by rammalar Mon 15 Apr 2024 - 18:00

» பல்சுவை கதம்பம்
by rammalar Mon 15 Apr 2024 - 17:54

» காட்டிக்கொடுக்கும் வயது!
by rammalar Mon 15 Apr 2024 - 16:20

» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by rammalar Mon 15 Apr 2024 - 4:16

» திருக்கோயில் வழிபாடு
by rammalar Sun 14 Apr 2024 - 15:15

» தன்னம்பிக்கை
by rammalar Sun 14 Apr 2024 - 15:00

இரட்டை இலைச் சின்னம் வழக்கு விசாரணை மே 1-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு Khan11

இரட்டை இலைச் சின்னம் வழக்கு விசாரணை மே 1-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

Go down

இரட்டை இலைச் சின்னம் வழக்கு விசாரணை மே 1-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு Empty இரட்டை இலைச் சின்னம் வழக்கு விசாரணை மே 1-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

Post by rammalar Thu 26 Apr 2018 - 7:56

இரட்டை இலைச் சின்னம் ஒதுக்கீடு தொடர்பான வழக்கு 
விசாரணையை மே 1-ஆம் தேதிக்கு தில்லி உயர் நீதிமன்றம் 
ஒத்திவைத்தது.

தில்லி உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஜி.எஸ். சிஸ்தானி, 
சங்கீதா தீங்க்ரா ஷெகல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் 
வெள்ளிக்கிழமை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, 
வி.கே. சசிகலா, டி.டி.வி. தினகரன் ஆகியோர் சார்பில் மூத்த 
வழக்குரைஞர் அபிஷேக் சிங்வி ஆஜராகி முன் வைத்த வாதம் 
வருமாறு:

இரட்டை இலைச் சின்னம் வழக்கில் பல்வேறு சட்டப்பூர்வ 
கொள்கைகளைக் கருத்தில் கொள்ளாமல் தேர்தல் ஆணையம்
 உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரத்த்துக்கும் சாதிக் அலி 
வழக்குக்கும் பெரிய அளவில் வேறுபாடு உள்ளது. 

தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் 
பத்திரங்களைச் சரிபார்க்கவோ, பிரமாணப் பத்திரங்கள் 
தொடர்பாக குறுக்கு விசாரணையோ செய்யவில்லை.

 எங்கள் தரப்பு வேண்டுகோளை தேர்தல் ஆணையம் நிராகரித்து
விட்டது. கட்சியின் விதிகளை மாற்றம் செய்ய பொதுக் குழுவுக்கு 
அதிகாரம் இருந்தாலும், பொதுச் செயலாளரை நீக்கும் அதிகாரம் 
இல்லை.

இதுபோன்ற சூழலில், எதன் அடிப்படையில் கட்சியின் பொதுச் 
செயலாளர் பதவி நீக்கப்பட்டது? பொதுச் செயலாளர் பதவியை 
நீக்குவது தொடர்பாக தேர்தல் நடைபெற்றதா? கட்சியின் பொதுச் 
செயலாளரை அடிப்படை உறுப்பினர்கள் தேர்வு செய்வார்கள் 
என்ற விதியில் மாற்றம் செய்யவே முடியாது. 

வி.கே. சசிகலாவை கட்சியின் தாற்காலிகப் பொதுச் செயலாளராக 
நியமிக்க முன்மொழிந்தவர்களே பின்னாளில் அவருக்கு எதிராக
 செயல்படவும் செய்தனர். அதிமுகவின் பொதுச் செயலாளர் 
வி.கே. சசிகலா என அங்கீகரிக்கும் வகையில் தேர்தல் 
ஆணையக் கடிதப் போக்குவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது' 
என்றார். 

இந்த வாதங்களைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், 
வழக்கு விசாரணயை மே 1-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து
 உத்தரவிட்டனர். இவ்வழக்கு விசாரணைக்கு வந்ததையொட்டி, 
தமிழக சட்ட அமைச்சர் சி.வி. சண்முகம் நீதிமன்றத்துக்கு 
வந்திருந்தார். 

முன்னதாக, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, 
துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அணிக்கு இரட்டை இலைச் 
சின்னத்தை ஒதுக்கி தேர்தல் ஆணையம் கடந்த ஆண்டு நவம்பர்
 23-இல் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக டி.டி.வி. தினகரன், 
வி.கே. சசிகலா ஆகியோர் சார்பில் தில்லி உயர் நீதிமன்றத்தில் 
தனித் தனியாக மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. 

அந்த மனுக்கள் தில்லி உயர் நீதிமன்றத்தில் கடந்த 20-ஆம் தேதி 
விசாரணைக்கு வந்தது. அப்போது, வி.கே. சசிகலா, டிடிவி தினகரன் 
ஆகியோர் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் கபில் சிபல், '
அதிமுக சட்ட விதிகளின்படி உச்சபட்ச அதிகாரம் பொதுச் 
செயலாளருக்கு உள்ளது. பொதுச் செயலாளர் பதவியை நீக்கிவிட்டு,
 ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற புதிய 
பதவிகள் தற்போது உருவாக்கப்பட்டுள்ளன. 

கட்சியின் விதிகளில் மாற்றம் செய்து கொள்ளலாமே தவிர, 
கட்சியின் அமைப்பு முறையை மாற்றம் செய்தது கட்சி விதிகளுக்கு 
எதிரானது' என்பன உள்ளிட்ட வாதங்களை முன்வைத்தார். 
வாதங்களைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கு 
விசாரணயை ஏப்ரல் 24-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து 
உத்தரவிட்டிருந்தனர்.

-
---------------------------------தினமணி
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 23852
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics
» இரட்டை இலை சின்னம் யாருக்கு? தேர்தல் கமி‌ஷன் விசாரணை 6–ந் தேதிக்கு ஒத்திவைப்பு
» ஜெயலலிதா மீதான வழக்கு: ஆகஸ்ட் 12ம் தேதிக்கு ஒத்திவைப்பு
» சமச்சீர் கல்வி விசாரணை முடிவு: தீர்ப்பு ஒத்திவைப்பு
» இரட்டை இலை சின்னம்: தேர்தல் கமிஷன் விசாரணைக்கு தடையில்லை
» அனிதா ராதாகிருஷ்ணன் ஜாமீன் மனு விசாரணை 22-ம் தேதிக்கு தள்ளிவைப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum