சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உடலுக்கு உயிர் காவல் உலகுக்கு ஒளி காவல்
by rammalar Wed 5 Aug 2020 - 6:18

» ஆஹா மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும்
by rammalar Wed 5 Aug 2020 - 6:16

» லாக் டவுன் கதைகள்
by rammalar Fri 31 Jul 2020 - 14:22

» முயல் கண்ட கனவு - சிறுவர் கதை
by rammalar Fri 31 Jul 2020 - 14:20

» நீங்கள் மட்டும் சந்தோஷமாக இருந்தால் போதாது…
by rammalar Fri 31 Jul 2020 - 14:19

» ஒருவன் மட்டும்...
by rammalar Fri 31 Jul 2020 - 14:18

» ஒரு ஊரில் ஒரு திருடன் இருந்தான் – சிலிர்க்க வைக்கும் கதை
by rammalar Fri 31 Jul 2020 - 14:17

» கொடுத்துப் பெறுதல்
by rammalar Fri 31 Jul 2020 - 14:16

» மற்றவர்களை மட்டம் தட்ட முனைந்தால்…!
by rammalar Fri 31 Jul 2020 - 14:15

» கூட்டுப்பலனின் பெருக்கம் சக்தியை குறைத்து மதிப்பிடக்கூடாது.
by rammalar Fri 31 Jul 2020 - 14:13

» ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு கதை உண்டு!
by rammalar Fri 31 Jul 2020 - 14:12

» கொலை வழக்கின் தீர்ப்பு…!
by rammalar Fri 31 Jul 2020 - 14:09

» கோபத்தின் கதை
by rammalar Fri 31 Jul 2020 - 14:09

» இதைப் புரிந்தவர்கள் தான் வாழ்க்கையில் ஜெயிக்க முடியும்!
by rammalar Fri 31 Jul 2020 - 14:08

» டாஸ்மாக்கின் கதை…!
by rammalar Fri 31 Jul 2020 - 14:08

» கத்தும் பொழுது காடு அறியும், கணைப்பது யார், கர்ஜிப்பது யார் என்று!
by rammalar Fri 31 Jul 2020 - 14:07

» நீங்கள் தான் கடவுளின் மனைவி…!
by rammalar Fri 31 Jul 2020 - 14:06

» பல்சுவை தகவல்கள்
by Muthumohamed Wed 29 Jul 2020 - 20:56

» சினிமாவில் 28 ஆண்டுகள்: அஜித்துக்கு நடிகர், நடிகைகள் வாழ்த்து
by Muthumohamed Wed 29 Jul 2020 - 20:54

» நான் நிச்சயம் அரசியலுக்கு வருவேன்’: வரலட்சுமி சரத்குமார்
by Muthumohamed Wed 29 Jul 2020 - 20:52

» இப்பிடிப் பண்றீங்களேம்மா? !
by ராகவா sri Tue 28 Jul 2020 - 19:02

» 4-வது தலைமுறை பாடகி
by rammalar Tue 28 Jul 2020 - 14:15

» என்.எஸ்.கிருஷ்ணனின் மனிதநேயத்தால் நெகிழ்ந்து போனார் மதுரம்.
by rammalar Tue 28 Jul 2020 - 14:03

» 91 வயது, 'மிமிக்ரி' கலைஞர், சீனிவாசன்!
by rammalar Tue 28 Jul 2020 - 14:02

» ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்குவோம் உதயநிதி - மீரா மிதுன் டுவிட்
by rammalar Tue 28 Jul 2020 - 14:00

» அது, 'ரீல்' - இது, 'ரியல்!'
by rammalar Tue 28 Jul 2020 - 13:54

» என்ன அப்படி சொல்லாதீங்க - கண்ணதாசன் பேரனிடம் சிவகார்த்திகேயன் வேண்டுகோள்
by rammalar Tue 28 Jul 2020 - 13:52

» ரெட்டை ரோஜா’வுக்கு பை பை… வருத்தத்தில் ஷிவானி ரசிகர்கள்
by rammalar Tue 28 Jul 2020 - 13:50

» போலீஸ் வேடத்திற்காக 20 கிலோ உடல் எடையை குறைத்த அருள்நிதி
by rammalar Tue 28 Jul 2020 - 13:49

» வடிவேலுவுக்கு 'இம்சை அரசன்'- சந்தானத்துக்கு 'பிஸ்கோத்': இயக்குநர் கண்ணன்
by rammalar Tue 28 Jul 2020 - 13:49

» நடிகை தமன்னா
by rammalar Tue 28 Jul 2020 - 13:47

» வேட்டையாடு விளையாடு 2 படத்தில் கமல்ஹாசன் ஜோடியாக நடிக்கப்போவது யார்
by rammalar Tue 28 Jul 2020 - 13:47

» என்கவுண்ட்டரில் பலியான ரவுடி விகாஸ் துபே வாழ்க்கை சினிமா படமாகிறது
by rammalar Tue 28 Jul 2020 - 13:46

» சோனியா அகர்வால்
by rammalar Tue 28 Jul 2020 - 13:45

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Sun 26 Jul 2020 - 7:51

ஆன்மீக பொன்மொழிகள்,  Khan11

ஆன்மீக பொன்மொழிகள்,

Go down

Sticky ஆன்மீக பொன்மொழிகள்,

Post by rammalar on Wed 3 Apr 2019 - 12:55

-
காஞ்சி காமகோடி மகான் மகா சுவாமிகளின் சொற்பொழிவுகளிடமிருந்து எடுக்கப்பட்ட
  ஆன்மீக பொன்மொழிகள், 


காஞ்சி காமகோடி மகான் மகா சுவாமிகளின் சொற்பொழிவுகளிடமிருந்து எடுக்கப்பட்ட ஆன்மீக பொன்மொழிகள், 
1) சாஸ்திரங்களைத் தெளிவாக அறிந்து அதன்படி மக்களை வழிநடத்தி அதை அஞுசரிப்பவர்தான் ஆசார்யார் 
2) சாஸ்திரம் மட்டும் தெரிந்து கொண்டிருந்தால் அவர் வித்வான்தான் 
3) சாஸ்திரம் மட்டடும் தெரிந்தால் அவர் - வித்வான். சாஸ்திரம் அஞுபவிப்பவர் - ஞானி சாஸ்திரம் உபதேசம் செய்பவர் - பிரசாரகர் 
4) முதலில் அழகாகத் தோன்யதுதான் அப்புறம் உபத்திரமாக போகிறது
 5) அவரவர்கள் இருக்கிற இடத்தில் இருந்தால் தான் செளக்கியம்
 6) பரமாத்மாவிடம் நம்மையறியாமல் சித்தத்தை சேர்ப்பதுதான் பக்தி
 7) உண்மை என்பது அறிவுதான் என்றால் அறிகிற அந்த சக்தியே உண்மை - அதுவே சத்தியம் 
8) ஆசைகளை அடக்கி, மாயையை உடைத்தெறி
 9) நிறைநது நின்ற ஒன்றை தெரிந்து விட்டால் நிறைந்து போகிறது. 
10) சாதாரணமாக ஏதாவது ஓர் அங்கத்தில் ஊனம் உள்ளவர்களுக்கு இன்னோர் அங்கத்தில் அதிக தீட்சண்யம் இருக்கும் 
11) மனத்தை அடக்கி, நிலைநிறுத்தி ஈசனிடம் சேர்ப்பது பிராணாயமம் , தியானம் நிஷ்னம் - இதை சொல்வது யோக பாதம் 
12) மனத்தை வெற்றி கொண்டவர் உலகத்தை வெற்றி கொள்வான். அந்த வெற்றிக்கு உதவுவது ஞானம்,
 13) ஈசனை தவிர வேறு பொருள் இல்லை என்ற அனுபவம் வந்து விட்டால் ஆசைக்கு இடமில்லை,
 14) தினமும் கொஞ்ச நேரமாவது சிவ நாமம் சொன்னால் எல்லா சேமமும் கிடைக்கும்.
 15) பிறக்கு உதவி செய்யும் போது, இருவரும் மனநிறைவு பெறுவர் 16) நல்ல எண்ணங்கள் இருந்தால் நல்ல செயல்கள் தானாகப் பெருகும்.
 17) பரோபகாரம் எதுவும் செய்யாத நாளெல்லாம் நாம் இருந்தும் செத்த நாளே 18) அன்பில்லா வாழ்கை வீண் வியர்த்தம்.
 19) சாந்தம் வந்தால் எல்லா பற்றும் போய்வடும்.
 20) அழிவில்லாத கடவுடளிடம் செலுத்தும் அன்புக்க அழவேது? 
21, நிறை வேறாத ஆசைகளின் இரண்டு உருவங்கள் தான் துக்கமும், கோபமும்.
 22. நம்மிடமே ஏராளமான தோஷங்களை வைத்துக் கொண்டு பிறருக்கு உபதேசம் செய்தால் அது பிரயோசனப்படாது.
 23. கல்விக்கு இரண்டு அம்சங்கள் உண்டு ஒன்று- குருபக்தி, மற்றொன்று விநயம் ,
24. தாய், தந்தை , குரு இம்மூவரிடமும் அசையா பக்தி கொண்டால் மேன்மை தரும். 
25. மான, அவமானம் பார்க்காமல் நம்மால் முடிந்த தொண்டை செய்தல் வேண்டும்.
 26. எக்காலத்திலும், எவ்விஷயத்திலும் திருப்தியை ஏற்படுத்தக் கூடிய தானம் - ஞான தானம்.
 27.உபகாரம் செய்தால் நமக்கு சித்திக்கிற சித்த சுத்தியே பிரயோசனம் 28. கீர்த்தனம் என்றால் பகவான் புகழைப் பாடுவது,
 29. வழிபாடு தனியாகச் செய்வதைவிட கூட்டு வழிபாட்டில் உற்சாகம் இருக்கிறது. 
30. வாக்கு, மனம், சரீரம், மூன்றும் ஒருவருக்கு சத்தியத்திலே நிலைதது விட்டால் அவர் சொல்வதெல்லாம் சத்தியமாகி விடும். 
31, பக்தியுடன் மனசை கடந்து விட்டால் ஞானம் 
32. "தான்" என்பதே இல்லையேல் ஒருவன் பரமாத்வே ஆகிவிடுகிறான் அதுதான் அத்வைதம் .
33. சேக்கிழார் ரொம்ப அழகாக வேதத்தை ஒரு பெரிய நதியாகவும் அதிலே சைவம் வைஷ்ணவம் முதலிய சம்பிரதாயங்களை பல படித்துறைகளாகவும் சொல்லியிருக்கிறார். 
34. வியாதியை போக்க - வைத்தியன். யாகம் வாங்க - பணக்காரன். துக்கம், பிறவிப்பிணி நீக்க - பரமேஸ்வரன் .
35. நாம் செய்கின்ற காரியங்களை சுத்தமாக சித்த சுத்தியோடு தர்மமான முறையில் செய்ய ஈஸ்வர பக்தி வேண்டும்.
 36. சேராததை முடித்து வைப்பது எதுவோ அதுதான் மாயை, எது இன்னதென்று சொல்ல முடியாததே அதுதான் மாயை.
 37. பரன் என்றால் பெரியவர் பரம புருஷன் என்றால் பெரிய ஆள் - பெரிய ஆள் என்பதே பெருமாள் என்றானது. 
38. பிறப்பு என்பது காமனால் உண்டாகிறது. இறப்பு என்பது காலனால் உண்டாகிறது. 
39. பிறவி என்று எடுத்துவிட்டால் ஆனந்தம் எப்போதோ கொஞ்சம்தான் ஆனால் துக்கம்தான் அதிகமாக இருக்கிறது.
 40, அழியாத வஸ்துவினிடத்தில் பரியம் வைத்தால் அந்த பரியம் அழியாமல் இருக்கும்.
 41. ஒன்றை ஆராய்ந்து ஒன்றை அறிகிற ஒன்றை செய்கிற, சக்தி யெல்லாம் ஈஸ்வர சக்தியிலிருந்து பிரகாசிக்கின்றன. 
42. குருவினடத்திலே அபசாரம் பண்ணி விட்டு ஈஸ்வரவனிடத்தில் போனால் ஒன்றும் நடக்காது. 
43. தெய்வ பக்தி, குருபக்தி ஆகிய இரண்டும் ஒவ்வொருவருக்கும் அவசியம்.
 44. விஞ்ஞான அறிவின் மூலம் வெளியில் இருக்கிற எத்தனையோ பூதங்களை அடக்கும் நாம் நம்மை ஆட்டி வைக்கும் மனம் என்னும் பூதத்தை அடக்க முடியவில்லை..
 45, கஷ்டத்தையோ, துக்கத்தையோ, காமத்தையோ தெரிந்து கொள்ள அறிவு சக்தி இல்லையெனில் வாழ்வில் பிரயோசனம் இல்லை.
 46. புறக்கண்ணால் பார்க்க முடியாததை எல்லாம் அகக் கண்ணால் எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் பார்த்து விடலாம், 
47. தவறுகளுக்கு எல்லாம் பிராயசித்தமாக இருப்பது காயத்ரி ஜபம் 
48. ஓர் அழகியை பார்த்தால் காமம் வரும் துஷ்டனை நினைத்தால் கோபம் வரும் பரமனை நினைத்தால் மனசு சுத்தமாகும்
 49. மனசு அடங்கினால் சுவாசம் அடங்கி உள் உணர்ச்சிக்கு ஏற்றபடி வெளிக் காரியங்கள் நடப்பதை பார்க்கலாம்.
 50.பக்தி வர வேண்டுமானால் சாந்தம் வரவேண்டும், சத்தியம் வரவேண்டுமானால் சிவச் சின்னங்களை அணிய வேண்டும்.
 51விதிப்படி மூச்சை வெளியே விடுவதானலும் உள்ளே அடக்குவதனாலும் அமைதி பெறும்.
 52 தயை (ஈகை) உள்ள இருதயமே வெளியில் தெரியும் அழகு .
53 நாக்கை சுத்தமாக்க சிவநாமம். இருதயத்தை சுத்தமாக்க - சிவபக்தி - தியானம்.
 54 சிவ என்ற இரண்டு எழுத்தை சொன்னாலே பாவம் விலகும்.
55 பஸ்மம், ருத்திராட்சம், வில்வம் ஸ்படிகம் ,லிங்கம் , பஞ்சாட்சரம் ஆகியஐந்தும் சிவ சின்னங்கள.
 56 மூச்சி இல்லாமல் மனிதன் இல்லை வேதம் இல்லாமல் ஈசுவரன் இல்லை 57 ஞானம் என்ற நெருப்பினாலே உலகங்களை எல்லாம் எரித்து விடலாம் சிவம் தான் மிஞ்சும்.
 58 காரியங்களுடைய காரணத்தை தேடிக் கொண்டு போனால் கடைசியில் கிடைப்பது மெய்யான பொருள்.
 59 நாம் எத்தனையோ காரியங்களை செய்து வருகிறோம், ஆனால் நாம் செய்கிறோம் என்ற அகம்பாவம் நமக்கு வரக்கூடாது.
 60 நமக்கு அகம்பாவம் இல்லை என நினைத்தாலேயே அகம்பாவம் இல்லாத உயர்ந்த குணத்திலிருந்தே அகம்பாவம் வந்து விடுகிறது.
 61 உண்மை என்பது வெண்மை அந்த வெண்மை என்பது நீறு அந்த திருநீறு தான் ஆண்டவன்.
 62 உண்மை பொருளை பூசிக் கொண்டால் உண்மை பொருளின் நினைவு வரும் அதனால்தான் நீறு பூச சொல்கிறது சைவம்.
 63 சித்தம் என்ற நிலைக் கண்ணாடி மூலம் பரம்பொருள் என்ற உண்மை வஸ்துவை பார்க்கவேண்டும்.
 64 நல்லது - காரணம் இல்லாத அருள். கஷ்டம் - காரணத்துக்காக ஏற்படும் அருள்.
 65 உண்மையிலேயே நம்முடைய கெட்ட குணம் எவ்வளவு நல்ல குணம் எவ்வளவு என்று பிரித்துப் பார்த்தால் கெட்ட குணமே மலைபோல் இருக்கும் 
 66 ஒரு முகப்படுத்த சித்தம் ஆடாமல் இருக்க வேண்டும் கெட்ட எண்ணம் என்ற அழுக்கு படிந்திருந்தால் ஒன்றும் தெரியாது.
 67 தினமும் படுக்கும் முன் அன்று நாம் செய்த தப்பை குறித்துக் கொண்டு நாளை முதல் பண்ணாமல் இருக்க பகவானை பிராத்திக்க வேண்டும்.
 68 நாம் பண்ணின பாவத்திற்காக அழுது கொண்டிராமல் அந்தமாதிரி புத்தியைஇனி கொடுக்கவேண்டாம் என பிராத்திப்பது நமது கடமை.
 69 ஆண்டவன்தான் இந்த உலகத்திற்கு எல்லாம் மேலான காரணம் அவன் ஒருவனே உண்மை பொருள்.
 70 வாழ்வில் ஆனந்தம் வேண்டுமென்றால் உண்மையான அந்த பொருளுக்காகத்தான் வாழ வேண்டும் .
71 இந்த பொய்யான உடம்பிற்கு மெய் என்று பெயர் பெயராவது மெய் என்று இருக்கட்டும் இந்த உடம்பிற்கு,
 72 ஒரே தெய்வத்தை பல ரூபத்தில் வழிபடுவது பல தெய்வங்கள் இருப்பதாக என்னுவதாகாது
 73 அன்டை வீட்டுக்காரனை சகோதரானாக நினை 
 74 விரோதியை ந்ண்பனாக நினை ,
75 உன்னிடம் மற்றவர்கள் எப்படி இருக்க வேண்டுமென்று நினைக்கிறாயோ அப்படியே மற்றவர்களிடமும் நீயும் இரு .
76 சாப்பிடுகிறவனை விட சாப்பாடு போட்டவனுக்குத்தான் அதிக ஆனந்தம் இருக்கிறது.
 77 மந்திரங்கள் எல்லாவற்றிக்கும் மூலமாக இருப்பது பிரணவம் .
78 திரு நீறும் திருமண்ணும் ஒரே தத்துவத்தைதான் காட்டுகின்றன.
 79 நமக்கு சரீரம் தான், உயிர் தெரியவில்லை, அதனால் தான் சரீரத்திற்கு மெய் என்று பெயர் வைத்தார்கள் .
80 நமக்கு தெரியாமல் இருக்கின்ற உயிர் போய் விட்டதனால் அப்பவும் இந்த மெய் (உடம்பு) ஒன்றுக்கும் பிரயோசனமற்றபெர்ய்யாகி விடுகிறது.
 81 பக்தி பண்ணுவதற்கு பலன் பக்தியால் கிடைக்கிற மன நிறைவுதான் .
82 சுக துக்கங்களில் சலனமடையாமல் தானும் மற்றவர்களையும் ஆனந்தமாக இருக்க செய்வது தான் யோகம் .
83 சித்த சுத்தி மோட்சத்திலேயே கொண்டு போய் சேர்க்கும் 
84 தனது என்ற விருப்பு வெறுப்பில்லாமல் சாஸ்திரத்திற்கு கட்டுபடுவது முக்கியம்
 85 ஒருத்தர் பரிகாசம் பண்ணுகிறார் என்று தர்மத்தை விடக்கூடாது,
 86  நம் கோபம் எதிராளியை மாற்றாது அவனுக்கும் நம்மிடம் கோபத்தை உண்டாக்குவதுதான் அதன் பலன் .
87 ஒருவன் தப்புப் பண்ணிகிறான் என்றால் கோபம் கொள்கிறோமே அப்படியானால் நாம் தப்பு பண்ணாதவர்களா? 
88 அன்பினாலேயே பிறரை மாற்றுவது தான் நமக்கு பெருமை அதுதான் நிலைத்து நிற்கும் 
89 நாம் தப்பே செய்யவில்லை யென்றால் அன்பு மயமாகி விடுவோம் 
90 நம் கோபத்தினால் நமக்கே தான் தீங்கு செய்து கொள்கிறோம் 
91 அன்பு நமக்கு ஆனந்தம் எதிராளிக்கும் ஆனந்தம்.
 92 ஆசை என்று அலைந்தால் சாந்தி என்பதே ஒருநாளும் இல்லை.
 93 துக்கம் உன்னிடம் ஒட்டாமல் பிரிந்து தள்ளிவிட்டால் அதுவே யோகம் 
94 கானல் நீர் போன்றதே உலக மாயையும் 
95 ஆசைக்கும் துவேசத்துக்கும் காரணம் அகங்காரம் அது தொலைந்தால் எந்தக் காரியத்திலும் உயர்வு தாழ்வு தெரியாது 
96 நமக்கு அது வேண்டும் இதுவேண்டும் என்று சதா அரிப்பு இருக்கிறவரையில் நாம் தரித்ததிரர்கள் தான் .
97 எது செய்யத்தக்கது, எது செய்யத்தகாது என்று நிச்சயிப்பதில் சாஸ்திரமே நமக்கு பிரமானம்.
 98 தியானம் பண்ணாமல் வெறும் பூசை மட்டும் செய்தால் மதத்தை வளர்க்க முடியாது .
99 துக்கம், கோபம் இவற்றோடு உயிர் பிரிந்தால் அதே தன்மையோடே ஜனனம் வரும் .
100 ஜன்னம் எடுத்தது ஜன்மத்தை போக்கிக் கொள்ளத்தான், 
101 மூச்சு இல்லாமல் மனிதன்இல்லை சேதம் இல்லாமல் ஈஸ்வரன் இல்லை


திருச்சிற்றம்பலம்  ... ஓம் நமசிவாய ஓம்.


தொகுப்பு ; வை.பூமாலை, சுந்தரபாண்டியம்
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 15770
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum