சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Yesterday at 3:17

» தீப ஒளி
by rammalar Yesterday at 3:16

» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Yesterday at 3:07

» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22

» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01

» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11

» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10

» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08

» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08

» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07

» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06

» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04

» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03

» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02

» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by rammalar Sat 26 Oct 2024 - 16:01

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Sat 26 Oct 2024 - 15:59

» மூன்று மொழிகளில் உருவாகும் புதிய படம்…
by rammalar Sat 26 Oct 2024 - 15:58

» பிரதர் படத்தின் ’மிதக்குது காலு ரெண்டும்’ பாடல் ..
by rammalar Sat 26 Oct 2024 - 15:56

» காதலே…காதலே படத்தின் டைட்டில் ட்ராக் பாடல்
by rammalar Sat 26 Oct 2024 - 15:54

» இன்றைய தத்துவங்கள் !
by rammalar Sat 26 Oct 2024 - 15:52

» பல்சுவை
by rammalar Wed 23 Oct 2024 - 4:38

» பல்சுவை -ரசித்தவை
by rammalar Tue 22 Oct 2024 - 12:17

» பல்சுவை
by rammalar Tue 15 Oct 2024 - 21:41

» அது சைஸைப் பொறுத்தது!
by rammalar Sun 13 Oct 2024 - 4:58

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17

» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08

» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44

» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35

» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30

» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32

» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Mon 7 Oct 2024 - 5:43

» வீணை வாசிக்கறது ரொம்ப ஈஸி!
by rammalar Mon 7 Oct 2024 - 4:44

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-6
by rammalar Sun 6 Oct 2024 - 20:22

அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் - திரை விமரிசனம் Khan11

அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் - திரை விமரிசனம்

Go down

அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் - திரை விமரிசனம் Empty அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் - திரை விமரிசனம்

Post by rammalar Sun 28 Apr 2019 - 6:45

By அசோசியேட் பிரஸ் 
தமிழில்: வினுலா
நன்றி-தினமணி
---------------
அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் - திரை விமரிசனம் Avengers_end_game112xx


மார்வெல் உலகத்தைத் திருப்திப்படுத்துவதென்பது ஒரு 
சிக்கலான காரியம். ஒருபக்கம், மிகுந்திருக்கும் எதிர்பார்ப்பில் 
இந்தப் படத்தை பற்றிய வெளியீட்டுக்கு முந்தைய துண்டுத் 
தகவல்களும் வந்து குவிகின்றன. 

ஆனால் படம் வெளிவரும் சமயத்தில், இதன் தீவிர ரசிகர்கள் 
ஒருவித தியான நிலைக்குச் சென்றுவிடுகிறார்கள். படத்தின் 
முக்கியக்கட்டத் தகவல்களை முன்கூட்டியே தெரிந்து 
கொள்ளாமலிருக்க, சமூகவலைத்தளங்களிலிருந்து தங்களை 
விலக்கி, படம் வெளிவரும்வரை அமைதி காக்கிறார்கள்.

முற்றிலும் அறிந்து கொள்ளவும், எதையுமே அறிந்து 
கொள்ளாதிருக்கவும் - இந்த இரண்டிற்குமான மயக்க நிலையே 
இது, என்றும் முடிவடைவதில்லை. 

எந்தவொரு மார்வெல் படத்தின் முடிவும் இறுதிப் பெயர்ப் 
பட்டியலுக்குப் பிறகு நிலைப்பதில்லை. 

இப்படிப்பட்ட ரசிகர்கள் இந்த விமரிசனத்தைப் படிக்க 
மாட்டார்கள். ஆனால், ‘அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்’ இவர்களுக்கு 
மனநிறைவைத் தருவதோடு, ஓய்வுக்கான நேரத்தையும்
தருமென்று நினைக்கிறேன். 

இந்தக் கடைசிப் பாகம், இதற்கு முந்தைய பாகமான
300 மில்லியன் டாலரை ஈட்டிய, 156 நிமிட ‘இன்ஃபினிடி வார்’ 
படத்தின் அவிழ்க்கப்படாத முடிச்சுகளை மட்டுமல்ல,
2008-ல் துவங்கிய ‘அயர்ன் மேன்’-லிருந்து வெளிவந்த
22 மார்வெல் படங்களையும் ஒருசேர இணைக்கிறது
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25248
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் - திரை விமரிசனம் Empty Re: அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் - திரை விமரிசனம்

Post by rammalar Sun 28 Apr 2019 - 6:46

ஆண்டனி மற்றும் ஜோ ரூசோவின் ‘எண்ட்கேம்’ - நகைச்சுவை, 
ஆன்மா, செண்டிமெண்ட் என அனைத்திலும் தாராளமாக 
விருந்தளித்து ஆச்சரியப்பட வைப்பதோடு, மார்வெல் உலகின் 
பத்தாண்டுக் கால ஆதிக்கத்தை நினைவூட்டுகிறது. 

முழு வேகத்தில் இயங்கும் இந்த மார்வெலின் இயந்திரம், கற்பனை 
உலகின் கட்டுக்கதைகளில் முழு ஆதிக்கம் செலுத்தி, அதன் 
கற்பனைப் பிரபஞ்சப்பெருவெளியில் முன்னெப்போதையும் விட 
அதிகமான உணர்வுகளை வெளிக்கொணர்கிறது.

மார்வெல் உலகத்தைத் தொடங்கிய ராபர்ட் டோனி ஜூனியரின் 
கதாபாத்திரமான டோனி ஸ்டார்க் (‘அயர்ன் மேன்’) தான் இந்த 
எண்ட்கேமையும் தொடங்கி, முக்கிய வேடத்தில் வலம் வருகிறார்.

‘எண்ட்கேம்’ கதையின் அடிப்படை அம்சங்களைக் கூறுவது 
முட்டாள்தனமாகும். இருப்பினும், சக்திகளின் மேல் நாட்டங்கொண்ட 
தானோஸ் (ஜோஷ் ப்ரொலின்) உணர்ச்சிவசப்பட்டு செய்யும் 
செயலுக்குப் பிறகு சில காலங்கள் கழித்துத்தான் இந்தக் கதை 
நடைபெறுகிறது என்று கூறுவது சரியாக இருக்கும்.

‘இன்ஃபினிடி வார்’ பாகத்தின் இறுதியில், 6 சக்திவாய்ந்த 
கற்களையும் பெற்றுவிடும் தானோஸ், அதைக்கொண்டு பூமியின் 
பாதி உயிரினங்களையும், சூப்பர் ஹீரோக்களையும் ஒரு நொடியில் 
அழித்து விடுகிறான்.

பூமியில் மீதமிருக்கும் உயிரினங்கள் - கூடுதல் பார்க்கிங் 
இடங்களையும், கூட்டமில்லா நடைபாதைகளையும் அனுபவிக்காமல்,
துக்க நிலையிலேயே காலத்தைக் கழிக்கிறார்கள். மீதமுள்ள சூப்பர் 
ஹீரோக்களும் தோல்வியின் அவமானத்தால் தடுமாறி, ஒருவன் 
கோபக்கார வஞ்சகனாகவும், இன்னொருவன் பீர் தொப்பையனாகவும் 
மாறுகிறார்கள்.

எண்ட்கேம் படத்துக்குக் கொடுக்கப்பட்ட அதிமுக்கியத்துவத்தால் 
சிலர் வெறுப்படைந்தாலும் (அல்லது அருவருப்படைந்தாலும்), படம் 
அதற்கான கனமான, அச்சுறுத்தும் மற்றும் நகைச்சுவையான 
அம்சங்களைக் கொண்ட திரைக்கதையைக் கொண்டுள்ளது. 

அதோடு கிறிஸ்டோபர் மார்கஸ் மற்றும் ஸ்டீபன் மெக்ஃபீலியின் 
திரைக்கதையைக் கொண்டு, சூப்பர் ஹீரோக்களுக்குப் புதிய 
இணைகளையும் சாத்தியமில்லாத சூழல்களையும் தந்துள்ளார்கள் 
இயக்குநர்கள் ரூசோஸ்.

இது படத்திற்கு ஏகப்பட்ட கதாபாத்திரங்களைக் கொடுத்துள்ளது, 
பல முன்ணனி நகைச்சுவை நடிகர்களும் திரையில் வலம் 
வருகிறார்கள். டோனி ஜூனியர் இதற்குத் தலைமை தாங்கினாலும்,
முக்கிய வேடத்தில் பவுல் ரூட் (ஆண்ட் மேன்), வழக்கமான 
வேடங்களில் கிறிஸ் ஹெம்ஸ்வொர்த் (தோர்) மற்றும் 
மார்க் ருஃபல்லோ (ஹல்க்) ஆகியோர் வலம் வருகிறார்கள். 

என்னதான் மார்வெல் உலகம் பாலினச் சமத்துவத்தில் 
முன்னேறியிருந்தாலும் (ப்ரி லார்சனின் சமீபத்திய படமான 
‘காப்டன் மார்வெல்’ சிறிய, முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார்), 
இன்னும் சில ஜாலியான நடிகைகளைக் கொண்டிருக்கலாம். 
மாயா ருடோல்ஃபை விண்மீன் மண்டலத்தின் ராணியாக்குவீர்களா?
-
-------------------------
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25248
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் - திரை விமரிசனம் Empty Re: அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் - திரை விமரிசனம்

Post by rammalar Sun 28 Apr 2019 - 6:47

இந்த நகைச்சுவைக் கும்பலில் குறைந்தபட்சம் மூன்று பேர் 
சூப்பர் ஹீரோக்களாக மதிப்பு பெறுகிறார்கள். எப்போதாவதுதான் 
நிறைய ஹீரோக்கள் ஒரு படத்தில் தோன்றுகிறார்கள். 

சொல்லும்படியாக - கிரிஸ் எவான்ஸின் கேப்டன் அமெரிக்கா, 
ஸ்கார்லெட் ஜுவான்சனின் பிளாக் விடோ, டான் சீயாடிலின் 
வார் மெஷின், பிராட்லி கூப்பரின் ராக்கெட் போன்ற படங்கள். 
இருப்பினும், படத்தின் தாராளமான நீளத்தினால் கதை, 
கதாபாத்திரங்களை விரைவாகவும், எளிதாகவும் கையாள்கிறார்கள் 
ரூசோஸ்.

இந்த மாய வித்தையில், மார்வெல் உலகின் அனைத்துத் 
தொனிகளும் சிறிய அளவிலாவது இருக்கிறது. ‘அயர்ன் மேனின்’ 
பகடிக்குணம் (அல்லது புத்திக்கூர்மை), எளிதில் உணர்ச்சிவசப்பட்டு, 
கும்மாளமடிக்கும் ‘கார்டியன்ஸ் ஆஃப் காலக்ஸி’, ‘தோரின்’ 
வரலாற்றின் சிறிய பகுதி, ‘பிளாக் பாந்தரின்’ முழக்கமும் கூட. 
இவை எல்லாவற்றையும் விட, ’எண்ட்கேம்’ ஒரு சுவாரசியமான, 
பாரம்பரிய காமிக்ஸ் புத்தகத்தின் திருப்பங்களையும் 
மாற்றங்களையும் கொண்டுள்ளது.

இப்படத்தின் முக்கிய வேறுபாடு என்னவெனில், கெட்டவர்களுக்கு 
மார்வெல் உலகில் சாவு நிச்சயம் என்கிற நிலையில், முடிவுநிலை 
நோக்கி நகர்கிறது உலகம். ‘எண்ட்கேம்’ அதன் கண்ணீர் மல்கும் 
பிரியாவிடைகளுக்காகப் பெரும்பாலும் நினைவுகூரப்படும். 

சொல்லப்போனால், யார்தான் தன் சொந்த மறைவிற்கு அழைப்பு
விடுப்பார்கள்? ஆனால், அவெஞ்சர்ஸ் படங்களில் உள்ள மெல்லிய,
நேர்மையான பிரியாவிடைகள் ஒன்றை உணர்த்துகின்றது - 
அடிப்படையில் அவை குடும்பங்களைக் குறிப்பவை. எண்ட்கேமில் 
தோன்றும் மகள்கள், அப்பாக்கள், மகன்கள், சகோதரர்கள் மற்றும் 
ஜோடிகளின் மூலம் இது மிகத் தெளிவாகிறது. 

இது போன்ற உறவுகளின் மூலம் கட்டப்பட்டிருக்கும் இந்த மாய ராஜ்யம், 
நம் உலகத்தை விட ஒற்றுமையானது.

இதர பிரியாவிடைகள் நியாயமான துயரம் நிறைந்தவை. 
மறைந்த ஸ்டான் லீ தன் கடைசிக் கௌரவ வேடத்தில் சிறப்பாகத் 
தோன்றியிருக்கிறார். லீயின் அன்னப்பாடல் - எண்ட்கேம் மூலம் 
முடிவுறும் இந்தச் சகாப்தத்தை உறுதி செய்கிறது. 

இந்த அத்தியாயத்தின் மூலம் முடிவுக்கு வரும் மார்வெல் உலகம், 
அதிக நாட்கள் இப்படியே நீடிக்க வாய்ப்பில்லை. மார்வெல், 
இந்தப் படங்களின் மூலம் என்ன உருவாக்கியுள்ளது என்பதைப் 
புரிந்துகொள்ள சில காலம் ஆகும் என நினைக்கிறேன். 

மோசமான அம்சமாக, இவையனைத்தும் ஒரு பெருங்கூட்டத்தைப் 
பார்க்க வைப்பதற்காக உருவாக்கப்பட்ட, வேற்றுரு விலங்குகள். 
சிறப்பான அம்சமாக, இவை பிரம்மாண்டமான, மெகா அளவில் 
உருவாக்கப்பட்ட ஹாலிவுட் ஆச்சர்யங்கள். ‘எண்ட்கேம்’ இரண்டாம் 
பகுதியை ஒட்டியுள்ளது என்று கூறுவது அதனை ரசிப்பதற்கு 
இடையூறாக இருக்காது என்றே நம்புகிறேன்.
-
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25248
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் - திரை விமரிசனம் Empty Re: அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் - திரை விமரிசனம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum