Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
உபதேசம் (சிறுகதை) -புதுமைப்பித்தன்
Page 1 of 1
உபதேசம் (சிறுகதை) -புதுமைப்பித்தன்
டாக்டர் விசுவநாதன், கூரிய ஆபரேஷன் கத்தியை
பேசினில் வைத்துவிட்டு, கத்திரிக்கோலால் குடலின்
கெட்டுப் போன பகுதியை கத்தரித்தார்.
லிண்டை வைத்து ரணமும் சீழுமான பகுதியைத் துடைத்துத்
தொட்டியில் போட்டார். “நர்ஸ், ஊசி” என்றார். பக்கத்தில்
ஸ்டெரிலைஸ் செய்த ஊசியை நர்ஸ் கொடுக்க, டாக்டர்
கை மடமடவென்று சக்கிலியத் தையல் போட ஆரம்பித்தது.
கிளாஸ் மேஜையில் கிடத்தப்பட்டிருக்கிற வியாதியஸ்தன்
சிறிது முனகினான்; பிரக்ஞை வருவதின் முன்னணி சமிக்ஞை!
"டாக்டர் வில்க்கின்ஸன், இன்னும் கொஞ்சம் குளோரபாரம்...
ஒரு நிமிஷம் போதும்… ஹும் வெற்றிதான், என்று நினைக்கிறேன்”
என்று பேசினில் ஊசியைப் போட்டுவிட்டு, கை உறைகளையும்
முக மூடியையும் கழற்றி விட்டுக் கைகழுவ பேசினிடம் சென்றார்
விசுவநாதன்.
“வியாதியஸ்தனுக்கு பிரக்ஞை வந்துவிட்டது; ஆனால், அளவு
கடந்த முயற்சி. ஒரு மணி நேரம் கழித்துக் கொஞ்சம் குளுக்கோஸ்
கொடுங்கள்…” என்று சொல்லிக்கொண்டே வாயில் சிகரெட்டைப்
பற்றவைத்துக் கொண்டு, ஆப்பரேஷன் தியேட்டரை விட்டு, டாக்டர்
வில்க்கின்ஸன் தொடர இறங்கி நடந்தார்.
இவரது நரைத் தலையில் சூரிய ஒளிப் பிரகாசம் விழுந்தது.
இவர் முகத்திற்கு ஒரு விபரீதமான தேஜஸைக் கொடுத்தது.
விசுவநாத்துக்கு பல மேல்நாட்டுச் சர்வகலா சாலைகளின்
பட்டம். நிறபேதம் பாராட்டும் பிரிட்டிஷ் வைத்தியக் கௌன்ஸில்
இந்திய வைத்தியக் கௌன்சில்கள் இவரது அபாரமான கற்பனை
முறைகளைக் கண்டு பிரமிக்கும். ரண சிகிச்சை என்றால் டாக்டர்
விசுவநாத் என்று அர்த்தம்.
சென்னை வாசிகள் அகராதிக்கு மட்டுமல்ல. யூகோஸ்லாவிய
இளவரசருக்கு வந்த விசித்திரமான வீக்கத்திற்குச் சிகிச்சை
செய்த நிபுணர்களில் இவரும் ஒருவர். மண்டையில் வீக்கம்.
மற்றவர்கள் கத்தி எடுத்தால் பிராணஹானி ஏற்படுமோ என்று
பயப்பட்டார்கள். ஏனென்றால், ஆப்பரேஷன் வெற்றியடைவது,
அதைச் சீக்கிரம் செய்து முடிப்பதைப் பொறுத்தது.
ஒரு வினாடி அதிகமானால் இளவரசருக்குப் பிரேதப் பெட்டியை
ஆர்டர் செய்ய வேண்டியதுதான்… ஆனால், விசுவநாத் கைகள்,
வேலையை குறைந்த நேரத்திற்கும் பாதியளவிலேயே செய்து
முடித்தன. இப்பொழுது, அவர் சௌகரியமாகப் பள்ளிக்கூடத்தில்
வாசித்துக் கொண்டிருப்பதற்கு டாக்டர் விசுவநாத்தான் காரணம்.
சென்ற ஜெர்மன் சண்டையில் பேஸ்காம்புகளில் உழைத்ததினால்,
ஆப்பரேஷன் கத்தியை வைத்துக் கொண்டு யமன் வரவைத் தடுக்க,
டாக்டர்கள் தப்பு வழி என்று சொல்லக்கூடிய முறைகளில் எல்லாம்
பரிசீலனை செய்ய இவருக்குச் சந்தர்ப்பம் வாய்த்தது.
1
டாக்டர் வில்க்கின்ஸன் இவரது சகா. அவரது அந்தரங்க
அபிப்பிராயம் மற்ற இந்தியர்களைப் பற்றி என்னவாக இருந்தாலும்,
டாக்டர் விசுவநாத்திடம் கருப்பன் என்ற பிரக்ஞை யில்லாமலே பழகி
வந்தார். நாஸ்திகத்தின் பேரில் இருவருக்கும் இருந்த அபார பக்தி
இந்த நெருக்கத்திற்குக் காரணமாக இருக்கலாம்.
முப்பத்து முக்கோடி கருப்புத் தேவாதி தேவர்களும், மூன்றே மூன்று
வெள்ளைத் தெய்வங்களும் இவர்களது கிண்டல்களை இரண்டு
நாட்கள் கூட இருந்து கேட்டுக்கொண்டு இருந்தால், இவர்கள் கண்
எதிரிலேயே தூக்குப் போட்டுக் கொள்ளும். ரூபமற்ற தெய்வங்களுக்கு
அப்படிப்பட்ட அடி!

rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: உபதேசம் (சிறுகதை) -புதுமைப்பித்தன்
அன்று ஆப்பரேஷன் தியேட்டருக்கு கொண்டு
வரப்பட்டவன் ஒரு ஹடயோகி; விஷயங்களையும் கண்ணாடிச்
சில்லுகளையும் கண் எதிரிலும் தின்று சாகாதவன்.
சித்தாந்தச் சாமி என்ற அவன், இந்த இரு டாக்டர்கள்
முன்னிலையில் கூடத் தன் திறமையைக் காட்டி இருக்கிறான்.
அவன் ஏதோ திடீரென்று பிரக்ஞையற்றுக் கிடக்கிறான் என்று
தகவல் கிடைத்ததும், ஆம்புலன்ஸ் காரை அனுப்பி சத்திரத்திலிருந்து
அவனை எடுத்து வரச் செய்ததும் இவர்தான். ஹடயோகியின்
உட்புறம் எப்படியிருக்கிறது என்பதைப் பார்க்க இருவருக்கும் இருந்த
ஆசை அளவில்லை.
எக்ஸ்ரே பரீக்ஷையில் குடலில் ஒரு பகுதி பழுத்து அழுகி விட்டது
என்று கண்டனர். காரணம், குடல் சதையில் ஒரு கண்ணாடிச் சில்
குத்திக் கொண்டிருந்ததே. ஹடயோகி ஏதோ முறை தப்பிச் செய்ததின்
விளைவு.
சித்தாந்தச் சாமிக்கு இரண்டு ஸ்பெஷல் நர்ஸ்கள்; மூன்று மணி
நேரத்திற்கு ஒரு தரம் டாக்டர் பரிசோதனை எல்லாம்…!
மறுநாட் காலையில் டாக்டர் வில்க்கின்ஸன் கேட்ட செய்திகள்
அவரைத் திடுக்கிட வைத்தன. ஒன்று, ஆஸ்பத்திரியில்
கிடத்தப்பட்டிருந்த சித்தாந்த சாமியைக் காணோம் என்பது.
மற்றொன்று, டாக்டர் விசுவநாத் காஷாயம் வாங்கிக் கொண்டார்
என்பது.
முதல் விஷயத்தில் டாக்டர் வில்க்கின்ஸனுக்கு அவ்வளவு
சிரத்தையில்லை; அது போலீஸ் கேஸ். டாக்டர் விசுவநாத்திற்கு
மூளைக் கோளாறுதான் ஏற்பட்டிருக்குமென்று முதலில் நம்பி,
அதற்கு வைத்தியம் செய்ய வேண்டுமென்று நினைத்தார்.
உடனே, தமது மோட்டார் காரில் டாக்டர் விசுவநாத்
பங்களாவிற்குச் சென்றார். தலைமொட்டை; இடையில் ஒரு காவி
வேஷ்டி; காலில் குப்பிப்பூண் பாதக்குறடு; இந்த அலங்காரத்தைக்
கண்டதும் டாக்டர் வில்க்கின்ஸனுக்குத் தூக்கி வாரிப் போட்டது.
“எப்படியானாலும் இந்தியர்கள் இந்தியர்கள்தான்” என்று நினைத்துக்
கொண்டார்.
"என்ன டாக்டர்! இது என்ன ஜோக்? என்றைக்கு உமது தெய்வங்கள்
உம்மை பேட்டி கண்டன? தவடையில் கொடுத்து ஏன் அனுப்பவில்லை”
என்று சிரித்தார்.
"வில்க்கின்ஸன்! சிரிக்காதே; இது ஒரு புதிய பரிசீலனை.
எனது சித்தாந்தம் ஒரு முடிவு கட்டப் படவில்லை. பரிசீலனை
செய்துதான் பார்க்க வேண்டும்” என்றார் டாக்டர் விசுவநாத்.
இவர்களிடத்தில், பாசறை ஆஸ்பத்திரி வாழ்க்கையில் தோன்றிய
வெறி காணப்பட்டது.
டாக்டர் வில்க்கின்ஸனுக்கு ஒன்றும் பதில் சொல்ல முடியவில்லை.
‘வெல்! குட்லக்!’ என்று சொல்லிவிட்டுத்தான் திரும்ப முடிந்தது
நன்றி-தினமணி

Similar topics
» வீண் உபதேசம் – சிறுகதை
» ஆண்மை புதுமைப்பித்தன்
» உபதேசம்! - ஒரு பக்க கதை
» உணர்வூட்டும் உபதேசம் - 001
» உபதேசம் வேண்டுமா? - நீதிக்கதை
» ஆண்மை புதுமைப்பித்தன்
» உபதேசம்! - ஒரு பக்க கதை
» உணர்வூட்டும் உபதேசம் - 001
» உபதேசம் வேண்டுமா? - நீதிக்கதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum