சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

புரட்சித் தமிழனுக்கு இன்று பிறந்த நாள் Khan11

புரட்சித் தமிழனுக்கு இன்று பிறந்த நாள்

Go down

புரட்சித் தமிழனுக்கு இன்று பிறந்த நாள் Empty புரட்சித் தமிழனுக்கு இன்று பிறந்த நாள்

Post by rammalar Sat 3 Oct 2020 - 15:39

தமிழ் சினிமாவின் ஒப்பற்ற கலைஞராக பல ஆண்டுகளைக் கடந்து இன்றும் தனது சிறந்த நடிப்பின் மூலம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி வருபவர் நடிகர் சத்யராஜ்.
தனித்துவமான நடிப்பு, நக்கலான பேச்சு என தனக்கே உரித்தான தனி பாவனைகளுடன் இன்று வரை வெற்றி நாயகனாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
புரட்சித் தமிழனுக்கு இன்று பிறந்த நாள் 28ae0f20d63d7582a44b644bb26b7ccb5b5fbc10939cc501a4746655124b6c69
சமீபத்தில் பிரம்மாண்ட வெற்றி பெற்ற பாகுபலி திரைப்படத்தில் “கட்டப்பா ” கதாபாத்திரத்தில் நடித்து உலக அளவில் பலருக்கும் பரிச்சயமான இந்த புரட்சி தமிழன் நடிகர் சத்யராஜ் அக்டோபர் 3 ஆம் தேதியான இன்று தனது பிறந்தநாளை குடும்பத்தாருடன் மகிழ்ச்சியாக கொண்டாடி வருவதையொட்டி ரசிகர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் என பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
புரட்சித் தமிழனுக்கு இன்று பிறந்த நாள் 877278eecbcc6a29a120cb8efc0602736fb1b6dcd5b2bb8486ade22851951aa7
வெற்றிகரமான ஹீரோவாக
சினிமாவில் வில்லன் மற்றும் குணச்சித்திர பாத்திரங்களில் நடிக்கத் தொடங்கி பின் வெற்றிகரமான ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் சத்யராஜ் இந்திய அளவில் பலரையும் புருவம் உயர்த்த வைக்கும் வகையில் பல்வேறு திரைப்படங்களில் நடித்து அனைவராலும் பாராட்டப்படும் ஒப்பற்ற நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

புரட்சித் தமிழனுக்கு இன்று பிறந்த நாள் 2ddc32948b1ce3ef8fb9aa808e7a82fb23c50a78af1c155a1a8d05b6ece6f372
பாக்ஸ் ஆபீஸை பந்தாடியது
வில்லன், ஹீரோ, காமெடியன் என எந்த ஒரு கதாப்பாத்திரமாக இருந்தாலும் அதில் தனது நக்கல் கலந்த நடிப்பின் மூலம் ரசிகர்களுக்கு பிடிக்கின்ற வகையில் அந்த கதாபாத்திரத்திற்கு மெருகேற்றி இவர் நடித்த பல திரைப்படங்கள் முன்னணி ஹீரோக்களுக்கு சவால் விடும் வகையில் வசூலில் பாக்ஸ் ஆபீஸை பந்தாடியது.

புரட்சித் தமிழனுக்கு இன்று பிறந்த நாள் Fab6ce252ac4af2bd6bed679dfec573eaa58af7751edc6cd5bf66cdc787b84ee
முன்னணி ஹீரோக்களுக்கு இணையாக
தமிழ் தெலுங்கு கன்னடா மலையாளம் ஹிந்தி என பழமொழிகளில் 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள இவருக்கு 1987 ஆம் ஆண்டு வெளியான வெளியான “வேதம் புதிது” திரைப்படம் முதல் வெற்றித் திரைப்படமாக அமைய அதை தொடர்ந்து இவர் நடித்த நடிகன், அமைதிப்படை, கடலோர கவிதைகள், வால்டர் வெற்றிவேல் என பல படங்கள் முன்னணி ஹீரோக்களுக்கு இணையாக ஓடி இவருக்கு என தனி ரசிகர் கூட்டத்தை உருவாக்கியது.

புரட்சித் தமிழனுக்கு இன்று பிறந்த நாள் E07cbef1ed6e055975583413200641bb527737ae49e46202c33a46c6ea1c955c
நடிகன்
தமிழ் சினிமாவில் ஒரு சில ஹீரோக்கள் மற்றும் காமெடியன்கள் இணைந்தால் அந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட் என சொல்லப்படும் நிலையில் சத்யராஜ், கவுண்டமணி இணையும் படங்கள் அனைத்தும் மிகப்பெரிய அளவில் வரவேற்பைப் பெற்று வெற்றி பெற்று வந்தது. நடிகன், தாய் மாமன், மாமன் மகள், மலபார் போலீஸ், புது மனிதன், ப்ரம்மா, பங்காளி, ரிக்ஸா மாமா என இவர்கள் இணைந்து நடித்த பல திரைப்படங்கள் பாக்ஸ் ஆபீஸை கலக்கியதோடு பெரும் வரவேற்ப்பை பெற்றது.

புரட்சித் தமிழனுக்கு இன்று பிறந்த நாள் 8b676cf0fa731bcc82ec7b2a5aa2d3dd3dc5e815b8ce8a9e9e877293eac10def
இயக்குனராக
இந்நிலையில் 1995 ஆம் ஆண்டு வெளியான “வில்லாதி வில்லன்” திரைப்படத்தை இயக்கி இயக்குனராகவும் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட சத்யராஜ் அதில் இருவேறு கதாபாத்திரங்களில் நடித்து நடிப்பில் புதிய பரிமாணத்தை வழங்கி இருப்பார்.

புரட்சித் தமிழனுக்கு இன்று பிறந்த நாள் 45c4c1842182cf53565f8a61f051b4652f55eee67d0babb672de52968dee5965
“கட்டப்பா” கதாபாத்திரத்தில்
இவ்வாறு தமிழில் பல வெற்றித் திரைப் படங்களை கொடுத்த சத்யராஜ் சமீபத்தில் தெலுங்கில் வெளியான பாகுபலி என்ற பிரம்மாண்ட திரைப்படத்தில் “கட்டப்பா” என்ற கதாபாத்திரத்தில் நடித்து உலக அளவில் பிரபலமானதைத் தொடர்ந்து இப்பொழுது தெலுங்கு ரசிகர்களிடமும் மிகவும் பரிச்சயம் ஆகி உள்ளார்.

பிறந்த நாள்
இவ்வாறு தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடா ஹிந்தி என பல மொழிகளில் நடித்து இந்திய சினிமாவின் ஒப்பற்ற நடிகர்களில் ஒருவராக இன்றுவரை வெற்றிகரமாக வலம் வந்து கொண்டிருக்கும் சத்யராஜ் அக்டோபர் 3 ஆம் தேதியான இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வருவதையொட்டி பல திரைப் பிரபலங்கள் ரசிகர்கள் என பலரும் இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
(ஆசியா நியுஸ்) & ஈகரை களஞ்சியம்
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum