Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
ஒற்றைத் தலைவலிக்கு கண்களும் காரணமாகலாம்!
Page 1 of 1
ஒற்றைத் தலைவலிக்கு கண்களும் காரணமாகலாம்!
விழியே கதை எழுது
விழித்திரை சிறப்பு மருத்துவர் வசுமதி வேதாந்தம்
ஒற்றைத் தலைவலியை அனுபவிக்காதவர்களே
இருக்க மாட்டார்கள்.
அந்தவகைத் தலைவலியை மைக்ரேன் என்கிறோம்.
ஒற்றைத் தலைவலி ஏற்பட பல காரணங்கள் உண்டு.
மூளைக்குச் செல்லும் ரத்தக்குழாய் திடீரென
விரிவடைவதால் இது ஏற்படுவதாக சொல்லப்பட்டாலும்,
இன்ன காரணத்தினால்தான் மைக்ரேன் வருகிறது என
உறுதியாகச் சொல்ல முடிவதில்லை.
இதில் கண்ணின் பின் பகுதியில் இருந்து ஆரம்பித்துத்
தலைக்குப் போகிற மைக்ரேனுக்குப் பெயர்
‘ஆக்குலர் மைக்ரேன்(Ocular migraine). ஒருபக்கம் மட்டும்
பாதிக்கப்படுவதால் இதை ஒற்றைத் தலைவலி என்கிறோம்.
காபி, நள்ளிரவு பார்ட்டிகள், தூக்கமின்மை, ஆல்கஹால்,
ஸ்ட்ரெஸ், மாதவிலக்குக்கு முன்... இவை எல்லாம் ஒற்றைத்
தலைவலியைத் தீவிரப்படுத்துகிற காரணங்கள்.
ஒற்றைத்தலைவலியை கண்ணுடன் தொடர்பு படுத்திப்
பார்க்கத் தெரியாத சிலர், வலிக்கிற போதெல்லாம்
வலி நிவாரண மாத்திரையை எடுத்துக் கொண்டு அதிலிருந்து
தற்காலிக நிவாரணம் தேடுவார்கள்.
அது மிகவும் தவறு. கண்ணில் ஏற்பட்ட பிரச்னையின் காரணமாக
வருகிற ஒற்றைத் தலைவலியாக இருந்து, சரியான சிகிச்சை
எடுக்கப்படாவிட்டால், அது பார்வை இழப்பு வரை கொண்டு
போகலாம்.

Last edited by rammalar on Fri 19 Feb 2021 - 16:16; edited 1 time in total
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: ஒற்றைத் தலைவலிக்கு கண்களும் காரணமாகலாம்!
அறிகுறிகள் என்ன?
தலையின் ஒரு பக்கத்தில் மட்டும் வலி, பொறுத்துக்கொள்ளக்
கூடியது முதல் அதீதமான அளவு வரையிலான வலி, துடிதுடிக்கச்
செய்கிற வலி, எழுந்து நடமாடினால் இன்னும் அதிகமாகிற வலி.
கண்டுபிடிப்பது எப்படி?
பாதிக்கப்பட்டவர் சொல்கிற அறிகுறிகளை வைத்து கண் மருத்துவர்
அது மைக்ரேனா என்பதை உறுதி செய்வார். கண்களுக்குச் செல்கிற
ரத்த ஓட்டத்தில் ஏற்படுகிற தற்காலிகத் தடை, விழித்திரைக்கு ரத்தம்
கொண்டு செல்கிற தமனியில் ஏற்படுகிற இழுப்பு, சிலவகையான
ஆட்டோ இம்யூன் டிஸ்ஆர்டர் பாதிப்புகள், அதீத மருந்து உபயோகம்
போன்றவற்றால் ஏற்பட்ட தலைவலியா என்பதும் கண்டறியப்படும்.
சைனஸ் பிரச்னை இருந்தால், அது ஒரு பக்கம் மட்டும் சைனஸ்
பாதிப்பு இருந்தால், அது மைக்ரேன் மாதிரியே உணரச் செய்யும்.
வாந்தியை ஏற்படுத்தும். மூளையில் ஏதேனும் கட்டிகள் இருக்கின்றனவா
என பார்க்க வேண்டும்.
குறிப்பாக, அதிக வாந்தியுடன் கூடிய தலைவலி இருந்தால்,
அது மூளைக்கட்டியின் அறிகுறியாக இருக்கலாம் என சந்தேகப்பட
வேண்டும். உடனடியாக மருத்துவ ஆலோசனை மேற்கொள்ளப்பட
வேண்டும்.கண்ணாடி காரணமாகவும் தலைவலி வருமா?
வரும். கண்ணாடி பவர் காரணமாக ஏற்படுகிற தலைவலி
ஒருபக்கம் மட்டுமின்றி, பரவலாக இருக்கும். மாலை நேரங்களில்
அதிகமாக இருக்கும். கண்களுக்கு அதிக வேலை கொடுத்ததும்
வரும். கண்கள் களைப்பாக இருக்கும்.
விழித்திரையைப் பரிசோதித்துப் பார்க்க வேண்டியது அவசியம்.
கண்ணை மூளையோடு சேர்க்கிற பகுதி வீங்கியிருந்தால்
அது ஒற்றைத் தலைவலி இல்லை.
பாப்பா என்கிற கண்ணின் பகுதி சாதாரணமாக இருக்க
வேண்டும். பார்வை தெளிவாக இருக்க வேண்டும். ஆப்டிக் டிஸ்க்
எனப்படுகிற பார்வை நரம்பு வட்டுப்பகுதியானது நன்றாக இருக்க
வேண்டும். மேலும் கீழும் பார்க்கிறபோது தசைகளின் அசைவில்
சமநிலையின்மை இருக்கக்கூடாது.
இவை எல்லாவற்றையும் டெஸ்ட் செய்து பார்த்த பிறகுதான்,
அது ஆக்குலர் மைக்ரேனா, இல்லையா என்பதையே கண்டுபிடிக்க
முடியும். அப்படி எதையும் பார்க்காமல் மைக்ரேன் என்கிற முடிவுக்கு
வந்துவிடக்கூடாது.
Last edited by rammalar on Fri 19 Feb 2021 - 16:18; edited 1 time in total
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: ஒற்றைத் தலைவலிக்கு கண்களும் காரணமாகலாம்!
மைக்ரேன் நிரந்தரப் பிரச்னையா?
மைக்ரேன் எத்தனை நாட்களுக்குத் தொடரும் என்பதைச்
சொல்ல முடியாது. சிலருக்கு வெயிலில் போய் விட்டு
வந்தால் ஒற்றைத் தலைவலி வரும். சிலருக்கு ஃபிளாஷ்
போலத் தெரியும்.
இன்னும் சிலருக்கு பளிச் பளிச் என திடீர் ஒளியும், சிலருக்கு
வித்தியாசமான கலர்களும் தெரிய ஆரம்பிக்கும். இவை
எல்லாம் ஆக்குலர் மைக்ரேனின் அறிகுறிகள்.
மற்ற மைக்ரேன்களில் சிலருக்கு வித்தியாசமான வாசனை
தெரியும். அதை உணர்ந்த உடனேயே மைக்ரேன் வந்துவிடும்.
என்ன செய்ய வேண்டும்?
பொதுவாக ஒற்றைத்தலைவலி சில நிமிடங்களே நீடிக்கும்
என்பதால் பல்லைக் கடித்துக் கொண்டு வலியைப் பொறுத்துக்
கொள்பவர்களே அதிகம். வலி அதிகரிக்கும்போது, செய்கிற
வேலையை நிறுத்திவிட்டு, சற்றே ஓய்வெடுப்பது வலியின்
தீவிரம் குறைக்கும்.வாழ்க்கை முறையில் சில மாற்றங்கள்
தேவைப்படும்.
தூக்கத்துக்கான மருந்துகளைத் தவிர்க்க வேண்டும்.
மைக்ரேன் உணர்வை மாற்ற சில பிரத்யேக மருந்துகள் உள்ளன.
அவற்றைக் கொடுத்து பிரச்னையின் வீரியத்தைக் குறைக்கலாம்.
யாருக்கு அதிகம் வரும்?
குழந்தைகளுக்கு வருமா என்பது தெரியவில்லை.
ஒற்றைத்தலைவலியைக் கண்டுபிடித்துக் குழந்தைகளுக்கு
சொல்லத் தெரிவதில்லை. பொதுவாக பெரியவர்களுக்கு,
குறிப்பாக பெண்களுக்கே இது அதிகம் பாதிக்கிறது.
மெனோபாஸ் வயதில் இருக்கும் பெண்களுக்கு பாதிப்பின் தீவிரம் அதிகம்.
(காண்போம்!)
----------------------
எழுத்து வடிவம் : எம்.ராஜலட்சுமி
நன்றி-குங்குமம் டாக்டர்

Similar topics
» உன் கண்களும் வாயும்...!
» ஒற்றைத் தலைவலியா?
» கடுமையான ஒற்றைத் தலைவலியா?
» ஒற்றைத் திறவுகோல்
» ஒற்றைத் தலைவலி, முதுவலிக்கு தீர்வாகும் அக்குபங்க்சர்
» ஒற்றைத் தலைவலியா?
» கடுமையான ஒற்றைத் தலைவலியா?
» ஒற்றைத் திறவுகோல்
» ஒற்றைத் தலைவலி, முதுவலிக்கு தீர்வாகும் அக்குபங்க்சர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum