Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
"ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டியாவான்" - பழமொழி விளக்கம்
Page 1 of 1
"ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டியாவான்" - பழமொழி விளக்கம்
ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டியாவான் என்பது
மக்களிடையே வழங்கும் சொலவடை !
இதன் மூல வடிவம்
“ஐந்தும் பெற்றால் அரசனும் ஆண்டியாவான்” என்பது !
ஐந்து என்பது எவற்றைக் குறிக்கிறது ? காண்போமா !
(01) ஆடம்பரமான தாய் :-
ஒரு ஆடவனின் தாய்க்கு, ஆடம்பர வாழ்க்கை மீது அளவு
கடந்த ஈர்ப்பு இருக்குமேயானால், அவன் எத்துணை வருவாய்
ஈட்டினாலும், போதாது ! அவனது செல்வ வளம் காலப்
போக்கில் நலிவடைந்து வறியவன் ஆகிப் போவான் !
(02) பொறுப்பற்ற தந்தை :-
தந்தை குடும்பப் பொறுப்பு சற்றும் இல்லாதவராக இருந்தால்,
எந்தக் குடும்பமாக இருந்தாலும், அது நாளடைவில் நில
குலைந்து தான் போகும் ! இத்தகைய குடும்பத்து ஆடவன்
எத்துணைப் பாடுபட்டாலும், அக்குடும்பம், உயர்நிலைக்கு
வருவது அரிதினும் அரிது !
(03) சோம்பேறிச் சகோதரர்கள் :-
சகோதரர்கள் சோம்பேறிகளாக இருந்தால், அவர்களால்
வருவாய் வாய்ப்புகள் துப்புரவாக இராது !
‘குந்தித் தின்றால் குன்றும் குலைந்து போம்’ என்னும்
முதுமொழியின்படி இவர்கள் குடும்பத்துச் சொத்துகளைத்
தின்றே அழித்து விடுவார்கள் !
(04) ஒழுக்கமில்லாத மனைவி :-
நன்முறையில் குழந்தை வளர்ப்பு, தேவையற்ற செலவுத்
தவிர்ப்பு, சிக்கனமான வாழ்க்கை, பேராசை இன்மை,
இனிய பேச்சு, ஆகிய நல் ஒழுக்கங்கள் இல்லாத மனைவி
ஒருவனுக்கு அமைந்துவிட்டால், அவனால் செல்வ வளத்தில்
நிமிர்ந்து நிற்கவே முடியாது !
குடும்பம் மென்மேலும் உயர்வடைய ஒழுக்கசீலரான மனைவி
இன்றியமையாத் தேவை ஆகும் !
(05) சொற்பேச்சு கேளாப் பிள்ளைகள் :-
தாய் தந்தையரின் உயரிய வழிகாட்டுதலின்படி நடந்து,
அவர்களின் அறிவுரைப்படி தம்மை நல்வழிப் படுத்திக்
கொள்ளும் பிள்ளைகள் அமைவது ஒரு குடும்பத்திற்குக்
கிடைக்கும் பெரும் பேறாகும் !
மாறாக, பெற்றோரின் சொற் பேச்சினைக் கேட்டு நடவாத
பிள்ளைகள் இருக்கும் குடும்பம், எக்காலத்திலும்
முன்னேறவே முடியாது !
எதிர்மறை விளைவுகளைத் தரும் மேற்கண்ட ஐந்து தீய
குணங்களையும் உடைய எந்தக் குடும்பமும், எந்தக்
காலத்திலும், முன்னேற முடியாது ! குடும்பத் தலைவன்
எத்துணை உழைத்தாலும், அவனது வருவாய் நலிவடைந்து,
குடும்பமே வறிய நிலைக்கு ஆட்பட்டுப் போகும் !
குடும்பத் தலைவன் அரசனே ஆனாலும்கூட நாளடைவில்
ஆண்டியாகிப்போவான் !
மேற்கண்ட கருத்தை எடுத்துச் சொல்ல உருவான சொலவடை,
காலப் போக்கில் கருத்துச் சிதைவு ஏற்பட்டு,
“ஐந்து பெண் பெற்ற அரசனும் ஆண்டியாவான்”,
“ஐந்தாறு பெண் பிறந்தால், அரசனும் ஆண்டியாவான்” என்று
வடிவம் மாறி நிலைபெற்றுவிட்டது !
“ஐந்தும் பெற்றால், அரசனும் ஆண்டியாவான்” என்று நாம்
இனிமேல் திருத்தமாகப் பேசுவோம் ! எழுதுவோம் ! சரிதானே !
------------------------------------------
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.

rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» "ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி"
» ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி..!
» ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி
» ஒட்டுவதுதான் ஒட்டும்! - பழமொழி
» முட்டாள் அரசனும் புத்திசாலி மருத்துவனும்
» ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி..!
» ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி
» ஒட்டுவதுதான் ஒட்டும்! - பழமொழி
» முட்டாள் அரசனும் புத்திசாலி மருத்துவனும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum