Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Yesterday at 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
ஜார்ஜ் பெர்னாட் ஷா பொன்மொழிகள்
சேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: வரலாறு :: பொன்மொழிகள்
Page 1 of 1
ஜார்ஜ் பெர்னாட் ஷா பொன்மொழிகள்
நூல் நிலையம் என்பது மனித வாழ்வில் ஒரு ஆடம்பரமன்று.
அவசியமேயாகும். உழைப்பால் களைப்பு அடைகிறவர்களே
இன்பம் அடைகிறார்கள்.
-
அரசியல்வாதிகள் இயற்றும் சட்டங்கள் அடிக்கடிமாறும்.
மாற்றப்படும். அறிவாளிகள் இயற்றும் நூற்கள் அமரத்துவம்
வாய்ந்தவை, அழிவற்றவை.
-
சிந்தனை என்பது நாம் விரும்பி மேற்கொள்ளும் கற்பனையே.
-
விருப்பமில்லாது திணிக்கப்படும் கல்வி வேண்டாத உணவு.
-
உயிர் உள்ள வரையில் உழைத்து சாக விரும்புகிறேன்.
உழைக்க உழைக்கத் தான் எனக்கு உயிர் வாழ விருப்பம்
இருக்கிறது.
-
தன் சொந்த மொழியில் முழுத்திறன் பெறாத எவனும் மற்ற
மொழியில் திறன் பெற முடியாது.
-
மனிதன் மிக உயரமான உச்சியை அடையலாம்.
ஆனால் அங்கேயே நீண்ட நாள் தங்க முடியாது.
-
நாம் பணக்காரர்களாக இருக்க வேண்டும் என்ற கட்டாயம்
இல்லை. ஆனால் ஒழுக்கம் உடையவர்களாக இருக்க வேண்டியது
அவசியம்.
-
உண்மையான அறிவின் வேலை நகைச்சுவையுடன்
இணைந்ததே.
-
வாழ்க்கையில் வெறுப்பை வெளிப்படுத்த சிறந்த வழி
அமைதியாயிருப்பதே.
-
அன்பு காட்டுவது அறிவை பெறுவது இரண்டிற்கும் வரைமுறை
இல்லை. இரண்டும் எல்லையற்றவை.
--
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: ஜார்ஜ் பெர்னாட் ஷா பொன்மொழிகள்
டி.என்.இமாஜான் எழுதிய, 'வாழ்க்கைக்கு வழிகாட்டும் கேள்வி - பதில்கள்' நுாலிலிருந்து:
இங்கிலாந்தின் பிரதமராக இருந்தவர், சர்.ராபர்ட் பில். இவர், சிறு வயதில் மெலிந்த உடலுடன் இருந்தார்.
பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது, முரட்டு சிறுவன் ஒருவன், அவரை வம்புக்கிழுத்து அடித்துக் கொண்டிருந்தான். அவனை திருப்பி அடிக்க சக்தியின்றி, அடியை வாங்கி வந்தார், ராபர்ட் பில்.
அருகில், அக்காட்சியை கவனித்துக் கொண்டிருந்த ஒரு சிறுவன், முரட்டு சிறுவனை நெருங்கி, 'இன்னும் இவனை எத்தனை அடிகள் அடிப்பதாக எண்ணியிருக்கிறாய்...' என்று கேட்டான்.
'ஏன், எதற்காக கேட்கிறாய்...' என்று கேட்டான், முரட்டு சிறுவன்.
'இனி, மேற்கொண்டு இவனுக்கு நீ கொடுக்க நினைக்கிற அடிகளை எனக்கு கொடுத்து விடு. நான் வாங்கிக் கொள்கிறேன்...' என்றான், அச்சிறுவன்.
அந்த சிறுவன் தான், பிற்காலத்தில், இங்கிலாந்தின் உலகப் புகழ்பெற்ற கவிஞனாக திகழ்ந்த, பைரன்.
இ.ஆர்.க.அருச்சுனன் எழுதிய, 'பெரியோர் வாழ்வில் சுவையானவை' நுாலிலிருந்து:
பிரான்ஸ் நாட்டை சேர்ந்த தத்துவஞானி வால்டேர், மரணப் படுக்கையில் கிடந்தபோது, அவர் மீது பற்று கொண்டவர்கள், தினமும் அவரை வந்து பார்த்துச் சென்றனர்.
ஒருநாள், பாதிரியார் ஒருவர் வந்து, 'உங்கள் பாவங்களையெல்லாம் கூறி, வருந்தி, பாவ மன்னிப்பை பெறுங்கள்...' என்றார்.
சிரித்துக்கொண்டே, 'உங்களை இங்கு யார் அனுப்பியது...' என்று வினவினார், வால்டேர்.
'நான் கடவுளின் பிரதிநிதி. கடவுள் தான் என்னை அனுப்பி வைத்தார்...' என்றார், பாதிரியார்.
'அன்புக்கினியவரே... நான் வால்டேராக உருவாகி, பின் வால்டேராகவே திரும்பி செல்கிறேன். உங்கள் நற்சாட்சி பத்திரங்கள் எனக்கு தேவையில்லை. கடவுளிடம் பாவமன்னிப்பு பெறவே விரும்புகிறேன். உங்களிடம் பெற விரும்பவில்லை...' என்று கூறி அனுப்பி விட்டார், வால்டேர்.
'சுவையான சம்பவங்கள்' நுாலிலிருந்து:
ஒருமுறை, நியூயார்க் வீதியில், ஆல்பர்ட் ஐன்ஸ்டின் நடந்து சென்றார். அப்போது, அவரை யாருமே கண்டுகொள்ளாததை, விசாரிக்காததை பார்த்த ஒருவர், வேகமாக அவரிடம் ஓடி, 'ஐயா, தாங்கள் எவ்வளவு பெரிய மேதை. தங்களை யாருமே கண்டு கொள்ளவில்லையே... ஒரு நடிகையாக இருந்தால், இந்த வீதியில் அவளை எவ்வளவு பேர் சூழ்ந்து கொண்டிருப்பர்...' என்று, குறைப்பட்டுக் கொண்டார்.
'மக்களுக்கு ரசிக்க என்னிடம் என்ன இருக்கிறது...' என, சிரித்துக் கொண்டே சொன்னார், ஐன்ஸ்டின்.
டாக்டர் மெ.ஞானசேகர் எழுதிய, 'சிகரம் தொட்டவர்கள்' நுாலிலிருந்து:
சமையல் அறையில், எடுபிடி வேலை செய்து வந்தவர், ஹெரால்டு ராபினஸ். பின்பு, நியூயார்க் நகரில் ஒரு ஓட்டலில் சர்வராகவும் பணிபுரிந்தார். இந்த வேலைகள், ஒரு காலகட்டத்தில் அவருக்கு சலிப்பை தந்தன. பல்வேறு நாவல்களை படிக்கும் பழக்கம் இருந்த அவருக்கு, தான் ஏன் நாவல் எழுதக் கூடாது என்ற எண்ணம் ஏற்பட்டது.
சிறு வயதிலேயே படிப்பையும், தன்னை வளர்த்த பெற்றோரையும் விட்டு, ஓட்டலுக்கு வந்து பிழைத்த அவருக்கு தான், இந்த சிந்தனை உதித்தது. தன் எண்ணத்தை செயலில் காட்ட விரும்பினார்.
நாவல்கள் எழுத ஆரம்பித்தவர், 40 ஆண்டுகள் எழுதினார். எழுத்துலகில் கொடி கட்டி பறந்தார். அவரது நாவல்கள், அவர் இறப்பதற்கு முன்பே, 70 கோடி பிரதிகள் விற்பனையானது.
கடந்த, 1997ல் இறந்த இவர், இறுதி, 13 ஆண்டுகள் உடல்நிலை காரணமாக எழுதவில்லை. ஆயினும், 70 கோடி பிரதிகள் விற்றதால், அவர் அடைந்த புகழும், வாழ்வும் பிரமிக்கத்தக்கது.
நடுத்தெரு நாராயணன்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum