சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

இன்று புது வருடம்  Khan11

இன்று புது வருடம்

3 posters

Go down

இன்று புது வருடம்  Empty இன்று புது வருடம்

Post by ரம்ஷீன் Tue 7 Dec 2010 - 11:50

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹு
இன்று, ஹிஜ்ரி 1432 வது வருடம், முஹர்ரம் மாதம், முதலாவது தினமாகும் (01/01/1432) இப்புதிய வருடத்தில் அல்லாஹ் எம் பாவங்களை மன்னித்து நம்மனைவரையும் பொருந்திக் கொள்வானாக. பெரிதாக கட்டுரையெல்லாம் எழுதுவதற்கில்லை. சுறுக்கமாக ஒர் குர்ஆனிய வசனத்தை மட்டும் தங்களின் சிந்தனைக்குத் தரலாம் என நினைக்கிறேன். அதாவது அல்லாஹ் கூறுகிறான்
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّـهَ وَلْتَنظُرْ نَفْسٌ مَّا قَدَّمَتْ لِغَدٍ ۖ وَاتَّقُوا اللَّـهَ ۚ إِنَّ اللَّـهَ خَبِيرٌ بِمَا تَعْمَلُونَ
(سورة الحشر 18)
ஈமான் கொணடவர்களே! அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள், மேலும், ஒவ்வொருவரும் (மறுமை) நாளுக்காக தான் முற்படுத்தி வைத்திருப்பதைப் பார்த்துக் கொள்ளட்டும், இன்னும், நீங்கள் அல்லாஹ்வை அஞ்சி நடந்து கொள்ளுங்கள், நீங்கள் செய்பவற்றை, நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தவன்.(சூரத்துல் ஹஷ்ர்-18)

மனித குலத்தைப் பார்த்து இறைவன் முக்கியமான சில விஷயங்களை இங்கு குறிப்பிடுகிறான்.
01- நீங்கள் பழய வருடத்திலிருந்தாலும் புதிய வருடத்தை அடைந்தாலும் அல்லாஹ்வை அஞ்சி வாழ மறக்க வேண்டாம்!!
02- நீங்கள் எனக்காக தியாகப் பட்டு நல்லமல்கள் செய்வது இருக்கட்டும்! இதற்கு முன் (அமல்கள் என்ற பெயரிலும்) பாவங்கள் செய்து கழித்தீர்களே! அது பற்றி சிந்தித்துப் பார்த்தீர்களா? அது இறைவனாகிய என்னால் ஏற்றுக் கொள்ளப் பட்டிருக்கும் என்று உங்களுக்கு யார் சொன்னார்??
சரி! செய்த அமல் இஹ்லாசானதாக எனக்குத்தான் செய்தீர்களா? அல்லது ஊர் உலகத்துக்கு செய்தீர்களா?
என்ன பெறிய அமல் செய்து விட்டீர்கள்? உங்களுக்கு முன் வாழ்ந்தவாகள் என் அன்பைப் பெறுவதற்காக எவ்வளவு பெறிய கஷ்டங்களையும் துன்பங்களையும் எனக்காகப் பொறுத்துக் கொண்டு என்னையே சார்ந்திருந்தார்களே! நீங்கள் அப்படி என்ன பெறிய அமல்கள் செய்து விட்டீர்கள்!!
செய்தாலும் பெறுமைக்கு மாவிடிப்பது போன்றல்லவா இருக்கிறது.
எத்தனை பேரை ஏசியுள்ளிர்கள்!, திட்டியுள்ளீர்கள்!, அவதூறு கூறியுள்ளீர்கள்!,
புறாமை , கோள்....அதெயெல்லாம் நீங்கள் நினைத்துப் பார்த்தீர்களா?
நீங்கள் செய்துள்ள கொஞ்ச நன்மைகளையும் நாளை அவர்களுக்கு கொடுப்பதற்ககல்வா முற்படுத்தி வைத்துள்ளீர்கள்!!
நான் கேட்பது, உங்களுக்கு என்ன முற்படுத்தி வைத்துள்ளீர்கள்!!

நல்லமல்கள் நிரைய செய்ய வேண்டும் என்ற ஆசை இருக்கும் உங்களிடம், நான் எதிர் பார்ப்பது அதுவல்ல, நீங்கள் அவைகளை செய்யாவிட்டாலும் நாளை நான் அது பற்றியல்ல விசாரிப்பது. அதனால்தான் நான் கூறியிருக்கும் வார்த்தைகளை நீங்கள் கவனித்தால் அதன் யதார்த்தத்தைப் புறிந்து கொள்வீர்கள். இதோ அந்த வசனத்தைப் படியுங்கள் “ஒவ்வொருவரும் (மறுமை) நாளுக்காக தான் முற்படுத்தி வைத்திருப்பதைப் பார்த்துக் கொள்ளட்டும்“
அடுத்த கனம் மவ்த்தாகி- மரணமடைந்து விட்டீர்கள். இப்பொழுது சொல்லுங்கள்! நீங்கள் செய்து கழித்தவைகளின் இலட்சணங்களின் தரம் என்ன என்று சிந்தித்திருந்தீர்களா? நீங்கள் எனக்காக முற்படுத்தி வைத்திருப்பது எனக்குத் தெரியாமலில்லை. ஆனால் அதனை நீங்கள் பரிசோதித்துப் பார்த்தீர்களா? பார்க்கவே மாட்டீர்கள். ஏனெனில் அவையெல்லாம் சரிதானே என்ற எண்ணத்தில் இருப்பீர்கள். அதனால்தான் “முற் படுத்தி வைத்திருப்பதை“ செய்தவைகளை ஒவ்வொருவரும் பார்த்துக் கொள்ளட்டும்! என்று உங்கள் மீது கொண்ட கருணையினால் இப்படிக் கூறுகிறேன்.

எனவே, செய்யப் போகும் அமல்கள் ஒருபுறமிருக்கட்டும். நாளைக்காக நாம் என்ன செய்தோமோ அவைகளைக் கொஞ்சம் நேரம் ஒதுக்கி சிந்தித்து அது தவறானால் அதற்கு பாவன்னிப்பும், அடியார்கள் சம்மந்தமான தவறானால் அவர்களோடு தீர்த்துக் கொண்டும் அல்லாஹ்வை அனுதினமும் அஞ்சி வாழ வல்ல ரஹ்மான் நம்மனைவருக்கும் அருள் புரிவானாக. ஆமீன்
ரம்ஷீன்
ரம்ஷீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 134
மதிப்பீடுகள் : 6

Back to top Go down

இன்று புது வருடம்  Empty Re: இன்று புது வருடம்

Post by *சம்ஸ் Tue 7 Dec 2010 - 13:19

இன்று புது வருடம்  R1
மலரும் புதுவருடத்தில் இறையருள் பெறுவோம்!

இஸ்லாம் தனித்துவமான மார்க்கமாகும். இஸ்லாம் சகல விடயங்களிலும் புனிதத்தன்மை வாய்ந்ததாக காணப்படுவதுடன் தனது தனித்துவத்தினை பிரதிபலிக்கின்றது. அந்த வகையில் அது இஸ்லாமிய வருட கணிப்பு முறையிலும் தனித்துவ தன்மை கொண்டதாக காணப்படுகிறது.

‘சூரிய சுழற்சியை’ அடிப்படையாக கொண்டே தமிழ், சிங்கள, ஆங்கில வருடங்கள் கணிக்கப்படுகின்றன. ஆனால் இஸ்லாமிய வருடங்கள் ‘சந்திர சுழற்சியை’ அடிப்படையாக வைத்து கணிக்கப்படு வது அதனுடைய சிறப்பம்சமாக காணப்படுகிறது.

நபி (ஸல்) அவர்களுக்கு நுபுவத் கிடைத்ததன் பின் 13 வருடங்கள் தன் சொந்த மண்ணில் இஸ்லாமிய பிரசார பணியில் ஈடுபட்டார். துன்பங் களை தாங்கி பின் அல்லாஹுவின் கட்டளைப்படி மதீனா நோக்கி புறப்பட்டு தூய இஸ்லாத்தை எடுத்துச் சென்ற ‘ஹிஜ்ரத் நிகழ்வு’ இஸ்லாமிய வரலாற்றில் மாபெரும் திருப்புமுனையாக அமைந்தது.

நாம் தற்போது ஹிஜ்ரி 1431 னை பூர்த்தி செய்து 1432 ஆம் ஆண்டிற்குள் பிரவேசிப்பதற்கு எம்மை தயார்படுத்திக் கொண்டிருக்கிறோம். இவ்வருடத்தின் இறுதித் தருவாயில் இருக்கும் நாம் எம்மிடமிருந்து விடை பெற்றுச் செல்லும் இவ்வருடத்தில் நாம் மேற்கொண்ட செய்பாடுகளைப்பற்றி மீள்பரிசோதனை செய்து கொள்வது இன்றி அமையாதது ஆகும்.

எம்மை விட்டு ஒரு வருடம் பிரிந்து செல்கின்றது என்பது எம்முடைய மண்ணறையை நோக்கிய பயணத்தில் ஒரு வருடம் குறைவடைந்து செல்கிறது என்பதை நினைவுறுத்துதல் அவசியமாகும். ஹஸன் பஸ்ரி (ரஹ்) அவர்கள் கூறினார்கள்,

“மனிதா நீ நாட்களின் தொகுதியாகும். ஒவ்வொரு நாளும் கழியும் போது உன்னிலிருந்து ஒரு பகுதி கழிந்து விடுகிறது”

அதற்கமைவாக நோக்கும் போது எம்மிலிருந்து ஒவ்வொரு நாளும் ஒரு பகுதி கழிந்து கொண்டே செல்கிறது. எனவே ஒரு முஸ்லிமை பொறுத்தவரையில் அவன் நாளந்தம், வாரந்தம் தன்னைப் பற்றி விசாரணை செய்து தனது பலவீனங்களை நீக்கி தனது ஈமானை உறுதியாக்கி தக்வா உடைய ஒரு மனிதனாக மாற வேண்டியவன் ஆவான்.

“நீங்கள் ஒவ்வொருவர்களும் மெய்ப்பாளர்கள் உங்களது

மேய்ப்பு பற்றி மறுமையில் விசாரிக்கப்படுவீர்கள்”

என்பதற்கிணங்க எம்மை மறுமையில் அல்லாஹுதாலா விசாரிப்பதற்கு முன்னர் இன்றே நம்மை நாமே விசாரித்துக் கொள்வது சிறந்ததாகும். அவ் வகையில் எம்மை விட்டும் பிரிந்து செல்கின்ற இவ்வருடத்தில் எத்தனை தடவைகள் அர்குர்ஆனை ஓதி முடித்திருக்கின்றேன்? பர்ளு தொழுகைகளை உரிய நேரத்திற்கு நிறைவேற்றி இருக்கிறேனா? நபிளான வணக்கங்களை எத்தனை தடவை நிறைவேற்றினேன்.

இபாதத்தில் எனது பங்களிப்பு எத்தகையது என நம்மை நாமே விசாரணை செய்து கொள்வதுடன் நாம் செய்த பாவங்களுக்கும் தவறுகளுக்கும் அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு தேடிக்கொள்ள வேண்டும். இதையே இஸ்லாம் முஹாஸபா எனும் சுய விசாரணை கோட்பாட்டின் மூலம் தெளிவுபடுத்துகிறது.

மலர இருக்கும் புதிய ஆண்டில் இவ்வருடத்தை விட அதிகளவான நன்மைகளை செய்வதற்கும் உறுதிக் கொள்ள வேண்டும்.

“நிச்சயமாக அல்லாஹுவிடத்தில் மாதங்களின் எண்ணிக்கை

பன்னிரெண்டு ஆகும். அதில் நான்கு மாதங்கள்

புனிதமானவை” (சூறா தெளபா :36)

முஹர்ரம் இஸ்லாமிய வருடத்தில் முதலாவது மாதமாக காணப்படுகின்றது. இம்மாதமானது புனிதமிகு மாதங்களில் ஒன்றாக காணப்படுவதுடன் வரலாற்று ரீதியாகவும் பல்வேறு முக்கிய நிகழ்வுகள் இடம்பெற்ற மாதமாகவும் காணப்படுகிறது.

அல்லாஹுத்தாலா ‘அர்ஷில் குர்ஷ்’ “லஹ்ஹுல் கலம்” ஆகியவற்றை முஹர்ரம் மாத்திலேயே படைத்தான். நபி மூஸா (அலை) அவர்களை பிர்ஆவுனினதும் அவனது கூட்டத்தாரினதும் தீங்குகளில் இருந்து காப்பாற்றினான். மேலும் கர்பலாவில் ஹுசைன் (றழி) அவர்கள் சஹீதாக்கப்பட்டதும் இப்புனித மிகு மாதத்திலாகும். இம்மாதத்தில் சுன்னதான நோன்பு நோற்பது இஸ்லாத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், ஆஷ¤ரா 10 ஆம் தினத்தை கண்ணியப்படுத்தி யூதர்கள் நோன்பு நோற்கிறார்கள். அடுத்த ஆண்டு நான் உயிரோடு இருந்தால் யூதர்களுக்கு மாற்றமாக ஒன்பதாம் நாளும் நோன்பு நோற்பேன்.

(முஸ்லிம், திர்மிதி, அபுதாவுத்)

இதனடிப்படையில் முஹர்ரம் பிறை 9, 10 ஆகிய தினங்களில் நோன்பு நோற்பது வலியுறுத்தப்பட்டுள்ளது. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்,

“ஆஷ¤ரா தினத்தில் நோக்கப்படும் ஒரு நோன்பானது கடந்த வருடத்தின் பாவங்களுக்கு பரிகாரம் ஆகும்.

(திர்மிதி)

ஆஷ¤ரா தினத்தில் அல்லாஹ் நோன்பு நோற்பதை கடமையாக்கவில்லை. நான் நோன்பிருக்கிறேன். எனவே விரும்பியவர்கள் நோன்பு நோற்றுக்கொள்ளட்டும். விரும்பியவர்கள் விடட்டும். என ரஸ¤ல் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அருளியுள்ளார்கள்.

எனவே மேற்படி கூற்றுக்களை நோக்கும் போது முஹர்ரம் மாதத்தில் முஸ்லிம்கள் சுன்னத்தான நோன்பு நோற்பது வலியுறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக அதிக நன்மையினை அடைந்து கொள்வதற்காகவும் அல்லாஹுவின் திருப்தியை பெற்றுக்கொள்வதற்கும். இறை அச்சத்தை வலுப்படுத்தவும் நாம் நோன்பு நோற்க முயற்சிப்பதுடன் மலர இருக்கும் இந்த ஆண்டிலே தூய எண்ணத்துடன் நாம் செய்த தவறுகளுக்கு பாவமன்னிப்பு பெற வேண்டும்.

சகல இன மக்களுடனும் இனவாதம் கடந்து மொழி வாதம் துறந்து பரஸ்பர புரிந்துணர்வுடனும் சகோதரதுவத்துடனும் ஒற்றுமை காத்து வாழ முயற்சிப்போமாக.

வர இருக்கும் ஹிஜ்ரி ஆண்டு 1432ல் இஸ்லாமிய பிரசார பணியில் புத்துணர்வுடனும் உத்வேகத்துடனும் எடுத்துச் செல்ல சமாதானமும் செளபாக்கியமும் நிறைந்த ஆண்டாக மலர இறைவனை பிரார்த்திப்போமாக!

எம்.ஆர்.எம். ரனீஸ்,

கொழும்பு பல்கலைக்கழகம்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

இன்று புது வருடம்  Empty Re: இன்று புது வருடம்

Post by நண்பன் Tue 7 Dec 2010 - 13:59

:”@: :”@: :”@:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இன்று புது வருடம்  Empty Re: இன்று புது வருடம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum