சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

 பகலில் தூங்கி இரவில் விழிப்பான் - விடுகதைகள் Khan11

பகலில் தூங்கி இரவில் விழிப்பான் - விடுகதைகள்

Go down

 பகலில் தூங்கி இரவில் விழிப்பான் - விடுகதைகள் Empty பகலில் தூங்கி இரவில் விழிப்பான் - விடுகதைகள்

Post by rammalar Thu 10 Feb 2022 - 5:21

[color:44e4=FF8C00]201. பகலில் தங்கத் தட்டு, இரவில் வெள்ளித் தட்டு - அது என்ன?
- [சூரியன், சந்திரன்]
[color:44e4=FF8C00]202. கை இல்லை, கால் இல்லை, காடு மேடு, மலை தாண்டி போகிறான், ஆனால் பறவையல்ல - அது யார்?
- [மேகம்]
[color:44e4=FF8C00]203. வெளியில் இருப்பவனைத் தொட்டால், உள்ளிருப்பவன் அலறுவான் - அவன் யார்?
- [அழைப்பு மணி]
[color:44e4=FF8C00]204. மண்ணுக்கடியில் விளையும் இரட்டை முத்துக்கள் - அது என்ன?
- [வேர்க்கடலை]
[color:44e4=FF8C00]205. மரம் உண்டு கிளையில்லை, காய் துவர்க்கும், கனி இனிக்கும் - அது என்ன?
- [வாழை]


[color:44e4=E75480]206. கடல் இருக்கும் தண்ணீர் இருக்காது, நாடு இருக்கும் வீடு இருக்காது - அது என்ன?
- [உலக வரைபடம்]
[color:44e4=E75480]207. மழைக்கும் இடம் உண்டு, மன்னர் படைக்கும் இடம் உண்டு - அது என்ன?
- [மரத்தடி]
[color:44e4=E75480]208. விஷம் கொண்டதை விரும்பியே தொழுவர் - அது என்ன?
- [பாம்பு]
[color:44e4=E75480]209. இரண்டு கால் ஜீவன்களுக்கு இருக்க உதவுவான் மூன்று காலன் - அது என்ன?
- [முக்காலி]
[color:44e4=E75480]210. ஒற்றைக் கண்ணன் பிரிந்தவர்களை ஓடி ஓடி இணைப்பான் - அவன் யார்?
- [ஊசி- நூல்]


[color:44e4=820000]211. காண்பவரை ஏமாற்றும் நீர், தாகம் தீர்க்காத நீர் - அது என்ன?
- [கானல் நீர்]
[color:44e4=820000]212. கையால் பறப்பார்கள், மூக்கால் தின்பார்கள் - அவர்கள் யார்?
- [பறவைகள்]
[color:44e4=820000]213. நீல நிறக் கடலிலே வெள்ளைத் தோணி மிதக்குது - அது என்ன?
- [நிலவு]
[color:44e4=820000]214. நீரிலே கொண்டாட்டம், நிலத்திலே திண்டாட்டம் - அது யாருக்கு?
- [மீனுக்கு]
[color:44e4=820000]215. வெளுத்த ஆளுக்கு, கருப்பு தலைப்பாகை - அது என்ன?
- [தீக்குச்சி]


[color:44e4=FF1493]216. பத்து பேர் சேர்ந்தால் பஞ்சம் போக்குவார்கள் - அவர்கள் யார்?
- [கைவிரல்கள்]
[color:44e4=FF1493]217. ஒரு வீட்டுக்கு இரண்டு வாசல் - அது என்ன?
- [மூக்கு]
[color:44e4=FF1493]218. இருட்டிற்கு அழைப்பார்கள், வெளிச்சம் வந்தால் அணைப்பார்கள் - அது என்ன?
- [விளக்கு]
[color:44e4=FF1493]219. சின்னக் கதவுகள், லட்சம் முறை மூடித்திறந்தாலும் ஓசை வராத கதவுகள் - அது என்ன?
- [கண் இமைகள்]
[color:44e4=FF1493]220. தாகம் தீர்க்கும் தண்ணீர் சொம்பு அந்தரத்தில் தொங்குது - அது என்ன?
- [இளநீர்]


[color:44e4=330066]221. கல்லை சுமந்து, கறிக்கு ருசியாவான் - அவன் யார்?
- [புடலங்காய்]
[color:44e4=330066]222. அடர்ந்த காட்டில் ஒத்தையடிப் பாதை - அது என்ன?
- [தலைவகிடு]
[color:44e4=330066]223. நித்தம் வரும் விருந்தாளி மாலையில் மறைந்து போவான் - அவன் யார்?
- [சூரியன்]
[color:44e4=330066]224. மரத்துக்கு மேலே பழம், பழத்துக்கு மேலே மரம் - அது என்ன?
- [அன்னாசிப் பழம்]
[color:44e4=330066]225. பகலிலே வெறுங்காடு, இரவெல்லாம் பூக்காடு - அது என்ன?
- [வானம்]


[color:44e4=1B4D3E]226. மேகத்தின் பிள்ளை, தாகத்தின் நண்பன் - அவன் யார்?
- [மழை]
[color:44e4=1B4D3E]227. ராத்திரி பிறந்த பையன் தலையில் குல்லாவுடன் பிறந்தான் - அவன் யார்?
- [காளான்]
[color:44e4=1B4D3E]228. குமுறி குமுறி அழுதிடும், நல்ல சோற்றை தந்திடும் - அது என்ன?
- [உலைநீர்]
[color:44e4=1B4D3E]229. அரை சாண் அரசனுக்கு, அரை சாண் கிரீடம் - அவன் யார்?
- [கத்தரி]
[color:44e4=1B4D3E]230. குண்டு ராஜாவுக்கு குடல் முழுக்க பல் - அது என்ன?
- [மாதுளை]


[color:44e4=FF1493]231. காலத்துக்கும் எரிவேன், கடலைக்கூட வற்ற வைப்பேன் - நான் யார்?
- [சூரியன்]
[color:44e4=FF1493]232. கொடி உடம்புக்காரிக்கு குண்டு குண்டாய் பிள்ளைகள் - அது என்ன?
- [பூசனிக்காய்]
[color:44e4=FF1493]233. ஓட்டைக் குச்சியில் ஒய்யார ராகம் இசைக்கலாம் - அது என்ன?
- [புல்லாங்குழல்]
[color:44e4=FF1493]234. மண்ணில் துளிர்த்து பூக்காமல், காய்க்காமல் மாலையாகும், மருந்தாகும் - அது என்ன?
- [புல்]
[color:44e4=FF1493]235. ஆயிரம் கண்ணுடையவன் அகப்பட்டதை விடமாட்டான் - அது என்ன?
- [சல்லடை அரிப்பு]


[color:44e4=333366]236. அலங்கார ஆடை உருவாக அவர்கள் இருவர் துணை வேண்டும் - யார் அவர்கள்?
- [ஊசி- நூல்]
[color:44e4=333366]237. ஆயிரம் அறை மண்டபத்திலே அத்தனையும் இனிப்பு - அது என்ன?
- [தேன் கூடு]
[color:44e4=333366]238. வெள்ளை, கருப்பு கருவுடன் கூடிய முட்டை - அது என்ன?
- [கண்]
[color:44e4=333366]239. ஊசி இலை கட்டுக்குள் ஊர்ந்து செல்லும் பன்றிகள் - அது என்ன?
- [பேன்கள்]
[color:44e4=333366]240. கடலுக்குள் விளையும் முத்து அல்ல, நிலத்துக்குள் விளையும் முத்து - அது என்ன?
- [வேர்க்கடலை]


[color:44e4=CC00CC]241. எண்ணெய் குடித்துவிட்டு ஏழு கடல் தாண்டுவான் - அவன் யார்?
- [விமானம்]
[color:44e4=CC00CC]242. நிலத்தில் மின்னும் வைரம், நீரில் மூழ்கி கரையும் - அது என்ன?
- [உப்பு]
[color:44e4=CC00CC]243. தாகத்துக்கு அள்ளிக்குடிக்க முடியாத நீர், இறங்கி குளிக்க முடியாத நீர் - அது என்ன?
- [கானல் நீர்]
[color:44e4=CC00CC]244. அழகிய வட்டத்தட்டு, வாணலியில் போட்டால் கசங்கும் - அது என்ன?
- [அப்பளம்]
[color:44e4=CC00CC]245. கை இல்லாமல் நீந்துவான், கால் இல்லாமல் ஓடுவான் - அவன் யார்?
- [படகு]


[color:44e4=820000]246. குளிர் இல்லாவிட்டாலும் குளிர் காய்வார் - அது யார்?
- [பொற்கொல்லர்]
[color:44e4=820000]247. குதிகுதித்தான் பல் இளித்தான் - அது யார்?
- [சோளப்பொறி]
[color:44e4=820000]248. தங்கை தீட்டிய ஓவியம் தரையில்தான் தவழும் - அது என்ன?
-[கோலம்]
[color:44e4=820000]249. தட்டத் தட்ட தகடு, காயக் காய விறகு - அது என்ன?
- [எருக்கட்டி]
[color:44e4=820000]250. ஆழக் கிடப்பவன் கைக்கு வந்தால் ஆயிரம் மதிப்பு - அது என்ன?
- [முத்து]


[color:44e4=F5C71A]251. வாய் திறக்காமல் தகவல் சொல்வான் - அவன் யார்?
- [தபால்]
[color:44e4=F5C71A]252. உலகே எதிர்பார்க்கும் அவன் வரவை - அவன் யார்?
- [மழை ]
[color:44e4=F5C71A]253. எதையும் பேசும் எலும்பில்லாதவன் - அவன் யார்?
- [நாக்கு]
[color:44e4=F5C71A]254. பார்த்தது இருவர், பறித்தது இருவர், ஆனால் சுவைப்பது மட்டும் ஒருவன் - அவர்கள் யார்?
- [கண்கள், கைகள், வாய்]
[color:44e4=F5C71A]255. புகையும், நெருப்பும் இல்லாமல் எரியும் - அது எது?
- [நெஞ்சு எரிச்சல்]


[color:44e4=D70A53]256. அந்தி வரும் நேரம், அவளும் வரும் நேரம் - அவள் யார்?
- [நிலா]
[color:44e4=D70A53]257. வான் வழி வருவான், பாதாளம் வழியாய் போவான் - அவன் யார்?
- [மழை]
[color:44e4=D70A53]258. கறுப்பன் வயதானால் வெளுத்துவிடுவான் - அவன் யார்?
- [தலைமுடி]
[color:44e4=D70A53]259. நெருப்பில் வெந்தவனுக்கு நீண்ட ஆயுள் - அவன் யார்?
- [செங்கல்]
[color:44e4=D70A53]260. அவனைக் கண்டால் அஞ்சுவார்கள், ஆதிசேஷனாய் வணங்குவார்கள் - அவன் யார்?
- [பாம்பு]


[color:44e4=00CED1]261. சட்டையை கழற்றினால், சாப்பாடு தயார் - அது என்ன?
- [வாழைப்பழம்]
[color:44e4=00CED1]262. பகலெல்லாம் அண்ணன் நம்முடன் இருப்பான். இரவில் தம்பி நம்முடன் வருவான் - அவர்கள் யார்?
- [சூரியன், சந்திரன்]
[color:44e4=00CED1]263. இணை பிரியாமல் வருவார்கள் இரட்டையர்கள் அவரகள் மோதினால் ஆள் காலி - அவர்கள் யார்?
- [இடி, மின்னல்]
[color:44e4=00CED1]264. கொண்டையில் பூ உண்டு, கோழிக்கு உறவுக்காரன் - அவன் யார்?
- [சேவல்]
[color:44e4=00CED1]265. இளசிலே தாகம் தீர்ப்பான், முற்றினால் சமையலில் ருசிப்பான் - அது என்ன?
- [தேங்காய்]


[color:44e4=9400D3]266. குங்கும நிறத்தில் பூ பூக்கும், கொள்ளுக்காய் போல் காய்காய்க்கும் - அது என்ன?
- [கொளிஞ்சி செடி]
[color:44e4=9400D3]267. இரண்டு பேர் சேர்ந்தால் எதையும் செய்து முடிப்பார்கள் - அவர்கள் யார்?
- [கைகள்]
[color:44e4=9400D3]268. அரை சாண் ராணி, வயிற்றில் ஆயிரம் முத்துக்கள் சுமக்கிறாள் - அது என்ன?
- [வெண்டைக்காய்]
[color:44e4=9400D3]269. உயிரில்லாதவனுக்கு உடம்பெல்லாம் நரம்பு - அது என்ன?
- [பாய்]
[color:44e4=9400D3]270. காண்பவரை ஏமாற்றும் நீர், தாகம் தணிக்காத நீர் - அது என்ன?
- [கானல் நீர்]


[color:44e4=003399]271. விஷம் கொண்டவனை, பாலூற்றி தொழுவர் - அது என்ன?
- [பாம்பு]
[color:44e4=003399]272. மழைக்கும் இடம் உண்டு, மன்னர் படைக்கும் இடம் உண்டு - அது என்ன?
- [மரத்தடி]
[color:44e4=003399]273. இரண்டு கால் உயிர்களுக்கு, மூன்று காலன் இருக்க உதவுவான் - அவன் யார்?
- [முக்காலி]
[color:44e4=003399]274. அச்சு இல்லாத சக்கரம், அழகை கூட்டும் சக்கரம் - அது என்ன?
- [வளையல்]
[color:44e4=003399]275. சுற்றி சுற்றி சூட்டைப் போக்கினாள் - அவன் யார்?
- [மின்விசிறி]


[color:44e4=3C1414]276. என்னில் உன்னைக் காணலாம் - நான் யார்?
- [கண்ணாடி]
[color:44e4=3C1414]277. முதலில் ஒலிப்பான், பிறகு உரைப்பான் - அவன் யார்?
- [தொலைபேசி]
[color:44e4=3C1414]278. அடித்தால் விலகாது, அணைத்தால் நிற்காது - அது என்ன?
- [தண்ணீர்]
[color:44e4=3C1414]279. ஐவர் வீட்டுக்கு பொதுவாய் ஒரு முற்றம் - அது என்ன?
- [உள்ளங்கை]
[color:44e4=3C1414]280. வால் உள்ள பையன் காற்றில் பறக்கிறான் - அவன் யார்?
- [பட்டம்]


[color:44e4=006400]281. எத்தனை தரம் சுற்றினாலும், அவனுக்கு தலை சுற்றாது - அவன் யார்?
- [மின் விசிறி]
[color:44e4=006400]282. முச்சந்தியில் மூன்று விளக்கு, பார்த்து நடந்தால் பாதுகாப்பு - அது என்ன?
- [சாலை எச்சரிக்கை விளக்கு]
[color:44e4=006400]283. அழகான பெண்ணுக்கு அதிசயமான வியாதி, பாதி நாள் மெலிவாள், மீதி நாள் வளர்வாள் - அவள் யார்?
- [நிலவு]
[color:44e4=006400]284. பச்சை நிற அழகிக்கு, உதட்டுச் சாயம் பூசாமலேயே சிவந்த வாய் - அவள் யார்?
- [கிளி]
[color:44e4=006400]285. மணமில்லா பூ, மாதர்கள் சூடாத பூ, மண்டைத் தடி பூ, சமையலில் மணக்கும் பூ - அது என்ன பூ?
- [காலிபிளவர்]


[color:44e4=00008B]286. பழம் காயாகி பந்தியிலே விருந்தாகும் - அது என்ன?
- [எலுமிச்சை ஊறுகாய்]
[color:44e4=00008B]287. ஆவியில் குளிக்கும், அருபசியை தீர்க்கும் - அது என்ன?
- [இட்லி]
[color:44e4=00008B]288. நீரில் நீந்தும், நிலத்தில் தாவும் - அது என்ன?
- [தவளை]
[color:44e4=00008B]289. நிலத்தில் உணவு, ஆகாயத்தில் வாழ்வு - அது யாருக்கு?
- [பறவைகள்]
[color:44e4=00008B]290. விதையின்றி முளைக்கும், வேரின்றி கிளைக்கும் - அது என்ன?
- [கொம்பு]


[color:44e4=FFD300]291. கருப்பையில் சில மாதம், வெளிப்பையில் சில வருடம் பிள்ளை சுமப்பான் - அவன் யார்?
- [கங்காரு]
[color:44e4=FFD300]292. கல்லாலும், மண்ணாலும் கட்டாத வீடு, காற்றிலே ஆடும் வீடு - அது என்ன?
- [துக்கணாங் குருவிக்கூடு]
[color:44e4=FFD300]293. சில்லறை சேர்த்து வைத்த செந்நிற அழகி - அவள் யார்?
- [மிளகாய் வற்றல்]
[color:44e4=FFD300]294. ஆறாத் துயரில் ஊற்றெடுக்கும் ஆறு - அது என்ன?
- [கண்ணீர்]
[color:44e4=FFD300]295. தலைகீழாக தொங்குவான், தலை சுழற்றி தருவான் தென்றலை - அவன் யார்?
- [மின் விசிறி]


[color:44e4=990000]296. பகலில் தூங்கி இரவில் விழிப்பான் - அவன் யார்?
- [விண்மீன்]
[color:44e4=990000]297. கால் இல்லாத மான், வேர் இல்லாத புல்லைத் தின்னும் - அது என்ன?
- [மீன் மற்றும் பாசி]
[color:44e4=990000]298. ஒற்றைக் கால் மனிதனுக்கு ஒன்பது கை - அது என்ன?
- [மரம்]
[color:44e4=990000]299. கிளைகள் உண்டு, ஆனால் இலைகள் கிடையாது - அது என்ன?
- [மான் கொம்பு]
[color:44e4=990000]300. சிறகடிக்காத பறவை, ஊர் ஊராய் பறக்கும் - அது என்ன?
- [விமானம்]
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

 பகலில் தூங்கி இரவில் விழிப்பான் - விடுகதைகள் Empty Re: பகலில் தூங்கி இரவில் விழிப்பான் - விடுகதைகள்

Post by rammalar Thu 10 Feb 2022 - 5:22

301. காவல் காக்கும், ஆனால் நாயல்ல. காலை கடிக்கும், ஆனால் செருப்பல்ல - அது என்ன?
- [முள் செடி]
302. ஒளி தரும்-விளக்கல்ல, வெப்பம் தரும்-நெருப்பல்ல, பளபளக்கும்-தங்கம் அல்ல - அது என்ன?
- [சூரியன்]
303. கண்ணுக்குள் இருப்பவன் கவலைக்கும் மகிழ்ச்சிக்கும் எட்டிப் பார்ப்பான் - அவன் யார்?
- [கண்ணீர்]
304. உதைக்குப் பறப்பவனை துரத்துவார்கள் சிலர், அதை ரசிப்பார்கள் பலர் - அவன் யார்?
- [கால்பந்து விளையாட்டு]
305. புள்ளிக்குச் சொந்தக்காரன், துள்ளி ஓடுவதில் கெட்டிக்காரன் - அவன் யார்?
- [மான்]
306. ஒலிப்பான், ஒலியை நிறுத்தினால் தகவல் கொடுப்பான் - அது என்ன?
- [டெலிபோன்]
http://varunquotes.blogspot.com/p/blog-page_12.html
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum