Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
உண்மையான பக்தன்
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இந்து.
Page 1 of 1
உண்மையான பக்தன்
-ஒரு சமயம் இந்திரன் மற்றும் தேவர்களுக்குள் ஒரு சந்தேகம் உண்டாயிற்று. இறைவன், பக்தர்களில் சிறந்தவர் என்று யாரைக் கருதுகிறார் என்னும் சந்தேகமே அது... எனவே, அவர்கள் பிரம்ம தேவரின் தலைமையில், விஷ்ணுவைத் தரிசிப்பதற்காகச் சென்றனர். அவரிடம் தங்கள் சந்தேகத்தைக் கேட்டனர்.
-
""பூவுலகில் மிகச் சிறந்த பக்தன் ஒருவன் இருக்கிறான். அவன் பெயர் ரந்திதேவன். அவனை விடச் சிறந்த பக்தனை நான் இதுவரை கண்டதே இல்லை,'' என்றார் விஷ்ணு.
-
""அவன் யார் பிரபுவே?'' என்று கேட்டான் இந்திரன்.
""அவன் பூ மண்டலத்தை ஒரு குடையின் நிழலில் ஆண்டவன். இப்போது அவன் என்னருள் பெற வேண்டி ராஜ்ஜியத்தைத் துறந்து, கடுமையான உபவாசத்தை அடர்ந்த காட்டிலேயே இருந்து கொண்டு, என்னை நோக்கிப் பூஜை செய்து வருகிறான். அவனுடைய உபவாசம் இன்றுடன் முடிவடைகிறது!'' என்றார் .
-
""பிரபு, தங்கள் அனுமதியுடன் அவனைச் சோதித்துப் பார்க்க விரும்புகிறோம்!'' என்றார் பிரம்மா.
விஷ்ணு மவுனமாகப் புன்னகை புரிந்தார். பின், யோக நித்திரையில் ஆழ்ந்தார். பிரம்மாவும், இந்திரனும் ஏனைய தேவர்களும் கிளம்பினர். ரந்தி தேவனைச் சோதிக்க, அவன் இருப்பிடம் அடைந்தனர்.
-
ஒருவனுக்கு பசி வந்திடப் பத்தும் பறந்து போகும் என்பார்களல்லவா? அதே போல இன்று உபவாசம் முடியும் நாள். ஏகப்பட்ட பசியுடன் இருக்கும் அவனிடம், அவன் உண்ணப் போகும் உணவையே தானம் கேட்போம். அப்போது அவன் யோக்கியம் தெரிந்து விடும்.
-
ரந்தி தேவன் உபவாசத்தை முடித்துப் பூஜையின் முடிவு கட்டத்தை அடைந்தான். பின், உணவு உண்ண அமர்ந்தான். அப்போது பிரம்மா, அக்கினியை, ரந்தி தேவனிடம் அனுப்பி வைத்தார். அவன் ஏழைப் பிராமணனாக வந்து ரந்தி தேவன் முன் நின்றான்.
""தவத்தில் சிறந்தவரே! பலநாள் பசி! ஏதாவது சாப்பிடத் தர வேண்டுகிறேன்!'' என்றான்.
ரந்தி தேவன் மனம் மகிழ்ந்தான்.
-
""பூஜையை முடித்தவுடன், ஒரு அதிதிக்கு அன்னம் அளித்து உபவாசத்தை முடிக்க வேண்டும் என்பது இறைவனின் திருவுள்ளம் போலும். ஆகவே, அடர்ந்த காட்டின் நடுவேயும் அன்னம் யாசகம் கேட்கும் அதிதி என்று எண்ணினான்.
-
""கடவுள் வல்லமையுடையவர்... என்னிடம் சிறிதளவு சாப்பாடு உள்ளது. அதில் பாதியைத் தருகிறேன். ஏற்றுக் கொள்ள வேண்டும்,'' என்று கூறி அவருக்கு கொடுத்தான். பிராமணனாக வந்த அக்கினி, அதை ஏற்றுத் திருப்தி அடைந்து விலகிச் சென்றான்.
-
அதன் பின், மீண்டும் சாப்பிட அமரும் போது இந்திரன் அவன் கண் முன், ஓர் ஏழை விவசாயியாக வந்து, ""ஐயா, சாப்பிட்டு மூன்று நாளாகிறது. ஏதாவது கொடுங்களேன்!'' என்றான்.
ரந்தி தேவன் எந்தத் தயக்கமுமின்றி, அவனிடம் மீதியுள்ள சாப்பாட்டைக் காட்டி, ""இதில் நாமிருவரும் பகிர்ந்து உண்ணலாம்,'' என்றான்.
-
"சரி' என்ற இந்திரன் அவன் தந்ததை ஏற்றுத் திரும்பினான்.
இப்போது மீதியுள்ள உணவைக் கையில் எடுத்த போது, தர்ம தேவன் ஓர் பரம ஏழை போல், அருவருப்பான இரண்டு நாய்களுடன் அவன் முன் தோன்றி, ""ஐயா பசி!'' என்றான்.
ரந்தி தேவன் எஞ்சியுள்ள உணவைக் கொடுத்து அனுப்பினான்.
-
பின்னர், "சரி அன்னதானம் முடிந்தது. சிறிதளவு நீர் அருந்தி, என் உபவாசத்தை முடிக்கிறேன்' என்ற எண்ணமுடன் நீர் அருந்த தன் கமண்டலத்தை எடுத்தான்.
அச்சமயத்தில், பிரம்மா ஒரு கீழ் மகனைப் போல் அவன் முன் தோன்றினார்.
""ஒரே தாகம், தண்ணீர் தர முடியுமா சுவாமி?''என்று கேட்டார்.
ரந்தி தேவன் மனம் மகிழ்ந்தான்.
-
""நல்லவேளை, நான் நீர் அருந்திய பின் நீ வந்திருந்தால், என்னால் எதுவும் செய்திருக்க முடியாது. இந்தா நீயே குடி!'' என்று அவரிடம் கமண்டலத்தை நீட்டினான். அவர் தயங்கி நின்றார்.
""என்ன தயக்கம்?'' என்று அன்புடன் கேட்டான் ரந்தி.
""நான் தாழ்த்தப்பட்டவன். நான் கமண்டலத்தைத் தொட்டு நீர் அருந்தினால் தீட்டாகி விடுமே!'' என்று சொன்னார்.
-
ரந்தி தேவன் எழுந்தான்.
""மனிதர்களில் உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற பேதம் இல்லை. மேல் ஜாதி, கீழ் ஜாதி இல்லை. நீ, நீர் குடித்தால் தீட்டாகிவிடும் என்ற அச்சம் தேவையில்லை,'' என்று கூறியவாறு அவருடைய கையைப் பிடித்து இழுத்து, மார்புடன் தழுவிக் கொண்டான்.
பின் தண்ணீரை அவருக்குக் குடிக்க கொடுத்தான்.
-
உடனே ரந்தி தேவன் இருந்த இடத்தைப் பேரொளி சூழ்ந்தது. ""ரந்தி தேவா, உன்னை விடப் பக்தர்களில் சிறந்தவன் எவனும் இருக்க முடியாது. உன் உள்ளம் வானத்தை விடப் பரந்தது. நீ ஆசீர்வதிக்கத் தக்கவன்!'' என்ற குரல் கேட்டு நிமிர்ந்தான் ரந்தி.
அக்கினி, இந்திரன், தர்ம தேவன், பிரம்மா, ஏனையத் தேவர்கள் அங்கே சூழ்ந்திருந்தனர். அந்த நேரத்தில், விஷ்ணு அங்கே தோன்றினார்.
-
""யாரையும் பாகுபடுத்திப் பார்க்காத அன்பான பக்தனே, ரந்திதேவனே நீ வாழ்க! நீ சீறும் சிறப்புமாக வெகு காலம் வாழ்ந்து, இப்பிறவியிலேயே மோட்சத்தை அடைவாயாக!'' என்று வாழ்த்தினார்.
ரந்தி தலை வணங்கினான்.
-
நன்றி-சிறுவர் மலர்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» பக்தன் என்ற உணர்வுடன் கடவுளை காணு...!
» உண்மையான அன்பு...
» உண்மையான உலக அதிசயம் எது ?
» அல்லாஹ்வுக்கு அழகிய திருநாமங்கள் இருக்கின்றன அவற்றைக் கொண்டே நீங்கள் அவனைப் பிரார்த்தியுங்கள்
» உண்மையான ஹீரோ
» உண்மையான அன்பு...
» உண்மையான உலக அதிசயம் எது ?
» அல்லாஹ்வுக்கு அழகிய திருநாமங்கள் இருக்கின்றன அவற்றைக் கொண்டே நீங்கள் அவனைப் பிரார்த்தியுங்கள்
» உண்மையான ஹீரோ
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இந்து.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum