சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Today at 4:12

» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Today at 4:01

» மாம்பழ குல்ஃபி
by rammalar Yesterday at 15:43

» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Yesterday at 15:41

» மோர்க்களி
by rammalar Yesterday at 15:40

» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Yesterday at 15:30

» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Yesterday at 15:26

» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Yesterday at 15:21

» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Yesterday at 15:15

» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Yesterday at 15:07

» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Yesterday at 13:52

» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 12:07

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Yesterday at 9:32

» இது, அது அல்ல -(குட்டிக்கதை)- மெலட்டூம் நடராஜன்
by rammalar Yesterday at 9:06

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Yesterday at 3:46

» பல்சுவை-3
by rammalar Tue 28 May 2024 - 20:24

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Tue 28 May 2024 - 17:14

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Tue 28 May 2024 - 17:09

» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Tue 28 May 2024 - 17:05

» நகைச்சுவை கதைகள்
by rammalar Tue 28 May 2024 - 12:02

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Tue 28 May 2024 - 11:19

» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Tue 28 May 2024 - 6:26

» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Tue 28 May 2024 - 6:17

» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Tue 28 May 2024 - 5:10

» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Tue 28 May 2024 - 5:05

» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Tue 28 May 2024 - 4:34

» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Tue 28 May 2024 - 4:29

» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Mon 27 May 2024 - 20:32

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Mon 27 May 2024 - 18:15

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35

» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24

» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13

முதலில் உன் மீது நம்பிக்கை வை Khan11

முதலில் உன் மீது நம்பிக்கை வை

Go down

முதலில் உன் மீது நம்பிக்கை வை Empty முதலில் உன் மீது நம்பிக்கை வை

Post by rammalar Sun 25 Jun 2023 - 12:44

முதலில் உன் மீது நம்பிக்கை வை D89c42d338c4ef472937fd707ad16f38

ஒரு ஊரில் வில்வித்தையில் சிறந்து விளங்கும் வீரன் ஒருவன் இருந்தான். அவனுடைய வில்லின் மீது அபார நம்பிக்கை அவனுக்கு. குறி தவறாமல் எய்துவதில் அவன் முதன்மையானவனாக இருந்ததால் அவனுக்கு கர்வமும் அதிகமிருந்தது.

ஒரு முறை அந்த ஊருக்கு முனிவர் ஒருவர் சீடர்கள் படைசூழ வந்திருந்தார். இவனுடைய திறமையைக் கேள்விபட்டு இவனைக் காணவிரும்பினார். இவன் வந்ததும் அவனை பாராட்டினார். இளம்வீரனுக்கு கர்வம் தாங்கவில்லை. நீங்கள் தான் பலகலைகள் கற்றுத்தருகிறீர்களே என்னோடு போட்டியிட உங்கள் சீடர்கள் யாரேனும் தயாராக இருக்கிறார்களா என்று சவால் விட்டான்.

முனிவர் சற்றுநேரம் அமைதியாக இருந்தார். சீடர்களும் முனிவர் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தார்கள். பிறகு உன் அளவுக்கு அவர்கள் சிறந்துஇருப்பார்களா என்று தெரியவில்லை. ஆனால் முயற்சி செய்ய சொல்கிறேன் என்றார்.

போட்டிக்கு நாள் குறித்தார்கள். போட்டிநாள் வந்தது. இளம் வீரனும், சீடனும் சரிசமமாக தங்கள் திறமையை நிரூபித்தார் கள். இறுதியாக தூரத்தில் ஒரு பொம்மையை நிற்கவைத்து அதன் கண்களை குறிவைத்து தாக்க வேண்டும் என்று முடிவு செய்தார்கள் இளம் வீரன் பொம்மையை குறிபார்த்து வில் அம்பு எய்தான். அதைத் தொடர்ந்துஅந்த அம்பையும் இரண்டாக பிளக்க செய்தான். அதைப் பார்த்த அனைவரும் அவனை ஆஹா ஓஹோவென்று பாராட்டினார்கள். வீரனுக்கு பெருமை தாங்கவில்லை.

அவனை பாராட்டிய முனிவர் இன்னுமொரு போட்டியை வைக்கிறேன் என்றார். அனைவரும் அந்த ஊரின் மலை அடி வாரத்தில் கூடினார்கள். ஒரத்தில் ஆறு ஒன்று இருந்தது. மலையையும், ஆற்றையும் இணைக்கும் வகையில்  ஒரு சிறிய கயிற்றுப்பாலம் கட்டப்பட்டிருந்தது. முனிவர் தன் சீடனை அதில் நின்று தூரத்தில் இருக்கும் மரத்தின் கனியை குறி பார்த்து அடிக்க சொன்னார்.

சீடனும் தன்னுடைய குரு சொன்னதைக் கேட்டு அதன்படி செய்தான். அடுத்து உன் முறை என்றார் முனிவர் இளம் வீரனிடம், வேகமாக வந்த இளம்வீரன் அந்த கயிற்றுப்பாலத்தில் நின்றான். கீழிருந்த ஆற்று நீரும், எப்போது கயிறு அறுந்து விழுமோ என்னும் பயமும் அவனை அச்சுறுத்தியது. 

அவ்வளவு தூரத்தில் இருக்கும் கனியை குறிவைக்கும் போது கீழே விழுந்துவிட்டால் என்னும் பயமே அவனுக்கு உதறலைக் கொடுத்தது. என்னால் முடியாது என்று வந்துவிட்டான்.

முனிவர் அவனை தட்டி கொடுத்தார். உன்னால் முடியாது என்று யார் சொன்னது. உனக்கு உன் மீதிருந்த நம்பிக்கையை விட வில்லின் மீதிருந்த நம்பிக்கைதான் அதிகம். அதனால் தான் உன்னால் குறியை சரியாக அடிக்க முடியவில்லை. 

முதலில் உன் மீது நம்பிக்கை வை. அதுதான் உன்னை ஜெயிக்க வைக்கும் என்றார். இளம் வீரன் உண்மையை உணர்ந்தது போல் அவரிடம் மன்னிப்பு வேண்டினான்.

முனிவரின் அறிவுரை அவனுக்கு மட்டுமல்ல நமக்கும் தான். முதலில் உங்கள் மீது நம்பிக்கை வையுங்கள் நம்பிக்கை நல் லதையே கொடுக்கும்.  

 -படித்ததில் பிடித்தது
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24317
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics
» நாளை மீது நம்பிக்கை வை!
» சீனாவின் உறுதி மீது, நாம் நம்பிக்கை வைத்துள்ளோம்
» பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் மீது தமிழ் மக்கள் நம்பிக்கை வைக்கவேண்டும்: பஷில்
» யூரோ நாணயத்தின் மீது சீனாவுக்கு நம்பிக்கை இருக்கிறது: சர்கோசி.
» அ.தி.மு.க. ஆட்சி மீது வாக்காளர்கள் நம்பிக்கை: தேர்தல் முடிவில் வியப்பு இல்லை; விஜயகாந்த் அறிக்கை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum