சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

நபியவர்கள் சூனியம் வைக்கப்பட்டு வஹி மூலம் அதை இறைவன் நிவாரணப்படுத்திய ஹதீஸ் பற்றிய விமரிசனங்களும் விளக்கங்களும்.1 Khan11

நபியவர்கள் சூனியம் வைக்கப்பட்டு வஹி மூலம் அதை இறைவன் நிவாரணப்படுத்திய ஹதீஸ் பற்றிய விமரிசனங்களும் விளக்கங்களும்.1

3 posters

Go down

நபியவர்கள் சூனியம் வைக்கப்பட்டு வஹி மூலம் அதை இறைவன் நிவாரணப்படுத்திய ஹதீஸ் பற்றிய விமரிசனங்களும் விளக்கங்களும்.1 Empty நபியவர்கள் சூனியம் வைக்கப்பட்டு வஹி மூலம் அதை இறைவன் நிவாரணப்படுத்திய ஹதீஸ் பற்றிய விமரிசனங்களும் விளக்கங்களும்.1

Post by அர்சாத் Thu 17 Mar 2011 - 8:28

இந்தக் கட்டுரை ‘சூனியம், கண்ணேறு, ஜின் பிடித்தல்” என்ற தலைப்பிலான எனது உரையின் எழுத்து வடிவமாகும். சமூகத்திலே பரவிக் கிடக்கும் மூட நம்பிக்கைகள் சிர்க்கான நடவடிக்கைகள் போன்றவற்றை விளக்குவதே அந்த உரையின் நோக்கமாக இருந்தது. அந்த உரையின் ஆரம்பத்தில் தௌஹீத் பிரச்சாரத்தின் போது மாற்றுக் கருத்துள்ள சகோதரர்களால் முன்வைக்கப்படும் நமக்கெதிரான சில வாதங்களுக்கு பதில் சொல்லப்பட்டது. அந்த உரையின் முதல் பாகமான அப்பகுதியை ” மூட நம்பிக்கை ஒழிப்பிற்கே முதற்பங்கு” என்ற தலைப்பில் 3 தொடர்களாகத் தந்தோம். அதன்பின் அதன் 2ம் பாகத்தை “சூனிய உலகம் ஒரு பார்வை” எனும் தலைப்பில் 2 பகுதிகளாகத் தந்தோம்.அந்த உரையின் 3ம் பாகத்தை “அல்குர்ஆன் சுன்னாவின் பார்வையில் சூனியம்” என்ற தலைப்பில் 3 பகுதியாகத் தந்தோம் கீழே உள்ள தொடர்கட்டுரை ‘சூனியம், கண்ணேறு, ஜின் பிடித்தல்” என்ற தலைப்பிலான எனது உரையின் 4ம் பாகத்தின் எழுத்து வடிவமாகும்.அப்பகுதியை “நபியவர்கள் சூனியம் வைக்கப்பட்டு வஹி மூலம் அதை இறைவன் நிவாரணப்படுத்திய ஹதீஸ் பற்றிய விமரிசனங்களும் விளக்கங்களும்” எனும் தலைப்பில் இங்கு கட்டம் கட்டமாகப் பதிவு செய்கிறேன். இன்சா அல்லாஹ்.
நபியவர்களுக்கு சூனியம் செய்யப்பட்ட செய்தியைக் கூறும் ஹதீஸ் தொடர்பாக முன்வைக்கப்படும் விமரிசனங்களுக்கான சரியான பதில்களை இப்பகுதியில் வழங்கலாம் என நினைக்கின்றோம். நபியவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டதாகக் கூறும் ஹதீஸை நாம் முதலில் அறிந்து கொள்வோம்.
صحيح البخاري ـ 5766 – حَدَّثَنَا عُبَيْدُ بْنُ إِسْمَاعِيلَ حَدَّثَنَا أَبُو أُسَامَةَ عَنْ هِشَامٍ عَنْ أَبِيهِ عَنْ عَائِشَةَ قَالَتْ سُحِرَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى إِنَّهُ لَيُخَيَّلُ إِلَيْهِ أَنَّهُ يَفْعَلُ الشَّيْءَ وَمَا فَعَلَهُ حَتَّى إِذَا كَانَ ذَاتَ يَوْمٍ وَهُوَ عِنْدِي دَعَا اللَّهَ وَدَعَاهُ ثُمَّ قَالَ أَشَعَرْتِ يَا عَائِشَةُ أَنَّ اللَّهَ قَدْ أَفْتَانِي فِيمَا اسْتَفْتَيْتُهُ فِيهِ قُلْتُ وَمَا ذَاكَ يَا رَسُولَ اللَّهِ قَالَ جَاءَنِي رَجُلَانِ فَجَلَسَ أَحَدُهُمَا عِنْدَ رَأْسِي وَالْآخَرُ عِنْدَ رِجْلَيَّ ثُمَّ قَالَ أَحَدُهُمَا لِصَاحِبِهِ مَا وَجَعُ الرَّجُلِ قَالَ مَطْبُوبٌ قَالَ وَمَنْ طَبَّهُ قَالَ لَبِيدُ بْنُ الْأَعْصَمِ الْيَهُودِيُّ مِنْ بَنِي زُرَيْقٍ قَالَ فِيمَا ذَا قَالَ فِي مُشْطٍ وَمُشَاطَةٍ وَجُفِّ طَلْعَةٍ ذَكَرٍ قَالَ فَأَيْنَ هُوَ قَالَ فِي بِئْرِ ذِي أَرْوَانَ قَالَ فَذَهَبَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي أُنَاسٍ مِنْ أَصْحَابِهِ إِلَى الْبِئْرِ فَنَظَرَ إِلَيْهَا وَعَلَيْهَا نَخْلٌ ثُمَّ رَجَعَ إِلَى عَائِشَةَ فَقَالَ وَاللَّهِ لَكَأَنَّ مَاءَهَا نُقَاعَةُ الْحِنَّاءِ وَلَكَأَنَّ نَخْلَهَا رُءُوسُ الشَّيَاطِينِ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ أَفَأَخْرَجْتَهُ قَالَ لَا أَمَّا أَنَا فَقَدْ عَافَانِيَ اللَّهُ وَشَفَانِي وَخَشِيتُ أَنْ أُثَوِّرَ عَلَى النَّاسِ مِنْهُ شَرًّا وَأَمَرَ بِهَا فَدُفِنَتْ
“நபியவர்கள் சூனியம் செய்யப்பட்டார்கள். ஓன்றை செய்ததாக நபியவர்கள் நினைப்பார்கள் ஆனால் அவர்கள் அதைச் செய்யவில்லை. நபியவர்ளின் நிலை இவ்வாறே இருந்தது. ஒரு நாள் நபியவர்கள் அல்லாஹ்விடம் துஆச்செய்து கொண்டிருந்தார்கள். பின்னர் நபியவர்கள் என்னிடம் “ஆயிஷாவே உனக்குத் தெரியுமா? நான் எந்த விடயத்தில் அல்லாஹ்விடம் தீர்ப்புக் கேட்டேனோ அல்லாஹ் எனக்கு அந்த விடயத்தைக் காட்டித்தந்து விட்டான்” எனக் கூறினார்கள். ஆல்லாஹ்வின் அது என்ன என்று நான் கேட்டேன். ஆதற்கு நபியவர்கள் “ இருவர் என்னிடம் வந்தார்கள். ஒருவர் என் தலைக்குப்பக்கத்திலும் மற்றையவர் என் கால்களுக்குப்பக்கத்திலும் அமர்ந்தனர். பின்னர் அவர்களிலொருவர் மற்றையவரிடம் “ இவருக்கு ஏற்பட்ட நோய் என்ன?” எனக் கேட்டார். அதற்கு மற்றையவர் “இவருக்கு சூனியம் செய்யப்பட்டுள்ளது” என்று கூறினார். அதற்கு மற்றையவர் “இவருக்கு சூனியம் வைத்தவர் யார்? எனக் கேட்க, “ஸ{ரைக் கோத்திரத்தைச் சேர்ந்த லபீதிப்னுல் அஃஸம் என்ற யூதர் தான் இவருக்கு சூனியம் செய்தார்” என்று அடுத்தவர் கூறினார். “இவருக்கு எதிலே சூனியம் வைக்கப்பட்டுள்ளது” என அவர் மீண்டும் கேட்க, “முடிகள், சீப்பு ஆகியவற்றில் சூனியம் செய்து அவற்றை ஒர் ஆண் பேரீத்த மரத்தின் பாலைக்குள் வைக்கப்பட்டுள்ளது” என்று கூறினார். “அந்தப்பாலை எங்கேயுள்ளது?” என்று மீண்டும் அவர் கேட்கவே, “அர்வான் என்ற கிணற்றுள் அது வைக்கப்பட்டுள்ளது” என்று மற்றையவர் கூறினார். பின்னர் நபியவர்கள் தனது தோழர்களுடன் அந்தக்கிணற்றுக்குச் சென்று அங்கிருந்த பேரீத்தம் கொப்புகளைப்பார்த்து விட்டு ஆயிஷா நாயகியிடம் திரும்பி வந்து “சூனியம் வைக்கப்பட்டுள்ள அக்கிணற்றின் நீர் மருதானி கலந்தது போன்றிருந்தது. அந்த பேரீத்தம் கொப்புகள் ஷெய்தான்களின் தலைகளைப் போன்றிருந்தன.” என்று கூறினார்கள். இதைக் கேட்ட ஆயிஷா (ரழி) அவர்கள் “ அல்லாஹ்வின் தூதரே நீங்கள் அவற்றை வெளியெடுத்தீர்களா?” எனக்கேட்டார்கள். அதற்கு “இல்லை” என்று பதில் கூறிவிட்டு “அல்லாஹ் என்னை குணப்படுத்திவிட்டான். எனவே மக்களுக்கு மத்தியில் குழப்பங்கள் ஏற்படுத்துவதை நான் வெறுக்கிறேன்” என்று சொல்லி விட்டு அதைப் புதைக்குமாறு நபியவர்கள் ஏவினார்கள்”.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரழி)
ஆதாரம் : புஹாரி
இந்த சம்பவம் புஹாரியில் வார்த்தை வித்தியாசங்களுடன் பல இடங்களில் இடம் பெறுகிறது. இந்த ஹதீஸில் நமக்குப்பல படிப்பினைகளுள்ளன. நபியவர்கள் தனக்குச் சூனியம் செய்யப்பட்டிருந்த அந்தப் பொருட்களைப் பிரித்துப் பார்க்கவுமில்லை. வெளியிலெடுக்கவுமில்லை. பார்த்து விட்டு வருகிறார்கள். சூனியமென்பது அவிழ்க்கப்பட்டால்தான் குணமாகும் என்ற தவறான நம்பிக்கையை இந்த ஹதீஸ் உடைக்கிறது. ஒருவருக்கு நோயேற்பட்டால் அல்லாஹ்விடம் அதிகமதிகம் பிரார்த்திக்கும் போது அல்லாஹ் குணப்படுத்துவான். சூனியத்தை அவிழ்க்க வேண்டிய அவசியமில்லை என்பதற்கு இந்த ஹதீஸ் மிகப்பெரும் சான்றாகவுமுள்ளது. அத்துடன், ஒருவருக்கு சூனியம் வைக்கப்பட்டிருப்பின் அதை சூனியக்காரன்தான் எடுக்க வேண்டும் என்பது பொய்யென்பதும் இந்த ஹதீஸிலிருந்து தெளிவாகின்றது. ஒருவருக்கு நோயேற்படுவதற்கு கிருமிகள், சூழல், மனோநிலை போன்றன காரணமாகின்றதைப் போலவே சூனியமும் ஒருவருக்கு நோயேற்படுவதற்குக் காரணமாகின்றது என்பதும் இந்த ஹதீஸிலிருந்து தெரியவருகின்றது.
இந்த ஹதீஸி அறிவிப்பாளர் வரிசையைக் குறை கூறி சிலர் இந்த ஹதீஸை விமர்சிக்கின்றனர். முஃதஸிலாக்கள் போன்ற போலிப் பகுத்தறிவுவாதிகளே இவ்வாறு இதன் அறிவிப்பாளர் வரிசையை விமர்சிப்போராகும் என்பதனால் நாம் இவ்விமர்சனத்துக்கு பதில் கூற விளையவில்லை.
ஆனாலும் தௌஹீத் சகோதரர்களில் சிலர் இந்த ஹதீஸை குர்ஆனுக்கு முரண்படுவதாக விமர்சிக்கின்றனர். அதுபற்றி இங்கு சிறிது ஆராய்வோம்.
மேற்படி ஹதீஸில் சில வார்த்தைக் குழப்பங்களுள்ளதாக விமரிசிக்கின்றனர்:

1.நபியவர்களுக்கு நாற்பது நாள்தான் இந்த நோய் இருந்தது என்று சில அறிவிப்புக்களிலும் ஆறு மாதங்கள்தான் நபியவர்களுக்கு இந்நோய் இருந்தது என்று சில அறிவிப்புக்களிலும் உள்ளன.
2.அதுபோலவே நபியவர்கள் அக்கிணற்றுக்குச் சென்று சூனியத்தை எடுத்தார்கள் என்று சில அறிவிப்புக்களிலும், நபியவர்கள் கிணற்றுக்குப் போய் எடுக்கவில்லை என்று சில அறிவிப்புக்களிலும் கூறப்பட்டுள்ளது. சில அறிவிப்புக்களில் நபியவர்கள் தனது தோழர்களை கிணற்றுக்கு அனுப்பினார்கள் எனவும் சில அறிவிப்புக்களில் நபியவர்களே போனார்கள் எனவும் கூறப்படுகின்றது.
3.சில அறிவிப்புக்களில் நபியவர்கள் சூனியத்தை தாமாக அகற்றினார்கள் எனவும் சில அறிவிப்புக்களில் நபியவர்களிடம் சூனியத்தை அகற்றுவீர்களா என்று கேட்ட போது தேவையில்லை என்று சொன்னதாகவும் கூறப்படுகிறது.
இவ்வாறான வார்த்தைக் குழப்பங்களை வைத்து இந்த ஹதீஸை சிலர் பலவீனப்படுத்துகின்றனர். ஒரு ஹதீஸைப் பொருத்தமட்டில் அதனுடைய அறிவிப்பாளர் வரிசை சஹீஹாக இருந்து, அந்த சம்பவம் சஹீஹாக இருந்து அந்த ஹதீஸின் கிளைகளில் காணப்படும் இது போன்ற வார்த்தைக் குழப்பங்களை வைத்து ஹதீஸ் பலவீனப்படுத்தப்படும் முறையொன்று கிடையாது. ஏனெனில் ஒரு பக்கமளவில் நீண்டிருக்கும் ஹதீஸ்களை நீங்கள் உற்று நோக்கினால் இது போன்ற வார்த்தைக் குழப்பங்கள் அதில் காணப்படும். உதாரணத்துக்குச் சொல்வதென்றால்:
நபியவர்கள் தனது மனைவியொருவரின் வீட்டில் தேன் குடித்ததாக வரும் ஹதீஸில் ஸைனப் (ரழி) அவர்களின் வீட்டிலா? ஹப்ஸா (ரழி) வீட்டிலா இது நடைபெற்றது என்ற கருத்து வேறுபாடுள்ளது.
அவ்வாறுதான் அத்தஹிய்யாத்திலே விரலை எவ்வாறு வைப்பது என்று பார்க்கும் போதும் சைக்கினை எனவும் அசைத்தல் எனவும் ஹதீஸில் கூறப்பட்டுள்ளது இவ்வேறுபாடுகளை வைத்து யாரும் ஹதீஸை பலவீனப்படுத்துவதில்லை. கருத்துக்களுக்குள் பொருத்தம் காணவே முயற்சிப்பர்.
நபியவர்களின் சூரிய கிரகணத் தொழுகை தொடர்பான ஹதீஸில் நபியவர்கள் மூன்று ருகூஉ செய்ததாகவும் முஸ்லிமில் அறிவிப்புக்கள் இடம்பெறுகின்றன இதை வைத்து முழு ஹதீஸையுமே நாம் பலவீனப்படுத்துவதில்லை.
இது போன்ற பெரிய ஹதீஸ்களை அறிவிக்கும் அறிவிப்பாளர் தொடர்களில் இது போன்ற சில வார்த்தைக் குழப்பங்கள் இருப்பது தவிர்க்க முடியாததாகும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் ஹதீஸின் அடிப்படை சரியானதா என்பதை முதலில் உறுதி செய்ய வேண்டும். அடுத்ததாக அவ்வாறான முரண்பட்ட வார்த்தைகளைக் கூறும் அறிவிப்பாளர்கள் அனைவரும் பலமானவர்களாக இருந்தாலும் மிகச்சிறந்த அறிவிப்பாளர்கள் கூறும் வார்த்தைகளை வைத்தே ஏனையவைகளை நாம் முடிவுசெய்ய வேண்டும்.
மேலே நாம் பார்த்த ஹதீஸை ஆயிஷா (ரழி) அவர்களிடமிருந்து உர்வா அறிவிக்கின்றார். அவரிடமிருந்து ஹிஷாம் அறிவிக்கின்றார். ஹிஷாமிடமிருந்து உஸாமா, ஸ{ப்யான் அத்தௌரி போன்ற பலர் அறிவிக்கின்றனர். இவற்றுள் ஸ{ப்யான் அல் உயைனாவுடைய அறிவுப்புத்தான் முழுமையானதாக, நேர்த்தியானதாக இருக்கின்றது. ஆகவே இவ்வார்த்தை முரண்பாடுகளை வைத்து இந்த ஹதீஸை நாம் பலவீனப்படுத்த முடியாது. இன்னும் இந்த ஹதீஸிற்கு வேறு சில அறிவிப்பாளர் வரிசைகளும் உள்ளன. அவைகளின் உடன்பாடு முரண்பாடுகளை வைத்தும் வார்த்தையின் பொருத்தமான வடிவத்தை முடிவு செய்யலாம். எனவே இந்த அளவுகோள் தவறானது.
அர்சாத்
அர்சாத்
புதுமுகம்

பதிவுகள்:- : 328
மதிப்பீடுகள் : 0

Back to top Go down

நபியவர்கள் சூனியம் வைக்கப்பட்டு வஹி மூலம் அதை இறைவன் நிவாரணப்படுத்திய ஹதீஸ் பற்றிய விமரிசனங்களும் விளக்கங்களும்.1 Empty Re: நபியவர்கள் சூனியம் வைக்கப்பட்டு வஹி மூலம் அதை இறைவன் நிவாரணப்படுத்திய ஹதீஸ் பற்றிய விமரிசனங்களும் விளக்கங்களும்.1

Post by நண்பன் Thu 17 Mar 2011 - 17:03

இந்த கதீஸ் முழு பகுதிகளையும் தாருங்கள் அர்சாத்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நபியவர்கள் சூனியம் வைக்கப்பட்டு வஹி மூலம் அதை இறைவன் நிவாரணப்படுத்திய ஹதீஸ் பற்றிய விமரிசனங்களும் விளக்கங்களும்.1 Empty Re: நபியவர்கள் சூனியம் வைக்கப்பட்டு வஹி மூலம் அதை இறைவன் நிவாரணப்படுத்திய ஹதீஸ் பற்றிய விமரிசனங்களும் விளக்கங்களும்.1

Post by நேசமுடன் ஹாசிம் Thu 17 Mar 2011 - 17:37

நண்பன் wrote:இந்த கதீஸ் முழு பகுதிகளையும் தாருங்கள் அர்சாத்
@. @.
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

நபியவர்கள் சூனியம் வைக்கப்பட்டு வஹி மூலம் அதை இறைவன் நிவாரணப்படுத்திய ஹதீஸ் பற்றிய விமரிசனங்களும் விளக்கங்களும்.1 Empty Re: நபியவர்கள் சூனியம் வைக்கப்பட்டு வஹி மூலம் அதை இறைவன் நிவாரணப்படுத்திய ஹதீஸ் பற்றிய விமரிசனங்களும் விளக்கங்களும்.1

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum