சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

தசை அழற்சி   நோயால், பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார் நந்திதா Khan11

தசை அழற்சி நோயால், பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார் நந்திதா

Go down

தசை அழற்சி   நோயால், பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார் நந்திதா Empty தசை அழற்சி நோயால், பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார் நந்திதா

Post by rammalar Tue 8 Aug 2023 - 6:43

தசை அழற்சி   நோயால், பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார் நந்திதா 2212
--
தசை அழற்சி   நோயால், பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார் நந்திதா 22c10
--
 ‘ஃபைப்ரோமியால்ஜியா’ என்ற வினோதமான தசை அழற்சி 
நோயால், தான் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார் நந்திதா.

‘‘இதனால் என் உடல் எடை கடுமையாகக் குறைத்துள்ளது. 
ஒரு சிறிய வேலை செய்தால் கூட தசைகளில் பிரச்சினையை 
ஏற்படுத்துகிறது. கடினமான வேலைகளையும் உடற்பயிற்சியையும் 
செய்ய முடியவில்லை.
 சில நேரங்களில் உடனடியாக நகர்வதற்குக் கூட கடினமாக 
இருக்கிறது...” எனவும் கூறியுள்ளார்.

ஓகே. அது என்ன ஃபைப்ரோமியால்ஜியா..?

“பல்வேறு சிக்கலான நோய்களுக்கு சிகிச்சைகளைக் கண்டுபிடித்து 
மருத்துவ உலகம் வேகமாக முன்னேறி வருகிறது. அதேநேரம், மருத்துவ
 ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்க முடியாத சில அரிய நோய்களும்
 உள்ளன. ஃபைப்ரோமியால்ஜியா அவற்றில் ஒன்று.பெரும்பாலும் 
எலும்புக்கூடு, மூட்டுகள், தசை நாண்கள், தசைகள், தசைநார்கள், 
குருத்தெலும்பு போன்றவற்றை உள்ளடக்கிய தசைக்கூட்டையும் உடலின் 
நரம்பு மண்டலங்களையும் பாதிக்கக்கூடிய ஒரு  நாள்பட்ட நோய் இது.


ஃபைப்ரோமியால்ஜியாவின் அறிகுறிகள்

இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடல் முழுவதும் கடுமையான வலி, 
மன உளைச்சல் இருக்கும். குறிப்பாக இடுப்பு, தொடைகள், கீழ் முதுகு, 
கழுத்து, மூட்டு, தசை, தலை ஆகியவற்றில் வலியும் சோர்வும் இருக்கும். 
மூட்டு விறைப்பு, தன்னையே காயப்படுத்திக்கொள்வது, தற்கொலை 
எண்ணம் போன்றவையும்  ஃபைப்ரோமியால்ஜியாவின் முக்கியமான 
அறிகுறிகள்.

நினைவாற்றல் குறைபாடு, கடுமையான பதற்றம், மனச்சோர்வு, உடல் 
முழுவதும் இருக்கும் கடுமையான வலி காரணமாக தூங்குவதில் சிரமம் 
மற்றும் விரல் நுனிகள், பாதங்கள், கைகள் போன்றவற்றில் 
உணர்வின்மை அல்லது கூச்ச உணர்வு, பார்வை பிரச்னைகள், குமட்டல் / 
வாந்தி, கவலை, மோசமான தூக்கம், இடுப்பு வலி, ஒற்றைத் தலைவலி 
போன்றவை இருக்கும்.

பெண்களுக்கு வலிமிகுந்த மாதவிடாய் அல்லது வயிற்றுப் பிடிப்புகள், 
சிறுநீர் கழிப்பதில் சிரமம் இருக்கலாம்.

எதனால் ஃபைப்ரோமியால்ஜியா வருகிறது?

காரணங்கள் இன்னும் முழுமையாக கண்டுபிடிக்கப்படவில்லை. 
அதேநேரம், சுற்றுச்சூழல், மரபணு, குடும்ப வரலாறு, நாள்பட்ட 
மனச்சோர்வு, அதிக மன அழுத்தம் அல்லது மன உளைச்சல், ஹார்மோன் / 
நரம்பியல் சமநிலையின்மை, உடல் பருமன் போன்றவை இதற்கான 
காரணமாக இருக்கலாம் என்று இதுவரையான ஆராய்ச்சிகள் 
தெரிவிக்கின்றன.

ஏதேனும் மன அதிர்ச்சியை அனுபவித்திருந்தாலும் ஒருவர்
 ஃபைப்ரோமியால்ஜியாவால் பாதிக்கப்படலாம்.காபி, மது, புகையிலையை 
அதிகமாக உட்கொள்வது, வைட்டமின் பி12 குறைபாடு, இரத்த சோகை 
போன்றவையும் காரணமாகக் கூறப்படுகிறது.

தீர்வு என்ன?

“ஃபைப்ரோமியால்ஜியா ஒருவரை வாழ்நாள் முழுவதும் பாதிக்கும் ஒரு 
நாள்பட்ட நோய். மேலே குறிப்பிட்டது போல் இப்போது வரை இதற்கு 
முழுமையான சிகிச்சை கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால், மேலே 
சொன்ன அறிகுறி இருப்பவர்கள் உடனே மருத்துவர்களை அணுகி சிகிச்சை
 பெறுவது சிறந்தது.ஃபைப்ரோமியால்ஜியாவுக்கு எந்த சிகிச்சையும் 
இல்லை என்றாலும், வலிகளைக் கட்டுப்படுத்த உதவும் மருந்துகள் 
உள்ளன.

உடல் வலியைப் போக்க பிசியோதெரபி, அக்குபஞ்சர் போன்றவற்றை 
பரிந்துரை செய்வோம். மேலும் மன அழுத்தம், மன அதிர்ச்சியைக்
 குறைப்பதற்கும் சிகிச்சையும் மருந்துகளும் உள்ளன. முறையான உடற்
பயிற்சிகள், ஆரோக்கியமான உணவு, மன அழுத்தத்தை குறைப்பது 
போன்றவையும் இந்நோய் தாக்கத்தில் இருந்து விடுபட உதவும்...” 
என்கிறார்கள் மருத்துவர்கள்.

-ஜான்சி (குங்குமம்)
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum