சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Today at 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Today at 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Today at 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Today at 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Today at 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Today at 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Today at 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32

» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30

» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19

» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35

» nisc
by rammalar Yesterday at 16:21

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09

» மருந்து
by rammalar Yesterday at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

சுனாமி (tsunami) அல்லாஹ்வின் மாபெரும் வல்லமை.- பாத்திமா ஷஹானா கொழும்பு Khan11

சுனாமி (tsunami) அல்லாஹ்வின் மாபெரும் வல்லமை.- பாத்திமா ஷஹானா கொழும்பு

4 posters

Go down

சுனாமி (tsunami) அல்லாஹ்வின் மாபெரும் வல்லமை.- பாத்திமா ஷஹானா கொழும்பு Empty சுனாமி (tsunami) அல்லாஹ்வின் மாபெரும் வல்லமை.- பாத்திமா ஷஹானா கொழும்பு

Post by azeezm Thu 17 Mar 2011 - 9:58

sசுனாமி (tsunami) அல்லாஹ்வின் மாபெரும் வல்லமை.- பாத்திமா ஷஹானா கொழும்பு Pixel?a.1=p-18-mFEk4J448M&a.2=p-ab3gTb8xb3dLg&labels.1=type.polldaddy
சுனாமி (tsunami) அல்லாஹ்வின் மாபெரும் வல்லமை.- பாத்திமா ஷஹானா கொழும்பு T45



”(அதில்) அல்லாஹ் நாடியதை அழிப்பான். (நாடியதை) அழிக்காது வைப்பான். அவனிடமே தாய் ஏடு உள்ளது.” (அல்குர்ஆன் 13:39)


சுனாமி
(tsunami) … ஆறு வருடங்களிற்கு முன் இந்தப் பெயர் உலக மக்களைப் பொருத்த
வரை பிரபல்யம் இல்லாத அந்நியமான ஒரு பெயராகவே இருந்தது. ஆனால் இன்று இப்
பெயரை கேட்ட மாத்திரத்தில் எல்லோர் மனதிலும் பேரலைகள் அடிக்கத் தொடங்கும்.
சிறுவர் முதல் பெரியவர்கள் வரை இந்தப் பெயர் பிரபல்யம் வாய்ந்துள்ளது.



சுனாமி (tsunami) அல்லாஹ்வின் மாபெரும் வல்லமை.- பாத்திமா ஷஹானா கொழும்பு Japan-tsunami-plan-to-co-hostடிசம்பர்
26, 2004 ம் நாள் உலகிலுள்ள அனைவருக்கும் மறக்க முடியாத ஒரு நாள். ஆயிரக்
கணக்கிலான உயிர் சேதங்களையும், பல மில்லியன் கணக்கிலான பொருட் சேதங்களையும்
ஏற்படுத்திய நாள். எந்த மனிதனும் விரும்பாத அந்த நாள் மறுபடியும் கடந்த
வெள்ளிக்கிழமை 11 03 2011 அன்று ஜப்பானில் திரும்ப வரும் என்று எவரும்
எதிர்பார்த்திருக்க முடியாது.



இவ் இயற்கை அனர்த்தங்கள் மூலம் அல்லாஹ் அவனது வல்லமையை நம் கண் முன்பாக தெளிவாகக் காட்டினான்.


இதிலுள்ள
இன்னுமொரு வியக்கத்தக்க விஷயம் என்னவென்றால் சுனாமியின்போது நடுக்கடல்
எந்ந வித கொந்தளிப்பும் இல்லாமல் சாதாரணமாகவே இருக்கும். ஆனால், கரையோரத்தை
அண்டிய கடற்பிரதேசமே கொந்தளித்து கரையோரத்தைத் தாண்டி பல கிலோ மீட்டர்கள்
ஊடுருவி நிலப் பிரதேசத்தை நோக்கி வரக்கூடியதாக உள்ளது. இதற்கு முன் கடல்
உள் வாங்கவும் செய்கின்றது. இதை அல்லாஹ்வின் வல்லமை என்றில்லாமல் என்ன
சொல்வது?



”அவர்கள்
அல்லாஹ்வைக் கண்ணியப்படுத்த வேண்டிய அளவுக்கு கண்ணியப்படுத்தவில்லை.
அல்லாஹ் வலிமை மிக்கவன். மிகைத்தவன்.” (அல்குர்ஆன் 22:74)



சுனாமி (tsunami) அல்லாஹ்வின் மாபெரும் வல்லமை.- பாத்திமா ஷஹானா கொழும்பு Ttttttttமேலும்,
அல்லாஹ் அவனது வல்லமையை ஃபிர்அவ்னுக்கு அவன் ஏற்படுத்திய அழிவை குர்ஆனில்
குறிப்பிடுவதன் மூலம் நமக்கு தெளிவுபடுத்துகின்றான்.



ஃபிர்அவ்னின்
ஆட்களுக்கும், அவர்களுக்கு முன் சென்றோருக்கும் ஏற்பட்ட கதியைப் போலவே
(இவர்களுக்கும் எற்படும்). அவர்கள் அல்லாஹ்வின் சான்றுகளை மறுத்தனர்.
அவர்களது பாவங்களின் காரணமாக அவர்களை அல்லாஹ் தண்டித்தான். அல்லாஹ்
வலிமைமிக்கவன். கடுமையாகத் தண்டிப்பவன். (அல்குர்ஆன் 8:52)



சுனாமி (tsunami) அல்லாஹ்வின் மாபெரும் வல்லமை.- பாத்திமா ஷஹானா கொழும்பு Suஉலகில்
தீமை அதிகரிக்கும்போது அல்லாஹ் இயற்கை அனர்த்தங்களை ஏற்படுத்துவதன் மூலம்
வணக்கத்திற்குரியவன் ஒருவன் இருக்கின்றான்;;. அவனுக்கு கட்டுப்பட்டு
அனைவரும் வாழ வேண்டும் என்ற விழிப்புணர்வை மக்களுக்கு மத்தியில்
ஏற்படுத்துகின்றான். ஆனால், பெரும்பாலான மக்களின் கருத்து தீயவர்களை
அழிக்கவே அல்லாஹ் இத்தகைய இயற்கை அனர்த்தங்களை ஏற்படுத்துகின்றான் என்பது.
எனவே, இவ்வாறான அனர்த்தங்களில் அழிபவர்கள் தீயவர்களே என வாதிடுகின்றனர்.
இது முற்றிலும் தவறாகும். பின்வரும் ஹதீஸில் இருந்து இது தெளிவாக நமக்குப்
புரியும்.



ஸைனப் பின்த் ஜஹ்ஷ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள்:


(ஒருநாள்)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தூக்கத்திலிருந்து முகம் சிவந்த
நிலையில் (பின்வருமாறு) கூறியபடியே எழுந்தார்கள்: வணக்கத்திற்குரியவர்
அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை. நெருங்கிவிட்ட ஒரு தீமையின் காரணமாக
அரபுகளுக்குக் கேடுதான். இன்று யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டத்தாரின் தடுப்புச்
சுவரிலிருந்து இந்த அளவிற்குத் திறக்கப்பட்டுள்ளது.



சுனாமி (tsunami) அல்லாஹ்வின் மாபெரும் வல்லமை.- பாத்திமா ஷஹானா கொழும்பு 2அறிவிப்பாளர்
ஸுஃப்யான் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் (“இந்த அளவிற்கு’ என்று கூறியபோது,
தமது கை விரல்களால் அரபி எண் வடிவில்) 90 அல்லது 100 என்று மடித்துக்
காட்டினார்கள்;



அப்போது
“நல்லவர்கள் நம்மிடையே இருக்கும்போதுமா நமக்கு அழிவு ஏற்படும்?” என்று
வினவப்பட்டது. அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் “ஆம். தீமை
பெருத்துவிட்டால்” என்று பதிலளித்தார்கள். (புகாரி 7059)



எனவே,
இயற்கை அனர்த்தங்கள் நல்லவர்களுக்கும், தீயவர்களுக்கும் சேர்த்தே சோதனையாக
அமையும். நபியவர்கள் காலத்திலேயே குழப்பங்களை அல்லாஹ் இறக்கி
வைக்கக்கூடியவனாக இருந்தான். பின்வரும் ஹதீஸில் முஹம்மது நபி ஸல்லல்லாஹு
அலைஹி வஸல்லம் அவர்கள் தம் மனைவியர்களையும் எழும்பி தொழுமாறு
ஏவுகின்றார்கள். எனவே அல்லாஹ் ஏற்படுத்தும் சோதனையிலிருந்து நல்லவர்,
தீயவர் அனைவருமே தம்மைக் காப்பாற்றிக் கொள்ள கடமைப்பட்டிருக்கின்றனர்.



நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் துணைவியார் உம்மு ஸலமா ரளியல்லாஹு அன்ஹா அறிவித்தார்கள்:


ஒரு(நாள்)
இரவில் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (திடீரென)
பதற்றத்துடன் விழித்தெழுந்து ‘அல்லாஹ் தூயவன்! (இன்றிரவு) அல்லாஹ்
இறக்கிவைத்த கருவூலங்கள் தாம் என்ன! (இன்றிரவு) இறக்கி வைக்கப்பட்ட
குழப்பங்கள் தாம் என்ன! -தம் துணைவியரை மனத்தில் கொண்டு – இந்த அறைகளிலுள்ள
பெண்களை எழுப்பி விடுகிறவர் யார்? அவர்கள் (அல்லாஹ்வைத்) தொழட்டும்!
ஏனெனில் இவ்வுலகில் உடையணிந்திருக்கும் எத்தனையோ பெண்கள் மறுவுலகில்
நிர்வாணிகளாய் இருப்பார்கள்’ என்று கூறினார்கள். (புகாரி 7069)



தீயவர்களுக்கு மட்டும் அல்லாஹ் அழிவை ஏற்படுத்துவதென்றால் அது மறுமை ஏற்படும் நாளாகத் தான் இருக்க வேண்டும்.


அபூமூஸா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாவது:


நான்
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம், “கொலைகள் மலிந்த
காலம் வரும் என்று மேற்கண்டவாறு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்
கூறிய காலத்தை நீங்கள் அறிவீர்கள்” என்றேன். அப்போது அப்துல்லாஹ் பின்
மஸ்ஊத் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் (கூடுதலாகப் பின்வருமாறு) சொன்னார்கள்:
யார் உயிரோடு இருக்கும்போது அவர்களை மறுமைநாள் வந்தடைகிறதோ அவர்கள்தாம்
மக்கற்லேயே தீயோர் ஆவர் என நபி ஸல்லல்லாஹு
அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்ல நான் கேட்டிருக்கிறேன். (புகாரி 7067)



அல்லாஹ் இவ்வுலக வாழ்க்கையை சோதனைக் களமாகவே அமைத்துள்ளான்.


அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:


”யாருக்கு அல்லாஹ் நன்மையை நாடுகின்றானோ அவரை (சத்திய) சோதனைக்கு உள்ளாக்குகின்றான்.” (புகாரி 5645)


நம் செயல்களின் மூலமே அல்லாஹ் நாம் சுவர்க்கத்திற்குரியவர்களா? அல்லது நரகத்திற்குரியவர்களா? என்பதைத் தீர்மானிப்பான்.


உங்களுக்குத்
தவறி விட்டதற்காக நீங்கள் கவலைப்படாமல் இருப்பதற்காகவும், அவன் உங்களுக்கு
வழங்கியதில் நீங்கள் பூரித்துப் போகாமல் இருப்பதற்காகவும், (விதியை
ஏற்படுத்தியுள்ளான்) கர்வமும் பெருமையும் கொண்ட ஒவ்வொருவரையும் அல்லாஹ்
நேசிக்க மாட்டான். (அல்குர்ஆன் 57:23)



ஓரளவு
அச்சத்தாலும், பசியாலும் செல்வங்கள், உயிர்கள், மற்றும் பலன்களைச்
சேதப்படுத்தியும் உங்களைச் சோதிப்போம். பொறுத்துக் கொண்டோருக்கு நற்செய்தி
கூறுவீராக! (அல்குர்ஆன் 2:155)



நாம்
சோதனைகள் வரும்போது பொறுமையாக அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்து நம் அத்தனை
க~;டங்கள், கவலைகள், துயரங்கள் என்பவற்றை அல்லாஹ்விடமே முறையிட வேண்டும்.
அல்லாஹ்வே நம்மை பொறுப்பேற்றுக் கொள்ளப் போதுமானவன் என்ற முழு
நம்பிக்கையுடன் அல்லாஹ்விடம் இறைஞ்சி பிரார்த்திக்க வேண்டும்.



இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள்:


(இறைத்தூதர்)
இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தீயில் தூக்கி எறியப்பட்டபோது அல்லாஹ்
எங்களுக்குப் போதுமானவன்; அவனே பொறுப்பேற்றுக்கொள்வோரில் சிறந்தவன்” என்று
கூறினார்கள். இதே வார்த்தைகளை முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்,
“நிச்சயமாக (மீண்டும் தாக்குதல் தொடுக்க எதிர்த்தரப்பு) மக்கள்
உங்களுக்கெதிராக அணிதிரண்டுள்ளனர்; எனவேஇ அவர்களுக்கு அஞ்சுங்கள்” என
மக்கள் (சிலர்) கூறியபோது சொன்னார்கள். இ(வ்வாறு அச்சுறுத்திய)து
அவர்களுக்கு நம்பிக்கையை மேலும் அதிக மாக்கியது. “எங்களுக்கு அல்லாஹ் போது
மானவன்; அவனே பொறுப்பேற்றுக் கொள்வோரில் சிறந்தவன்” என்றும் அவர்கள்
கூறினார்கள். (புகாரி 4563)



இஸ்லாத்தைப்
பொருத்த வரை இறந்தவர்களுக்காக துக்கம் அனுஷ்டிப்பது மூன்று
நாட்களுக்காகும். ஆனால், இன்று சுனாமி தினத்தை வருடந்தோறும் துக்க தினமாக
முஸ்லிம்கள் உட்பட அனைவரும் அனுஷ்டிப்பது கேலிக்குரிய நிகழ்வாக உள்ளது.



உம்மு அத்திய்யா நுஸைபா பின்த் அல்ஹாரிஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள்:


இறந்து
விட்டவர்களுக்காக மூன்று நாட்களுக்கு மேல் (அலங்காரம், நறுமணம்
உள்ளிட்டவற்றைக் zகைவிட்டு) துக்கம் கடைப்பிடிக்கக் கூடாதென நாங்கள்
(நபியவர்களால்) தடைவிதிக்கப்பட்டோம். ஆனால் (கணவருக்காக அவர் இறந்தபின்
அவருடைய) மனைவி நான்கு மாதம் பத்து நாட்கள் (துக்கம் கடைபிடிப்பதைத்) தவிர!
(அதாவது இந்த நாட்கற்ல்) நாங்கள் (கண்ணில்) அஞ்சனம் தீட்டவோ, நறுமணம்
பூசவோ சாயமிட்ட ஆடைகளை அணிவதோ கூடாது. ஆனால் நெய்வதற்கு முன் நூ-ல்
சாயமிடப்பட்ட (அஸ்ப் எனும்) ஆடையைத் தவிர! (அதை அணிந்துகொள்ளலாம்.) (புகாரி
313)



எனவே,
இயற்கை அனர்த்தங்கள் உட்டபட்ட அல்லாஹ்வால் ஏற்படுத்தப்படும் அனைத்து
சோதனைகளுக்கும் பொறுமையை மேற் கொண்டு அவனிடமே பிரார்த்திக்க வேண்டும். இச்
சோதனைகளை அல்லாஹ் தீயவர்களுக்கு மட்டும் தான் ஏற்படுத்துவான் என்ற தவறான
எண்ணத்தை மனதிலிருந்து அகற்றி அந்நாளை ஒவ்வொரு வருடமும் துக்க தினமாக
அனுஷ்டிப்பதை விட்டொழித்து அல்லாஹ்வின் தூய மார்க்கத்தில்
நிலைத்திருப்போமாக!


சுனாமி (tsunami) அல்லாஹ்வின் மாபெரும் வல்லமை.- பாத்திமா ஷஹானா கொழும்பு End_bar
நன்றி:- பாத்திமா ஷஹானா கொழும்பு
நன்றி:- http://rasminmisc,blogspot.com/


http://azeezahmed.wordpress.com/



சுனாமி (tsunami) அல்லாஹ்வின் மாபெரும் வல்லமை.- பாத்திமா ஷஹானா கொழும்பு End_bar

azeezm
புதுமுகம்

பதிவுகள்:- : 62
மதிப்பீடுகள் : 0

Back to top Go down

சுனாமி (tsunami) அல்லாஹ்வின் மாபெரும் வல்லமை.- பாத்திமா ஷஹானா கொழும்பு Empty Re: சுனாமி (tsunami) அல்லாஹ்வின் மாபெரும் வல்லமை.- பாத்திமா ஷஹானா கொழும்பு

Post by அர்சாத் Thu 17 Mar 2011 - 12:19

மிக்க அருமயான பகிர்வுக்கு நன்றி.............
அர்சாத்
அர்சாத்
புதுமுகம்

பதிவுகள்:- : 328
மதிப்பீடுகள் : 0

Back to top Go down

சுனாமி (tsunami) அல்லாஹ்வின் மாபெரும் வல்லமை.- பாத்திமா ஷஹானா கொழும்பு Empty Re: சுனாமி (tsunami) அல்லாஹ்வின் மாபெரும் வல்லமை.- பாத்திமா ஷஹானா கொழும்பு

Post by நேசமுடன் ஹாசிம் Thu 17 Mar 2011 - 13:10

://:-: ##* :”@:


சுனாமி (tsunami) அல்லாஹ்வின் மாபெரும் வல்லமை.- பாத்திமா ஷஹானா கொழும்பு Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சுனாமி (tsunami) அல்லாஹ்வின் மாபெரும் வல்லமை.- பாத்திமா ஷஹானா கொழும்பு Empty Re: சுனாமி (tsunami) அல்லாஹ்வின் மாபெரும் வல்லமை.- பாத்திமா ஷஹானா கொழும்பு

Post by *சம்ஸ் Thu 17 Mar 2011 - 13:26

நன்றி பகிர்விற்க்கு ##*


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சுனாமி (tsunami) அல்லாஹ்வின் மாபெரும் வல்லமை.- பாத்திமா ஷஹானா கொழும்பு Empty Re: சுனாமி (tsunami) அல்லாஹ்வின் மாபெரும் வல்லமை.- பாத்திமா ஷஹானா கொழும்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum