Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
தொலைந்து போனேன் - கவிதை
Page 1 of 1
தொலைந்து போனேன் - கவிதை
-
புழுதி புரளும் வீதிகளில்
பச்சையோ சிவப்போ கவனமின்றி
பரபரவென்று குறுக்கும் நெடுக்குமாக
வரிசையின்றி ஊறும்
வாகனங்களின் பரபரப்பில்..
-
கோயிலைச் சுற்றி நகரமைத்த
மன்னர் பெயர் மறந்துபோக,
பெருங் கோயிலும், குறு வீதிகளும்
காலத்தால் மறையாது நிற்க..
ஓயாது தினம் நிகழும்
வணிகத்தின் சுறுசுறுப்பில்..
-
திருவிளையாடல் பல செய்து
தெய்வங்கள் மணம் புரிந்து,
திக்விஜயம் செய்தாண்ட
மகத்தான மாநகர் இதுவென்று
வருடந்தோறும் நினைவூட்டி..
-
வெயிற் காலத்தில்
வேடங்கள் கலைத்து,
கூட்டத்தில் ஒருவராய்க் கரைந்து..
மூன்று தலைமுறையை
இணைக்கின்ற பிணைப்பாக,
ஊர்கூடிக் கொண்டாடும்
திருவிழா கலகலப்பில்..
-
'ஏ ஆத்தா மீனாட்சி
இன்னைய பொளுது நல்லபடியா போக
நீயும் எங்கப்பன் சொக்கனுந்தேன்
காப்பாத்தணும்.. சொல்லிப்புட்டேன்..'
உரிமையோடு அருள் வேண்டும்
வெள்ளந்தி மனிதர்களின்
ஆத்மார்த்த பக்தியின்
ஆழ்ந்த நம்பிக்கையில்..
-
'வாங்கண்ணே எங்கிட்டு போகணும்..
நம்ம வண்டியிலேயே போயிறலாம்ணே..
ஒங்களுக்கு தெரியாததா..
ஏதோ பாத்து குடுங்கண்ணே..'
முன்பின் தெரியாத
எவருக்கும் நாள்தோறும்
'அதிதி தேவோ பவ'
என்று உதவிக்கரம் நீட்டி
'அன்பின் வழியது உயிர்நிலை' என
வாழ்ந்து காட்டுவோரின்
நட்பான வழிகாட்டலில்..
-
'தனியொருவனுக்கு உணவில்லையெனில்
இந்த ஜகத்தினை அழித்திடுவோம்..'
பசிக்கொடுமை கண்டு
உள்ளம் கொதித்துப் பாடிய,
'மகாகவி பணியாற்றிய பெருமையுடைத்து'
பள்ளி அமைந்த பரபர நகரின்
வீதிதோறும் நடைபாதையில்..
-
சூடான உணவு செய்து
சுவையான கதைபேசலுடன் கலந்து
நாள்முழுதும் அயராமல்
பரிமாறிப் பசியாற்றும்
தூங்கா நகர்வாழ்
தாயுள்ளங்களின் பேரன்பில்..
-
பிறந்து, வளர்ந்து, நகர்ந்து
மறந்திடா என் தாய் வீடு
மதுரைக்கு நான்
வரும்போதெல்லாம்,
புதியன கழிதலும்..
பழையன புகுதலும்.. என்று
காலம் மாறினாலும்
காட்சிகள் மாறாது
உறைந்து நிலைக்க..
-
மனத்திரையில் காலம்
தானாக ரீவைண்ட் ஆகி,
வேண்டாது மறுபடியும்
இளமை வரம்பெற்று,
என்னுள்ளேயே நான்
தொலைந்து போனேன்!
---------------------
~ஸ்வாமி (தமிழ் கோரா)
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» தொலைந்து போன நாட்கள் – கவிதை
» தொலைந்து போனது..
» #தொலைந்து போன அரசியல் நாகரீகம்#
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
» தொலைந்து போனது..
» #தொலைந்து போன அரசியல் நாகரீகம்#
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum