Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவைby rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
» நந்தன் படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Thu 29 Aug 2024 - 13:13
» நீலாவுக்கு நெறஞ்ச மனசு - (திரைப்படம் -காணொளி)
by rammalar Thu 29 Aug 2024 - 11:47
» உலக நீர் தினம் எது?
by rammalar Thu 29 Aug 2024 - 11:39
» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 29
by rammalar Thu 29 Aug 2024 - 6:37
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Wed 28 Aug 2024 - 19:02
» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 28
by rammalar Wed 28 Aug 2024 - 16:07
» மனைவியின் கோபத்துக்கான காரணங்கள்
by rammalar Tue 27 Aug 2024 - 19:00
பான் இந்தியா படம், ‘ஹனு-மான்’.
Page 1 of 1
பான் இந்தியா படம், ‘ஹனு-மான்’.
---
சாதாரணமான ஒரு ஹீரோவுக்கு திடீரென்று தெய்வ சக்தியுடன்
கூடிய பலம் கிடைத்தால் என்ன நடக்கும் என்ற அதீத கற்பனையுடன்
உருவாகியுள்ள பான் இந்தியா படம், ‘ஹனு-மான்’.
கற்பனை கிராமமான அஞ்சனாத்திரியில் வசிக்கும் துறுதுறு
இளைஞன், தேஜா சஜ்ஜா. பெற்றோர் இல்லாததால், தனது அக்கா
வரலட்சுமியின் பாசத்துக்கு கட்டுப்பட்டு வாழ்ந்து வருகிறார்.
எந்த வேலைக்கும் செல்லாத அவருக்கும், டாக்டருக்குப் படித்துவிட்டு
ஊர் திரும்பும் அம்ரிதா அய்யருக்கும் சிறுவயதில் இருந்தே காதல்.
இந்நிலையில், சிறுவயதில் இருந்தே சூப்பர் ஹீரோவாக ஆசைப்படும்
வில்லன் விநய் ராய், அதற்காக தன் பெற்றோரையே தீவைத்துக்
கொளுத்தியவர்.
இறுதியில் அவர் தனது லட்சியத்தில் வென்றாரா?
அவரால் ஏற்படும் ஆபத்து என்ன? ஹனுமன் சக்தி பெற்ற
ஹீரோ தேஜா சஜ்ஜா, விநய் ராயை என்ன செய்து அஞ்சனாத்திரி
கிராமத்தைக் காப்பாற்றுகிறார் என்பது மீதி கதை.
விஎப்எக்ஸ் மற்றும் சிஜியை நம்பி களத்தில் குதித்த படக்குழு, அதில்
90 சதவீதம் வெற்றிபெற்றுள்ளது. குறிப்பாக, ஆற்றில் அமைந்திருக்கும்
மலையில், மிகப் பிரமாண்டமான ஹனுமன் சிலை பிரமிப்பு
ஏற்படுத்துகிறது. கிளைமாக்ஸ் காட்சி மற்ற படங்களுக்கு சவால்
விடுகிறது.
இக்கதையில் ஆன்மிகத்தையும், பேண்டசியையும் கலந்து,
விறுவிறுப்பான திரைக்கதையின் மூலம் பல குறைகளை மறக்க
வைத்து இயக்கியுள்ளார், பிரசாந்த் வர்மா. இளம் ஹீரோ தேஜா சஜ்ஜா
காதல், காமெடி, ஆக்ஷன், ஆன்மிகம் என்று பல்வேறு உணர்வுகளை
சட்டென்று வெளிப்படுத்தி நடித்துள்ளார்.
அவரது சகோதரி வரலட்சுமி, வில்லன் விநய் ராய், அம்ரிதா அய்யர்,
வெண்ணிலா கிஷோர் ஆகியோரின் நடிப்பு கச்சிதமாக இருக்கிறது.
படம் முழுக்க வரும் குரங்குக்கு ரவிதேஜா டப்பிங் பேசியிருப்பதும்,
அது பேசும் டைமிங் காமெடி டயலாக்குகளும் நல்ல என்டர்டெயின்மெண்ட்.
அஞ்சனாத்திரி கிராமம், அங்குள்ள மக்கள், ஹனுமன் சிலை என்று
ஒவ்வொரு விஷயத்தையும் விஎப்எக்ஸ் மூலம் செதுக்கிய இயக்குனர்,
கதையை வழக்கமான பாணியில் அமைத்திருப்பது மைனஸ் என்றாலும்,
அதை படத்திலுள்ள நடிகர்களும், சிஜி காட்சிகளும் சமன் செய்து
விடுகின்றன.
தாசரதி சிவேந்திரன் ஒளிப்பதிவு வண்ணமயமாக இருக்கிறது.
சண்டைக் காட்சிகளில் அவரது கேமரா அசுரத்தனமாக உழைத்திருக்கிறது.
அனுதீப் தேவ், கவுரஹரி, கிருஷ்ணா சவுரப் ஆகியோரின் இசையில்
பாடல்களும், பின்னணி இசையும் கதையோட்டத்துக்கு பலம் சேர்த்துள்ளன.
நம்ப முடியாத கதையும், காட்சிகளும் இருந்தாலும், பின்னணியில் ஹனுமன்
சக்தியை வைத்து, நம்பகத்தன்மையை வரவழைத்த விதத்தில் இயக்குனரின்
கூடுதல் உழைப்பு தெரிகிறது. பிரசாந்த் வர்மா சினிமாட்டிக் யுனிவர்ஸின்
முதல் படமான ‘ஹனு-மான்’, இன்னும் பல பாகங்களை உருவாக்கும்.
–
;நன்றி- தினகரன்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25129
மதிப்பீடுகள் : 1186
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|