Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
அறியாமை - தத்துவக் கதை
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இந்து.
Page 1 of 1
அறியாமை - தத்துவக் கதை
ஒரு நாட்டிலே ஒரு துறவி ஒருவர் இருந்தார். அந்த நாட்டு அரசன்
அவரிடம் அடிக்கடி சென்று அவரை சந்தித்து சில ஆலோசனைகளை
பெறுவான். அப்படி இருக்கையில் ஒரு நாள் ” சுவாமி நான் உங்களை
எனது அரண்மனைக்கு அழைத்துப்போக வந்திருக்கிறேன்” எனக்
கூறினான்.
துறவி வரமாட்டார் நான் எளிமையானவன் எனக்கு அரண்மனை வாசம்
வேண்டாம் என்று சொல்லிவிடுவார் என்று நினைத்து அவன் அவ்வாறு
அவரை அழைத்தான்.
ஆனால் அவரும் சரி போகலாம் போய் ரதத்தை கொண்டு வா!
அரண்மனைக்குச் செல்வதற்கு எனக்கு ஆடம்பரமான ஆடைகளை
கொண்டு வா என கேட்டார். மன்னனுக்கு தூக்கி வாரிப்போட்டது.
உண்மையிலேயே இவர் துறவிதானா? என்ற சந்தேகம் ஏற்பட்டது.
ரதத்தைக் கொண்டுவந்தான். துறவி ஏறி உட்கார்ந்தார். அருகிலே
அரசன். துறவி மிகவும் உற்சாகமாக இருந்தார். இவனோ சோர்ந்து
போயிருந்தான்.
துறவி மரத்தடியிலே வாழ்ந்து பழக்கப்பட்டவர் எளிமையாக
அரண்மனையில் ஓரிடத்திலேயே உட்கார்ந்து கொள்வார் என்று
நினைத்தான் .ஆனால் அப்படி இல்லை அரண்மனைக்கு வந்த உடனே
துறவி அதைக் கொண்டு இதைக் கொண்டு வா என்ற அரசனுக்கு
கட்டளைகளைப் பிறப்பித்துக் கொண்டிருந்தார்.
இரவில் சுகமாக உறங்கினார். பகலில் அரண்மனைத் தோட்டத்தில்
உலாவினார். நீச்சல் குளத்தில் நீராடினார் இப்படியே பொழுதைப்
போக்கினார். ஆனால் அரசனால் அவ்வாறு மகிழ்ச்சியாக இருக்க
முடியவில்லை. அவனுக்கு அரசாங்க கவலைகள் ஏராளம்.
துறவி இப்படி இருப்பதை அவனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை
ஒருநாள் அவரிடம் போய் நான் உங்களிடம் சிறிது பேச வேண்டும்
என்றான்.
துறவியோ மரத்தடியில் இருக்கும் போது அடிக்கடி என்னை வந்து
சந்தித்து ஏதாவது விளக்கம் கேட்பாய் ஆனால் இங்கே வந்த பிறகு
என்னை சந்திப்பது கூட அபூர்வம் என்ன கேட்க வேண்டும் கேள் என்று
சொன்னார்.
வேறு ஒன்றுமில்லை சுவாமி உங்களுக்கும் எனக்கும் என்ன வித்தியாசம்?
இரண்டு பேரும் அரண்மனையில் தான் இருக்கிறோம். நீங்கள்
மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள் என்னால் அப்படி இருக்க முடியவில்லை.
இவ்வளவுக்கும் நீங்கள் முதலில் இருந்தது போல் இப்போது இல்லை.
தினமும் தங்கத்தேர் , தரமான ஆடைகளை அணிகிறீர்கள், சுவையான
சாப்பாடு இப்படி இருக்கையில் உங்களுக்கும் எனக்கும் என்ன
வித்தியாசம்? என்று மன்னன் கேட்டான்.
இதற்கு பதில் சொல்கிறேன் என்கூட புறப்பட்டு வா என்று நகரத்திற்கு
வெளியே அழைத்துக்கொண்டு போனார்.அங்கே போய் நான் திரும்பி
வரப்போவதில்லை நீ என்னோடு வருகிறாயா? திரும்பி போகிறாயா?
என்று கேட்டார். அதற்கு மன்னன் அதெப்படி உங்களுடன் வர முடியும்.
என்னுடைய நாட்டினுடைய சொத்துக்கள் மனைவி மக்கள் எல்லாத்தையும்
விட்டுவிட்டு என்னால் வர முடியாது என்று சொன்னான்.
இப்போது வித்தியாசத்தை தெரிந்து கொண்டாயா?
நான் அரண்மனையிலிருந்து எல்லாவித பொருள்களும் உடையவனாக
இருந்தேன். ஆனால் ஒன்றையும் சொந்தம் கொண்டாடுகிறவனாக
இருக்கவில்லை. நீ எல்லாத்தையும் சொந்தம் கொண்டாடுகிறாய்.
இதுதான் நமக்குள் உள்ள வித்தியாசம் என்று கூறிவிட்டு அரண்மனை
ஆடைகளை களைந்து உன்னுடைய ஆடைகளை நீயே வைத்துக்கொள்
என்று கூறிவிட்டு திரும்பிப் பார்க்காமல் அவர் நடந்து சென்று
கொண்டிருந்தார். அரசனுக்கு அப்போதுதான் அவனுடைய அறியாமை
புரிந்தது.
இந்த உலகத்தில் எத்தனையோ பொருள்கள் இருக்கின்றன
அதை எல்லாம் முறையாக பயன்படுத்தினால் மகிழ்ச்சியாக இருக்கலாம்.
அதை விட்டுவிட்டு அதை நாம் சொந்தம் கொண்டாட எப்போது
ஆரம்பிக்கிறோமோ அப்போதுதான் கவலைகள் நம்மை சுற்றி வளைத்து
கொள்கின்றன.
-
-நன்றி-சின்னுஆதித்யா
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» பிள்ளைகள் படிப்புக்கு இரட்டிப்பு செலவு: பெற்றோரின் அறியாமை
» பிள்ளைகள் படிப்புக்கு இரட்டிப்பு செலவு: பெற்றோரின் அறியாமை
» பிள்ளைகள் படிப்புக்கு இரட்டிப்பு செலவு: பெற்றோரின் அறியாமை
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இந்து.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum