Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இந்து.
Page 1 of 1
அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
---
ஒரு முறை வட நாட்டில் இருந்து ஓர் அன்பர் மஹா பெரியவாளைத்
தரிசிக்க வந்தார். மனம் குளிரும் வண்ணம் அவரது தரிசனம் முடிந்த
பிறகு, சற்றே நெளிந்தவாறு நின்றார்.
இவரது மனதில் ஏதோ கேள்வி இழையோடுகிறது என்று தீர்மானித்த
பெரியவா, “என்ன சந்தேகம். கேளுங்கோ” என்றார். அந்த வட நாட்டு
அன்பருக்கு ஆஞ்சநேயர் குறித்த ஒரு சந்தேகம் நெடு நாட்களாகவே
இருந்து வந்தது.
“ஆஞ்சநேயரைப் பற்றி எனக்கு ஒரு சந்தேகம்” என்றார் அன்பர்.
“வாயு புத்திரனைப் பத்தியா… கேளேன்” என்றார் ஸ்வாமிகள்.
“ஸ்வாமி.. ஆஞ்சநேயர் பலருக்கும் இஷ்ட தெய்வமாக இருக்கிறார்.
எல்லாருமே அவரை வணங்கி அருள் பெறுகிறார்கள். ஆனால் அவருக்கு
அணிவிக்கப்படும் மாலை பற்றித் தான் என் சந்தேகம் என்றார்.
பெரியவா மெளனமாக இருக்கவே… அன்பரே தொடர்ந்தார்:
“அனுமனுக்குத் தென்னிந்தியாவில் காரமான மிளகு கலந்த வடை மாலை
சாற்றுகிறார்கள். ஆனால் நான் வசிக்கும் வட இந்தியாவிலோ
ஜாங்கிரி மாலை சாற்றுகிறார்கள், ஏன் இப்படி வித்தியாசப்படுகிறது ?”
என்று கேட்டு விட்டு பதிலுக்காக மஹா பெரியவாளையே பார்த்துக்
கொண்டிருந்தார்.
பெரியவா ஒரு புன்முறுவலுக்குப் பிறகு பதில் சொல்ல ஆரம்பித்தார்...
“பெரும்பாலோர் வீட்டில் கைக்குழந்தைகள் சாப்பிடுவதற்கு அடம் செய்தால்,
வீட்டுக்கு வெளியே குழந்தையை இடுப்பில் தூக்கிக் கொண்டு வந்து,
‘அதோ பார் நிலா…’ என்று அந்தக் குழந்தைக்கு சந்திரனை காட்டி உணவை
சாப்பிட வைப்பார்கள். அழகான நிலாவையும் வெளிக்காற்றையும் சுவாசிக்க
நேரும் குழந்தைகள், அடம் பண்ணாமல் சமர்த்தாக உணவை சாப்பிட்டு விடும்.
குழந்தைகளின் அம்மாக்களுக்கும் இது சந்தோஷத்தைத் தரும்.
உங்களில் பலர் வீடுகளிலும் இது நிகழ்ந்திருக்கும். சாதாரண குழந்தைகளுக்கு
நிலா விளையாட்டுப் பொருள் என்றால், இராமதூதனான அனுமனுக்கு
பார்ப்பதற்கு ஏதோ ஒரு பழம் போல் காட்சி தந்த சூரியனை அடுத்த கணமே
தன் கையில் பிடித்துச் சாப்பிட வேண்டும் என்று ஆசை ஏற்பட்டது.
அடுத்த கணமே அது தன் கையில் வந்து விட வேண்டும் என்று விரும்பினார்.
வாயுபுத்திரன் ஆன அவர் வாயு வேகத்தில் வானத்தில் பறந்தார். பிறந்து
சில நாட்களே ஆன ஒரு பச்சிளங்குழந்தை, சூரியனையே விழுங்குவதற்காக
இப்படிப் பறந்து செல்வது கண்டு தேவர்கள் திகைத்தனர்.
வாயுபுத்திரனின் வேகத்தை எவராலும் தடுக்க முடியவில்லை.
ராகு பகவான் அதே நேரத்தில் ராகு கிரஹமும் சூரியனைப் பிடித்து கிரஹண
காலத்தை உண்டு பண்ணுவதற்காக நகர்ந்து கொண்டிருந்தது. ஆனால்,
அனுமன் சென்ற வேகத்தில் ராகு பகவானால் செல்ல முடியவில்லை.
சூரியனைப் பிடிப்பதற்காக நடந்த இந்த பந்தயத்தில் அனுமனிடம் ராகு பகவான்
தோற்றுப் போனார்.
இந்த நிகழ்ச்சியின் முடிவாக, அனுமனுக்கு ஒரு அங்கீகாரம் கொடுத்தார்
ராகு பகவான். அதாவது, தனக்கு மிகவும் உகந்த தானியமான உளுந்தால்
உணவுப் பண்டம் தயாரித்து எவர் ஒருவர் அனுமனை வணங்குகிறாரோ,
அவரை எந்தக் காலத்திலும் தான் பீடிப்பதில்லை என்றும், தன்னால் வரும்
தோஷங்கள் அனைத்தும் நிவர்த்தி ஆகி விடும் எனவும் ராகு பகவான்
அனுமனிடம் தெரிவித்தார்.
உளுந்துப் பண்டம் எப்படி இருக்க வேண்டும் என்றும் ராகு பகவான் அனுமனிடம்
சொன்னார். அதாவது தன் உடல் போல் (பாம்பு போல்) வளைந்து இருக்க
வேண்டும் எனவும் சொன்னார். அதைதான் உளுந்தினால் தயாரித்த வடைகளை
மாலை ஆக்கி அனுமனுக்கு சமர்ப்பிக்கிறோம்.
ஆக, ராகு தோஷத்தால் பாதிக்கப்பட்டிருப்பவர் உளுந்து தானியத்தால் ஆன
வடை மாலைகளை அனுமனுக்குச் சார்த்தி வழிபட்டால், ராகு தோஷம் நிவர்த்தி
ஆகி விடும் என்பது இதில் இருந்து தெரிகிறது.
இப்போது மிளகு வடை மற்றும் ஜாங்கிரி விஷயத்துக்கு வருகிறேன்.
வடையாகட்டும்… ஜாங்கிரி ஆகட்டும். இரண்டுமே உளுந்தினால்
செய்யப்பட்டவை தான். தென்னிந்தியாவில் இருப்பவர்கள் அனுமனுக்கு
உளுந்து வடை மாலை சாற்றுகிறார்கள்.
இங்கே உப்பளங்கள் அதிகம் உள்ளன. இங்கிருந்து பல வெளி நாடுகளுக்கும்
உப்பு அதிக அளவில் ஏற்றுமதி ஆகிறது. ஆகவே, உப்பும் உளுந்தும் கலந்து
கூடவே மிளகும் சேர்த்து வடைகள் செய்து அவைகளை பாம்பின் உடல் போல்
மாலையாகத் தயாரித்து, அனுமனுக்கு சார்த்தி வழிபடும் வழக்கம் நம்மூரில்
உண்டு.
வட இந்தியாவில் பல மாநிலங்களில் கரும்பு விளைச்சல் அமோகமாக இருக்கிறது.
சர்க்கரை பெருமளவில் அங்கு தயாராகி வெளிநாடுகளுக்கெல்லாம் ஏற்றுமதி
ஆகிறது. தவிர, வட இந்தியர்கள் இனிப்புப் பண்டங்களை அதிகம் விரும்பிச்
சாப்பிடுபவர்கள். அதுவும், அவர்களுக்குக் காலை நேரத்திலேயே பிரேக் ஃபாஸ்ட்
வேளையில் இனிப்புப் பண்டங்களையும் ரெகுலர் டிஃபனோடு சேர்த்துக்
கொள்கிறார்கள்.
இனிப்பு விரும்பிகள் ஆன அவர்கள் உளுந்து மற்றும் சர்க்கரையால் ஆன
ஜாங்கிரி மாலையை அனுமனுக்கு சார்த்தி வழிபடுகிறார்கள். எது எப்படியோ…
அனுமனிடம் ராகு பகவான் கேட்டுக் கொண்டபடி வளைந்த உளுந்து மாலைகள்
அனுமனுக்கு விழுந்து கொண்டே இருக்கின்றன.
அது உப்பாக இருந்தால் என்ன… சர்க்கரையாக இருந்தால் என்ன?
மாலை சார்த்தி வழிபடும் பக்தர்களுக்கு ராகு தோஷம் தொலைந்து போனால்
சரி” என்று சொல்லி விட்டு சிரித்தார் மஹா பெரியவா.
பெரியவாளின் விளக்கமான இந்த பதிலைக் கேட்ட வட நாட்டு அன்பர்
முகத்தில் பரவசம். சடாரென மகானின் திருப்பாதங்களுக்கு ஒரு நமஸ்காரம்
செய்து தன் நன்றியைத் தெரிவித்தார்.
கூடி இருந்த அநேக பக்தர்களும் பெரியவாளின் விளக்கத்தால் நெகிழ்ந்து
போனார்கள்.
--
அனுமன் ஜெயந்தி நன்னாளில் இராமநாமம் எங்கெல்லாம் கேட்கிறதோ
அங்கெல்லாம் அனுமன் வந்து அருள் புரிவார். எனவே அவரை இராமநாமம்
சொல்லி வரவேற்போம். அவரது நல்லருள் பெறுவோம்!!
----
பங்களிப்பு
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இந்து.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum