சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலக இசை தினம்
by rammalar Today at 4:47

» சர்வதேச யோகா தின வாழ்த்துக்கள்!
by rammalar Today at 4:43

» இன்று(ஜூன் 21). வருடத்தின் மிக நீண்ட நாள்.. "கோடைகால சங்கிராந்தி"..!!!
by rammalar Today at 4:31

» நாங்க இந்த டார்கெட்டை சாதாரணமா அடிப்போம்.. ஆனா நாங்க தோத்ததுக்கு காரணம் இந்த ஒரு விஷயம்தான் - ரஷீத்
by rammalar Today at 4:25

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by rammalar Yesterday at 15:50

» சிரிக்க சிந்திக்க மட்டும்.- 1
by rammalar Yesterday at 12:53

» `பேயா சுத்துறதுக்கு கூட இங்க கவர்ச்சி தேவைப்படுது' - சுந்தர் சி
by rammalar Yesterday at 10:53

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by rammalar Yesterday at 10:11

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by rammalar Yesterday at 6:55

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by rammalar Yesterday at 6:52

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by rammalar Yesterday at 6:48

» முத்த மழை!- புதுக்கவிதை
by rammalar Yesterday at 6:42

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by rammalar Yesterday at 4:21

» 4 பந்து 6 ரன்.. W,W,1B,0.. கடைசி ஓவர் கலக்கல்.. தெ.ஆ-வை இந்திய பெண்கள் அணி வீழ்த்தி திரில் வெற்றி
by rammalar Yesterday at 4:14

» அனைவரும் தெய்வத்தின் அம்சமே
by rammalar Wed 19 Jun 2024 - 18:22

» மனதை ஒருமுகப்படுத்தி செய்தால், திறமையும் வெற்றியும் கிடைத்தே தீரும்!
by rammalar Wed 19 Jun 2024 - 18:15

» ’குறி’ பார்த்து சுடணுமாம்!
by rammalar Wed 19 Jun 2024 - 18:11

» கக்கன் & மாக்ஸிம் கார்க்கி - பிறந்த நாள்
by rammalar Wed 19 Jun 2024 - 14:10

» என்னோட ஏரியா;வில பிச்சை எடுக்க வராதே!
by rammalar Wed 19 Jun 2024 - 8:49

» துளி(அ)ப்பா
by rammalar Wed 19 Jun 2024 - 6:15

» படித்ததில் பிடித்தது-7அ
by rammalar Tue 18 Jun 2024 - 20:26

» நகைச்சுவை உணர்வு கொள்ளுங்கள்
by rammalar Tue 18 Jun 2024 - 20:20

» எல்லா உயிர்களையும் நேசி - விவேகானந்தர்
by rammalar Tue 18 Jun 2024 - 7:18

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by rammalar Tue 18 Jun 2024 - 7:15

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by rammalar Tue 18 Jun 2024 - 7:13

» சிகரெட் பிடிக்கிறதை படிப்படியா குறைச்சிட்டேன்!
by rammalar Tue 18 Jun 2024 - 7:03

» கட்சியிலிருந்து ‘அடி’யோட நீக்கிட்டாங்களாம்!
by rammalar Tue 18 Jun 2024 - 6:57

» சுந்தர்.சி இயக்கத்தில் தமன்னா
by rammalar Tue 18 Jun 2024 - 5:06

» பெங்களூரு இஸ்கான் கோவில் சிறப்புகள் என்னென்ன?
by rammalar Tue 18 Jun 2024 - 4:47

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Mon 17 Jun 2024 - 20:10

» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Mon 17 Jun 2024 - 20:03

» வாஞ்சிநாதன் நினைவு தினம் இன்று
by rammalar Mon 17 Jun 2024 - 9:36

» படித்ததில் பிடித்த வரிகள்
by rammalar Mon 17 Jun 2024 - 6:45

» அறியாமையில் இருப்பவனின் வாழ்க்கை…
by rammalar Mon 17 Jun 2024 - 6:15

» திருமணத்திற்குப் பிறகு ‘பேச்சு இலர்’ ஆயிட்டான்!
by rammalar Mon 17 Jun 2024 - 6:15

மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்! Khan11

மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!

Go down

மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்! Empty மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!

Post by rammalar Sun 19 May 2024 - 5:48

மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்! Main-qimg-8fe5145e1cf56cb42cc90a0245acb57aஒரு கிராமத்தில் கொல்லன் ஒருவன் வாழ்ந்து வந்தான்,
இரும்பு சாமான்கள் செய்து விற்று பிழைப்பு நடத்தி வந்தான்,
அவனுக்கு அன்பும் அழகும் நிறைந்த மனைவி இருந்தாள்,
-
அவன் வாழ்க்கை உழைப்பும், காதலும், ஊடலுமாக மகிழ்ச்சி 
வெள்ளமாய் ஒடிக் கொண்டிருந்தது.


எல்லாக் கதைகளிலும் வழக்கமாக வருவது போல் நம்ம கொல்லன் 
வாழ்க்கையிலும் சோதனை காலம் வந்தது,,,


நவநாகரீக காலத்தின் துவக்கமாய் இருந்த நேரம் அது,
கொல்லப் பட்டறை தொழில் நலிவுற்றது,
வருமானம் நாளுக்குநாள் குறைந்து கொண்டே வந்து அன்றாட 
உணவுக்கே வறுமை என்ற நிலை வந்துவிட்டது,,,
-
கொல்லனுக்கோ ஊடலிலும், காதலிலுங்கூட நாட்டம் இல்லாமல் 
விரக்தி மனதில் குடிகொண்டது,,,
சோகமே உருவாகி விட்டான்,,,
-
ஒருநாள் மாலை வேளையில் மனைவியின் மடியில் தலைசாய்த்து 
வானத்து நட்சத்திரங்களை பார்த்துக் கொண்டிருந் தான்,
மனதில் எதிர்காலம் குறித்த கவலைகள் எழுந்து கண்ணீர் 
துளிகளாய் கரைந்தோடியது,
-
அதைக் கண்ட மனைவி தழுதழுத்து ஆறுதலாய் பேசினாள்,
"ஐயா எஞ்சாமி எதுக்கு கலங்குதீக,
இந்த தொழில் இல்லைன்னா என்ன, பக்கத்து காட்டுல போய் விறகு 
வெட்டி அதை அக்கம் பக்கத்து கிராமத்துல வித்தா நாலு காசு 
கிடைக்குமே,
அதை வெச்சு ராசாவாட்டம் வாழலாமே" என்றாள்,,,
-
புது நம்பிக்கை புது உற்சாகம் உள்ளத்தில், கொல்லன் விறகுவெட்டி 
ஆனான்,
அந்தத் தொழிலில் ஓரளவு வருமானம் கிடைத்தது.
வீட்டில் தினமும் சோளக்கஞ்சி, கொள்ளுத் துவையல் கூடவே 
மனைவியின் சிரித்த முகமும் கனிவான கொஞ்சலும் அவனுக்கு 
ஓரளவு மகிழ்ச்சியை தந்தாலும், சற்றே சோகமும் இழையோடி 
இருந்தது,


ஒருநாள் ஊடலும் சரசமுமாய் இருந்த வேளையில் மனைவி கேட்டாள்,
"மாமோய்,,, இன்னும் ஒங்க மனசுல ஏதோ சோகமிருக்காப்ல தெரியுதே,
என்ன அது?"
-
விறகு வெட்டியான நம்ம கொல்லன் சொன்னான்
"பட்டறைத் தொழில் நல்லாயிருந்த காலத்தில் நம்ம வீட்டில் 
தெனந்தெனம் நெல்லுச்சோறும் கறிக் கொழம்புமாய் இருக்கும்,
இப்போ இப்படி வயித்தக்கட்டி வாழுறோமே, அதுதான்டி குட்டிம்மா 
மனசுக்கு என்னவோ போல இருக்கு,
-
இப்படி விறகு சுமந்துகிட்டு ஊர் ஊரா சுத்தினால் கிடைக்கிற வருமானம் 
நமக்கு நல்லபடியா வாழ பத்தலையே"
என்றவனுக்கு கண்கலங்கவும் தவித்துப் போனாள் அவள்,
-
"வேணாஞ்சாமி வேணாம், நீங்க ஏங் குலசாமி, கண்ணு கலங்காதீக,
என்னோட நகை நட்ட வித்தா கொஞ்சம் காசு கிடைக்குமே,,,
அதை மூலதனமா போட்டு நாம ஒரு விறகு கடை வச்சிரலாம்,
காட்டுல விறகு வெட்டுற ஜனங்களுக்கு கூலி கொடுத்து விறகு வாங்கிப் 
போடுவோம்,
-
கடைன்னு ஆயிட்டா எந்த நேரமும் ஜனங்க விறகு வாங்க வருவாக, 
நமக்கு நல்லபடியா வருமானம் கிடைக்கும் என்றாள்.
-
மீண்டும் புத்துணர்ச்சி நமது கொல்லனின் உள்ளத்தில், விறகு 
வெட்டியானவன் விறகுக்கடை முதலாளியா னான்,
வருமானம் பெருகியது, அப்புறமென்ன வீட்டில் கறிசோறுதான்,,,
-
ஆனால் வாழ்க்கை அடுத்தடுத்த சோதனைகளை ஏற்படுத்தாமல் 
விட்டுவிடுமா என்ன,
வந்தது கெட்ட நேரம், விறகு கடையில் தீ விபத்து!...
அத்தனை முலதனமும் கரிக்கட்டையாகி விட்டது,,,
தலையில் அடித்துக் கொண்டு அழுதான் விறகு கடை முதலாளி,,,
-
நண்பர்கள் பலரும் வந்து ஆறுதல் சொன்னார்கள், கலங்காதே 
நண்பா மறுபடியும் விறகுவெட்டி வாழ்க்கை நடத்து,
எதிர்காலத்தில் எதாவது நல்லது நடக்கும் என்றார்கள்.
-
மனைவி வந்தாள்,,,
கண்ணீரை துடைத்தாள்,,,
அவன் தலைசேர்த்து நெஞ்சோடு கட்டியனைத்தாள்,
கண்ணீர் மல்க சொன்னாள்;
-
"இப்போ என்ன ஆயிடுச்சுனு எஞ்சாமி அழுதீக,
விறகு எரிஞ்சு வீணாவா போய்ட்டு,
கரியாத்தானே ஆகியிருக்கு,
நாளைலயிருந்து கரி யாவாரம் பண்ணுவோம்"
-
தன் தலை நிமிர்த்தி அவளின் முகம் பார்த்தவனுக்கு மீண்டும் வாழ்வில் 
ஒளி தெரிந்தது.


ஊக்குவிக்கவும் உற்சாகப் படுத்தவும் ஆட்களிருந்தால் கோமா 
ஸ்டேஜ்ல இருக்கவன் கூட ஒலிம்பிக் ஓட்டபந்தயத்தில் ஜெயிப்பான்.


ஊக்குவிக்கற வனை ஊக்குவிக்க ஆளிருந்தால் தேக்கு விப்பான். 
- கவிஞர் வாலி


சதா உதாசினப்படுத்திகொண்டிருந்தால்
ஆரோக்கியமா இருக்கறவனுக்கு குளுகோஸ் தான் போடனும்.


ஆற்றில் வெள்ளம் வந்து தண்ணீர் வேகமாக ஓடிக்கொண்டிருக்கும் 
போது கரையை கடக்க எதிர் நீச்சல் அடிக்க கூடாது.


ஆற்றோட வேகத்துக்கு தகுந்த மாதிரி கரையை அதோட போக்குல 
போய் கடந்து தான் கரையேறனும்.


படித்ததில் பிடித்தது....
-
நன்றி- உமர்ஷெரீப் ஹபிபுல்லா- தமிழ் கோரா
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24643
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum