சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை-12
by rammalar Today at 13:36

» பல்சுவை- 11
by rammalar Yesterday at 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

» நந்தன் படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Thu 29 Aug 2024 - 13:13

» நீலாவுக்கு நெறஞ்ச மனசு - (திரைப்படம் -காணொளி)
by rammalar Thu 29 Aug 2024 - 11:47

» உலக நீர் தினம் எது?
by rammalar Thu 29 Aug 2024 - 11:39

» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 29
by rammalar Thu 29 Aug 2024 - 6:37

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Wed 28 Aug 2024 - 19:02

» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 28
by rammalar Wed 28 Aug 2024 - 16:07

» மனைவியின் கோபத்துக்கான காரணங்கள்
by rammalar Tue 27 Aug 2024 - 19:00

» வாழ்வில் உயர சில வழிமுறைகள்
by rammalar Tue 27 Aug 2024 - 18:59

» ரமண மகரிஷி மொழிகள்
by rammalar Tue 27 Aug 2024 - 18:57

விஷ்ணு விஷால் வழங்கும் ஹாட் ஸ்பாட் 2′ ! Khan11

விஷ்ணு விஷால் வழங்கும் ஹாட் ஸ்பாட் 2′ !

Go down

விஷ்ணு விஷால் வழங்கும் ஹாட் ஸ்பாட் 2′ ! Empty விஷ்ணு விஷால் வழங்கும் ஹாட் ஸ்பாட் 2′ !

Post by rammalar Wed 14 Aug 2024 - 16:16

விஷ்ணு விஷால் வழங்கும் ஹாட் ஸ்பாட் 2′ ! Main-qimg-3e6a824f92bdd13be2d4309b7530a31f

--

மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற “ஹாட் ஸ்பாட்” 

படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் 

சார்பில் நடிகர் விஷ்ணு விஷால் வழங்க, கேஜேபி டாக்கீஸ் & செவன் 

வாரியர்ஸ் கே.வி துரை கிரியேட்டிவ் புரட்க்‌ஷன் மேற்பார்வையில் 

இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில், ஹாட்ஸ்பாட் படத்தின் 

இரண்டாம் பாகம் உருவாகவுள்ளது.



இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை முன்னணி நட்சத்திர நடிகர் 

விஷ்ணு விஷால், இயக்குநர் விக்னேஷ் கார்த்திக், , கேஜேபி டாக்கீஸ் 

சார்பில் பாலமணிமார்பன், செவன் வாரியர்ஸ் சுரேஷ் குமார் 

ஆகியோர் இணைந்து வெளியிட்டனர்.



பத்திரிக்கை ஊடக நண்பர்கள் கலந்துகொண்ட இவ்விழாவினில்

 “ஹாட் ஸ்பாட் 2 ” படத்தின் பிரத்தியேக புரோமோ திரையிடப்பட்டது.



இந்நிகழ்வினில் செவன் வாரியர்ஸ் சார்பில் சுரேஷ் குமார்

 பேசியதாவது…



மீடியா நண்பர்கள் தந்த ஆதரவு தான் இந்த இரண்டாம் பாகம் 

உருவாகக் காரணம். விஷ்ணு விஷால் ஸ்டூடியோவிற்கு 

நன்றி. வி என்றாலே வெற்றி தான் விக்னேஷ் கார்க்திக் உடன் 

இப்போது விஷ்ணு விஷாலும் எங்களுடன் இணைந்துள்ளார். 

உங்கள் ஆதரவைத் தாருங்கள்.



கேஜேபி டாக்கீஸ் சார்பில் பாலமணிமார்பன் பேசியதாவது..



ஹாட் ஸ்பாட் வெற்றிக்கு நீங்கள் தான் காரணம், இப்போது 

இரண்டாம் பாக அறிவிப்பை விழாவாகக் கொண்டாடுகிறோம். 

முதல் பாகத்தை இவ்வளவு விமரிசையாக வெளியிடவில்லை. 



இப்படத்தின் வெற்றிக்கு நீங்கள் தந்த ஆதரவே காரணம் நீங்கள் 

தான் இப்படத்திற்கு நல்ல மார்க்கெட்டிங் செய்து தந்தீர்கள்.



ஹாட் ஸ்பாட் படத்தின் வெற்றி விழாவில் நண்பர் சுரேஷ் குமார் 

இரண்டாம் பாகத்தை அறிவித்து விட்டார். இயக்குநரிடம் பேசும்

போது உடனே ஆரம்பிக்கலாம் என்றார். துரை அவர்கள் மிகப்

பெரிய ஆதரவாக இருந்தார்.



அவர் தான் விஷ்ணு விஷால் சார் படத்தை வழங்க ஆவலாக 

இருப்பதாகச் சொன்னார். அது எங்களுக்கு மிகப்பெரிய 

ஊக்கமாக இருந்தது. ஹாட் ஸ்பாட் படத்தின் இரண்டாம் 

பாகத்திற்கும் உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.



இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் பேசியதாவது…



ஹாட் ஸ்பாட் படத்தின் விமர்சனங்களைத் தாண்டி, நீங்கள் தந்த 

ஆதரவு தான் வெற்றிக்குக் காரணமாக இருந்தது. ஓடிடியிலும் 

நன்றாகப் போய்க்கொண்டிருக்கிறது.



இப்போது இரண்டாம் பாகத்தை, விஷ்ணு விஷால் சார் வழங்குவது 

மகிழ்ச்சி. இப்படி ஒரு கதையை வழங்க நிறையத் தைரியம் 

வேண்டும். அவர் மிகப்பெரிய மனதுடன் எங்களை ஊக்குவிக்கிறார். 



இந்த புரோமோ ஷீட்டில் கூட மிக எளிமையாக இருந்தார். 

ஹாட் ஸ்பாட் 2 முதல் பாகத்தைப் போலவே, இந்த இரண்டாம் 

பாகமும் உங்களை மகிழ்விக்கும்,



இப்படத்தில் நடிக்கவுள்ள நடிகர், நடிகைகள், மற்றும் தொழில் 

நுட்ப கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியிடுவோம். 

உங்கள் ஆதரவைத் தொடர்ந்து வழங்க கேட்டுக்கொள்கிறேன் நன்றி.



நடிகர் விஷ்ணு விஷால் பேசியதாவது;



ஹாட் ஸ்பாட் 2 நான் இல்லாமல் சாத்தியமில்லை என்று எனக்கு

 முன்னாடி பேசியவர்கள் கூறுகிறார்கள்… ஆனால் அப்படியில்லை, 

நல்ல படம் கண்டிப்பாக எப்படியாவது வந்தே தீரும். நல்ல படைப்புகள் 

கண்டிப்பாக வெற்றி பெறும்.



ஹாட் ஸ்பாட் டிரெய்லர் பார்த்துவிட்டு எனக்குப் பயங்கர கோபம், 

கலைக்கு போன் செய்து திட்டினேன். சினிமா எப்போதும் சமூகத்தில் 

பாதிப்பைத் தரும் என நம்புபவன் நான், அதனால் எனக்குக் கோபம் 

வந்தது. எல்லோரும் போல் நானும் இருந்தேன்,



ஆனால் படம் வந்த பிறகு வந்த பாசிடிவ் விமர்சனங்கள் ஆச்சரியமாக 

இருந்தது. ஹாட் ஸ்பாட் ஓடிடியில் தான் பார்த்தேன் ஒவ்வொரு கதையும் 

எனக்கு அவ்வளவு பிடித்தது. எனக்கே என் மகனை எப்படி வளர்க்க 

வேண்டும் எனப் புரிய வைத்தது.



அப்போதே விக்னேஷை அழைத்து பாராட்டினேன். இரண்டாம் பாகத்தின்

 கதையை என்னிடம் சொன்னார். எனக்கு மிகவும் பிடித்தது. எனக்குக் 

கடைசி கதை ரொம்ப பிடித்துள்ளது. பார்க்கும் போது உங்களுக்கும் பிடிக்கும்.



இந்த 15 வருட அனுபவத்தில் நல்ல கதைகள் தேர்ந்தெடுக்கும் திறமை 

வந்துள்ளது. ஒரு தயாரிப்பாளராக மாறியுள்ளேன். அதன் முதல் படி 

ஹாட் ஸ்பாட் 2. இன்னும் பல நல்ல படங்கள் தயாரித்து வருகிறோம். 

விஷ்ணு விஷால் ஸ்டூடியோ மூலம் நல்ல படங்களைத் தயாரித்து 

வழங்குவேன்.



விஷ்ணு விஷால் தயாரிப்பு நிறுவனம் மற்றும் கே.வி துரையின் 

டி கம்பெனி நிறுவனம் உடன் இணைந்து பல படங்கள் தயாரித்து 

வழங்கவுள்ளேன்.விரைவில் அறிவிப்பு வெளியாகும்… உங்கள் 

ஆதரவைத் தாருங்கள் நன்றி



இப்படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் துவங்கியுள்ளது, விரைவில் படத்தின் 

நடிகர்கள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் குறித்த அதிகாரப்பூர்வ

 அறிவிப்பு வெளியாகும்.



நன்றி-தினகரன்-சினிமா
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25127
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum