சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Yesterday at 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Yesterday at 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Yesterday at 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Yesterday at 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Yesterday at 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Yesterday at 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Yesterday at 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

 கோவிலை மையப்படுத்தி வாழும் வளரும் ஒரு தமிழ்க் கிராமம் Khan11

கோவிலை மையப்படுத்தி வாழும் வளரும் ஒரு தமிழ்க் கிராமம்

Go down

 கோவிலை மையப்படுத்தி வாழும் வளரும் ஒரு தமிழ்க் கிராமம் Empty கோவிலை மையப்படுத்தி வாழும் வளரும் ஒரு தமிழ்க் கிராமம்

Post by மீனு Tue 29 Mar 2011 - 22:26

 கோவிலை மையப்படுத்தி வாழும் வளரும் ஒரு தமிழ்க் கிராமம் F-7-5
புத்தளம், சிலாபம், நீர்கொழும்பு ஆகிய பிரதேசங்கள் ஒரு காலத்தில் தனித் தமிழ் மக்கள் வாழும் இடங்களாகக் காணப்பட்ட போதிலும் இன்று அந்த சூழல் வெகுவாக மாறிவிட்டது. மாற்றங்கள் சகஜம்தான்.

ஆனால் சிலாபத்தில் இருந்து 26 கி. மீ. தொலைவிலும் புத்தளத்தில் இருந்து 42 கி. மீ. தொலைவிலும் கடற்கரையோரமாக அமைந்திருக்கும் மீன்பிடிக் கிராமமான உடப்பு, எல்லாத் தாக்கங்களுக்கும் ஈடுகொடுத்து இன்றும் தனித் தமிழ் கிராமமாக விளங்கி வருகிறது. இது பலரும் அறியாத உண்மை.

இங்கே 90 சதவீதமானோர் தமிழ் இந்து மக்கள். ஏனையோர் தமிழ் கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்கள். சிலாபத்தில் இருந்து பிரிந்து செல்லும் குண்டும் குழியுமான பாதையூடாக ஆடியசைந்து சென்றால் இக்கிராமத்தை சென்றடையலாம்.

இப்போது உடப்புக்கு பயணிக்கும் போதும் பல கிலோ மீட்டர் தொலைவில் இருந்தே உடப்பூர் கிராமத்தை அடையாளம் காணலாம், கம்பீரமாக எழுந்து நிற்கும் 108 அடி உயர ராஜகோபுரத் தரிசனத்தால்! கோபுர தரிசனமே பெரும்பேறு என்றும் அதுவே ஒரு வழிபாடு என்றும் சொல்வார்கள்.

எனவே இக்கிராமத்தைச் சென்றடைவதற்கு முன்னரேயே ஒரு வழிபாட்டையும் நடத்திவிடும் பாக்கியம் இங்கே தான் உங்களுக்குக் கிடைக்கிறது.

இது ஒரு தமிழ்க் கிராமம் என்பதற்கு அப்பால் இன்னும் சில விசேஷங்களும் இங்கே காணப்படுகின்றன. உடப்பூரின் மொத்த சனத்தொகை 18 ஆயிரம். சுமார் நாலாயிரம் குடும்பங்கள். இக்கிராம மக்கள் இந்து மதத்தில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவர்கள். இலங்கையிலேயே திரெளபதை அம்மனுக்கு ஆலயம் இங்கேயே அமைந்துள்ளது.

இந்த ஆலய பரிபாலன சபையே ஊர் பொது விவகாரங்களை நிர்ணயிக்கிறது. முடிவுகளை எடுத்து அமுல் செய்கிறது. பரிபாலன சபையின் கட்டுப்பாடுகளை மக்கள் மீறுவதில்லை. இக் கட்டுப்பாடுகள் பல ஆக்கபூர்வமான காரியங்களை இங்கே நடத்திக் காட்டியிருக்கின்றன. சமீபத்திய உதாரணம் : ஐந்து ஆண்டு காலத்தில் எழுந்திருக்கும் 108 அடி உயரமான ராஜகோபுரம்.

திரெளபதையம்மன் கோவிலும் அதன் பிரசித்திபெற்ற தீ மிதித்தலும் இக் கிராமத்தின் முகவரிகள். உடப்பூர் கிராமத்தின் மையக் கருவாகவும் இயக்கு சக்தியாகவும் இந்த ஆலயமே விளங்குகிறது. எனவே அவ்வப்போது இந்த ஆலயத்தில் திருப் பணிகள் இடம்பெற்று வருவது வழமை. இத் திருப்பணிகளுக்கெல்லாம் சிகரம் வைத்த மாதிரி ராஜ கோபுரம் எழுந் துள்ளது.
 கோவிலை மையப்படுத்தி வாழும் வளரும் ஒரு தமிழ்க் கிராமம் F-7-3

உட்புறந்தோற்றம்

சென்ற 24ம் (January 24) திகதி இங்கே மஹா கும்பாபி ஷேகம் நடைபெற்றது. இலங்கையின் ராஜ கோபுரங்களில் மாத்தளை முத்து மாரியம்மன் ஆலய கோபுரமே உயரமானது. உயரம் 108 அடி. இப்போது உடப்பூர் ஸ்ரீ பார்த்தசாரதி ருக்மணி சத்யபாமா சமேத ஸ்ரீ திரெளபதி தேவி அம்மன் ஆலய கோபுரமும் 108 அடி உயரத்தில் எழுந்து நிற்கிறது.

இதன் பிர தான வாயில் கதவுகள் 11 ண அடி நீளமும் 19 ண அடி உயர மும் கொண்டவை. தேக்கு மரத்திலான, அதி உயரமான, பிரமாண்டமான கதவுகள், ஆலயத்தின் உள்ளே சென் றால் சுவர், கூரையெங்கும் வண்ணச் சிலைகள், கண்கவர் வேலைப்பாடுகள், சுவரோவியங்கள் என உங்களை புதிய உலகத்துக்கு மெய் சிலிர்க்கச் சிலிர்க்க அழைத்துச் செல்கின்றன.

புதிய புத்தகத்தைத் திறந்ததும் ஒரு வாசனையும் சிலிர்ப்பும் ஏற்படுமே, அந்த மாதிரி ஒரு பக்திச் சிலிர்ப்பு உடலைப் புல்லரிக்கச் செய்கிறது.

ஒரு பாரம்பரிய மீன்பிடிக் கிராமத்தால் எண்பது லட்ச ரூபா செலவில் ஒரு ஆஸ்பத்திரியைக் கட்டி அரசுக்கு அளிக்க முடிகிறது; எட்டு கோடி ரூபா செலவில் ஐந் தாண்டுகளில் இராஜகோபுர திருப்பணியை பூர்த்தி செய்து கும்பாபிஷேகம் செய்ய முடிகிறது என்றால், முன்னரேயே சொன்ன மாதிரி இந்த மக்கள் விசேஷ தன்மைகளைக் கெண்டவர்களாகத்தானே இருக்க வேண்டும்!

கும்பாபிகே குருமார்களாக ஆலய பிரதம குருவானவர் வேத வித்வமணி ஈசான சிவாச்சாரியார் சிவஸ்ரீ பத்ம ஜெயராம் குருக்கள், நயினை நாக பூஷணியம்மன் கோவில் சிவஸ்ரீ முத்துக்குமார சுவாமி குருக்கள், மன் னார் அந்தணர் ஒன்றிய செஞ்சொற்செல்வர் பிரம்மஸ்ரீ நா. பிரபாகர சர்மா, கண்டி பிரம்மஸ்ரீ ப. ராகவசர்மா ஆகியோர் விளங்குகிறார்கள்.

கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து 48 தினங்களுக்கு மண்டலாபிஷேகம் நடைபெறும்.
 கோவிலை மையப்படுத்தி வாழும் வளரும் ஒரு தமிழ்க் கிராமம் F-7-4
வசந்த மண்டபம்

இந்த ஆலயத்தி னுள் நுழைந் ததும் உட்புற வேலைப்பாடுகள் மற்றும் சுவரோவியங்க ளில் நீங்கள் கிரங்கிப் போய்விடுவீர்கள். கிருஷ்ண திருக்கல்யாணம், பட்டாபிஷேகம், கண்ணனின் திருவிளையாடல்கள், கீ தோபதேசம், பீஷ்மரின் முட்படுக்கை என பாகவத மற்றும் மகாபாரத காட்சிகள் ஓவியங்களாக நுவரெங்கும் விரிகின்றன.

இவற்றை வரைந்தவர் இந்தியாவின் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்ற கேள்வி உங்கள் மத்தியில் எழலாம். ஆனால் அவர் உடப்பூரைச் சேர்ந்தவர்.

இக்கிராமத்தைச் சேர்ந்த ஒருவருக்கு ஓவியத்தில் சிரமமான சுவரோவியத்தில் அதுவும் தெய்வ உருவங்களை வரையும் கலையில் இத்தனை தேர்ச்சியா என்ற வியப்பு உங்களுக்கு ஏற்படவே செய்யும், அவரது அற்புதமான கை வண்ணத்தை ஆலயச் சுவர்களில் பார்க்கும்போது!

உடப்பூர் என்றால் திரெளபதை ஆலயம்தான். ஆனால் இந்த ஆலயத்தின் மூலவர் ஸ்ரீபார்த்தசாரதி ருக்மணி சத்தியபாமா. அர்த்த மண்டபத்தின் இடது பக்கத்தில் திரெளபதி அம்மனும் மகா மண்டபத்தின் வலதுபுறம் விநாயகரும் எழுந்தருளி இருக்கிறார்கள். இதற்குக் காரணம் உள்ளது.

உடப்பூர் மக்களின் ஆதி சந்ததியினர் இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த அக்காள்மடம், தங்கச்சி மடம் பகுதியைச் சேர்ந்தவர்கள். 17ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் 1630ம் ஆண்டுகளில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடிகளையடுத்து இனிமேல் இங்கே எமது கலை, கலாசாரத்தைப் பேணி வாழ முடியாது என்றெண்ணிய 18 குடும்பங்கள் ஏழு தோணிகளில் ஏறி மன்னார் வந்தடைந்தனர் என்றும் பின்னர் இவர்கள் உடப்பூரில் குடியமர்ந்தனர் என்றும் ஒரு வரலாறு இங்கு பேசப்படுகிறது.

அக்காலத்தில் இது ஒரு விவசாய பூமியாக இருந்ததாம். பின்னர் தண்ணீர்ப் பிரச்சினை ஏற்படவே இம்மக்கள் கடற்றொழிலில் இறங்கினர் என்று கூறும் இவ்வூர் பெரியோர், தற்போது மரக்கறி செய்கை சொற்ப அளவில் நடைபெறுவதாகவும் நெற்செய்கை மறந்துபோன ஒரு விசயம் என்றும் தகவல் தெரிவிக்கின்றனர்.

அன்று தோணிகளில் வந்தவர்கள் சந்தனக் கட்டையிலான ஒரு திரெளபதை சிலையைத் தம்முடன்கொண்டு வந்துள்ளனர். திரெளபதை வணக்கம் இலங்கையில் இப்படித்தான் ஆரம்பித்தது.

எனினும் அடிப்படையில் இவ்வூர் மக்கள் பெண் தெய்வ உபாசகர்கள். வீரபத்திர காளியம்மன், ஸ்ரீ மாரியம்மன் ஆலயம் என உடப்பூர் கோவில்கள் அனைத்துமே பெண் தெய்வங்களுக்குரிய கோவில்களே.

இது ஒரு உதாரண தமிழ்க் கிராமமாக இருக்கின்ற போதிலும் இவர்கள் சில பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளனர். சிலாபத்தில் இருந்து இந்த ஊர் நோக்கித் திரும்பும் பாதை குண்டும் குழியுமாகக் காட்சியளிக்கிறது.

இதைத் திருத்தி ஒழுங்கான பாதையாக்க எடுக்கப்பட்ட முயற்சிகள் வியர்த்தமாயின என்கிறார்கள் ஊர் மக்கள். கட்டிக் கொடுத்த ஆஸ்பத்திரி இன்னும் கிராம ஆஸ்பத்திரியாகவே நடத்தப்பட்டு வருகிறது.

இதனைத் தரமுயர்த்த எடுக்கப்பட்ட முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை. ஆஸ்பத்திரி ஒன்றை அமைத்துத் தந்தும் அதனால் பெறக்கூடிய நன்மைகள் எமக்குக் கிட்டாமல் உள்ளதே என்ற அங்கலாய்ப்பு இம்மக்களிடம் உள்ளது. இக் கிராமத்தில் இரண்டு பாடசாலைகள் உள்ளன.

இரண்டிலும் கடுமையான ஆசிரியர் பற்றாக்குறை. கிராமத்தின் கல்வித் தரத்தை மேம்படுத்த எடுக்கப்பட்ட முயற்சிகளும் கைகூடியதாகத் தெரியவில்லை. கல்விமான்கள் இக்கிராமத்தில் இன்னும் தலையெடுக்கவில்லை.

இக்குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்பட வேண்டும்.
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum