Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
30 வகை சப்பாத்தி – சுவையரசி சாந்தி விஜயகிருஷ்ணன்
+2
மீனு
azeezm
6 posters
Page 1 of 1
30 வகை சப்பாத்தி – சுவையரசி சாந்தி விஜயகிருஷ்ணன்
”இன்னிக்கு, ஸ்கூலுக்கு சப்பாத்திதான் வெச்சிவிட்டிருக்கேன். மிச்சம் வைக்காம சாப்பிடணும். புரிஞ்சுதா?”
”போம்மா, எப்பப் பார்த்தாலும் அதே சப்பாத்திதானா. நான் சாப்பிட மாட்டேன்..?”
|
வகையான சப்பாத்திகளை ‘சுவையரசி’ சாந்தி விஜயகிருஷ்ணன் பரிமாறும்போது, இனி
என்ன கவலை!
”பச்சைக் குழந்தையில ஆரம்பிச்சு, பாட்டிங்க வரைக்கும் சப்பாத்தி சாப்பிடலாம்.
அதுவும் ஒபிஸிட்டி, சர்க்கரை நோய், கொலஸ்ட்ரால், ஹார்ட் பிராப்ளம்னு
பாதிக்கப்பட்டவங்களுக்கு வரப்பிரசாதம் சப்பாத்திதான்” என்று சொல்லும்
சாந்தி விஜயகிருஷ்ணன்,
மாவை தண்ணி விட்டுப் பிசைஞ்சதும், மெல்லிசான துணியால நாலு மணி நேரத்துக்கு
மூடி வெச்சுட்டா, சப்பாத்தி மிருதுவா இருக்கும். அவசரமா செய்யணும்னா…
மிதமான சுடுநீர் இல்லனா, வெதுவெதுப்பான பாலை விட்டு தளர்வா பிசைஞ்சுகிட்டா
போதும்” என்று டிப்ஸும் கொடுக்கிறார். பிறகென்ன… ஜமாயுங்க
ஸ்வீட் சப்பாத்தி
தேவையானவை: கோதுமை மாவு – ஒரு கப், சர்க்கரை, நெய் – தலா ஒரு டேபிள்ஸ்பூன், பால் – கால் கப், உப்பு – ஒரு சிட்டிகை.
செய்முறை:
கோதுமை மாவில் உப்பு, பால், தண்ணீர் சேர்த்து, மாவை கெட்டியாகக் கலந்து
வைத்துக் கொள்ளவும். சர்க்கரையை மிக்ஸியில் போட்டு பொடித்துக் கொள்ளவும்.
கோதுமை மாவு கலவையில் சிறிது எடுத்து சிறிய வட்டமாக தேய்க்கவும். அதன்
மேல்புறம் நெய் தடவி, பொடித்த சர்க்கரையைத் தூவி நான்காக மடித்து, மாவு
தொட்டு மீண்டும் தேய்த்து, காயும் தோசைக்கல்லில் போட்டு, நெய் விட்டு
சுட்டெடுக்கவும்
மிக்ஸட் வெஜ் சப்பாத்தி
தேவையானவை:
கோதுமை மாவு – இரண்டு கப், துருவிய கேரட், துருவிய கோஸ் – தலா கால்
கப், துருவிய குடமிளகாய், துருவிய வெங்காயம் – தலா இரண்டு டீஸ்பூன்,
துருவிய இஞ்சி – ஒரு டீஸ்பூன், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் – ஒரு
டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
கோதுமை மாவில் உப்பு, துருவிய காய்கறிகள், இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து,
தண்ணீர் தெளித்து, கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும். இந்த மாவில் சிறிது
எடுத்து, மெல்லிய சப்பாத்தியாக இட்டு, காயும் தோசைக்கல்லில் போட்டு,
எண்ணெய் தடவி சுட்டெடுக்கவும்.
வாழைக்காய் கார சப்பாத்தி
தேவையானவை:
வாழைக்காய் – 1, கோதுமை மாவு – ஒரு கப், எலுமிச்சைச் சாறு – இரண்டு
டீஸ்பூன், தனியா – இரண்டு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 4, பொடியாக நறுக்கிய
கறிவேப்பிலை – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
வாழைக்காயைத் தோலுடன் வேக வைத்து, பிறகு தோலை உரித்து மசித்துக்
கொள்ளவும். தனியா, காய்ந்த மிளகாயை சிறிது எண்ணெயில் வறுத்து, பொடித்துக்
கொள்ளவும். கோதுமை மாவுடன் உப்பு, மசித்த வாழைக்காய், பொடித்த தனியா –
மிளகாய், நறுக்கிய கறிவேப்பிலை, எலுமிச்சைச் சாறு சேர்த்து, தண்ணீர்
தெளித்து கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும். இதிலிருந்து சிறிது மாவை எடுத்து
மெல்லிய சப்பாத்தியாக இட்டு, காயும் தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய் விட்டு
சுட்டெடுக்கவும்
மிளகு சப்பாத்தி
தேவையானவை: கோதுமை மாவு – ஒரு கப், மிளகு – ஒரு டீஸ்பூன், நெய் – 2 டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
முக்கால் டீஸ்பூன் நெய்யில் மிளகை வறுத்துப் பொடித்துக் கொள்ளவும். அதை
கோதுமை மாவில் சேர்த்து… உப்பு, மீதமுள்ள நெய்யையும் சேர்த்து, தண்ணீர்
தெளித்து கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும். மாவை சப்பாத்திகளாக இட்டு,
காயும் தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்.
மசாலா சப்பாத்தி
தேவையானவை:
கோதுமை மாவு – ஒரு கப், பட்டை – ஒரு துண்டு, கிராம்பு, ஏலக்காய், விரலி
மஞ்சள் – தலா 1, காய்ந்த மிளகாய் – 2, துருவிய வெங்காயம் – முக்கால் கப்,
எண்ணெய், உப்பு – தேவையான அளவு,
கடாயில் முக்கால் டீஸ்பூன் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் பட்டை, கிராம்பு,
ஏலக்காய், காய்ந்த மிளகாய் போட்டு வறுத்துக் கொள்ளவும். இவற்றுடன் விரலி
மஞ்சளை சேர்த்துப் பொடித்து, கோதுமை மாவுடன் கலக்கவும். உப்பு, துருவிய
வெங்காயம் சேர்க்கவும். இதை தண்ணீர் தெளித்து கெட்டியாகப் பிசைந்து,
சப்பாத்திகளாக இட்டு, காயும் தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய் விட்டு
சுட்டெடுக்கவும்,
ட்ரை ஃப்ரூட் சப்பாத்தி
தேவையானவை:
கோதுமை மாவு – ஒரு கப், முந்திரி, பாதாம் பிஸ்தா சேர்ந்த கலவை – முக்கால்
கப், பேரீச்சை துண்டுகள் – 5, உலர்ந்த திராட்சை – 10, நெய் – தேவையான அளவு.
பாதாம், முந்திரி, பிஸ்தா கலவையை நைஸாக பொடித்துக் கொள்ளவும், பேரீச்சை,
திராட்சையை சுடுநீரில் 10 நிமிடம் ஊற வைத்து, மிக்ஸியில் நைஸாக அரைக்கவும்.
கோதுமை மாவில், பொடித்த பொடி, அரைத்த விழுது சேர்த்து, சிறிது நெய்
விட்டு, தண்ணீர் தெளித்து கெட்டியாகப் பிசையவும். தேவைப்பட்டால் சிறிது
பால் சேர்த்துக் கலக்கலாம். பிசைந்த மாவை சப்பாத்திகளாக இட்டு, காயும்
தோசைக்கல்லில் போட்டு, நெய் தடவி சுட்டெடுக்கவும்.
புதினா சப்பாத்தி
தேவையானவை:
கோதுமை மாவு – ஒரு கப், பொடியாக நறுக்கிய புதினா – கால் கப், துருவிய
இஞ்சி – ஒரு டீஸ்பூன், நெய் – ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான
அளவு.
கோதுமை மாவுடன் உப்பு, இஞ்சி, புதினா, நெய் சேர்த்து, தண்ணீர் தெளித்து
கெட்டியாகப் பிசைந்து, சப்பாத்திகளாக இடவும். காயும் தோசைக்கல்லில் ஒவ்வொரு
சப்பாத்தியாக போட்டு, எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்.
கடலை மாவு சப்பாத்தி
தேவையானவை: கடலை மாவு – அரை கப், கோதுமை மாவு – ஒரு கப், ஓமம், கரம் மசாலாத்தூள் –
தலா அரை டீஸ்பூன், நெய், ஆம்சூர் பொடி – தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு –
தேவையான அளவு.
கடலை மாவுடன் கோதுமை மாவு, ஓமம், கரம் மசாலாத்தூள், நெய், ஆம்சூர் பொடி,
உப்பு சேர்த்து, தண்ணீர் தெளித்து கெட்டியாகப் பிசையவும். இதை மெல்லிய
சப்பாத்திகளாக இட்டு, காயும் தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய் விட்டு
சுட்டெடுக்கவும்.
க்ரீன் சப்பாத்தி
தேவையானவை: கோதுமை மாவு, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி – தலா ஒரு கப், பச்சை மிளகாய் – 2, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
கொத்தமல்லியுடன் பச்சை மிளகாய், உப்பு சேர்த்து தண்ணீர் தெளித்து
மிக்ஸியில் அரைக்கவும். இந்த விழுதில் கோதுமை மாவைப் போட்டு, தண்ணீர்
தெளித்து பிசைந்து கொள்ளவும். மாவை சப்பாத்திகளாக இட்டு, காயும்
தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்
http://azeezahmed.wordpress.com/
azeezm- புதுமுகம்
- பதிவுகள்:- : 62
மதிப்பீடுகள் : 0
Re: 30 வகை சப்பாத்தி – சுவையரசி சாந்தி விஜயகிருஷ்ணன்
வெந்தயக்கீரை சப்பாத்தி
தேவையானவை:
பொடியாக நறுக்கிய வெந்தயக்கீரை, கோதுமை மாவு – தலா ஒரு கப்,
மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் – தலா கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான
அளவு.
செய்முறை:
கடாயில் சிறிது எண்ணெய் விட்டு… வெந்தயக்கீரை, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள்,
உப்பு சேர்த்து 2 நிமிடம் வதக்கி ஆற விடவும். இதில் கோதுமை மாவைப் போட்டு
தண்ணீர் தெளித்து, கெட்டியாகப் பிசைந்து, சப்பாத்திகளாக இட்டு, காயும்
தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்.
முள்ளங்கி சப்பாத்தி
தேவையானவை:
துருவிய முள்ளங்கி – அரை கப், கோதுமை மாவு – ஒரு கப், சோள மாவு – கால்
கப், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, வெங்காயம், பச்சை மிளகாய் – சிறிதளவு,
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
துருவிய முள்ளங்கியுடன் பச்சை மிளகாய், கொத்தமல்லி, வெங்காயம், உப்பு
சேர்த்து, கோதுமை மாவு, சோள மாவைப் போட்டு (தேவைப்பட்டால் தண்ணீர்
தெளிக்கவும்), கெட்டியாகப் பிசையவும்.
மாவை மெல்லிய சப்பாத்திகளாக இட்டு, காயும் தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்
பயறு சப்பாத்தி
தேவையானவை:
ஊற வைத்த பயறு – கால் கப், கோதுமை மாவு – ஒரு கப், காய்ந்த மிளகாய் –
2, சீரகத்தூள் – கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
ஊற வைத்த பயறுடன் காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து அரைக்கவும். இதனுடன்
கோதுமை மாவு, சீரகத்தூள் சேர்த்து, தண்ணீர் தெளித்து கெட்டியாகப் பிசைந்து,
மெல்லிய சப்பாத்திகளாக இட்டு, காயும் தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய்
விட்டு சுட்டெடுக்கவும்.
முந்திரி கார சப்பாத்தி
தேவையானவை: முந்திரி – 15, கசகசா – 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 2, கோதுமை மாவு – ஒரு கப், நெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
முந்திரியுடன் கசகசா, காய்ந்த மிளகாய் சேர்த்துப் பொடிக்கவும். கோதுமை
மாவுடன், பொடித்த முந்திரி கலவை, உப்பு சேர்த்து, தண்ணீர் தெளித்து
கெட்டியாகப் பிசையவும். இதை சப்பாத்திகளாக இட்டு, காயும் தோசைக்கல்லில்
போட்டு, நெய் விட்டு சுட்டெடுக்கவும்.
எள் சப்பாத்தி
தேவையானவை:
வெள்ளை எள், மைதா மாவு – தலா கால் கப், கோதுமை மாவு – ஒரு கப், தனியா – 2
டீஸ்பூன், மிளகு, சீரகம், நெய் – தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு –
தேவையான அளவு.
செய்முறை:
எள்ளை வெறும் கடாயில் வறுக்கவும். தனியா, மிளகு, சீரகம் மூன்றையும் கால்
டீஸ்பூன் எண்ணெய் விட்டு வறுத்து, இதனுடன் வறுத்த எள்ளை சேர்த்துப்
பொடிக்கவும். கோதுமை மாவுடன் மைதா மாவு, வறுத்து பொடித்த பொடி, உப்பு, நெய்
சேர்த்துக் கலந்து, தண்ணீர் தெளித்து கெட்டியாகப் பிசையவும். இந்த மாவை
சப்பாத்திகளாக இட்டு, காயும் தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய் விட்டு
சுட்டெடுக்கவும்.
தேங்காய் சப்பாத்தி
தேவையானவை:
கோதுமை மாவு – ஒரு கப், தேங்காய் துருவல் – கால் கப், பொடியாக நறுக்கிய
பச்சை மிளகாய், கறிவேப்பிலை – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
கோதுமை மாவுடன் தேங்காய் துருவல், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, உப்பு
சேர்த்து, தண்ணீர் தெளித்து பிசைந்து, தடிமனான சப்பாத்திகளாக இடவும்.
தோசைக்கல் காய்ந்ததும் சப்பாத்திகளைப் போட்டு, எண்ணெய் விட்டு
சுட்டெடுக்கவும்.
வேர்க்கடலை சப்பாத்தி
தேவையானவை:
வேர்க்கடலை – கால் கப், கோதுமை மாவு – ஒரு கப், இஞ்சி – ஒரு சிறிய
துண்டு, சின்ன வெங்காயம், காய்ந்த மிளகாய் – தலா 4, சிறிய மாங்காய் துண்டு –
1, உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.
செய்முறை:
வேர்க்கடலையுடன் வெங்காயம், காய்ந்த மிளகாய், மாங்காய் துண்டு, இஞ்சி,
உப்பு சேர்த்து கெட்டியாக அரைக்கவும். இந்த விழுதை கோதுமை மாவுடன் கலந்து,
தண்ணீர் தெளித்து பிசைந்து, சப்பாத்திகளாக இட்டு, காயும் தோசைக்கல்லில்
போட்டு, எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்.
உருளைக்கிழங்கு சப்பாத்தி
தேவையானவை:
பெரிய உருளைக்கிழங்கு – 1, கோதுமை மாவு – ஒரு கப், மிளகாய்த்தூள் - கால்
டீஸ்பூன், பொடியாக நறுக்கிய வெங்காயம் – சிறிதளவு, துருவிய பனீர் – கால்
கப், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
உருளைக்கிழங்கை வேக வைத்து, தோலுரித்து, துருவிக் கொள்ளவும். இதனுடன்
கோதுமை மாவு, மிளகாய்த்தூள், வெங்காயம், பனீர், உப்பு சேர்த்து, தண்ணீர்
தெளித்து கெட்டியாகப் பிசையவும். மாவை சப்பாத்திகளாக இட்டு, காயும்
தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்.
ரெட் சப்பாத்தி
தேவையானவை: பழுத்த தக்காளி – 2, கோதுமை மாவு – ஒரு கப், காய்ந்த மிளகாய் – 3, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
காய்ந்த மிளகாயை கொதி நீரில் போட்டு 10 நிமிடம் மூடி வைக்கவும். பிறகு
மிளகாயுடன் தக்காளி, உப்பு சேர்த்து அரைத்து, கோதுமை மாவை சேர்த்து,
தண்ணீர் தெளித்து கெட்டியாகப் பிசைந்து, சப்பாத்திகளாக இடவும். காயும்
தோசைக்கல்லில் சப்பாத்தியைப் போட்டு, எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்
பேபிகார்ன் சப்பாத்தி
தேவையானவை:
துருவிய பேபிகார்ன் – கால் கப், கோதுமை மாவு – ஒரு கப், பொடியாக நறுக்கிய
குடமிளகாய், பச்சை மிளகாய் – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
துருவிய பேபிகார்னுடன், குடமிளகாய், பச்சை மிளகாய், உப்பு, கோதுமை மாவு
சேர்த்து கெட்டியாகக் கலந்து, தண்ணீர் தெளித்து பிசைந்து, சப்பாத்திகளாக
இடவும். காயும் தோசைக்கல்லில் சப்பாத்திகளைப் போட்டு, எண்ணெய் விட்டு
சுட்டெடுக்கவும்.
தால் சப்பாத்தி
தேவையானவை:
பயத்தம்பருப்பு, கடலைப்பருப்பு – தலா ஒரு டேபிள்ஸ்பூன், கோதுமை மாவு – ஒரு
கப், மிளகாய்த்தூள், தேங்காய் துருவல், தனியாத்தூள் – தலா அரை டீஸ்பூன்,
பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
பயத்தம்பருப்பு, கடலைப்பருப்பு இரண்டையும் ஒன்றாக சேர்த்து, மூழ்கும்
அளவுக்கு தண்ணீர் விட்டு குக்கரில் குழைய வேக வைக்கவும். ஆறியதும் பருப்பை
எடுத்து மசித்து… பெருங்காயத்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள், தேங்காய்
துருவல், கோதுமை மாவு, உப்பு சேர்த்து, தண்ணீர் தெளித்து கெட்டியாகப்
பிசைந்து, சப்பாத்திகளாக இடவும். காயும் தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய்
விட்டு சுட்டெடுக்கவும்.
மக்காச்சோள சப்பாத்தி
தேவையானவை:
மக்காச்சோள மாவு, கோதுமை மாவு – தலா அரை கப், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி
– சிறிதளவு, சீரகத்தூள் – கால் டீஸ்பூன், சாட் மாசாலாத்தூள் – அரை
டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு – ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான
அளவு.
செய்முறை:
மக்காச்சோள மாவுடன் கோதுமை மாவு, உப்பு, கொத்தமல்லி, சீரகத்தூள், சாட்
மசாலாத்தூள், எலுமிச்சைச் சாறு சேர்த்து, தண்ணீர் தெளித்து கெட்டியாகப்
பிசையவும். இந்த மாவை மெல்லிய சப்பாத்திகளாக இட்டு, காயும் தோசைக்கல்லில்
போட்டு, எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்.
அரிசி சப்பாத்தி
தேவையானவை:
அரிசி மாவு – ஒரு கப், கோதுமை மாவு – கால் கப், பொடியாக நறுக்கிய
வெங்காயம், கொத்தமல்லி, பச்சை மிளகாய் – சிறிதளவு, தேங்காய் துருவல் – ஒரு
டேபிள்ஸ்பூன், தேங்காய் எண்ணெய் – 2 டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான
அளவு.
செய்முறை:
அரிசி மாவுடன், கோதுமை மாவு, வெங்காயம், கொத்தமல்லி, பச்சை மிளகாய்,
தேங்காய் துருவல், உப்பு சேர்த்து நன்றாகக் கலந்து, தேங்காய் எண்ணெய்
விட்டு, தண்ணீர் தெளித்து கெட்டியாகப் பிசையவும். ஒரு பிளாஸ்டிக் ஷீட்டில்
சிறிது பிசைந்த மாவைப் போட்டு, குழவியால் தேய்த்து, மெல்லிய சப்பாத்திகளாக
தட்டி, காயும் தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்.
பிரெட் சப்பாத்தி
தேவையானவை:
பிரெட் துண்டுகள் – 2, கோதுமை மாவு – ஒரு கப், துருவிய பனீர் – கால் கப்,
பால் – சிறிதளவு, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், கொத்தமல்லி,
வெங்காயத்தாள் – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
பிரெட் துண்டுகளை தண்ணீரில் நனைத்து பிழிந்து… துருவிய பனீர்,
வெங்காயத்தாள், பச்சை மிளகாய், கொத்தமல்லி, உப்பு, கோதுமை மாவு சேர்த்துக்
கலந்து, பால் விட்டு கெட்டியாகப் பிசையவும். இந்த மாவை சப்பாத்திகளாக
இட்டு, காயும் தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்.
ஷவ்வரிசி சப்பாத்தி
தேவையானவை:
மாவு ஜவ்வரிசி – கால் கப், கோதுமை மாவு – ஒரு கப், கரகரப்பாக பொடித்த
வேர்க்கடலை – 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் துகள்கள் – ஒரு டீஸ்பூன், நெய் –
ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான
அளவு.
செய்முறை:
ஜவ்வரிசியை 8 மணி நேரம் ஊற வைத்து, கோதுமை மாவு, வேர்க்கடலைப் பொடி,
பெருங்காயத்தூள், காய்ந்த மிளகாய் துகள்கள், உப்பு, நெய் சேர்த்து, தண்ணீர்
தெளித்து, கெட்டியாகப் பிசையவும். இந்த மாவை சப்பாத்திகளாக இட்டு, காயும்
தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்.
ரவை சப்பாத்தி
தேவையானவை:
ரவை – அரை கப், கோதுமை மாவு – அரை கப், துருவிய இஞ்சி, நறுக்கிய பச்சை
மிளகாய், புதினா – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
ரவையில் கொதிக்கும் தண்ணீர் விட்டு… இஞ்சி, பச்சை மிளகாய், புதினா, கோதுமை
மாவு, உப்பு சேர்த்து கெட்டியாகக் கலந்து, தண்ணீர் தெளித்து பிசையவும்.
இந்த மாவை சப்பாத்திகளாக இட்டு, காயும் தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய்
விட்டு சுட்டெடுக்கவும்.
சீரக சப்பாத்தி
தேவையானவை:
கோதுமை மாவு, மைதா மாவு – தலா அரை கப், சீரகம் – 2 டீஸ்பூன், தயிர் – கால்
கப், எலுமிச்சைச் சாறு – ஒரு டீஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.
செய்முறை:
மைதா மாவுடன், கோதுமை மாவு, சீரகம், உப்பு, தயிர் சேர்த்து… எலுமிச்சைச்
சாறை விட்டு, தண்ணீர் தெளித்து கெட்டியாகப் பிசையவும். இந்த மாவை மெல்லிய
சப்பாத்திகளாக இட்டு, காயும் தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய் விட்டு
சுட்டெடுக்கவும். காரம் தேவைப்பட்டால் துருவிய இரண்டு பச்சை மிளகாய்களை
சேர்த்துக் கொள்ளலாம்.
கம்பு சப்பாத்தி
தேவையானவை:
கம்பு மாவு, கோதுமை மாவு – தலா அரை கப், துருவிய சௌசௌ – ஒரு டேபிள்ஸ்பூன்,
துருவிய தேங்காய், ஓமம் – தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான
அளவு.
செய்முறை:
கம்பு மாவு, கோதுமை மாவு, துருவிய சௌசௌ, தேங்காய், ஓமம், உப்பு சேர்த்து
தண்ணீர் தெளித்து கெட்டியாகப் பிசையவும். இந்த மாவை சப்பாத்திகளாக இட்டு,
காயும் தோசைக்கல்லில் போட்டு எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்.
சேமியா சப்பாத்தி
தேவையானவை:
சேமியா – கால் கப், கோதுமை மாவு – ஒரு கப், பொடியாக நறுக்கிய இஞ்சி,
கொத்தமல்லி, கறிவேப்பிலை, பச்சை மிளகாய் – சிறிதளவு, எண்ணெய், உப்பு –
தேவையான அளவு.
செய்முறை:
சேமியாவில் சிறிது தண்ணீர் விட்டு வேக வைத்துக் கொள்ளவும். இதனுடன் கோதுமை
மாவு, இஞ்சி, கொத்தமல்லி, கறிவேப்பிலை, பச்சை மிளகாய், உப்பு சேர்த்து
தண்ணீர் தெளித்து கெட்டியாகப் பிசையவும். இந்த மாவை சப்பாத்திகளாக இட்டு,
காயும் தோசைக்கல்லில் போட்டு எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்
சாக்கோ சப்பாத்தி
தேவையானவை:
பால் பவுடர் – கால் கப், சாக்கோ பவுடர், வெண்ணெய் – தலா ஒரு டீஸ்பூன்,
கோதுமை மாவு – ஒரு கப், பால் – ஒரு டேபிள்ஸ்பூன், நெய் – தேவையான அளவு,
முந்திரி, பாதாம், பிஸ்தா துண்டுகள் – சிறிதளவு.
செய்முறை:
கோதுமை மாவுடன் சாக்கோ பவுடர், பால் பவுடர், வெண்ணெய், பால் சேர்த்து
கெட்டியாகக் கலந்து… முந்திரி, பாதாம், பிஸ்தா துண்டுகளை சேர்த்து, தண்ணீர்
தெளித்து பிசையவும். இந்த மாவை சப்பாத்திகளாக இட்டு, தோசைக்கல்லில்
போட்டு, நெய் விட்டு சுட்டெடுக்கவும்.
ஃப்ரூட் சப்பாத்தி
தேவையானவை: ஆப்பிள் – 1, கோதுமை மாவு – ஒரு கப், மிளகுத்தூள் – கால் டீஸ்பூன், நெய் – ஒரு டீஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.
செய்முறை:
ஆப்பிளை தோல் சீவி துருவி… உப்பு, நெய், மிளகுத்தூள், கோதுமை மாவு
சேர்த்து, தண்ணீர் தெளித்து கெட்டியாகப் பிசையவும். இந்த மாவை மெல்லிய
சப்பாத்திகளாக இட்டு, காயும் தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய் விட்டு
சுட்டெடுக்கவும்.
தொகுப்பு: ரேவதி, படங்கள்: து.மாரியப்பன்
நன்றி:- சுவையரசி சாந்தி விஜயகிருஷ்ணன்
நன்றி:-அ.வி
http://azeezahmed.wordpress.com/
azeezm- புதுமுகம்
- பதிவுகள்:- : 62
மதிப்பீடுகள் : 0
Re: 30 வகை சப்பாத்தி – சுவையரசி சாந்தி விஜயகிருஷ்ணன்
படிக்கும் போதே நாவில் எச்சில் ஊறுகிறதே
இப்போ அம்மா இல்லையே
மிகவும் சிறந்த பகிர்வுக்கு நன்றி
இப்போ அம்மா இல்லையே
மிகவும் சிறந்த பகிர்வுக்கு நன்றி
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: 30 வகை சப்பாத்தி – சுவையரசி சாந்தி விஜயகிருஷ்ணன்
அதான் எல்லாருக்கும் தெரியுமே புதுசா சொல்லுங்க சிகரம் :%சிகரம் wrote:நல்ல பதிவு மிக்க நன்றி
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: 30 வகை சப்பாத்தி – சுவையரசி சாந்தி விஜயகிருஷ்ணன்
அறுசுவை 30 வகை சப்பாத்திகளுக்கு செய்முறையும் விளக்கமும் தந்த உறவுக்கு நன்றிகள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 30 வகை சப்பாத்தி – சுவையரசி சாந்தி விஜயகிருஷ்ணன்
படிக்கும் போதே சுவையாக உள்ளது.
செய்து பார்ப்போம்.
செய்து பார்ப்போம்.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: 30 வகை சப்பாத்தி – சுவையரசி சாந்தி விஜயகிருஷ்ணன்
அறுசுவை 30 வகை சப்பாத்திகளுக்கு செய்முறையும் விளக்கமும் தந்த உறவுக்கு நன்றிகள் :];:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» 30 வகை சுண்டல் புட்டு சுவையரசி சாந்தி விஜயகிருஷ்ணன்
» சாந்தி ஆசனம்
» சாந்தி பெறுங்கள்...........
» கொத்தமல்லி சப்பாத்தி
» கம்பு ஆலு சப்பாத்தி
» சாந்தி ஆசனம்
» சாந்தி பெறுங்கள்...........
» கொத்தமல்லி சப்பாத்தி
» கம்பு ஆலு சப்பாத்தி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum