Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
இஸ்லாமிய பெண்மணி
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
இஸ்லாமிய பெண்மணி
இன்றைக்கு முஸ்லிம் உம்மத்தில் ஆண்களுக்கு அனைத்து விதமான இஸ்லாமிய தகவல்கள் எளிதில் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. ஆனால் பெண்களைப் பொறுத்தமட்டில் அந்த வாய்ப்பு சற்றுக் குறைவு தான். எனினும் இன்றைய தகவல் தொடர்பு சாதனங்கள் அதிகரித்திருக்கின்ற இந்தநிலையில் பெண்கள் முயற்சி செய்தால், ஆண்கள் அளவுக்கு தகவல்களைப் பெற்றுக் கொள்ள முடியும்.
இன்றைக்குப் பெண்களிடத்தில் இஸ்லாத்தை முழுமையாகப் பின்பற்ற வேண்டும் என்ற ஆவல் அதிகரித்துள்ளது. அந்த ஆவலில் அவர்கள் இஸ்லாம் விதித்துள்ள அடிப்படைக் கடமைகளான தொழுகை, நோன்பு, ஜகாத் போன்வற்றை ஆர்வத்துடன் நிறைவேற்றுகின்ற அதேவேளை, உள்ளும் புறமும் எவ்வாறு தூய்மையாக வைத்துக் கொள்வது என்ற அடிப்படை விசயங்கள் பற்றி அறியாதவர்களாகவே உள்ளனர். இஸ்லாம் சடங்குகளை அடிப்படையாகக் கொண்ட மார்க்கமல்ல, மாறாக, ஒருவன் அல்லது ஒருத்தியினுடைய உள் விவகாரங்களையும் மற்றும் வெளிப்படையாகத் தெரியக் கூடிய செயல்பாடுகளையும் தூய்மையுடன் பேண வேண்டும் என்று தான் விரும்புகின்றது. அந்த அடிப்படையில், நோக்குவோமானால் இன்றைக்குப் பெண்களிடையே தனித்துவமாக நிறைந்துள்ள அவதூறு, புறம் பேசுதல் போன்றவற்றை நாம் உதாரணமாக எடுத்துக் கொண்டோமானால், அதனால் ஏற்படக் கூடிய விளைவுகள் குறித்து அறியாதவர்களாக தங்களது நாவுகளைப் பேண இயலாதவர்களாக ஆகி விடுகின்றார்கள்.
எனவே அவள் அல்லது அவன் தனது மார்க்கம் சொல்கின்ற, மனிதர்களிடையே ஏற்படுத்த விளைகின்ற ஒழுக்க மாண்புகளைப் பற்றியும், அதனூடாக ஏற்படுத்த விளைகின்ற சமூக மாற்றம் பற்றியும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய கட்டாயத் தேவை இந்த முஸ்லிம் உம்மத்திற்கு இருக்கின்றது.
அதைப் போலவே, பெற்றோர்கள், உடன் பிறந்தார்கள், உறவினர்கள், அருகில் வசிக்கக் கூடிய அண்டை வீட்டார்கள், உடன் பயிலக் கூடியவர்கள், வேலை பார்க்கக் கூடியவர்கள், வேலையாட்கள், இன்னும் அறிமுகமில்லாத புதியவர்கள், நண்பர்கள் போன்றவர்களிடம் எவ்வாறு பழக்க வழக்கங்களை அமைத்துக் கொள்வது என்ற அடிப்படை விசயங்களையும் இந்தத் தொடர் அலசிப் பார்க்கும்.
அவள் குழந்தையாக, வயது வந்தவளாக, மனைவியாக, தாயாக, மாமியாராக என்ற தொடர் மாற்றமாக அவள் வாழ்வில் ஏற்படுகின்ற, அவளது உறவுகளில் அவளுக்குரிய பங்கென்ன? சமூகத்திற்கு அவள் ஆற்ற வேண்டிய கடமைகள் என்ன என்பது குறித்தும் இத் தொடர் அலசிப் பார்க்கும்.
சமீபத்தில் நான் படித்ததொரு கட்டுரையில், மேற்கத்திய நாடுகளில் வாழக் கூடிய முஸ்லிம் பெண்கள் தங்களது பர்தா முறையில் எவ்வளவு கண்டிப்பாக இருக்கின்றார்கள் என்பது பற்றி அறிய முடிந்தது. அமெரிக்காவில் ஒரு கல்லூரியில் பயிலக் கூடிய ஒரு முஸ்லிம் பெண்ணுக்கு, அவள் அணியக் கூடிய பர்தாவின் காரணமாக, பிரச்னையானது அவளது விரிவுரையாளர் மூலமாக வருகின்றது. அவள் பர்தாவைக் கழற்றவில்லை. மாறாக, அவளது அந்த உணர்வுக்கு மதிப்பளிக்கக் கூடிய சக மாணவர்கள் அவளது உறுதியைக் கண்டு அவளுக்கு உதவுகின்றார்கள். அவளது உரிமையைப் பாதுகாக்க கல்லூரி நிர்வாகத்துடன் போராடுகின்றார்கள். இவளது இந்தப் போராட்டம் மெல்ல மெல்ல கல்லூரியின் அனைத்துப் பிரிவு மாணவர்களிடமும் பரவுகின்றது. அத்துடன் அவளை உறுதியாகச் செயல்பட வைத்த அவளது கொள்கையும் கூட அங்கு அறிமுகமாகின்றது. ஆம்! அவளை இந்தளவு உறுதியுடன் செயல்பட வைத்த அவள் ஏற்றுக் கொண்டிருக்கக் கூடிய இஸ்லாம், அந்த மாணவர்கள் மத்தியில் அறிமுகமாகின்றது. அவள் ஏன் கல்லூரி நிர்வாகத்துடன் ஒத்துழைத்துப் போகக் கூடாது என்ற கேள்விக்கு அவள் அளித்த பதில், மாணவர்களை இஸ்லாத்தின் மீது கவனம் செலுத்த வைக்கின்றது. இறுதியில் ஒருசில மாணவர்கள் கூட இஸ்லாத்தைத் தழுவிய நிகழ்ச்சி நம்மை மெய்சிலிர்க்க வைக்கின்றது.
அதே நேரத்தில், நம் சமூகத்தில் வாழக் கூடிய பர்தா அணிவதற்குத் தடையே இல்லாத சமூகத்தில் வாழக் கூடிய நாம், பர்தாவை எந்தளவு பேணிக் கொள்கின்றோம் என்பதை சற்றுச் சிந்தித்துப் பார்க்கக் கடமைப்பட்டுள்ளோம்.
மேலும், இந்தத் தொடரில் வரக் கூடிய அனைத்து தகவல்களும் குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் தொகுக்கப்பட்டது என்பதையும் உங்களுக்கு அறியத் தருகின்றோம்.

Re: இஸ்லாமிய பெண்மணி
1. முஸ்லிம் பெண்மணியும் அவளது இறைவனும்
2. முஸ்லிம் பெண்மணி
3. முஸ்லிம் பெண்மணியும் அவளது பெற்றோர்களும்
4. முஸ்லிம் பெண்மணியும் அவளது கணவனும்
5. முஸ்லிம் பெண்மணியும் அவளது குழந்தைகளும்
6. முஸ்லிம் பெண்மணியும் அவளது ஆண்குழந்தைகளும் மற்றும் பெண்குழந்தைகளும்
7. முஸ்லிம் பெண்மணியும் அவளது உறவினர்களும்
8. முஸ்லிம் பெண்மணியும் அவளது அண்டை அயலார்களும்
9. முஸ்லிம் பெண்மணியும் அவளது சகோதரிகளும் மற்றும் உறவினர்களும்
10.முஸ்லிம் பெண்மணியும் அவளது சமூகமும்
மேலே உள்ள தலைப்புகளின் அடிப்படையில் நமது இந்தத் தொடர் வெளிவரும் என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றோம். இன்ஷா அல்லாஹ்! இந்தப் பணி நிறைவாக முடிவடைய வல்ல அல்லாஹ் எங்களுக்கு அதற்கான வலிமையைத் தந்தருள பிரார்த்திக்குமாறு உங்களைக் கேட்டுக் கொள்கின்றோம்.
இதனடிப்படையில் எழக் கூடிய சந்தேகங்கள் மற்றும் கருத்துக்களைத் தெரிவித்தால் மிகவும் நன்றியுடையவர்களாக இருப்போம்.
என்றும் இறைப் பணியில் உங்கள் சகோதரர்கள்.
1. முஸ்லிம் பெண்மணியும் அவளது இறைவனும்
இறைநம்பிக்கை கொண்டவள் எப்பொழுதும் உஷாராகவே இருப்பாள்
இறைநம்பிக்கையை அழுத்தமாகப் பெற்ற ஒரு பெண் எப்பொழுதும் தனது இறைநம்பிக்கை குறித்து அழுத்தமான நம்பிக்கையை, உறுதியான நம்பிக்கையைப் பெற்றிருப்பாள். இந்த உலகத்தில் எது நிகழ்ந்தாலும் சரி, இந்த மனித சமூகத்திற்கு எது நிகழ்ந்தாலும் சரி, அல்லது தனக்கே எது நிகழ்ந்தாலும் சரியே, இவை அனைத்தும் அல்லாஹ்வினுடைய விதிப்படி, அவனது கட்டளைப்படி நடந்து கொண்டிருக்கின்றது என்ற அல்லாஹ்வினுடைய விதியைப் பற்றி அழுத்தமான நம்பிக்கையை வெளிப்படுத்தக் கூடியவளாக இருப்பாள்.
ஒருவனுக்கோ அல்லது ஒருத்திக்கோ என்ன நிகழ்ந்தாலும் சரியே, அதனைத் தவிர்ந்து கொள்ளக் கூடிய எந்த அம்சமும் அவனிடம் கிடையாது.
ஒரு மனிதன் தனக்குத் தேர்ந்தெடுத்துக் கொள்ளக் கூடிய ஒரே ஒரு பாதை தான் இருக்கின்றது, அது தான் வெற்றியை நோக்கி அழைத்துச் செல்லக் கூடிய நேர்வழியாகும், அந்த நேர்வழியில் செல்லக் கூடிய ஒரு மனிதன் தனக்கு என்ன நேர்ந்தாலும், தனக்கு நேர்ந்து கொண்டிருக்கக் கூடியவை அனைத்தும் படைத்தவனான வல்ல அல்லாஹ்வின் கட்டளைப்படி, அவனது விதிப்படி நடந்து கொண்டிருக்கின்றது என்றும், தன்னை அவன் எப்பொழுதும் நேர்வழியின் பால் நிலைத்து வைத்திருக்க உதவும்படியும் அவன் அல்லது அவள் அவனிடம் பிரார்த்தித்துக் கொண்டிருக்க வேண்டும்.
அன்னை ஹாஜரா அவர்களின் வாழ்வு உலகத்துப் பெண்மணிகளுக்கெல்லாம் ஒரு சிறந்ததொரு படிப்பினையாக இருந்து கொண்டிருக்கின்றது. அவர்கள் அல்லாஹ்வின் மீது கொண்டிருந்த உறுதியான நம்பிக்கை, அவன் மீதே அவர்கள் கொண்டிருந்த அசைக்க முடியாத மற்றும் தனது வாழ்வின் அனைத்து அலுவல்களையும் அவன் மீதே பொறுப்புச் சாட்டிய பாங்கு (தவக்கல்) இருக்கின்றதே, அதுவே நமக்கெல்லாம் ஒரு சிறந்த படிப்பினையாகும்.
இப்றாஹீம் (அலை) அவர்கள் அன்னை ஹாஜரா (அலை) அவர்களை ஜம்ஜம் கிணற்றின் மீது விட்டு விட்டுச் செல்லும் பொழுது, அந்த மக்கா என்னும் பொட்டல் வெளியில் எந்த மனித நடமாட்டமும் இல்லாதிருந்தது. இன்னும் மனிதர்கள் உயிர் வாழ்வதற்கு அடிப்படையான தண்ணீர் கூட இல்லாமலிருந்தது. இன்னும் இஸ்மாயீல் (அலை) என்ற அந்த கைக்குழந்தையைத் தவிர ஹாஜரா (அலை) அவர்களுக்கு ஒரு துணை கூட இல்லாத நிலை தான் இருந்தது.
அப்பொழுது அன்னை ஹாஜரா (அலை) அவர்கள் எந்தவித தடுமாற்றமும் இன்றி, ஒ! இப்றாஹீமே! எனது கணவரே! என்னையும் என்னுடைய குழந்தையையும் இந்த வனாந்தரத்தில் விட்டு விடச் சொன்னது உங்களது இறைவனது கட்டளையின் பிரகாரம் தானே! என்றார்கள். இப்றாஹீம் (அலை) அவர்கள், ஆம்! என்று பதிலுரைத்தார்கள். அப்படியென்றால் அதனை நாங்கள் ஏற்றுக் கொள்கின்றோம் என்ற அடிப்படையில் ஹாஜரா (அலை) அவர்களது உணர்வின் வெளிப்பாடு அமைந்தது. இன்னும் அவ்வாறென்றால் அவன் எங்களைக் கைவிட மாட்டான் என்றும் அவர்கள் கூறினார்கள். (புகாரி, கிதாபுல் அன்பியா)
இங்கே அன்னை ஹாஜரா (அலை) அவர்களையும், அவர்களது மகன் இஸ்மாயீல்(அலை) அவர்களையும் இப்றாஹீம் (அலை) அவர்கள் ஆள் நடமாட்டமே இல்லாத, குடிப்பதற்குத் தண்ணீர் கூடக் கிடைக்காத அந்த வனாந்தரப் பூமியில் விட்டு விட்டு, மிக நீண்ட தூர தேசமான பாலஸ்தீனத்திற்குச் சென்று விடுகின்றார்கள் என்பதை விட மிகவும் இக்கட்டான நிலை ஒரு பெண்ணுக்கு ஏற்பட்டு விடப் போவதில்லை. இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஹாஜரா (அலை) அவர்கள் எடுத்த முடிவு என்ன? என்னுடைய இறைவன் என்னுடன் இருக்கின்றான், அவனது கட்டளை தான் இதுவென்றால், எங்களைப் பாதுகாப்பதற்கு அதிகம் தகுதியுடையவன் அவன் ஒருவன் மட்டுமே! என்ற நம்பிக்கையின் அடிப்படையை வெளிப்படுத்தினார்களே ஒழிய, தன்னுடைய கணவனுடைய திட்டத்திற்கு ஒத்துழைக்காத தன்மையையோ அல்லது இறைவனது கட்டளையை விமர்சிக்கின்ற பாங்கையோ அவர்கள் கைக்கொள்ளவில்லை. இன்னும் இறைவனது அந்தத் திட்டத்தை அறிந்து கைசேதமே என்று கலங்கி விடவும் இல்லை.

அவர்களது அந்த இறைநம்பிக்கையின் உறுதி தான், இன்றைக்கும் இஸ்லாமிய வரலாறும், இஸ்லாத்தைப் பின்பற்றுகின்ற சமூகமும் வருடம் தோறும் ஹஜ் மற்றும் உம்ரா என்ற கிரியைகளின் மூலமாக நினைவு கூர்ந்து கொண்டிருக்கின்றது. தவாப் என்றும் சயீ என்றும் (ஸஃபா மற்றும் மர்வா தொடர் ஓட்டங்கள்), ஜம் ஜம் தண்ணீர் என்றும் அந்த மக்காவின் கஃபாவின் அருகில் இவர்களின் ஈமானின் உறுதியை ஒவ்வொரு நொடியும் பறைசாட்டிக் கொண்டிருப்பதை நாம் அனுதினமும் பார்த்து வருகின்றோம்.
மேற்படி கிரியைகளின் ஊடாக ஒவ்வொரு முஸ்லிமினிடத்தில் அசைக்க முடியாத இறைநம்பிக்கை வெளிப்பட்டு, இஸ்லாத்தைப் பற்றியும், தனது மார்க்கக் கடமைகள் பற்றியும் சிந்தித்துணரக் கூடிய வாய்ப்பு உருவாகுவதோடு, தன்னுடைய ஒவ்வொரு அசைவும் இறைவனுடைய கண்காணிப்பின் கீழ் இருக்கின்றது என்பதையும், அவனது பொறுப்பின் கீழ் தான் உலகின் அனைத்து அலுவல்களும் இயங்கிக் கொண்டிருக்கின்றது என்ற உணர்வையும் அதிகரிக்கச் செய்கின்றது.
இறைவன் மீது எவ்வாறு நம்பிக்கை கொள்வது என்பது பற்றிய கேள்விக்கு இதனை விட மிக அழகான உதாரணத்தை நாம் காட்ட வேண்டிய தேவையில்லாத அளவுக்கு, ஹாஜரா (அலை) அவர்களது இறை நம்பிக்கை இன்றைக்கும் இன்னும் வரக் கூடிய முஸ்லிம் பெண்களுக்கு மிகச் சிறந்த உதாரணமாகத் திகழ்கின்றது.
அப்துல்லா இப்னு ஜைத் இப்னு அஸ்லம் என்பவர் தனது தந்தை மற்றும் பாட்டனார் மூலமாக அறிவிக்கின்றார் :
மதீனாவில் உமர் (ரலி) ஆட்சி நடந்து கொண்டிருந்த சமயத்தில் இரவு ரோந்துப் பணியின் நிமித்தம் உமர் (ரலி) அவர்களுடன் மதீனா நகருக்குள் வலம் வந்து கொண்டிருந்தோம். அப்பொழுது உமர் (ரலி) அவர்கள் கலப்படைந்தவர்களாக ஒரு வீட்டுச் சுவரின் மதில் மீது சாய்ந்தார்கள். அது ஒரு நடு இரவுப் பகுதியாகவும் இருந்தது. அப்பொழுது ஒரு பெண் தன் மகளை நோக்கி, என்னருமை மகளே! எழுந்திரு! அந்தப் பாலுடன் சிறிது தண்ணீரையும் கலந்து வை என்றாள். அப்பொழுது அந்தப் பெண் கூறினாள், எனது தாயே! அமீருல் முஃமினீன் உமர் (ரலி) அவர்களது கட்டளை என்னவென்பதை நீங்கள் அறியவில்லையா? என்றாள். என்ன கட்டளை? என்று அந்தத் தாய் மீண்டும் தன் மகளைப் பார்த்துக் கேட்டாள். பாலில் தண்ணீரைக் கலக்கக் கூடாது என்று ஒருவர் மிகவும் சப்தமாக உமர் (ரலி) அவர்களது அறிவிப்பை அறிவித்து விட்டுச் சென்றார் என்று கூறினாள். எழுந்திரு மகளே! நீ பாலில் தண்ணீரைக் கலப்பதை உன்னுடைய இடத்தில் இருந்தா உமர் (ரலி) பார்த்துக் கொண்டிருக்கப் போகின்றார்? என்று அந்தத் தாய் கூறவும், பொதுவாழ்வில் அல்லாஹ்வுக்கு பயப்பட இயலாதவளாகவும், தனிப்பட்ட வாழ்வில் உமர் (ரலி) அவர்களுக்குப் பயப்பட இயலாதவளாகவும் நான் ஆகி விட முடியாது என்று கூறினாள். அதாவது, உமர் (ரலி) அவர்கள் பார்க்கா விட்டாலும், அல்லாஹ் நம்மைப் பார்த்துக் கொண்டிருக்கின்றான் என்று அந்தப் பெண் கூறினாள்.
இதனைக் கேட்ட உமர் (ரலி) அவர்கள், ஓ அஸ்லம்! அந்தப் பெண் யார் என்று பார்! அவள் யாருடன் உரையாடிக் கொண்டிருக்கின்றாள் என்பதையும் பார்! என்றும், அவளுக்குக் கணவன் இருக்கின்றானா? என்பதையும் அறிந்து வா என்றும் கூறினார்கள். எனவே, நான் அவளது இடத்திற்குச் சென்று பார்த்த போது அவள் மணமாகாத இளம் பெண் என்பதையும், தாயுக்கும் மகளுக்கும் இடையே நடந்த உரையாடல் தான் அது என்பதையும் உமர் (ரலி) அவர்களுக்குத் தெரிவித்தேன்.
உமர் (ரலி) அவர்கள் தனது மகன்களை அழைத்து, உங்களில் யாராவது ஒரு பெண்ணை மணமுடித்துக் கொள்ள விரும்புகின்றீர்களா? என்று கேட்டு விட்டு, உங்களது விருப்பத்தைச் சொன்னால், நான் மண முடித்து வைக்க ஆசைப்படுகின்றேன் என்று கூறினார்கள். நான் மணமுடித்துக் கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுவதாக இருந்தால் இந்த இளம் பெண்ணைத் தான் மணமுடிக்க விரும்பி இருப்பேன் என்றும் உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

உமர் (ரலி) மகன் அப்துல்லா வந்தார், எனக்கு மனைவி இருக்கின்றாள் என்று கூறினார். பின் அப்துர் ரஹ்மான் (ரலி) அவர்களும் எனக்கு மனைவி இருக்கின்றாள் என்று கூறினார். பின் ஆஸிம் வந்தார். எனக்குத் தான் மனைவி கிடையாது என்று கூறியவுடன், தன் மகன் ஆஸிம் அவர்களுக்கு அந்தப் பெண்ணை மணமுடித்து வைத்தார்கள். அந்தப் பெண் ஒருபெண் குழந்தையை ஈன்றாள். அந்தப் பெண் குழந்தை பெற்ற வீரத் திருமகன் தான், பின்னாளில் இரண்டாவது உமர் என்று போற்றப்பட்ட உமர் இப்னு அப்துல் அஜீஸ் (ரஹ்) ஆவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலே உள்ள வரலாற்றுச் சம்பவம் அந்தக் காலத்துப் பெண்களின் இதயத்தினுள் இஸ்லாம் விதைத்து வைத்திருந்த இஸ்லாமிய இறைநம்பிக்கையின் அழுத்தத்தை வெளிப்படுத்துகின்றது. அவள் தனது வாழ்க்கையை மறைவிலும், வெளிப்படையாகவும் இறைவனுக்கு பயந்த தன்மையை வெளிப்படுத்தினாள். அவள் தன்னுடைய இறைவன் தன்னை எப்பொழுதும் கண்காணித்துக் கொண்டிருக்கின்றான் என்ற உணர்வைப் பெற்றிருந்தாள். இன்னும் அவன் மறைவிலும் இன்னும் வெளிப்படையாகவும் செய்யக் கூடிய அனைத்தையும் சூழ்ந்தறியக் கூடியவனாகவும் இருக்கின்றான் என்றும் அவள் நம்பிக்கை கொண்டிருந்தாள். இது தான் உண்மையான இறைவிசுவாசமாகும், இது தான் உண்மையான இறைவிசுவாசத்தின் வெளிப்பாடாகும், இது தான் அவளை இஹ்ஸான் என்றழைக்கக் கூடிய உயர் நிலைக்கு, உயர் தகுதிக்கு உயர்த்திய இறை விசுவாசமாகும். அவளது அந்த இறைவிசுவாசத்திற்கு இறைவன் அளித்த உடனடி அருட்கொடையே மிகச் சிறந்த மணவாழ்க்கையாகும். இன்றைக்கு நேர்வழிகாட்டப்பட்ட நான்கு கலீபாக்களில், ஐந்தாவது கலீபா ஒருவர் உண்டு என்று உலமாப் பெருமக்களால் ஒருமித்து கருத்துக் கூறப்பட்ட உமர் இப்னு அப்துல் அஜீஸ் (ரஹ்) அவர்களைத் தந்ததும் இந்த உன்னத திருமண வாழ்வின் வழியாகத் தான் என்றால், இதனை விட மிகச் சிறந்த அருட்கொடை வேறென்ன வேண்டும்!
இறைநம்பிக்கை மிக்க ஒரு முஸ்லிம் பெண்மணியின் இறைக்கோட்பாடு (அகீதா) என்பது, அறியாமையினால் விளைந்த பாவக் கறை அல்லது பித்அத்கள் என்று கூறக் கூடிய புதினங்களினால் கறை படிந்த இறைநம்பிக்கையாகி விடக் கூடாது. அவளது இறைக் கோட்பாடு அல்லாஹ் வழங்கியிருக்கின்ற கொள்கையின் பால் அமைந்ததாக இருக்க வேண்டும், அவன்தான் அனைத்துக் காரியங்களுக்கு மூலமாக இருக்கின்றான், அவன் தான் இந்த உலகத்தின் அனைத்து இயக்கத்தையும் கட்டுப்படுத்திக் கொண்டிருக்கின்றான் இன்னும் அனைத்தும் அவன் பக்கமே மீள வேண்டியதிருக்கின்றது, என்ற கொள்கையில் உறுதி உடையவளாக, அதனையே தன்னுடைய மார்க்கக் கோட்பாடாகக் கொண்டவளாக அவள் தன் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும்.
''எல்லாப் பொருட்களின் ஆட்சியும் யார் கையில் இருக்கிறது? - யார் எல்லாவற்றையும் பாதுகாப்பவனாக - ஆனால் அவனுக்கு எதிராக எவரும் பாதுகாக்கப்பட முடியாதே அவன் யார்? நீங்கள் அறிவீர்களாயின் (சொல்லுங்கள்)"" என்று கேட்பீராக. அதற்கவர்கள் ''(இது) அல்லாஹ்வுக்கே (உரியது)"" என்று கூறுவார்கள். (''உண்மை தெரிந்தும்) நீங்கள் ஏன் மதி மயங்குகிறீர்கள்?"" என்று கேட்பீராக. (23:88-89)
இது தான் உண்மையான இறைக்கோட்பாடு, இது தான் அவளது இறைநம்பிக்கை அதிகரிக்கச் செய்யக் கூடியதும், அவளது மனதில் உறுதியை ஏற்படுத்தக் கூடியதும், இன்னும் மன முதிர்ச்சியை அளிக்கக் கூடியதுமாகும், இன்னும் அவள் தான் வாழ்ந்து கொண்டிருக்கின்ற இந்த உலக வாழ்க்கையானது உண்மையிலேயே சோதனைகள் நிறைந்த பரீட்சைக் களம் என்பதையும், இதன் முடிவுகள் யாவும் நிச்சயமாக நிகழவிருக்கக் கூடிய அந்த மறுமை நாளில் வெளிப்பட இருக்கின்றது என்பது பற்றியும் அவள் உறுதியான திடமான நம்பிக்கை கொண்டிருப்பாள்.
''அல்லாஹ் உங்களுக்கு உயிர் கொடுக்கிறான்; பின்னர் அவனே உங்களை மரணம் அடையச் செய்கிறான்; பின்னர் கியாம நாளன்று அவன் உங்களை ஒன்று சேர்ப்பான் - இதில் சந்தேகமேயில்லை"" எனினும் மனிதரில் பெரும்பாலோர் (இதை) அறியமாட்டார்கள் என்று (நபியே!) நீர் கூறும். (45:26)
''நாம் உங்களைப் படைத்ததெல்லாம் வீணுக்காக என்றும், நீங்கள் நம்மிடத்தில் நிச்சயமாக மீட்டப்பட மாட்டீர்கள் என்றும் எண்ணிக் கொண்டீர்களா?"" (என்றும் இறைவன் கேட்பான்.) 23:115)
எவனுடைய கையில் ஆட்சி இருக்கின்றதோ அவன் பாக்கியவான்; மேலும், அவன் எல்லாப் பொருட்களின் மீதும் பேராற்றலுடையவன். உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக அவன், மரணத்தையும் வாழ்வையும் படைத்தான்; மேலும், அவன் (யாவரையும்) மிகைத்தவன்; மிக மன்னிப்பவன். (67:1-2)

அன்றைய தினம் மனிதன் அவன் செய்த செயல்களின் விளைவுகளைப் பெற்றுக் கொள்தவற்காக அழைத்து வரப்படுவான். அவனது செயல்வினைகள் நன்மையானவையாக இருந்தால், அது அவனுக்கு நல்லதாகும். அவனது செயல்வினைகள் தீமைகள் நிறைந்ததாக இருக்குமென்றால், அது அவனுக்குக் கெட்டதாகும். அங்கு யாருக்கும் அணுவளவும் அநீதிமிழைக்கப்பட மாட்டாது.
அந்நாளில் ஒவ்வோர் ஆத்மாவும், அது சம்பாதித்ததற்குக் கூலி கொடுக்கப்படும்; அந்நாளில் எந்த அநியாயமும் இல்லை. நிச்சயமாக, அல்லாஹ் கேள்வி கணக்குக் கேட்பதில் மிகவும் தீவிரமானவன். (40:17)
அவன் செய்த அனைத்து வினைகளும் கொண்டு வரப்பட்டு, மிக மிக நீதமாக எடை போடப்படும், அது அவனுக்குச் சாதகமாகவோ அல்லது பாதகமாகவோ கூட இருக்காது.
எனவே, எவர் ஓர் அணுவளவு நன்மை செய்திருந்தாலும் அத(ற்குரிய பல)னை அவர் கண்டு கொள்வார். அன்றியும், எவன் ஓர் அனுவளவு தீமை செய்திருந்தாலும், அ(தற்குரிய பல)னையும் அவன் கண்டு கொள்வான். (99:7-8)
அன்றைய தினம் வல்லோனாகிய ரப்பாகிய அல்லாஹ்வின் பார்வையிலிருந்து எதுவும் மறைந்து விடாது, ஒரு கடுகளவு எடை கொண்ட, மிக அற்பமான அளவு கூட அவன் பார்வையிலிருந்து மறைந்து விடாது.
இன்னும், கியாம நாளில் மிகத் துல்லியமான தராசுகளையே நாம் வைப்போம். எனவே எந்த ஓர் ஆத்மாவும் ஒரு சிறிதும் அநியாயம் செய்யப்படமாட்டாது; மேலும் (நன்மை, தீமையில்) ஒரு கடுகு அளவு எடையிருப்பினும், அதனையும் நாம் (கணக்கில்) கொண்டு வருவோம். அவ்வாறே கணக்கெடுக்க நாமே போதும். (21:47)
நிச்சயமாக மேலே உள்ள வசனத்தின் பொருளை நீங்கள் விளங்கிக் கொள்வீர்கள் என்றால், அந்த வரவிருக்கக் கூடிய நாளின் கொடுமை பற்றி நீங்கள் சிந்தித்து ரப்பாகிய அல்லாஹ்வின் அடிபணிந்து வாழக் கூடிய வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்துக் கொள்வீர்கள், இதுவரை செய்து விட்ட பாவங்களுக்கு மன்னிப்புத் தேடிக் கொள்வீர்கள், இன்னும் அவனை புகழ்ந்து துதித்து, அவனது நேர்வழியை பெற்றுக் கொள்ள உதவுமாறு அவனிடமே நீங்கள் மன்றாடக் கூடியவர்களாகவும், இந்த உலக வாழ்க்கையை மறுமைக்கான தேர்வுக் களமாகவும் நீங்கள் மாற்றிக் கொள்வீர்கள்.
அவள் அல்லாஹ்வை மட்டுமே வணங்குவாள்
உண்மையிலேயே இறைநம்பிக்கை கொண்ட பெண், தனது வணக்க வழிபாடுகளை முற்றிலும் அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே அற்பணித்து வாழக் கூடியவளாகவும், இன்னும் மனித இனத்தில் ஆண், பெண் மீது கடமையாக்கப்பட்டவைகளை ஏற்று வழுவாது பின்பற்றி வாழக் கூடிய முஸ்லிமாகவும் அவள் இருப்பாள். ஆகவே இத்தகைய பெண்மணி இஸ்லாம் கடமையாக்கி இருக்கின்றவைகளை மிகச் சரியாகப் பேணி நடப்பதோடு, அதில் எதனையும் பொடுபோக்கா விட்டு விடாது அல்லது ஏனோ தானோ என்றோ அல்லது கவனக்குறைவாகவோ அவள் இருந்து விட மாட்டாள்.
அவள் தினமும் ஐவேளை தொழக கூடியவள்
இறைவன் ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் நேரங்குறித்துக் கடமையாக்கி இருக்கின்ற தொழுகைகளைத் முறையாகத் தொழுவதோடு, தாயாக, மனைவியாக இருந்து அவள் ஆற்றுகின்ற எந்தக் கடமையும் இந்தக் கடமையை நிறைவேற்றுவதனின்றும் அவளைத் தடுத்து விடாது. இஸ்லாத்தின் தொழுகை என்பது ஒரு கட்டடத்தைத் தாங்கி நிற்கும் தூண் போன்றது - எவரொருவர் தொழுகையை முறையாகப் பேணி தொழுகின்றாரோ அவர் தனது மார்க்கத்தைப் பேணியவராவார் - எவரொருவர் தொழுகையை முறையாகப் பேணித் தொழுகின்றாரோ அவர் தனது ஈமானை இறைநம்பிக்கையைப் பேணியவராவார் இன்னும் யாரொருவர் தொழுகையை விட்டு விட்டாரோ அவர் தனது ஈமானை இறைநம்பிக்கையை அழித்து விட்டவராவார். இறைவன் விதியாக்கியுள்ள கடமைகளிலேயே தொழுகை தலையாயது, அப்துல்லா இப்னு மஸ்ஊது (ரலி) அவர்கள் அறிவித்திருக்கின்ற ஹதீஸ் வாயிலாக இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள் :
இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் நான் வினவினேன் : இறைவன் விரும்பக் கூடிய செயல்களில் மிகச் சிறந்தது எது? இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், தொழுகையை அதனதன் நேரத்தில் தொழுவது என்றார்கள், மேலும் நான் கேட்டேன், அதற்கு அடுத்தது என்ன? அவர்கள் (ஸல்) கூறினார்கள், பெற்றோர்களை கருணையோடும் இன்னும் மரியாதையோடும் நடத்துவது என்றார்கள், மீண்டும் நான், அடுத்தது என்ன? என்று கேட்டேன், அதற்கு (ஸல்) அவர்கள், அல்லாஹ்வுடைய திருப்பொருத்தத்திற்காக ஜிஹாத் (இறைவழியில்) போராடுவது என்றார்கள்.
தொழுகை என்பது அல்லாஹ்வுக்கும் அவனது அடியானுக்கும் இடையில் உள்ள தொடர்பாகும். அந்தத் தொழுகை தான் ஒரு முஸ்லிமிற்கு பலத்தையம், நேர்மையையும், கருணையையும் இன்னும் மகிழ்ச்சியையும் பெற்றுத் தருகின்றதோடு, அவனது பாவக் கறைகளையும் போக்கி விடக் கூடியதாக இருக்கின்றது. அபூஹ{ரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் :
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கேட்டார்கள், உங்களது வீட்டிற்கு அருகில் ஒரு ஆறு ஓடிக் கொண்டிருக்க, அதில் நீங்கள் தினமும் ஐவேளை குளித்து எழுந்தீர்கள் என்றால், உங்களது மேனியில் ஏதாவது அழுக்கின் தடயங்கள் இருக்குமா? அப்பொழுது மக்கள் கூறினார்கள், அழுக்கின் எந்தத் தடையமும் இருக்காது. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : அது போலத் தான் ஐவேளைத் தொழுகையும், அந்தத் தொழுகை மூலம் இறைவன் உங்களது பாவக் கறைகளைப் போக்கி விடுகின்றான். (ஸர்ஹ் அல் சுன்னா 2ஃ175)

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக ஜாபிர் (ரலி) அவர்கள் கூறினார்கள் :
உங்களது வீட்டின் வாசலுக்கருகே ஒரு ஆறு ஓடிக்கொண்டிருக்க, அதில் நீங்கள் ஒவ்வொரு நாளும் ஐவேளை குளித்தால் எப்படி இருக்கும், அது போலத் தான் ஐவேளைத் தொழுகையும்.
தொழுகை என்பது இறைவன் தன் அடியார்கள் மீது கொண்ட கருணையின் வெளிப்பாடாகும். அந்தக் கருணையின் நிழலை ஒரு நாளின் ஐவேளைகளின் போது இறைவனிடம் தேடுகின்றார்கள், இன்னும் தன்னுடைய இறைவனைப் போற்றித் துதிக்கின்றார்கள், அவனது பேருதவியை வேண்டியும், அவனது கருணையை வேண்டியும், அவனது வழிகாட்டலையும் இன்னும் அவனது பாவ மன்னிப்பை வேண்டியவர்களாகவும் அவன் முன் நிற்கின்றார்கள். குறிப்பாக தொழுகை என்பது அதனை முறையாக நிறைவேற்றுபவர்களுக்கு ஒரு வித சுத்திகரிப்பாகும், அதனை நிறைவேற்றுகின்ற ஆண்களும் பெண்களும் தங்களது பாவக் கறைகளினின்றும் தங்களைச் சுத்தப்படுத்திக் கொண்டு, நரக நெருப்பை விட்டும், மறுமைத் தண்டனைகளை விட்டும் பாதுகாத்துக் கொள்கின்றார்கள்.
உதுமான் (ரலி) அவர்கள் கூறினார்கள் :
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், தொழுகை நேரம் வந்து விட்டால், உ@ச் செய்யுங்கள், தொழுகையின் கவனமாக இருங்கள், மிகச் சரியாக ருகூவுச் செய்யுங்கள், நீங்கள் மிகப் பெரும் பாவங்களைச் செய்யாதவரை தொழுகையானது தொழுகைக்கு முன் செய்த உங்களது பாவங்களைப் போக்கக் கூடிய பரிகாரமாக இருக்கின்றது. இது தொழுகையின் இறுதி நேரம் வரைக்கும் உள்ளதாகும். (முஸ்லிம் 3ஃ112)
இதைப் போல எண்ணற்ற நபிமொழிகள் தொழுகையின் முக்கியத்துவத்தைக் குறித்தும், அது வழங்கும் அருட்கொடைகள் பற்றியும் இன்னும் அதனை முறையாக நிறைவேற்றுகின்ற ஆண்களும் பெண்களும் மறுமைப் பலன்களை எவ்வாறு பெற்றுக் கொள்கின்றார்கள் என்பது குறித்தும் விளக்கி, தொழுகையின் பால் மக்களை ஆர்வங்கொள்ளச் செய்கின்றது. நீங்கள் தொழுகையின் பால் நிற்கின்ற ஒவ்வொரு வேளையும் இறைவனின் முன் தாழ்மையுணர்வுடன் நிற்கின்ற நிலையில், அதன் காரணமாக பாவமன்னிப்பையும் பெற்றுக் கொள்கின்றீர்கள்.
அவள் ஜும்ஆத் தொழுகையை நிறைவேற்ற பள்ளிக்குச் செல்லலாம்
இஸ்லாம் ஜும்ஆ என்ற கூட்டாக நிறைவேற்றக் கூடிய கடமையான தொழுகையை நிறைவேற்ற பள்ளிக்குச் செல்வதற்குப் பெண்களை அனுமதிக்கின்ற அதேவேளையில், செல்லக் கூடிய பெண்கள் பிறரது பார்வைகள் தன் மீது விழும் அளவுக்கு உடையழங்காரங்களைச் செய்து கொண்டு செல்வது கூடாது. தனது வீட்டை விட்டு வெளியே வந்து, இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்குப் பின் நின்று தொழுத முதல் பெண்மணியான அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள் :
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அதிகாலை பஜ்ர் நேரத் தொழுகையை நிறைவேற்றும் பொழுது, நம்பிக்கை கொண்ட பெண்களாகிய நாங்களும் எங்களது ஆடைகளை முழுக்கப் போர்த்தியவர்களாக அவர்களுக்குப் பின் நின்று தொழக் கூடியவர்களாக இருந்தோம். பின் எங்கள் வீடுகளை நோக்கி நாங்கள் செல்லும் பொழுது, எங்களை யாரும் ஆடையாளம் கண்டு கொள்ள முடியாது, மேலும் :
இறைநம்பிக்கை கொண்ட பெண்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் பஜ்ர் காலைத் தொழுகையை தங்களது மேலாடைகளை முழுக்கப் போர்த்தியவர்களாக இருக்கும் நிலையில் நிறைவேற்றுவார்கள், தொழுகையை நிறைவேற்றி விட்டு தங்களது இல்லங்களுக்குத் திரும்பக் கூடிய நிலையில், இருளின் காரணமாக யாரும் அவர்களை (இந்தப் பெண் இன்னாரென) அடையாளம் கண்டு கொள்ள முடியாது.
தொழுகையின் பொழுது, குழந்தையின் அழுகுரல் கேட்டு விட்டால், அந்தக் குழந்தையின் தாயின் மனது பரிதவித்து விடக் கூடாது என்பதற்காக, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தங்களது தொழுகையை சுருக்கித் தொழுவார்கள்.
தொழுகையை நீட்டித் தொழ வேண்டும் என்ற நோக்கத்தில் தொழுகையை ஆரம்பித்தேன், ஆனால் குழந்தையின் அழுகுரலைக் கேட்டதன் காரணமாக என்னுடைய தொழுகையைச் சுருக்கிக் கொண்டேன், ஏனெனில், அந்தக் குழந்தையினுடைய அழுகுரலானது அதன் தாய்க்கு மன அழுத்தம் (வேதனையைக்) கொடுக்கக் கூடியதாக இருக்கின்றது.
இறைவன் பெண்கள் மீது கொண்ட கருணையின் காரணமாக ஐவேளைத் தொழுகையையும் கூட்டாக நிறைவேற்றுவதனின்றும் அவர்களுக்கு விலக்கு அளித்துள்ளான், அவ்வாறில்லை எனில், அந்தக் கடமையை நிறைவேற்றுவது என்பது அவர்களுக்கு மிகப் பாரமானதாக இருந்திருக்கும். அதனை அவர்கள் நிறைவேற்றச் சக்தி பெற்றவர்களாக இருந்திக்க மாட்டார்கள். இன்றைக்கு ஆண்களில் அதிகமானோர் கூட்டாக நிறைவேற்றக் கூடிய இந்தக் கடமையைச் சரிவர நிறைவேற்ற இயலாதவர்களாக இருந்து கொண்டிருக்கின்றார்கள், கூட்டாக நிறைவேற்றுவதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலையில், அவர்கள் எங்கிருந்தாலும் வேலையில் இருந்தாலும், அல்லது வீட்டிலிருந்தாலும் அவர்கள் பள்ளிக்கு வந்து அந்தக் கடமையை நிறைவேற்ற வேண்டும் என்றிருக்கின்ற நிலையில், அதனை நிறைவேற்றுவதில் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி, இறுதியில் தொழுகையையே விட்டு விடக் கூடியவர்களாக இருந்து கொண்டிருப்பதைப் பார்க்கின்றோம்.
ஆனால் பெண்களுக்கு அவ்வாறல்ல. இறைவன் பெண்களை வீட்டிலேயே தொழுது கொள்வதே சிறப்பு என்று கூறி அவர்களுக்கு சிறப்பான விதிவிலக்கு அளித்துள்ளான். ஏனெனில் அவர்கள் தங்களது கணவன், பிள்ளைகள் மற்றும் பெற்றோர், மாமனார், மாமியார் என அவளையே நம்பி இருக்கும் இவர்களுக்குச் செய்ய பணிவிடைகள் அதன் காரணமாக ஏற்படுகின்ற வேலைப்பளு இவற்றை எல்லாம் விட்டு விட்டு, ஐந்து வேளையும் பள்ளிக்கு வந்து தான் தொழ வேண்டும் என்ற நிலை இருக்கும் என்றால், தொழுகை என்பதே அவளுக்கு மிகப் பாரமானதாக, நிறைவேற்ற இயலாத ஒன்றாக மாறி இருக்கும்.
எனவே தான் இறைவன் ஆண்களுக்கு மட்டும் கண்டிப்பாக கடமையாக்கிய ஐந்து வேளைக் கூட்டுத் தொழுகையை, பெண்களுக்கு வீட்டிலேயே தொழுது கொள்ளும் அளவுக்கு எளிதாக்கித் தந்துள்ளான் என்பது அவன் அனைத்து ஞானங்களையும் பெற்றுள்ளான் என்பதன் உள் பொருளை நமக்கு அறிவுறுத்துவதாக உள்ளது. ஒரு பெண் பள்ளிக்கு வந்து தொழுவதைக் காட்டிலும் வீட்டில் தொழுது கொள்வது சிறப்புடையதாகும், ஆனால் அல்லாஹ் அவள் தன்னுடைய தொழுகையை பள்ளியில் அமைத்துக் கொள்வதா? அல்லது வீட்டில் தொழுது கொள்வதா? என்பதைப் பற்றி முடிவு செய்து கொள்ள அவளுக்கு முழுச் சுதந்திரத்தை அளித்துள்ளான். இறைத்தூதர் (ஸல்) அவர்களின் அறிவுரைப்படி, ஒரு மனைவி வீட்டை விட்டு வெளியே சென்று பள்ளியில் தொழுது கொள்ள விரும்பி தன்னுடைய கணவனிடம் அனுமதி கோரினாள் என்றால், அதற்கு கணவன் மறுப்புச் சொல்ல இயலாது.

உங்கள் பெண்கள் பள்ளிக்குச் சென்று தொழுவதற்குத் தடை விதிக்காதீர்கள், இருந்த போதிலும் வீடே அவர்களுக்குச் சிறப்பாகும். (அதாவது வீட்டில் தொழுது கொள்வதே சிறந்ததாகும்). (அபூதாவூது)
உங்களின் மனைவிமார்கள் பள்ளிக்குச் சென்று தொழ விரும்பி அனுமதி கோரினால், அவர்களைத் தடுக்க வேண்டாம். (பத்ஹ{ல் பாரி)
இறைத்தூதர் (ஸல்) அவர்களது அறிவுரையை ஏற்றுக் கொள்ளக் கூடிய மனிதராக நீங்கள் இருப்பீர்களென்றால், உங்களது நலன்களுக்கு எதிராகவே இருப்பினும் உங்களது மனைவிமார்கள் பள்ளிக்குச் சென்று தொழ விரும்பி அனுமதி கோரினால், அதனை நீங்கள் மறுக்கலாகாது. இதனை அப்துல்லா இப்னு உமர் அவர்களின் அறிவிப்பு உறுதி செய்வதாக இருக்கின்றது, அவர் கூறுகின்றார்,
உமர் (ரலி) அவர்களின் மனைவிமார்களில் ஒருவர் பஜ்ர் மற்றும் இஷாத் தொழுகைகளை பள்ளிக்குச் சென்று ஜமாத்துடன் தொழக் கூடியவராக இருந்தார். அவரிடம் கேட்கப்பட்டது, நீங்கள் வீட்டை விட்டு வெளியே வந்து (பள்ளிக்குச் சென்று) வருவதை உமர் (ரலி) அவர்கள் விரும்பவில்லை என்பதையும், இன்னும் அவர் அனைத்தையும் கவனமாகப் பார்க்கக் கூடியவராகவும் இருந்து கொண்டிருக்கக் கூடிய நிலையில் நீங்கள் எவ்வாறு வெளியே சென்று வருகின்றீர்கள்? என்று கேட்ட பொழுது, அவர் கூறினார், அவ்வாறு நான் செல்ல முடியாமல் என்னைத் தடுத்தது என்னவோ? என்று கூறி விட்டு அவர் கூறினார், இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : அல்லாஹ்வின் பெண் அடியார்களை பள்ளிக்குச் செல்வதனின்றும் நீங்கள் தடுக்க வேண்டாம் என்றார்கள். (பத்ஹ{ல் பாரி 2ஃ382)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது அறிவுரைப்படி பெண்கள் பள்ளிக்குச் சென்று தொழ அனுமதி உண்டு. இன்னும் பெண்கள் பள்ளிக்குச் செல்வதைத் தடுப்பதனின்றும் ஆண்களைத் தடுத்தும் உள்ளார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் பெண்கள் பள்ளிக்கு வருவதும் போவதுமாக இருந்த காட்சியைக் காண முடிந்திருக்கின்றது. இன்னும் பிற்காலத்திலும் இந்த நடைமுறை இருந்தும் வந்திருக்கின்றது. பெண்கள் பள்ளிக்கு வந்து அங்கு நிகழ்த்தப்படக் கூடிய உரைகளைச் செவிமடுக்கவும், இன்னும் இஸ்லாமியப் பாடங்களைக் கற்கவும், இன்னும் பல்வேறு இஸ்லாமிய நடவடிக்கைகளிலும் சுதந்திரமாகப் பங்கு கொள்ள இஸ்லாம் உரிமை வழங்கியிருக்கின்றது. ஆண்களும் பெண்களும் பள்ளியில் தொழலாம் என்பதற்கு கீழ்க்கண்ட சம்பவம் மிகச் சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றது.
முன்பு முஸ்லிம்கள் பைத்துல்முகத்திஸை முன்னோக்கியவர்களாக, அதனைத் தங்களது கிப்லாவாக எண்ணம் கொண்டவர்களாகத் தொழுது வந்ததை நாம் அறிவோம். அல்லாஹ் பெருமானார் (ஸல்) அவர்களது விருப்பப்படி, கிப்லாவை பைத்துல் முகத்திஸிலிருந்து மக்காவுக்கு மாற்றிய பொழுது, தொழுது கொண்டிருந்த ஆண்களும் பெண்களும் தங்களது முகத்தை பைத்துல் முகத்திஸை விட்டும் கிப்லாவின் பக்கம் திரும்பினார்கள் என்று, கிப்லா மாறிய சம்பவ வரலாறு கூறுகின்றது.
இன்றைக்கும் அந்த கிப்லா தான் உலக முழுவதும் உள்ள முஸ்லிம்களுக்கு தொழுகையின் பொழுது முன்னோக்கக்கூடிய தளமாகவும் இருந்து கொண்டிருக்கின்றது. பெண்களும் பள்ளிக்குச் சென்று தொழலாம் என்ற அனுமதி உண்மையானதும், சத்தியமானதுமாகும், இன்னும் இஸ்லாத்தின் ஆரம்ப நாட்களில், முஸ்லிம் பெண்கள் பள்ளியின் முக்கிய நடவடிக்கைகளில் முக்கிய பங்காற்றியவர்களாக இருந்தார்கள்.

முஸ்லிம் பெண்கள் பள்ளியின் நடவடிக்கைகள் மற்றும் பல சம்பவங்களில் கலந்து கொண்டு சிறப்புப் பங்காற்றி இருக்கின்றார்கள் என்பதை ஏராளமான ஹதீஸ்கள் இன்னும் சாட்சியமளித்துக் கொண்டிருக்கின்றன. பெண்கள் எவ்வாறு ஜும் ஆத் தொழுகையில் கலந்து கொண்டார்கள் என்பதையும், இன்னும் கிரகணத் தொழுகையில் கலந்து கொண்டார்கள் என்பதையும், ஈதுப் பெருநாள் மற்றும் முஅத்தினினுடைய அழைப்புக்கு அவர்கள் எவ்வாறு பதிலளித்தார்கள் என்பதைப் பற்றியும் ஏராளமான ஹதீஸ்கள் உள்ளன.
உம்மு ஹிஸாம் பின்த் ஹாரிதா இப்னு அல் நுஃமான் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் :
காஃப், வல் குர்ஆனில் மஜீத் என்ற சூராவை முஹம்மது (ஸல்) அவர்களது மூலமாகத் தவிர நான் வேறு எந்த வகையிலும் அறிந்து கொள்ளவில்லை. அவர்கள் இந்த சூராவை ஒவ்வொரு வெள்ளிக்கிழமை தோறும் மக்களுக்கு உரை நிகழ்த்தும் பொழுது மிம்பரில் நின்று ஓதாமல் இருந்ததில்லை. (முஸ்லிம்)
இன்னும் அம்ரா பின்த் அப்துல் ரஹ்மான் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் :
காஃப், வல் குர்ஆனில் மஜீத் என்ற அத்தியாத்தை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மூலமாக வெள்ளிக்கிழமைகளில் கற்றுக் கொண்டேன், ஒவ்வொரு வெள்ளிக்கிழமை ஜும்ஆத் தொழுகையின் பொழுது இறைத்தூதர் (ஸல்) மிம்பரில் இருந்த வண்ணம் இந்த அத்தியாத்தை ஓதக் கூடியவர்களாக இருந்தார்கள். (முஸ்லிம் 6ஃ160)
ஜும்ஆ தினத்தன்று ஆண்களும், பெண்களும் குளித்து சுத்தமான ஆடைகள் அணிந்து ஜும்ஆத் தொழுகையை நிறைவேற்றத் தயாராகும்படி இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஊக்குவித்தார்கள்.
ஜும்ஆத் தொழுகையை நிறைவேற்ற பள்ளிக்கு வரக் கூடிய ஆண் அல்லது பெண்ணாக இருக்கட்டும், அவர்கள் முதலில் குளித்து விட்டு வரட்டும்! (இப்னு ஹிப்பான்)
இன்னும், அஸ்மா பின்த் அபூபக்கர் (ரலி) அவர்கள், ஒரு கிரகணத் தொழுகையின் பொழுது, இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் சேர்ந்து தொழுதுள்ளார்கள் என்று ஒரு ஹதீஸ் மூலம் நாம் தெரிந்து கொள்ள முடிகின்றது. அப்பொழுது அவர்கள் (ஸல்) என்ன சொல்கின்றார்கள் என்பதை விளங்கிக் கொள்ள முடியாதிருந்த பொழுது, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் என்ன சொல்கின்றார்கள் என்பதை அருகில் இருந்த ஒருவரிடம் அஸ்மா (ரலி) அவர்கள் கேட்டுத் தெரிந்து கொண்டார்கள். கீழ்க்கண்ட ஹதீஸை அஸ்மா (ரலி) அவர்களே இங்கு அறிவிக்கின்றார்கள் :
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் (கிரகணத் தொழுகை முடிந்த பின்) எங்கள் மத்தியில் எழுந்து நின்று உரை நிகழ்த்தினார்கள், அப்பொழுது சோதனைகள் பற்றியும் இன்னும் மண்ணறையில் ஒருவன் சந்திக்கவிருக்கின்றவைகள் பற்றியும் உரை நிகழ்த்தினார்கள்.
புகாரி மற்றும் முஸ்லிம் ஆகிய ஹதீஸ் நூல்களில் அஸ்மா (ரலி) அறிவித்த இன்னுமொரு ஹதீஸ{ம் பதியப்பட்டுள்ளது.
இறைத்தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் ஒருமுறை சூரிய கிரகணம் ஏற்பட்டது. அப்பொழுது நான் என்னுடைய பணிகளை முடித்து விட்டு, பள்ளிக்கு வந்தேன். அப்பொழுது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் நின்று கொண்டு தொழுது கொண்டிருப்பதைப் பார்த்தேன், எனவே நானும் அவர்களுடன் இணைந்து கொண்டேன். நான் (சோர்வினால்) உட்கார்ந்து விடும் அளவுக்கு அவர்கள் மிக நீண்ட நேரம் நின்று தொழுது கொண்டிருந்தார்கள். (எனக்கு அருகில் இருந்த) ஒரு பெண்மணி மிகவும் பலவீனமாகவும், சோர்வாகவும் நின்று கொண்டிருந்ததைக் கண்ட நான், என்னை விட பலவீனமான அவரே நிற்கும் போது, நான் நின்று கொண்டு தொழுவதே நல்லது என நான் எனக்குள்ளே சொல்லிக் கொண்டு, நின்று கொண்டு தொழ முடிவெடுத்தேன். பின் அவர் (ஸல்), குனிந்து ருகூஉ செய்தார்கள், இன்னும் அதே நிலையிலேயே மிக நீண்ட நேரம் இருந்தார்கள், பின் தலைநிமிர்த்தி மீண்டும் மிக நீண்ட நேரம் அவ்வாறே நின்று கொண்டிருந்தார்கள், அதாவது இந்த நிலையைக் காணும் எவரும் இன்னும் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ருகூஉச் செய்யவில்லை என்று எண்ணம் கொள்வார். கிரகணம் விலகியதும் இறைத்தூதர் (ஸல்) அவர்களும் தொழுகையை முடித்துக் கொண்டார்கள். பின் அம்மா பஃத் என்று கூறி, இறைவனைப் புகழ்ந்தவர்களாக இறைத்தூதர் (ஸல்) அவர்கள் உரை நிகழ்த்தினார்கள். (ஃபத்ஹ{ல் பாரி, முஸ்லிம்)

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் வாழ்ந்த அந்த பொற்காலங்களில் வாழ்ந்த, முஸ்லிம் பெண்மணிகள் இஸ்லாமிய மார்க்க விவகாரங்களில் எந்தளவு கண்ணும் கருத்துமாக இருந்து வந்துள்ளார்கள் என்பதை மேற்கண்ட சம்பவம் நமக்கு விளக்குகின்றது. இன்னும் பாங்குச் சத்தம் கேட்டவுடன், அவர்கள் பள்ளிக்கு விரைந்து சென்று அங்கு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறுகின்ற கருத்துக்களையும், இன்னும் வழிகாட்டுதல்களையும், போதனைகளையும் செவிமடுத்துக் கொள்ள விரைந்த வரலாற்றை நாம் பார்க்க முடிகின்றது. பாத்திமா பின் கைஸ் (ரலி) இவர்கள் முதல் ஹிஜ்ரத் செய்த பெண்மணியும் கூட, இவர்கள் கூறுகின்றார்கள் :
மக்களை தொழுகைக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டது, எனவே நான் இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் தொழுவதற்காக பள்ளிக்கு விரைந்தேன், பெண்களின் அணியில் நான் முதல் வரிசையில் இருந்தேன், அந்த அணி ஆண்களது அணிக்கு பின்புறமாக நின்று கொண்டிருந்தது. (முஸ்லிம்)
எனவே, மேலே உள்ள சம்பவங்களிலிருந்து இறைத்தூதர் (ஸல்) அவர்களின் காலத்தில், அவர்களின் முழு அனுமதியுடன் பெண்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் பள்ளிக்குச் சென்று தொழுது வந்ததை நாம் ஊர்ஜிதப்படுத்திக் கொள்ள முடிகின்றது. ஒருமுறை பள்ளிக்குத் தொழ வந்த பெண் தாக்குதலுக்கு உள்ளான போதிலும், அதன் காரணமாகக் கூட இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பெண்கள் பள்ளிக்கு வர வேண்டாம் என்ற முடிவை எடுத்து விடவில்லை. எனினும், அந்தச் சம்பவம் நடந்திருந்த போதிலும், இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பெண்களை பள்ளிக்கு வர அனுமதித்தார்கள், அவர்களைத் தடை செய்தவற்கு ஆண்களுக்கு அனுமதி வழங்கவும் இல்லை. இதன் மூலம் பெண்கள் பல்வேறு சிறப்பு நன்மைகளைப் பெற்றுக் கொள்கின்றார்கள், அப்பொழுது பள்ளியில் நடைபெறும் உரையாடல்கள், அறிவுரைகளைச் செவிமடுத்து, ஆன்மீக ரீதியாகவும், உள ரீதியாகவும் தங்களைப் பக்குவப்படுத்திக் கொள்கின்றார்கள்.
வாயில் அல் கின்தி (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் :
அதிகாலைத் தொழுகை நேரத்தின் பொழுது, பள்ளிக்கு (தொழ) வந்து கொண்டிருந்த ஒரு பெண்ணை, இருள் கவ்வியிருந்த அந்த நேரத்தில் ஒரு மனிதன் தாக்கி விட்டான். அவள் கத்தி அருகில் சென்று கொண்டிருந்தவர்களைத் துணைக்கு அழைத்தாள். அருகில் சென்று கொண்டிருந்தவர்கள் துணைக்கழைத்த பெண்ணை நோக்கி உதவிக்கு வந்த சமயத்தில், அந்த மனிதன் தப்பி விட்டான். அப்பொழுது, (அப்பாவியான) ஒரு மனிதனை (குற்றவாளி என நினைத்து) அவள் முன் நிறுத்தினார்கள். (இன்னும்) அவனை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் முன் நிறுத்திய பொழுது, இந்தப் பெண் உதவிக்கு அழைத்த பொழுது நான் தான் முதல் ஆளாகச் சென்று உதவிக்குச் சென்றேன், என்னையே பிடித்து வந்து விட்டார்கள் என்றார். அப்பொழுது அந்தப் பெண், இவன் பொய் சொல்கின்றான், இவன் தான் என்னைத் தாக்கினான் என்றாள். இவனைப் அப்புறப்படுத்தி, இவன் மீது கல்லெறியுங்கள் என்று கூறினார்கள். அப்பொழுது ஒரு மனிதர் எழுந்து வந்து, அவனைக் கல்லெறிய வேண்டாம், நான் தான் அந்தக் காரியத்தைச் செய்தேன் என்மீது கல்லெறியுங்கள் என்று கூறினான். இப்பொழுது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் முன் மூவர் நின்று கொண்டிருக்கின்றார்கள், முதலாமவர், தாக்குதலுக்குள்ளான அந்தப் பெண், இரண்டாவது உதவிக்கு விரைந்த அந்த நபர், மூன்றாவது தாக்கிய அந்த மனிதர். தாக்கிய அந்த மனிதனைப் பார்த்து இறைத்தூதர் (ஸல்) அவர்கள் உன்னைப் பொறுத்தவரை இறைவன் உன்னை மன்னித்து விட்டான் எனக் கூறினார்கள், இன்னும் உதவிக்கு விரைந்த அந்த மனிதனைப் பார்த்து கனிவான வார்த்தைகளைக் கூறினார்கள். அப்பொழுது உமர் (ரலி) அவர்கள், மக்களைப் பார்த்து இந்த மனிதனை அழைத்துச் சென்று தண்டனையை நிறைவேற்றுங்கள் என்று கூறினார்கள், உடன் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் (தலையிட்டு), வேண்டாம்! அல்லாஹ் அவனது பாவ இறைஞ்சுதலை ஏற்றுக் கொண்டான், பாவப் பிராயச்சித்தமே (தண்டனை வழங்குவதைக் காட்டிலும்) மிகச் சிறந்தது, மதீனத்து மக்கள் இந்த முறையில் பாவப்பிரயச்சமடைந்து கொள்ளவதைக் கடைபிடிக்கட்டும், அதை அவர்கள் மூலம் நான் ஏற்றுக் கொள்ளவும் செய்கின்றேன் என்றும் கூறினார்கள். (அஹ்மத்)

அவள் ஜகாத் வழங்குவாள்
முஸ்லிம் பெண்மணி தன்னுடைய செல்வத்திலிருந்து ஜகாத் வழங்குகின்றவளாக இருப்பாள். அவள் ஜகாத் கொடுக்க வேண்டிய அளவு செல்வத்தை வைத்திருந்தாள் என்றால் அவள் ஜகாத் கொடுப்பதற்குத் தகுதி வாய்ந்தவளாக ஆகி விடுகின்றாள். ஒவ்வொரு வருடமும் நிர்ணயிக்கப்பட்ட காலத்தில் ஜகாத்தை முறைப்படி கணக்கிட்டு வழங்க வேண்டும். பெண் என்ற காரணத்திற்காக இஸ்லாம் இந்த ஜகாத் விஷயத்தில் எந்தவித தனிச் சலுகையையும் வழங்காது. உண்மையான முஸ்லிம் பெண்மணி ஜகாத் வழங்கும் விஷயத்தில் எந்தவித சாக்குப் போக்குகளையும் தேட மாட்டாள்.
வசதிகளையும் வாய்ப்புகளையும் பெற்றிருக்கின்ற அனைத்து ஆண் பெண் முஸ்லிம்களின் மீதும் இறைவன் ஜகாத் என்ற கடமையை விதித்ததோடல்லாமல், அதனை கட்டாயம் நிறைவேற்றியாக வேண்டிய வணக்க வழிபாடாகவும் ஆக்கி வைத்திருக்கின்றான். இஸ்லாமிய ஆட்சியானது ஆட்சிப் பொறுப்பில் இருந்ததென்றால், இவ்வாறு ஜகாத் கொடுப்பதற்குத் தகுதி இருந்தும், ஜகாத்தை முறைப்படி கணக்கிட்டு வழங்காமல் இருப்பவர்களுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்து, அவர்களின் மீது இறைநிராகரிப்புக் குற்றமும் சுமத்தி, அவர்கள் இஸ்லாத்தை விட்டும் வெளியேறி விட்டவர்கள் என்ற நிலையில் அவர்களைக் கொலை செய்யக் கூட அரசுக்கு உரிமை உண்டு.
இவ்வாறு ஜகாத் கொடுக்க மறுத்தவர்களுக்கு எதிராக அபுபக்கர் (ரலி) அவர்கள் அறிவித்த அந்த போர்ப் பிரகடனம் இன்றும் இஸ்லாமிய வரலாற்று ஏடுகளில் ஒலித்துக் கொண்டிருப்பதை நாம் காண முடிகின்றது. இறைவன் மீது சத்தியமாக! யார் தொழுகைக்கும் ஜகாத்திற்கும் இடையில் வேற்றுமையை உண்டாக்கினார்களோ, அவர்களுக்கு எதிராக நான் போர்ப் பிரகடனம் செய்வேன் என்று அபுபக்கர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
அபுபக்கர் (ரலி) அவர்களின் இந்த அறிவிப்பு, ஆன்மீகத்திற்கும் உலக வாழ்வுக்கும் இடையே இஸ்லாம் எந்தளவு ஒரு இணைப்பை ஏற்படுத்தி வைத்திருக்கின்றது என்பதையும், இஸ்லாத்தின் இந்த அடிப்படைக் கோட்பாடுகளின் மீது அபுபக்கர் (ரலி) அவர்களுக்கு இருந்த அந்த ஆழ்ந்த புலமையையும் மேலே உள்ள அவர்களது அறிவிப்பு நமக்கு உணர்த்துவதாக அமைந்துள்ளது.
குர்ஆன் மற்றும் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் பல அறிவிப்புகள் தொழுகைக்கும், ஜகாத்திற்கும் இடையே உள்ள ஒற்றுமைகளையும், தொடர்புகளைப் பற்றியும் நமக்கு இன்றும் தௌ;ளத் தெளிவாக அறிவித்துக் கொண்டிருக்கின்றன.
நிச்சயமாக உங்களுக்கு உற்ற நண்பர்கள்; அல்லாஹ்வும், அவனுடைய தூதரும்;. எவர் ஈமான் கொண்டு, தொழுகையைக் கடைப்பிடித்து, ஜகாத்தும் கொடுத்து, (அல்லாஹ்வின் கட்டளைக்கு எந்நேரமும்) தலைசாய்த்தும் வருகிறார்களோ அவர்கள்தாம்.(5:55)
தொழுகையைக் கடைப் பிடியுங்கள்; ஜகாத்தையும் (ஒழுங்காகக்) கொடுத்து வாருங்கள்; ருகூஃ செய்வோரோடு சேர்ந்து நீங்களும் ருகூஃ செய்யுங்கள்.(2:43)
யார் ஈமான் கொண்டு, நற் கருமங்களைச் செய்து, தொழுகையை நியமமாகக் கடைப் பிடித்து, ஜகாத்தும் கொடுத்து வருகிறார்களோ, நிச்சயமாக அவர்களுக்கு அவர்களுடைய இறைவனிடத்தில் நற்கூலி இருக்கிறது. அவர்களுக்கு அச்சமுமில்லை அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.(2:277)
மேலே உள்ள வசனங்களின்படி இஸ்லாம் பெண்கள் தங்களது சொத்துக்களைச் சுதந்திரமாக வைத்துக் கொள்வதற்கும், இன்னும் அவற்றை தங்களது இஷ்டம் போல் தங்களுக்குப் பிடித்தமான வகைகளில் செலவு செய்வதற்கும் இன்னும் தங்களுக்கு விருப்பமானவர்களுக்கு அதன் மூலம் உதவிக் கொள்வதற்கும் பூரணச் சுதந்திரம் அளித்திருக்கும் அதேவேளையில், தன்னுடைய சொத்திலிருந்து தன்னுடைய மற்றும் இன்னும் பிறருக்கு செலவு செய்ய வேண்டும் என்ற கட்டாயத்தை ஏற்படுத்தவில்லை, ஏனெனில், குடும்பம் மற்றும் அதன் பராமரிப்பு, உணவு, உடை இன்னும் பிற தேவைகளுக்கான தேவைகளுக்கான செலவுகளை ஏற்கும் பொறுப்பை ஆண்கள் மீது இஸ்லாம் பொறுப்புச் சுமத்தி உள்ளதே ஒழிய, பெண்கள் மீது சுமத்தி இருக்கவில்லை. எனவே இஸ்லாமிய சட்ட வரம்புகள் காட்டி இருக்கின்ற வகைகளுக்கு பெண்கள் செலவு செய்ய வேண்டும் இன்னும் தன்னிடம் இருக்கக் கூடிய சொத்துக்களிலிருந்து ஜகாத்தையும் அவள் வழங்குவதற்கு எந்தவித தயக்கமும் காட்டக் கூடாது.
இன்னும் நான் பெண்ணாக இருக்கின்ற காரணத்தினால் நான் யாருக்கும் எந்தச் செலவுகளையும் செய்யத் தேவையில்லை என்றும் அவள் கூறலாகாது. மாறாக, அவ்வாறு அவள் கூறும்பட்சத்தில் அவள் இஸ்லாமிய சட்ட வரம்புகளை மிகக் குறைவாக மதிப்பிட்டிருக்கின்றாள் அல்லது புரிந்திருக்கின்றாள் என்பதே அர்த்தமாகும்.
நான் இஸ்லாம் காட்டியிருக்கின்ற ஏனைய அமல்களில் சிறப்புக் கவனம் செலுத்தக் கூடியவள் என்று காட்டிக் கொண்டு, செலவு செய்ய வேண்டும் என்று வரும் பொழுது மட்டும் அதிலிருந்து பின்வாங்குவது என்பது, அவளுக்கு இருக்கின்ற குறைவான இஸ்லாமிய மார்க்க அறிவைத் தான் அது வெளிப்படுத்தக் கூடியதாக இருக்கும்.
அவள் (ரமளான் மாதங்களில் பகலில்) நோன்பிருப்பாள், இரவில் நின்று தொழுவாள்

ரமளான் மாதத்தின் பகல் காலங்களில் நோன்பிருக்கக் கூடிய பெண்மணியின் ஆன்மாவானது இறைநம்பிக்கையால் பூத்துக் குலுங்கக் கூடியதாக இருக்கும். அதாவது,
எவரொரு இறைவனுடைய அருட்கொடைகளை எதிர்பார்த்தும் இன்னும் பாவ மன்னிப்பைப் பெற்றுக் கொள்வதை எதிர்நோக்கி யார் நோன்பிருக்கின்றாரோ அவரது முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. (புகாரீ)
இன்னும் நோன்பின் மூலம் கிடைக்கக் கூடிய வெகுமதிகளைத் தடை செய்யக் கூடிய அம்சங்களிலிருந்து யார் தவிர்ந்து கொண்டு, இறைவனது அருட்கொடைகளை முழுமையாகப் பெற்றுக் கொள்ள அவள் முயற்சி செய்யக் கூடியவளாக இருப்பாள்.
உங்களில் யார் நோன்பு வைத்திருக்கின்றாரோ அவர் கெட்ட வார்த்தைகளைப் பேச வேண்டாம் அல்லது கோபத்த்தால் அவரது சப்தத்தை உயர்த்த வேண்டாம். யாராவது அவரிடம் வம்புக்கு வந்தால் அல்லது சண்டையிட வந்தால், நான் நோன்பு வைத்திருக்கின்றேன் என்று அவர் கூறட்டும். (புகாரீ)
யார் கெட்ட பேச்சுக்களையும் இன்னும் கெட்ட செயல்களையும் விட்டு விடவில்லையோ, அவன் பசித்திருப்பது அல்லது தாகித்திருப்பதனால் அல்லாஹ் எந்தத் தேவையுமற்றவன். (ஃபத்ஹ{ல் பாரி 4ஃ116)
நோன்பு காலத்தை அடைந்து கொண்ட ஒரு பெண்மணி நாம் முந்தைய மாதங்களை விட மிகச் சிறப்பு வாய்ந்த மாதத்தில் நுழைந்திருக்கின்றோம் என்ற உணர்வு அவளுக்கு மேலிட வேண்டும். இந்த காலங்களில் மன்னிப்பின் கதவுகள் திறக்கப்படுகின்றன. சுவனச் சோலைகளின் வாசல்கள் நமக்ககாக் காத்திருக்கின்றன. இன்னும் ரமளான் மாதத்தில் நோற்கப்படுகின்ற நோன்பானது அல்லாஹ்வின் திருப்பொருத்தத்திற்காக வைக்கப்படுகின்ற நோன்பாக இருக்கின்றது. அதற்கு அல்லாஹ்வே கூலி கொடுக்கக் கூடியவனாக இருக்கின்றான்.
ஒவ்வொரு நன்மையான காரியத்திற்கும் பத்து முதல் எழுநூறு மடங்க வரை கூலி கொடுக்கப்படுகின்றது. நோன்பு எனக்குரியது. அதற்கு நானே கூலி கொடுப்பேன் என்று அல்லாஹ் கூறுகின்றான். நோன்பு நரகத்திலிருந்து பாதுகாக்கும் கேடயமாகும். நோன்பாளிகளின் வாய் நாற்றம் அல்லாஹ்விடம் கஸ்தூரியின் நறுமணத்தை விட சிறந்ததாகும். அறிவிப்பவர் : அபூஹ{ரைரா (ரலி) நூல் : திர்மிதீ.
எனவே காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ள வேண்டும் என்ற பழமொழிக்கு ஏற்ப ரமளான் மாதத்தை அடைந்து கொண்டவர்கள், அந்த மாதத்தை இறைவனது மன்னிப்பை பெற்று, அவனது விருப்பமான அடியாராக மாறிக் கொள்ள கடும் முயற்சிகளை மேற்கொள்ளல் வேண்டும்.
இன்னும் வணக்க வழிபாடுகளிலே ஈடுபடுகின்றோம் என்ற சாக்கில் தனக்கிருக்கின்ற கடமைகளை அவள் மறந்த வண்ணம் இருந்து விடக் கூடாது. அதிலிருந்து தவறி விடவும் கூடாது. ரமளானினுடைய இரவு நேரங்கள் என்பது இறைவனது வணக்க வழிபாடுகளில் அதிகக் கூலியைப் பெற்றுத் தரக் கூடியதாக இருப்பதன் காரணத்தினால், அந்த இரவுகளை குடும்பத்தவர்களுடன் அரட்டை மற்றும் நண்பிகளுடன் அரட்டை மற்றும் பொழுது போக்குகளில் கழித்து விடாமல், இறைவனுடைய அருட்கொடைகள் சூழ்ந்திருக்கும் அந்த இரவுகளை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
யார் இறைவனுடைய பாவமன்னிப்பை எதிர்பார்த்தும் , நன்மையை எதிர்பார்த்தும் ரமளானின் இரவு நேரங்களில் வணக்க வழிபாடுகளில் ஈடுபடுகின்றார்களோ, அவர்களது முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. (புகாரீ, முஸ்லிம்)
ரமளானின் மற்ற நாட்களைக் காட்டிலும் இறுதிப் பத்து நாட்களில் அதிகமதிகம் அமல்கள் செய்து கொள்ள முற்படுங்கள் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அறிவுறுத்தி உள்ளார்கள்.

ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் :
ரமளானின் இரவுப் பத்து வந்து விட்டால் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மற்ற நாட்களைக் காட்டிலும் இரவு நேரங்களில் அதிகமதிகம் வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவதோடு தங்களுடைய குடும்பத்தவர்களையும் அதிகமதிகம் அமல்களில் ஈடுபடத் தூண்டுவதோடு, அந்தக் காலங்களில் உடலுறவு போன்றவற்றிலிருந்தும் அவர்கள் விலகி இருக்கக் கூடியவர்களாக இருப்பார்கள். (புகாரீ, முஸ்லிம்)
இன்னும் இறுதிப்பத்தில் இருக்கக் கூடிய லைலத்துல் கத்ர் என்ற இரவைப் பெற்றுக் கொள்வதற்கு, ஒற்றைப்படை எண்ணுள்ள நாட்களில் அதிகமதிகம் அமல்களில் ஈடுபடுமாறு நம்மை ஆர்வப்படுத்தி உள்ளார்கள்.
இறைநம்பிக்கையின் காரணமாகவும், இறைவனுடைய அருட்கொடைகளைப் பெற்றுக் கொள்வதன் காரணமாகவும் யார் லைலத்துல் கத்ர் இரவை வணக்க வழிபாடுகளில் கழிக்கின்றாரோ, அவரது முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. (புகாரீ, முஸ்லிம்)
உள்ளும், புறமும்
உணவு முறைகள்
முஸ்லிம் பெண்மணி தனது உடல் நிலையைச் சீராக வைத்துக் கொள்வதன் மூலம், உடல் நிலையிலும், மன நிலையிலும் நல்லதொரு ஆரோக்கியத்தைப் பேண முயற்சி செய்தல் வேண்டும். அவள் எப்பொழுதும் சுறுசுறுப்பாகச் செயல்படக் கூடியவளாக இருக்க வேண்டுமே தவிர, அதிக எடையுடன் செயலற்ற தன்மையுடன் இருக்கக் கூடாது. எனவே, அவள் தனது உணவுப் பழக்கத்தை கட்டுப்பாட்டுடன் பேண வேண்டியது அவசியமாகும். அவள் தனது உடலை ஆரோக்கியமாகவும், திடகாத்திரமாகவும் வைத்துக் கொள்ளும் அளவுக்கு உணவை எடுத்துக் கொண்டால் போதுமானது. இது எமது அறிவுரைகள் மட்டுமல்ல, அல்லாஹ் தனது திருமறையிலேயே உடல் ஆரோக்கியத்தைப் பேணிக் கொள்வதற்கு எத்தகைய உணவுப் பழக்க முறைகைளைப் பேண வேண்டும் என்பது குறித்துக் கூறியுள்ளான்.
உண்ணுங்கள், பருகுங்கள்; எனினும் வீண் விரயம் செய்யாதீர்கள். ஏனெனில் அல்லாஹ் அளவு கடந்து (வீண்) விரயம் செய்பவர்களை நேசிப்பதில்லை. (7:31)
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
ஆதத்தின் மகன் வயிற்றைக் காட்டிலும் மிக மோசமான பாத்திரம் எதனையும் பெற்றிருக்கவில்லை, ஆனால் நீங்கள் உணவருந்த விரும்பினால், மூன்றில் ஒரு பாகத்தை உணவுக்காகவும், இன்னுமொரு பாகத்தை நீருக்காகவும், இன்னுமொரு பாகத்தை மூச்சு விடுவதற்காகவும் ஒதுக்கிக் கொள்ளவும்.
உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள் :
உங்கள் வயிற்றை நிரப்புவதனின்றும் நீங்கள் கவனமாக இருந்து கொள்ளுங்கள், அது உங்களது உடலுக்கு தீங்கை விளைவிக்கக் கூடியது, நோயையும், இன்னும் வணக்க வழிபாடுகளில் சோம்பேறித்தனத்தையும் தரக் கூடியது. உடல் ஆரோக்கியத்திற்கு சீரான உணவுப் பழக்கத்தை மேற்கொள்ளுங்கள், அது உங்களது உடலுக்கு ஆரோக்கியத்தையும் இன்னும் அதிகப்படியானவற்றை நீக்கவும் செய்யும். மித மிஞ்சிய ஆடம்பரத்தனத்தால் விளைந்த கொழுப்புப் பிடித்த உடம்பைக் கொண்டவனை இறைவன் வெறுக்கின்றான்.
இன்றைக்கு நவநாகரீகம் என்று சொல்லிக் கொண்டு, தங்களது உடலை மிணுமிணுப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக, தேவையற்ற மருந்துகளை உபயோகிப்பது, இன்னும் நாளமில்லாச் சுரப்பிகளைத் தூண்டக் கூடிய மருந்துகளை உட்கொள்வது என்பது பரவலாக பெண்கள் சமுதாயத்த்தில் இப்பொழுது காணப்பட்டு வருகின்றது. மருத்துவரின் பரிந்துரையின்றி, தேவையற்ற இத்தகைய அநாச்சாரங்களில் இருந்து முஸ்லிம் பெண்கள் தவிர்ந்து கொள்ள வேண்டும்.
இன்னும் பெண்களில் பலர் இரவில் வெகுநேரம் விழித்திருந்து சினிமா, கதை, அரட்டை என இரவைக் கழிக்கின்றனர். இது அல்லாஹ்வும், அவனது தூதர் (ஸல்) அவர்களும் காட்டித் தந்த வழிமுறைக்கு மாற்றமானது. நீங்கள் உங்களது இரவுத் தூக்கத்தை விரைவாக ஆக்கிக் கொண்டு, அதே போல அதிகாலையில் விரைவாக எழுந்திருந்து காலைக் கடமைகளை சுறுசுறுப்புடன் பணியாற்றுவதற்கு உங்களைப் பழக்கிக் கொள்ளுங்கள். இரவில் அதிக நேரம் விழித்திருப்பதன் மூலம் உங்களது ஆரோக்கியத்தைக் கெடுத்துக் கொள்ளாதீர்கள், இத்தகைய கெட்ட பழக்கம் உங்களது வாழ்வில் தலை காட்ட விடாதீர்கள். இத்தகைய பழக்கங்கள் மூலம், நீங்கள் வீட்டில் எப்பொழுதும் துடிப்போடு செயல்படுவதோடு, வீட்டுப் பணிகள் உங்களை சோர்வடையச் செய்யாதிருக்கும். உங்களுக்கென உள்ள அந்தப் பணிகள் நிறைவோடு முடித்து விட அது துணை செய்யும்.
பலமில்லாத இறைநம்பிக்கையாளனைக் காட்டிலும், நல்ல பலசாலியான இறைநம்பிக்கையாளனைத் தான் அல்லாஹ் விரும்புகின்றான் என்பதை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் நமக்குக் காட்டித் தந்துள்ளார்கள். எனவே நீங்கள் உங்களது உடலை எப்பொழுதும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதன் மூலம், திடகாத்திரமான நல்ல வாழ்வை மேற்கொள்ள இயலும்.
தினமும் உடற்பயிற்சி செய்வது
முஸ்லிம் பெண்மணி தன்னை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதோடு, உடல் பலமிக்கவளாகவும் வைத்துக் கொள்ள வேண்டும். இதற்கு ஆரோக்கியமான உணவுகளையும், பானங்களையும் எடுத்துக் கொண்டால் மட்டும் போதாது, தினமும் வழக்கமாக செய்யக் கூடிய அளவில், உடற்பயிற்சி முறைகளை வகுத்துச் செயல்பட வேண்டும். இதனை அவரவர் உடல் நிலைக்குத் தக்கவாறும், வயது மற்றும் சமூக நிலைக்குத் தக்கவாறும் தேர்ந்தெடுத்த சில உடற்பயிற்சி முறைகளைக் கற்றுக் கொண்டு, அவற்றை தினமும் செய்து வருவது நல்லது. இதன் மூலம் உங்களது உடம்பு ஆரோக்கியமாக பலமாக, அழகாக, நோய் எதிர்ப்புத் திறன் பெற்றதாக இருப்பதுடன், உங்களது அன்றாடப் பணிகளை மிக எளிதாகவும், சோர்வின்றியும் நிறைவேற்றத் துணை புரிவதோடு, உங்களது வாழ்க்கையில் ஏற்படக் கூடிய பல்வேறு தாக்கங்களை தாங்கக் கூடிய மனநிலையையும் அது தோற்றுவிக்கும்.

உடலும், ஆடையும் சுத்தமாக இருக்கட்டும்
நீங்கள் உண்மையிலேயே இஸ்லாத்தைப் பூரணமாகப் பின்பற்றத் துடிக்கின்ற பெண்மணியாக இருப்பின், உங்களது உடலையும், ஆடையையும் சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் காட்டித் தந்த வழிமுறைப்படி உங்களது குளியல் முறைகளை கடைபிடித்துக் கொள்ளுங்கள். குளிப்பதன் மூலம் உங்களது உடலை சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ளுங்கள், இன்னும் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் வெள்ளிக் கிழமையன்று கண்டிப்பாகக் குளிப்பதை வலியுறுத்தி இருக்கின்றார்கள். வெள்ளிக் கிழமை தினத்தில் நீங்கள் குளிப்புக் கடமையுடைய அல்லது தொடக்குடைய அல்லது உதிரப் போக்கு உள்ளவர்களாக இருந்தாலும் உங்களது தலையைத் தண்ணீரைக் கொண்டு தடவி விட்டுக் கொள்ளுங்கள். வாசனைத் திரவியத்தை அணிந்து கொள்ளுங்கள். (வீட்டில் இருக்கும் போது மட்டும் தான் பெண்கள் வாசனைத் திரவியம் பூசிக் கொள்ள வேண்டும். வெளியில் செல்லும் பொழுது வாசனைத் திரவியம், வாசனைப் பூக்கள் அணிந்து கொண்டு செல்வதை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தடுத்துள்ளார்கள் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.)
வெள்ளிக் கிழமை தொழுகையை நிறைவேற்றும் பொருட்டு, குழுமக் கூடிய முஸ்லிம்கள், கட்டயமாக குளித்துக் கொள்ளட்டும். (அப்துல் இப்னு உமர் (ரலி), இப்னு ஹிப்பான்)
கடமையான வெள்ளிக் கிழமை தொழுகையைத் தொழ வருகின்றவர்கள், குளித்து தங்களைத் தூய்மைப்படுததிக் கொள்வதை சில இமாம்கள் கட்டாயக் கடமை என்று கருத்துத் தெரிவித்து உள்ளார்கள்.
வாரம் ஒருமுறையாவது, ஒரு முஸ்லிம் குளிப்பதுடன், அவர் தனது தலையையும், உடலையும் சுத்தப்படுத்திக் கொள்ளட்டும். (ஸர்ஹ{ஸ் ஸ{ன்னா 2-166)
சுத்தம் என்பது பெண்களைப் பொறுத்தவரை மிகவும் அத்தியாவசியமானதொன்று. இது அவளது குணநலன்களை வெளிப்படுத்திக் காட்டுவதோடு, தன் குடும்பத்தார் மற்றும் உறவினர்களால் மதிக்கப்படவும், கணவரால் விரும்பக் கூடிய நற்பேற்றைப் பெற்றுத் தரும்.
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஒருமுறை எங்களிடம் வருகை தந்தார்கள். அப்பொழுது ஒரு மனிதர் அழுக்கடைந்த ஆடைகளை அணிந்திருந்ததைப் பார்த்து விட்டு, இவர் தனது உடைகளைச் சுத்தப்படுத்திக் கொள்வதற்கு எதனையும் பெற்றிருக்கவில்லையா? என்று கேட்டார்கள். (அஹமது, நஸஈ - ஜாபிர் இப்னு அப்துல்லா (ரலி)
இன்னும் அழுக்கடைந்த ஆடைகளை சுத்தப்படுத்திக் கொள்வதற்கு வாய்ப்பிருந்தும், அந்த அழுக்கடைந்த ஆடைகளுடன் மக்கள் நடமாடும் இடங்களில் வருகை தருவதையும், அவர்களைப் பார்ப்பதையும் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் வெறுத்தார்கள். இதன் காரணமென்னவெனில், இறைநம்பிக்கையாளர்களான முஸ்லிம்கள் எப்பொழுதும் தங்களைச் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும், இன்னும் அவர்கள் பார்ப்பதற்கு எடுப்பாகவும், மனதைக் கவரக் கூடிய விதத்தில் இருக்க வேண்டுமே ஒழிய, பிறருக்கு வெறுப்பை உண்டாக்கும் விதத்தில் இருக்கக் கூடாது.
இந்த அறிவுரைகள் ஆண்களைத் தான் குறிக்கின்றதெனினும், இந்த அறிவுரைகள் பெண்களுக்கும் மிகச் சரியாகப் பொருந்தும். ஏனெனில், வீட்டு வேலைகள் மற்றும், பிள்ளைகள், கணவனோடு சந்தோசமாக இருக்கக் கூடிய தருணங்கள் என்று அசுத்தத்தை சுமந்து கொள்ளக் கூடிய தருணங்கள் ஏராளம். எனவே, அவள் தன்னைத் தூய்மைப்படுத்திக் கொள்வதோடு, தன்னுடைய வீட்டையும், வீட்டுப் பொருட்களையும் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். நீங்கள் எந்தளவுக்கு தூய்மையுடன் இருக்கின்றீர்களோ, அத்தகைய தூய்மையானது உங்களது கணவன் மற்றும் பிள்ளைகள் மீது எதிரொலிக்கக் கூடியதாக இருக்கும். அதன் மூலம் நீங்கள் எப்படிப்பட்டவர் என்பதையும் அறிந்து கொள்ள முடியும்.
சுத்தம் என்றால் என்ன? என்றறியாத நாகரீகம் வளர்ந்திராத அந்த 1400 ஆண்டு காலத்திற்கு முன் உள்ள இந்த உலக வரலாற்றில், இஸ்லாம் மட்டுமே சுத்தத்தைப் பற்றியும், குளிப்பு பற்றியும் அதன் பழக்க வழக்கங்கள் பற்றியும் தன்னைப் பின்பற்றிய மக்களுக்குக் கற்றுக் கொடுத்திருந்தது. 1400 வருடங்களுக்கு முன் இஸ்லாம் அடைந்து விட்ட சாதனையை இன்றளவும், மற்றைய சமுதாயங்கள் தொட்டுக் கூடப் பார்த்ததில்லை என்பது தான் வரலாறு.
சமீஹா ஏ. வர்தீ என்ற எழுத்தாளர் எழுதிய மின் அல்-ரிக் இலல்-சய்யதா என்ற நூலில் அவர் இவ்வாறு குறிப்பிடுகின்றார் : இஸ்லாம் 1400 வருடங்களுக்கு முன் அடைந்த அந்த சாதனையை ஒப்பிட்டுப் பார்ப்பதற்கும், இன்னும் இவ்வளவு காலம் கடந்தும் கூட மற்ற நாகரீகங்கள் சுத்தத்தில் எவ்வாறு பிற்போக்காக இருந்தன என்பது பற்றி நீங்கள் அறிந்து கொள்ள, சிலுவை யுத்த காலத்திற்குச் செல்ல வேண்டியதில்லை. சற்று முன் சென்று விட்ட நூற்றாண்டுகளில் நடந்தவைகளை உற்று நோக்கினாலே போதுமானது. உதுமானிய சாம்ராஜ்யத்தையும், அது கோலோச்சிய காலத்தில் இருந்து ஐரோப்பிய நாகரீகத்தையும் ஒப்பிட்டுப் பார்ப்போம்.
1624ல் பிராண்டிபோக் - ன் இளவரசர் வைத்த விருந்திற்கு, இளவரசர்களுக்கும் முக்கியஸ்தர்களுக்கும் அவர் அனுப்பி வைத்த அழைப்பிதழில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார் : உணவருந்தும் தட்டில் முழங்கை வரைக்கு நுழைக்கக் கூடாது என்றும், உணவுப் பொருட்களை தங்களுக்குப் பின்னால் தூக்கி எறியக் கூடாது என்றும், விரல்களைச் சப்பக் கூடாது என்றும், உணவருந்தும் தட்டில் துப்பக் கூடாது என்றும், மூக்கைச் சிந்தி மேஜை விரிப்பின் ஓரங்களில் தடவக் கூடாது என்றும் அந்த அழைப்பிதழில் குறிப்பிட்டிருந்தார்.

மேலே உள்ள விபரங்களில் இருந்து, சற்று முன் உள்ள நூற்றாண்டுகளில் ஐரோப்பியர்கள் எந்தளவு நாகரீகம், பண்பாடு, பழக்க வழக்கங்களில் தேய்ந்து போயிருந்தார்கள் என்பதை அறிந்து கொள்ள முடிகின்றது. இன்னும் ஐரோப்பாவின் பிற பகுதிகளில் கூட இதனை விட வித்தியாசமாக ஒன்றும் இருந்துவிடவில்லை. இங்கிலாந்தின் மன்னர் ஜார்ஜ் (1), பிரான்சில் தயாரிக்கப்பட்ட லேஸ் வைக்கப்பட்ட விலையுயர்ந்த ஆடைகளை அணிந்திருந்தும், மன்னரிடமிருந்தும் மன்னர் குடும்பத்தவர்களிடமிருந்தும் துர்நாற்றம் வீசிக் கொண்டிருந்தது. இது ஐரோப்பாவின் நிலை.
அதே நேரத்தில் இஸ்தான்புல் இஸ்லாமிய உதுமானிய கிலாபத்தினால் அங்கீகரிக்கப்பட்ட தூதுவர்கள், கலீஃபாவை சந்திக்கு முன்பாக அவர்களை, குளியல் தொட்டில் குளிக்க வைத்த பிறகு தான் கலீஃபாவைச் சென்று சந்திக்க அனுமதி வழங்கப்பட்டனர். இன்னும் 1730 ல் சுல்தான் அஹ்மது (3) என்பவரது ஆட்சிக் காலத்தில் உதுமானிய சாம்ராஜ்யம் வீழ்ச்சியைச் சந்தித்துக் கொண்டிருந்த பொழுதும், அப்போது இஸ்தான்புல்லில் இருந்த ஆங்கிலேயத் தூதுவரது மனைவி லேடி மோண்டேகு என்பவர் எழுதிய கடிதம் பிற்காலத்தில் வெளியிடப்பட்ட பொழுது, அந்தக் கடிதத்தில் முஸ்லிம்களின் சுத்தம், நல்ல பழக்க வழக்கங்கள் மற்றும் உயர்ந்த குணநலன்கள் பற்றி எழுதி இருந்தது வெளியானது. இன்னும் அவர் தன் நினைவலைகளில் இருந்து ஒரு சம்பவத்தை எழுதுகின்றார், உதுமானிய சாம்ராஜ்ய இளவரசி ஹாஃபிதா என்பவர் கொடுத்த பரிசுப் பொருளான கைக்குட்டை (கைத் துண்டு)யை நான் அதிகம் விரும்பினேன், ஏன் அதனைக் கொண்டு எனது வாயைத் துடைப்பதற்குக் கூட எனக்கு மனது வருவதில்லை. இன்னும் முஸ்லிம்கள் சாப்பிடுவதற்கு முன்பும், சாப்பிட்ட பின்பும் கையைக் கழுவும் முறை குறித்து, ஐரோப்பியர்கள் ஆச்சரியப்பட்டுப் போனார்கள்.
இதனைத் தான் மிகச் சிறந்த மருத்துவ தாதியாகப் போற்றப்படும் ஃபுளாரன்ஸ் நைட்டிங் கேர்ள் தனது சரிதையில் சற்று முன் உள்ள நூற்றாண்டில் ஐரோப்பிய மருத்துவமனைகள் எவ்வாறு இருந்தது என்று குறிப்பிடும் பொழுது, அசுத்தங்களும், கவனிப்பாரற்ற போக்கும், ஒழுங்கீனங்களும் இன்னும் மருத்துவ மனைகளின் அறைகள் முழுவதும் நிறைந்திருந்த நோயாளிகளின் குரலுக்கும், இன்னும் அவர்களது இயற்கைத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு உதவக் கூட ஆள் இல்லாத நிலையும் தான் அங்கு நிலவியது.
இஸ்லாமிய நாகரீகத்திற்கும், இன்னும் ஏனைய நாகரீகங்களுக்கும் உள்ள வித்தியாசத்தை என்னவென்று சொல்வது!
வாயையும் பற்களையும் சுத்தமாக வைத்துக் கொள்ளல்
புத்திசாலியான இஸ்லாமியப் பெண் எப்பொழுதும் தனது வாயையும், பற்களையும் சுத்தமாக வைத்துக கொள்வாள். இன்னும் அவள் பிறரிடம் பேசும் பொழுது, வாயிலிருந்து துர்நாற்றம் எதுவும் வந்து விடாதவாறும், அது பிறரைத் துன்புறுத்தும் என்பதையும் அவள் உணர்ந்திருப்பாள். எனவே, அவள் எப்பொழுதும் தனது பற்களை மிஸ்வாக் செய்வது, அல்லது பிரஷ் கொண்டு பற்களைத் தேய்த்து சுத்தமாகவே வைத்திருப்பாள்.
பல் வேதனை மற்றும் தொந்திரவுகள் எதுவும் இல்லாதிருப்பினும், வருடம் ஒருமுறையாவது பல் மருத்துவரைச் சந்தித்து, மருத்துவ ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும். இதன் உறுதியான ஆரோக்கியமான பற்களைப் பெற்றுக் கொள்ள இயலும். இன்னும் முடியுமானால் கண், காது, மூக்கு, தொண்டை ஆகியவற்றிற்கான சிறப்பு மருத்துவர்களை அணுகியும் தனது உடல்நிலை குறித்து ஆலோசனை பெற்றுக் கொள்ள வேண்டும். உண்மையிலேயே இது பெண்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
புகாரியிலும், இன்னும் முஸ்லிம் ஆகிய ஹதீஸ் நூல்களில் கண்டுள்ளபடி, ஆயிஷா (ரலி) அவர்கள் தனது பற்களை எப்பொழுதும் மிஸ்வாக் கொண்டு துலக்குவதனின்றும் பொடுபோக்காக இருந்ததில்லை.
இன்னும் புகாரியில் நபித்தோழியர்களுள் ஒருவரான உர்வா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். ஆயிஷா (ரலி) அவர்கள் தனது அறையில் பல்துலக்கக் கூடியவர்களாக இருந்தார்கள் என அறிவிக்கின்றார்கள். (ஃபத்ஹ{ல் பாரி, 3-599, கிதாப் அல் உம்ரா)
பகலிலோ அல்லது இரவிலோ படுக்கையிலிருந்து எழுந்திருத்து விட்டால், ஒளுச் செய்வதற்கு முன் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மிஸ்வாக் செய்யாமல் இருக்க மாட்டார்கள். (அஹ்மத் 6-160, அபூதாவுது 1-46)
இன்னும் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் வாய் சுத்தம் பற்றி எந்தளவு அக்கறையுடையவர்களாக இருந்திருக்கின்றார்கள் என்று சொன்னால்,
எனது உம்மத்திற்கு அதிகப்படியான சுமையாக இருக்காது என்றிருந்தால், ஒவ்வொரு தொழுகைக்கு முன்பதாகவும் மிஸ்வாக் செய்ய நான் ஏவியிருப்பேன் என்ற கூறியுள்ளார்கள். (ஃபத்ஹ{ல் பாரி 2-374, முஸ்லிம் 3-143, கிதாப் அல் தகாரா, பாப் அல் சிவாக்)
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் வீட்டிற்குள் நுழையும் பொழுது என்ன செய்வார்கள் என்று ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேட்ட பொழுது, மிஸ்வாக் செய்வார்கள் என்று பதிலளித்தார்கள்.
இறைத்தூதர் (ஸல்) அவர்களும், இன்னும் அவர்களைப் பின்பற்றிய நேர்வழி பெற்றவர்களும் செய்து காட்டிய வழிமுறைகளை இன்று புறக்கணிக்கக் கூடியவர்களாக நமது பெண்மணிகள் மாறி விட்டதைத் தான் நாம் பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.
மேலே நாம் சுட்டிக் காட்டியுள்ள சுத்தம் சம்பந்தபட்ட விளக்கமெல்லாம் இஸ்லாத்தின் ஒழுக்க மாண்புகளில் உள்ளவையாகும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள், ஒழுக்கத்தைப் பூரணப்படுத்தவே நான் வந்திருக்கின்றேன் என்றார்கள். எனவே, ஒழுக்கம் சார்ந்த அத்தனையும் இஸ்லாத்தின் இதயம் போன்றவைகள். அத்தகைய பரிசுத்தத்தை உள்ளும், புறமும் பேண வேண்டியது ஒவ்வொரு முஸ்லிமின் அடிப்படைக் கடமையாகும்.

நீங்கள் வெங்காயமும், பூண்டும் சாப்பிட்ட நிலையில், அதன் வாடையுடன் பள்ளிவாசலை நெருங்காதீர்கள். எவையெல்லாம் ஆதத்தின் மகனை நோவினை செய்யுமோ, அவை யாவும் வானவர்களான மலக்குமார்களையும் நோவினை செய்யும். (முஸ்லிம், 5-50)
மேலே சுட்டிக் காட்டப்பட்டுள்ள மனிதர்களுக்கு அருவெறுப்பை ஊட்டக் கூடிய காய்கறிகளை உண்டு விட்டு மக்கள் ஒன்று கூடும் இடங்களுக்கு வருகை தர வேண்டாம் என்று மக்களை அறிவுறுத்தவதிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், அருவெறுப்பான அழுக்கான, கெட்ட வாடையுடன் வியர்வையுடன் கூடிய உடைகளுடன், வாய் நாற்றம் மிக்கவற்றுடனோ அலல்து சரியாகச் சுத்தம் செய்யப்படாத சாக்ஸ் - காலுறைகள் போன்றவற்றுடனோ மக்கள் கூடும் இடங்களுக்கு வருகை தர வேண்டாம் என்பதை இதன் மூலம் நான் விளங்கிக் கொள்ள முடிகின்றது.
அவள் தனது தலைமுடியைப் பேணிப் பாதுகாப்பாள்
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் முஸ்லிம்கள் ஒவ்வொருவரும் தனது தலைமுடியைப் பேணிப் பாதுகாக்க வேண்டும் என்றும், அவற்றை அழுகுறத் திருத்தி, இஸ்லாமிய வரம்புகள் மீறாத அளவுக்கு பேணிப் பாதுகாக்கும்படி அறிவுறுத்தியுள்ளார்கள்.
இறைத்தூதர் (ஸல்) கூறினார்கள் :
யாருக்கு முடி இருக்கின்றதோ, அவர் அதனை சரியாகப் பேணிக் கொள்ளட்டும். (அறிவிப்பாளர் : அபூஹ{ரைரா (ரலி), அபூதாவுது 4-108, கிதாபுல் தரஜ்ஜுல்)
இஸ்லாமானது ஒருவர் தனது தலைமுடியை நன்கு சுத்தப்படுத்தி பராமரித்து, அழகுற சீவி, தலைக்கு வாசனை அல்லது எண்ணெய் தேய்த்து, அதனை அழகுற அலங்கரித்துக் கொள்ளவே தூண்டுகின்றது.
தலைக்கு எண்ணெய் தேய்க்காமல், அதனை சீவி அழகு படுத்தாமல், தலைவிரி கோலமாக இருப்பதை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் விரும்பவில்லை. இத்தகைய அலங்கோலத்தை அவர்கள் ஷைத்தானுடன் தான் ஒப்பிட்டுக் கூறியுள்ளார்கள்.
அல் முவத்தா வில் முர்ஸலாக அறிவிக்கப்பட்டுள்ள ஒரு நபிமொழியில் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாகக் கீழ்க்கண்ட நபி மொழியை, இமாம் மாலிக் அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் அமர்ந்திருந்த வேளையில், தலைவாரப்படாத மற்றும் திருத்தப்படாத தாடியுடன் ஒரு மனிதர் பள்ளியினுள் நுழைந்தார். அப்பொழுது, அந்த மனிதரைச் சுட்டிக் காட்டி தலைமுடியையும், தாடியையும் சுத்தப்படுத்தி (திருத்தி) விட்டு வருமாறு கூறினார்கள். அந்த மனிதர் திரும்பிச் சென்று அவ்வாறே செய்து திரும்பி வந்தார். உங்களில் ஒருவர் தலைவாரப்படாமல் ஷைத்தான் போல வருவதைக் காட்டிலும், இவ்வாறு வருவது சிறந்ததில்லையா? என்று கேட்டார்கள். (அல் முவத்தா 2-949, முவையடி யட-ளாய’சஇ டியடி ளைடயா யட-ளாய’ச)
தலை முடியைச் சரிவரப் பராமரிக்காமல் தலைவிரிகோலமாகத் திரிவதை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் விரும்பாததைத் தான் மேற்கண்ட ஹதீஸ் நமக்கு உணர்த்துகின்றது. ஒரு மனிதரது குறையை சுட்டிக் காட்டுவது அல்லது விமர்சிப்பது இறைத்தூதர் (ஸல்) அவர்களது நோக்கமாக இருக்கவில்லை, மாறாக, அவரது பொடுபோக்குத் தன்மையை, தன்னைப் பற்றியே அக்கறை இல்லாத தன்மையைத் தான் அவர்கள் அங்கு சுட்டிக் காட்டுகின்றார்கள்.
ஒரு முறை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் எங்களைக் காண வந்திருந்தார்கள். அப்பொழுது (அங்கிருந்த) ஒருமனிதரது தலைமுடி (வாரப்படாமல், அவரது தலைமுடி) பல பாகங்களிலும் கலைந்திருந்தது. அதனைப் பார்த்த இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், அவரது தலைமுடியை சரி செய்வதற்கு அவரிடம் எதுவுமே இல்லையா? என்று கேட்டார்கள். (அஹ்மத் 3-357, நஸயீ 8-183)
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஆண்களைத்தான் மேற்கண்ட நபிமொழிகளில் சுட்டிக் காட்டியிருக்கின்றார்கள் என்றால், கணவனை மகிழ்விக்கவும், அவன் காணும் பொழுது அவனது மனம் உங்களிடம் அடைக்கலம் தேட வேண்டும் என்னும் அளவுக்கு உங்களிடம் பாசமாக, அன்பாக இன்னும் காதலுடன் உங்களுடன் கனிந்துருகுவதற்கு பெண்கள் எவ்வாறு தங்களது முடிகளைப் பேணிக் கொள்ள வேண்டும் என்பது தெரிகிறதல்லவா? பெண்களுக்கு தலையலங்காரமே ஒரு தனிக் கவர்ச்சியை உண்டு பண்ணக் கூடியது என்பதை நீங்களே அறிவீர்கள் அல்லவா? பின் அதனை எவ்வாறு பேணிக் கொள்ள வேண்டும் என்பதை இஸ்லாம் மார்க்கம் உங்களுக்கு எவ்வளவு தெளிவாக விளக்குகின்றது.
இது பூஜை புணஸ்காரங்களை மட்டும் செய்து விட்டு இறைவனுக்குச் சேவை செய்வதற்கு மட்டும் வந்த மார்க்கமல்ல, மாறாக, மனிதர்கள் மனிதர்களாக எவ்வாறு வாழ வேண்டும் என்று கற்றுக் கொடுக்க வந்த மார்க்கம் என்பது இதிலிருந்து புலனாகிறதல்லவா!!
நல்ல தோற்றம்
நல்ல முஸ்லிம் பெண்மணி தனது ஆடைகள் மற்றும் தோற்றத்தில் அக்கறை செலுத்தக் கூடியவளாக இருப்பாள் என்பது ஆச்சரியம் தரக் கூடியதல்ல. இன்னும் அவள் அழகுபடுத்துகின்றோம் என்று கூறிக் கொண்டு வரையறைகளை மீறிச் செல்லாமலும், இன்னும் தனது அழகை தனது கணவன், பிள்ளைகள், உடன் பிறந்தார்கள் இன்னும் திருமணம் முடிக்க அனுமதிக்காத உறவு முறைகள், இன்னும் தனது நண்பிகள் ஆகியோரைத் தவிர வேறு யார் முன்பும் தனது அழகை வெளிப்படுத்தக் கூடியவளாகவும் அவள் இருக்க மாட்டாள்.
இதுவல்லாமல், அழுக்கடைந்த உடையுடனும், தலைவாறப்படாத கூந்தலுடனும், அசிங்கமான தோற்றத்துடன் காட்சி அளிக்க மாட்டாள். அவள் எப்பொழுதும் தனது உடல் நலம், அழகு, தோற்றம் ஆகியவற்றில் கவனம் செலுத்தக் கூடியவளாக இருப்பாள். மேலும், அவை யாவும் இஸ்லாமிய வரையறைகளை மீறும் விதத்தில் நடந்து கொள்ளவும் மாட்டாள். இறைவன் தனது திருமறையிலே கூறுகின்றான் :
(நபியே!) நீர் கேட்பீராக! ''அல்லாஹ் தன் அடியார்களுக்காக வெளிப்படுத்தியுள்ள (ஆடை) அழகையும், உணவு வகைகளில் தூய்மையானவற்றையும் தடுத்தது யார்?""
இமாம் அல் குர்துபி (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள் : மஹ்கூல் என்பவர் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கக் கூடிய இந்த நபிமொழியில் கூறப்படுவதாவது :
(ஒருமுறை) இறைத்தூதர் (ஸல்) அவர்களைக் காண்பதற்காக அவரது வீட்டிற்கு வெளியே அவரது தோழர்கள் காத்திருந்தார்கள், எனவே அவர்களைச் சந்திப்பதற்காக இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தயாரானார்கள். (அப்பொழுது வீட்டில்) ஒரு பாத்திரத்தில் தண்ணீர் இருந்தது, அதனைக் கொண்டு தனது தாடியிலும், தலைமுடியிலும் தடவிக் கொண்டு தன்னைப் புத்துணர்ச்சிப் படுத்திக் கொண்டார்கள். (அப்பொழுது, ஆயிஷா (ரலி) அவர்கள்), இறைத்தூதர் (ஸல்) அவர்களே, என்ன இப்படிச் செய்து கொள்கின்றீர்கள்? எனக் கேட்டார்கள். ஆம்! ஒரு மனிதன் தனது சகோதரர்களைச் சந்திக்கச் செல்லும் பொழுது, முறையாகத் தன்னைத் தயார்படுத்திக் கொள்ளட்டும், அல்லாஹ் மிக அழகானவன், அவன் அழகானதையே விரும்புகின்றான் எனப் பதிலளித்தார்கள். (தஃப்ஸீர் அல் குர்துபி, 7-197).
எனவே, இஸ்லாம் காட்டித் தந்த வரையறைகளுக்குள் நின்று கொண்டு, தன்னை அழகுபடுத்திக் கொள்ள வேண்டுமே ஒழிய, அந்த வரையறைகளை மீறும் செயல்களில் ஈடுபடக் கூடாது. அதாவது, வரம்பு மீறலுக்கும், வரையறைகளைப் பேணாது விட்டு விடுதலுக்கும் மத்தியில் நின்று கொண்டு, நடுநிலையைப் பேணிக் கொள்ளவே இஸ்லாம் அறிவுறுத்துகின்றது.

இன்னும், அவர்கள் செலவு செய்தால் வீண் விரையம் செய்யமாட்டார்கள்; (உலோபித்தனமாகக்) குறைக்கவும் மாட்டார்கள் - எனினும், இரண்டுக்கும் மத்திய நிலையாக இருப்பார்கள். (25:67)
வழிகாட்டும் ஒளி விளக்காக இருங்கள்
;ஒரு பெண் ஒரு குடும்பத்தைக் கட்டுக்கோப்பாக வழிநடத்த வேண்டுமெனில், அவள் முதலில் தன்னை சிறந்த தாரமாகவும், மதி நுட்பம் நிறைந்த தாயாகவும், அறிவூட்டும் நல் ஆசானாகவும், திட்டமிடும் ஒரு நல் அதிகாரியாகவும், பணிவுள்ள, இறைவிசுவாசமுள்ள ஒரு முன்மாதிரிப் பெண்ணாகவும் மாற்றிக் கொள்ள வேண்டும்.
பெண்ணால் கட்டுக்கோப்பாக வழி நடத்தப்படும் இல்லம் சிறப்படைவதையும், பெண்ணின் கட்டுக்கோப்பு தவறிவிடும் இல்லங்கள் பிறர் கவலைப்படும் வகையில் சீர்கெட்டுப் போவதையும் நாம் நடைமுறை வாழ்க்கையில் பார்த்து அனுபவிக்கிறோம். ஒரு மரத்தின் வேர்களுக்கு ஒப்பானவள் பெண். அம்மரத்தை எத்தனை புயல் தாக்கினும் அது அப்புயலை தாங்கி நிற்கும் பூ, இலை, கனி என்பவற்றையும் எவ்வாறு அழிவில் இருந்து காத்து நீரை உறிஞ்சிக் கொடுத்து நிற்கிறதோ அதே போல் ஓர் இல்லாளும் எத்தகைய பிரச்சினை வந்த போதும் அவற்றைச் சமாளித்து தன் இல்லத்தின் ஏனைய உறுப்பினர்களுக்காக தன்னை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
குறிப்பாக இல்லத் தலைவி திட்டமிடல் அடிப்படையில் எதையும் செய்வது சிறந்தது. குறிக்கோள் அற்ற மனிதன் குரங்கைப் போன்றவன் என்று ரஷ்யப் பழமொழி ஒன்று கூறுகிறது. எனவே இல்லாளும் சிறந்த குறிக்கோளை மையமாக வைத்து தனது குடும்பத்தின் ஒவ்வொரு செயற்பாட்டையும் திட்டமிடலின் அடிப்படையில் அமைத்தல் நன்று. இவ்வாறு திட்டமிட்டுக் கொள்ளும் பொழுது வேலைகள் ஒழுங்குற செய்யப்பட்டு நேரம் மீதப்படுத்தப்படுகிறது. பொருளாதார வசதிக்கேற்ப செலவுகளை கூட்டிக் குறைக்கவும், சிறு தொகையை சேமிப்பாகக் கொள்ளவும் முடிகிறது. இதனால் தோன்றும் பாரிய நன்மை யாதெனில் நேரம் மீதப்படுத்தப்பட்டு குடும்ப அங்கத்தவர்களுடனும் இறைவணக்கங்களிலும் அம்மீதி நேரத்தைச் செலவிட ஒரு இல்லாளினால் முடியுமாக இருக்கும் என்பது நடைமுறை உண்மையாகும்.
இதற்கு நாம் அஸ்மா (ரலி) அவர்களின் ஹிஜ்ரத்தின் பொழுது, அவர்கள் இஸ்லாத்திற்குச் செய்த சேவை, அந்த சேவையில் அவர்களின் திட்டமிடல் ஆகியவற்றைக் காணும்பொழுது, இன்றைக்கு இருக்கும் விஞ்ஞான முன்னேற்றத்தில் கூட இந்தளவு திட்டமிடலுடன் நடந்து கொண்டிருக்க முடியுமா என்பது சந்தேகமே!
ஹிஜ்ரத் பயணம் புறப்பட்ட முஹம்மது (ஸல்) அவர்கள், அபுபக்கர் (ரலி) அவர்கள் ஆகிய இருவரும் ஹீராக் குகைகயில் இருக்கின்றனர். அவர்கள் ஹீராக் குகையில் தங்கி இருந்த 3 நாட்களுக்கும் உணவு மற்றும் மக்காவில் நடைபெறும் நிகழ்ச்சிகளை துப்பறிந்து வந்து சொல்வது ஆகிய பணிகள், அஸ்மா (ரலி) அவர்களுக்கும், அவரது தம்பி அப்துல்லா (ரலி) அவர்களுக்கும் வழங்கப்பட்டது. இன்றைக்கு இருக்கும் போக்குவரத்து வசதிகள் இல்லாத அந்தக் காலச் சூழ்நிலையில், முஹம்மது (ஸல்) அவர்களையும், அவர்களைச் சார்ந்தோர்களையும், மக்கத்துக் குறைஷிகள் கண்இமை கொட்டாமல் கண்காணித்து வருகின்ற அந்தச் சூழ்நிலையில், தினமும் பல மைல்கள் யாருடைய கண்ணிலும் படாமல், மக்காவிலிருந்து ஹிராக் குகைக்கு கால்நடையாகவே சென்று வந்த அவர்கள் துணிவு மற்றும் திட்டமிடலை இன்று நினைத்தாலும், நமக்கு மலைப்பாக இருக்கின்றது.
அதே போல அபுபக்கர் (ரலி) அவர்களது மனைவி, தன்னுடைய கணவர் கொடுத்து வருகின்ற வீட்டுச் செலவுகளுக்கான பணத்தை சிறுகச் சிறுக சேமித்து வருகின்றார். ஒரு நாள் சேமித்த அந்தப் பணத்தைக் கொண்டு நல்ல இனிப்பு பலகாரம் ஒன்றையும் செய்கின்றார். வழக்கத்தை விட தன்னுடைய உணவில் இனிப்பு பரிமாறப்படுவது கண்டு, அது பற்றி வினவிய அபுபக்கர் (ரலி) அவர்களுக்கு, தான் சேமித்த பணத்தைக் கொண்டு தான் இந்த இனிப்பைச் செய்தேன் என்று அபுபக்கர் (ரலி) அவர்களின் மனைவி பதிலுரைக்கின்றார்கள்.
அகழ் யுத்தம், தபூக் யுத்தம் போன்ற இஸ்லாத்தின் மிகக் கடுமையான நாட்களில் மிகவும் வறுமையான அந்த நாட்களில், குடும்பத்தின் வருவாயைக் காரணம் காட்டி கணவர்களைத் தொந்தரவு செய்யாமல் இருந்ததின் காரணமாகத் தான், அந்த ஸஹாபாக்களால் இஸ்லாத்தின் எதிர்களுக்கு முகம் கொடுக்கக் கூடிய அந்த நேரத்தில் எந்தவித கவலையும் இல்லாமல் இஸ்லாத்திற்காகப் பணியாற்றி முடிந்தது. ஏன்? தங்கள் உயிரையும் தியாகம் செய்ய முடிந்தது.
வாக்குறுதி மாறாதவள்
ஒரு முஸ்லிம் பெண்ணினுடைய இன்னொரு முக்கியமான பழக்கம் என்னவென்றால், அவள் கொடுத்த வாக்குறுதியை மீறாது அதனை நிறைவேற்றுபவளாக இருப்பாள், உண்மையிலேயே இந்தப் பழக்கம் நபித்தோழர்கள் மற்றும் தோழர்களிடையே இருந்து வந்த உயரிய பண்பாகும்.
வாக்குறுதியைக் காப்பாற்றுவது என்பது சமூகத்தில் இருக்கின்ற ஒவ்வொருவரின் மீதும் உள்ள சமூகக் கடமையாகும். அது அவர்களது அந்தஸ்தை உயர்த்துகின்றது. இன்னும் இல்லத்தரசி மற்றும் தாய்மையின் அந்தஸ்தைப் பெற்றிருக்கக் கூடிய நீங்கள் உங்களது வாக்குறுதிகளைச் சரிவரப் பேணும் பொழுது, அந்த நற்பழக்கம் உங்களைச் சுற்றி நெருக்கமாக உள்ள உங்களது குழந்தைகள், சகோதர, சகோதரிகள் ஆகியோர்களுக்கும் அது நல்லதொரு பண்பாட்டுப் பழக்கத்தை ஏற்படுத்தும். இன்னும் சமூகத்தில் தன்னை ஒரு நல்ல பழக்க வழக்கமுள்ள பெண்மணியாகக் காட்டிக் கொள்வதற்காக மட்டுமல்ல, தன்னை ஒரு சிறந்த முஸ்லிம் பெண்மணி என்றும், இஸ்லாத்தின் அடிப்படையான பண்பாட்டை கடைபிடிப்பவளாகவும் அவள் இனங் காட்டிக் கொள்கின்றாள். இன்னும் வாக்குறுதி பேணுவதின் முக்கியத்துவத்தைப் பற்றி குர்ஆனும், சுன்னாவும் வலியுறுத்தியும் கூறுகின்றன.
(நீங்கள் அல்லாஹ்விடமோ, மனிதர்களிடமோ கொடுத்த) வாக்குறுதியை நிறைவேற்றுங்கள்; நிச்சயமாக (அவ்) வாக்குறுதி (பற்றித் தீர்ப்பு நாளில் உங்களிடம்) விசாரிக்கப்படும். (17:34)
இறைநம்பிக்கையாளர்களான ஆண் மற்றும் பெண் அனைவரும் தங்களது வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கு முக்கியத்துவம் அளிப்பதோடு, அது வலியுறுத்தக் கூடிய அம்சங்களை நிறைவேற்றக் கூடியவர்களாக இருக்க வேண்டும் என்கின்றது. அதிலிருந்து தப்பித்துக் கொள்வதற்கான சாத்தியங்களை நீங்கள் தேடக் கூடாது. வாக்குறுதியை நிறைவேற்றாமல் தப்பித்து விடுவதற்கான காரணத்தைத் தேடி அலைபவன் அல்லது அலைபவள் உண்மையான முஸ்லிமாக இருக்க முடியாது. அவர்கள் என்ன வார்த்தையைக் கூறினார்களோ அதனை நிறைவேற்றியாக வேண்டும்.
நீங்கள் அல்லாஹ்வின் பெயரால் செய்யும் உடன்படிக்கையை நிறைவேற்றுங்கள்; அல்லாஹ்வை சாட்சியாக வைத்துச் சத்தியம் செய்து, அதனை உறுதிப்படுத்திய பின்னர், அச்சத்தியத்தை முறிக்காதீர்கள் - நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்கறிவான். (16:91)
எந்த வார்த்தையைப் பேசினோமோ அந்த வார்த்தையின் மீது கவனம் இல்லாது, அதனை நிறைவேற்றாமல் விட்டு விடுபவர்களை இஸ்லாம் விரும்புவதில்லை.
ஈமான் கொண்டவர்களே! நீங்கள் செய்யாததை ஏன் சொல்கிறீர்கள்?நீங்கள் செய்யாததை நீங்கள் கூறுவது அல்லாஹ்விடம் பெரிதும் வெறுப்புடையதாக இருக்கிறது. (61:2-3)
வெற்று வாய் ஜாலங்களைக் காட்டிக் கொண்டு திரிகின்றவர்கள் ஆண், பெண் எவராக இருந்தாலும், அல்லாஹ் அவர்களை நேசிக்க விரும்புவதில்லை. எவர்கள் தங்களது வாக்குறுதிகளில் உறுதியாக இருந்து அவற்றை நிறைவேற்றுவதற்கு முயற்சிக்கின்றார்களோ அவர்களையே அல்லாஹ் நேசிக்கின்றான், விரும்புகின்றான். அவர்களே உண்மையான முஸ்லிம்கள் ஆவார்கள். வெற்று வார்த்தைகளும், இன்னும் அவற்றைத் தவிர்ப்பதற்குண்டான வாய்ப்புகளையும் தேடிக் கொண்டிருப்பவர்கள் இறைவனது அருளிலிருந்தும் வெளியேறி விட்டவர்கள். அவர்களை நயவஞ்சகர்கள் என்றே இஸ்லாம் அழைக்கின்றது.
நயவஞ்சகர்களுக்கு மூன்று அடையாளங்கள் உள்ளன. அவை அவன் பேசினால் பொய்யே பேசுவான், வாக்குறுதி அளித்தால் அதனை முறித்து விடுவான், இன்னும் அமானிதமாக எதையாவது பொருட்களை ஒப்படைத்தால், அதனை மீறி விடுவான். (புகாரீ)
முஸ்லிமில் இவ்வாறு பதிவு செய்யப்பட்டுள்ளது, அதாவது அவர்கள் நோன்பு நோற்று, தொழுது, இன்னும் தன்னை முஸ்லிம் என்று கூறிக் கொண்டிருந்தாலும் சரியே..! என்கிறது.

எனவே, தொழுகை, நோன்பு போன்ற வணக்க வழிபாடுகளில் நீங்கள் எவ்வளவு தான் ஈடுபாடு கொண்டவர்களாக இருப்பினும், உங்களது பண்பாட்டுப் பழக்க வழக்கங்களில் இஸ்லாமிய மாண்புகள் மிளிரவில்லையென்றால், உங்களது வணக்க வழிபாடுகளில் இருந்த எந்தவித படிப்பினையும் இல்லாத நிலை தான் உருவாகும்.
பிள்ளைகளிடம் ஒன்றைக் குறித்து வாக்குறுதி அளிப்பது, அது அந்தக் குழந்தையை முதலில் சமாதானப்படுத்துவதற்கான சந்தர்ப்பமாகப் பயன்படுத்திக் கொள்வது. பின்னர், அந்தக் குழந்தை தன் தாய் கொடுத்த வாக்குறுதியை ஞாபகப்படுத்திக் கேட்கும் பொழுது, அதனை மறுப்பதற்கு காரண காரியங்களைச் சொல்வது. இவ்வாறு நீங்கள் நடந்து கொள்வது அந்தக் குழந்தையின் பழக்க வழக்கத்தில் நீங்களாகவே பொய் கூறும் பழக்கத்தை ஏற்படுத்தி விடுகின்றீர்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
உங்கள் குழந்தைக்கு நீங்கள் ஒரு பேரீத்தம் பழத் துண்டை கொடுப்பதாக வாக்குறுதி அளித்தாலும் சரியே..! அதனை நிறைவேற்றி விடுங்கள். இல்லையெனில், உங்களது பெயர் பொய்யர்களது பட்டியலில் இடம் பெற்று விடும். ஜாக்கிரதை..! இன்னும் நயவஞ்சர்களின் நிலையும் உங்களது நிலையும் சமமானதே.
நயவஞ்சகர்களுக்குண்டான தண்டனை என்ன தெரியுமா? நரகத்தின் அடித்தட்டில் தான் அவர்களது இருப்பிடம் உள்ளது.
நேர்மையானவற்றின்பால் வழிகாட்டுபவளாக
முஸ்லிம் பெண்ணினுடைய ஆன்மாவானது இறைநம்பிக்கையால் தூய்மைப்படுத்தப்பட்டிருக்கும், பிறருக்குக் காண்பிப்பதற்காக ஒரு வேலையைச் செய்வது, சுயநலமிக்கவர்களாக இருப்பது போன்றவற்றிலிருந்து அவள் தூய்மையானவளாக இருப்பதோடு, பிறரை நன்மையானவற்றின் பால் நடத்துவதற்கு ஆர்வமும், அவ்வாறு நடப்பவர்கள் மீது அன்பும் பரிவும் கொண்டவளாக அவள் இருப்பாள், இத்தகைய அவளது நடவடிக்கையின் மூலம் அவளை நோக்கி இறைவனின் அருட்கொடைகள் சூழ்வதோடு, பொதுமக்களும் அவளின் மூலமாக பயன்களை அடைந்து கொள்வார்கள். எந்த ஒரு அறச்செயலை எவர் செய்த போதிலும் அது அவளின் மூலமாகவோ அல்லது பிறரின் மூலமாக செய்யப்பட்டதாக இருப்பினும், எவரொருவர் ஒருவரை நன்மையானவற்றின் பால் அழைத்து, அவ்வாறு அழைக்கப்பட்டவர் அதனை ஏற்றுச் செய்யும் நல்லறங்களின் நன்மைகளை அழைத்தவருக்கும் வழங்கப்படும் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அறிவித்திருப்பதனை அவள் அறிந்திருப்பாளென்றால், எந்த நிலையிலும் நல்லறங்களை பிறருக்கு எடுத்துச் சொல்வதில் சோர்வடைந்து விட மாட்டாள்.
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
எவரொருவர் பிறரை நன்மையானவற்றின் பால் வழிகாட்டுகின்றாரோ, வழிகாட்டப்பட்டவர் (அதனை ஏற்றுச்) செய்கின்ற நன்மையின் அளவைப் போலவே வழிகாட்டியவருக்கும் நற்கூலி வழங்கப்படும். (புகாரீ, முஸ்லிம்)
இன்றைக்கு நம் சமுதாயத்தில் பணமும், படாடோபமும், பெருமையும் மிக்க வாழ்வு தான் சமுதாயத்தில் கண்ணியத்தைப் பெற்றுத் தரும் என்று நினைத்து, நன்மையானவற்றை ஒதுக்கி வைத்து விட்டு, தீமையானவற்றின் பால் செல்லக் கூடியவர்களாக இருக்கின்றார்கள். பிறருக்குக் காண்பிப்பதற்காகவே தங்களது செயல்பாடுகளை அமைத்துக் கொள்கின்றார்கள். அது தனக்காக இருப்பினும் சரியே, அல்லது பிறரை ஒரு நற்செயலை நோக்கி வழிகாட்டினாலும் சரியே..! அந்த நற்செயலைச் செய்வதில் தான் பொடுபோக்காக இருந்து கொண்டு பிறரை ஏவுவதில் என்ன அர்த்தம் இருக்க முடியும். ஆனால் ஒரு முஸ்லிம் பெண்மணி அவ்வாறிருக்க மாட்டாள். நன்மையின் பக்கம் விரையக் கூடியவளாகவும், தான் செய்த நன்மையைப் போன்றதொன்றை பிறரும் செய்ய வேண்டும் என்று விரும்பக் கூடியவளாகவும் அவள் இருப்பாள். ஏனெனில், தனது வழிகாட்டலின் மூலமாக பிறர் செய்யக் கூடிய ஒவ்வொரு நன்மையான காரியமும் தனக்கும் நன்மையைப் பெற்றுத் தரும் என்பதை அவள் அறிந்து வைத்திருக்கின்றாள் என்பதனாலாகும்.
அவளின் இந்த நன்மையான முயற்சியின் காரணமாக சமூகம் பயனடைவதோடு, இவளின் பொருட்டு அவர்களும் அல்லாஹ்வின் பேரருட் கொடைகளைப் பெற்று விடக் கூடிய சந்தர்ப்பத்தைப் பெற்றுக் கொண்டு விடுகின்றார்கள்.
இன்றைய நமது சமூகத்தில் அல்லாஹ்வினால் பொருந்திக் கொள்ளப்பட்ட நன்மையான காரியங்களை தானும் பின்பற்றாமலும், பிறருக்கும் ஏவாமலும் இருக்கின்ற பெண்களைத் தான் நாம் காண முடிகின்றது. மேலும் சமூகத்தில் நிலவுகின்ற பல்வேறு காரணிகளும் நன்மைகளை ஏவுவதற்குத் தடையாக இருக்கின்றன. தான் அறிந்து கொண்டவற்றை பிறருக்கு எடுத்துரைக்காமல், தான் மட்டும் இறைவனின் திருப்பொருத்தத்தை பெற்றுக் கொள்வது என்பது எவ்வளவு சுயநலமானது. சந்தர்ப்பம் வரட்டும் பிறருக்குச் சொல்லிக் கொள்ளலாம் என்று சந்தர்ப்பத்தின் சுவடு நமது கதவை வந்து தட்டும் என்று காத்திருப்பதும் எவ்வளவு கைசேதமானது.
உண்மையிலேயே அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடக் கூடிய ஆண்களும் பெண்களும் சந்தர்ப்பம் நமது வீட்டுக் கதவை வந்து தட்டட்டும் என்று காத்திருக்க மாட்டார்கள். மாறாக, ஒருவருக்கு ஏவக் கூடிய நன்மையானது, நமக்கும் நன்மையைப் பெற்றுத் தருமே என்று கருதக் கூடியவர்களாக இருப்பார்கள்.
பிறரை அவள் ஏமாற்றவோ, வழிகெடுக்கவோ, அல்லது முதுகில் குத்தும் வேலையைச் செய்ய மாட்டாள்
உண்மையில் இஸ்லாத்தை அறிந்து கொண்டு அதனைத் தன்னுடைய வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டு விட்ட பெண், இஸ்லாமியச் சிந்தனைகளை தன்னுடைய உள்ளத்தின் ஆழத்தில் பதிய விட்டிருப்பதன் காரணமாக பிறரை ஏமாற்றவோ, வழிகெடுக்கவோ மாட்டாள், ஏனெனில் இவை எல்லாம் எந்தவித பெறுமதியும் மிக்கதொன்றல்ல என்பது அவளுக்குத் தெரியும் என்பதே கரணமாகும். இவை யாவும் இஸ்லாமியப் பண்பாடுகளுக்கு மாற்றமானவை, இன்னும் அது ஒரு முஸ்லிமிற்கு அழகுமில்லை என்பதும் அவளுக்குத் தெரியும். சத்தியத்தைத் தேடுபவர்களுக்கு நேர்மை, வாய்மை, கண்ணியம் மற்றும் நடுநிலையான பார்வை ஆகியவை அவசியம் என்பதும் அவளுக்குத் தெரியும். இவை யாவும் ஒன்றிணைந்து விட்டால் அங்கு பிறரை ஏமாற்ற வேண்டும் எண்ணமோ, சூழ்ச்சி வலை பிண்ணும் வேலையோ, பிறரை முதுகில் குத்தும் தருணங்களை எதிர்ப்பார்த்துக் காத்திருக்கும் நிலைகளோ அவளிடம் தோன்றவே தோன்றாது.
''நமக்கெதிராக எவரொருவர் ஆயுதங்களைத் தூக்குகின்றாரோ அவர் நம்மைச் சார்ந்தவரல்லர், இன்னும் எவரொருவர் ஏமாற்றுகின்றாரோ அவரும் நம்மைச் சார்ந்தவரல்லர்"", என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

ஒரு முறை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கடைவீதிப் பக்கமாகச் சென்றார்கள். அப்பொழுது ஒரு வியாபாரி விற்கும் உணவுப் பொருட்களுக்கு உள்ளாக கையை விட்டுப் பார்த்த பொழுது, வெளியே காய்ந்ததாகத் தெரிந்த அது, உள்ளே ஈரமாக இருப்பதைக் கண்டார்கள். அந்தக் கடைக்காரரிடம் என்ன இது? (உள்ளே ஈராமாகவும், வெளியே காய்ந்ததாகவும் இருகின்றதே?) என்றார்கள். மழையால் பாதித்து விட்டது என்றார் அந்தக் கடைக்காரர். மழையால் ஊறியவற்றையும் முன் பகுதியில் மக்கள் கண்களுக்குத் தெரியும்படி வைத்தால், மக்கள் அதனைக் கண்டு கொள்வார்கள்..! எவரொருவர் மக்களை ஏமாற்றுகின்றாரோ அவர் நம்மைச் சார்ந்தவரல்லர் என்றார்கள். (முஸ்லிம்)
இஸ்லாமிய சமுதாயமானது மனிதாபிமானத்தை அடிப்படையாகவும், முஸ்லிம்கள் குறித்து மிகவும் வாய்மையுடையதாகவும், இன்னும் சமூகக் கடமைகளில் உறுதியையும் சமூகத்திற்குத் தான் ஆற்ற வேண்டிய பணிகளில் கடமையுணர்வுடன் அவற்றை நிறைவேற்றக் கூடியதாகவும் இருக்கும். ஏமாற்றுக் காரர்கள் அல்லது மோசடிக்காரர்கள் சமூகத்தில் காணப்படுவது, இஸ்லாமியக் கொள்கைகளுக்குப் புறம்பானதும், இன்னும் முஸ்லிம்களின் பண்பாட்டு நலனுக்கு அது மாற்றமானதாகவும் ஆகும்.
ஏமாற்றுதல், மோசடி செய்தல், பிறரது முதுகில் குத்துதல் போன்ற இழி குணங்கள் யாவும் இஸ்லாத்தைப் பொறுத்தவரை கடுமையான குற்றங்களாகும், அவை இந்த உலகத்திலும் சரி, உயிர் கொடுத்து எழுப்பப்படுகின்ற மறுமை நாளிலும் சரி அதில் ஈடுபடுபவர்களை கைசேத்திற்கு உள்ளாக்கி விடும்.
''மோசடி செய்பவனுக்கு மறுமை நாளில் (அவனுடைய மோசடியை வெளிச்சமிட்டுக் காட்டும் முகமாக அடையாளக்) கொடி ஒன்று நட்டப்பட்டு 'இது இன்னாருடைய மகன் இன்னோரின் மோசடி (யைக் குறிக்கும் கொடி)"" என்று கூறப்படும். (புகாரீ)
மோசடி என்பது யாரும் அறியாதது என்றும், யாரும் அதனைக் கேள்வி கேட்க மாட்டார்கள் என்றும் இந்த உலகத்தில் கருதியவனின் நிலையை மறுமை நாளில் பார்த்தீர்களா? நீங்கள் மறந்து ஒன்று அன்றைக்கு ஞாபகப்படுத்தப்பட்டு, உங்களைத் தனியே பிரித்து வைத்து, மோசடிக்காரர்கள் என்று அடையாளம் காட்டப்படும் இழிநிலையையும் பார்த்தீர்களா? இதன் பின்னர் எவருக்குத் தான் மோசடி செய்ய வேண்டும் என்ற எண்ணம் தோன்றும்.
மறுமை நாளிலே இறைத்தூதர் (ஸல்) அவர்களின் பரிந்துரை தேவைப்படுமே என்று கருதக் கூடியவன் மோசடிக் காரன் என்ற அடையாளத்துடன் எவ்வாறு அவர்களது முன்னிலையில் நிற்க முடியும் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டாமா? அவர்கள் இறைவனது கருணைப் பார்வையையும் இழந்து விடுவதோடு, இறைத்தூதர் (ஸல்) அவர்களின் பரிந்துரையையும் இழந்து விடக் கூடிய துர்ப்பாக்கியவான்களாக ஆகி விடுவார்களே..! என்ன கொடுமை..! இதிலிருந்து நாம் நம்மைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டாமா? சகோதர, சகோதரிகளே..!
இறைவன் கூறுகின்றான், நாளை மறுமை நாளில் நான் மூன்று நபர்களுக்கு எதிராக இருப்பேன் : வாக்களித்து மாறு செய்தவன், சுதந்திரமான ஒருவனை அடிமையாக விற்று விட்டு அந்தப் பணத்தை வைத்துக் கொண்டவன், இன்னும் ஒருவனை கூலிக்கு அமர்த்தி விட்டு, அவனிடம் பயனையும் அடைந்து கொண்டு, அவனது ஊதியத்தைக் கொடுக்காதவன். (ஃபத்ஹ{ல் பாரி 4-417)
உண்மையில் இஸ்லாத்தைத் தன்னுடைய வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டிருக்கின்ற பெண் மேற்கூறிய அத்தனை கெட்ட பண்புகளை விட்டும் ஒரு முஸ்லிம் பெண்மணி தவிர்ந்து வாழப் பழகிக் கொள்ள வேண்டும். மேலும், இந்தப் பண்புகளைப் பெற்றிருக்கின்றவர்களை விட்டும் தான் தூரமாக இருந்து கொள்ள வேண்டும். இன்றைய நவீன நாகரீகத்தை கடைபிடிக்கின்றோம் என்று கூறிக் கொண்டு இஸ்லாமிய பண்பாடுகளையும், நாகரீகத்தையும் புறந்தள்ளி விட்டு வாழக் கூடிய பெண்களை நாம் பார்க்கின்றோம். இவர்கள் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்ளக் கூடியவர்களாவார்கள். இவர்கள் இஸ்லாமிய ஒழுக்க விழுமங்களை விட மேற்கத்திய நாகரீகம் தான் உயர்ந்தது, வாழ்க்கைக்கு உகந்தது என்று கருதக் கூடியவர்கள். இவர்கள் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்வதோடு, சமூகத்திற்கும் தவறான முன்மாதிரிகளாகி விடுகின்றார்கள். இவர்களுடன் எவ்வாறு ஒரு முஸ்லிம் பெண் இணைந்திருக்க முடியும். நீங்கள் அவர்களுடன் அவர்களுடைய கொள்கைகளுடன் சமரசம் செய்து கொள்வீர்கள் என்றால், அவர்களுடைய தாக்கம் உங்களிடமும் வருவதற்கு அதிக நேரங்கள் ஆகாது.
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
'நான்கு பண்புகள் எவனிடம் உள்ளனவோ அவன் வடிகட்டிய முனாஃபிக் ஆவான். அவற்றில் ஏதேனும் ஒன்று யாரிடமேனும் இருந்தால் அதை விட்டொழிக்கும் வரை நயவஞ்சகத்தின் ஒரு பண்பு அவனிடம் இருந்து கொண்டே இருக்கும். நம்பினால் துரோகம் செய்வான்; பேசினால் பொய்யே பேசுவான்; ஒப்பந்தம் செய்தால் அதை மீறுவான்; விவாதம் புரிந்தால் நேர்மை தவறிப் பேசுவான்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' என அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார். (புகாரீ, முஸ்லிம்)

Permissions in this forum:
You cannot reply to topics in this forum