Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
கருப்பை கட்டிகள் !
3 posters
Page 1 of 1
கருப்பை கட்டிகள் !
பைவ்ரோயிட்(Fibroid) எனப்படும் கட்டிகள்
இது கருப்பைப் பையின் சுவற்றிலே இருக்கும் தசையில் இருந்து உருவாகும் கட்டியாகும்.இது தனியாக இருக்கலாம் அல்லது ஒரு கருப்பையிலேயே பல கட்டிகள் இருக்கலாம்.
இது அரிதாக ஏற்படுகின்ற நோயா?
இல்லை .இது மிகவும் பொதுவாக அதாவது 45வயதிலே இருக்கும் 100 பெண்களை எடுத்துக் கொண்டால் கிட்டத்தட்ட40 பேருக்கும் அநேகமானோருக்கு இந்த கட்டிகள் இருக்கலாம். ஆனாலும் இது எல்லாப் பெண்களிலும் இது அறிகுறிகளை வெளிக்காட்டாததால் நிறையப் பேருக்கு தங்களுக்கு இந்தக் கட்டிகள் இருப்பதே தெரியாமல் போய் விடுகின்றது.
இது புற்று நோயா?
இல்லை. இந்த கட்டி புற்று நோயால் ஏற்படும் கட்டியல்ல. மேலும் இந்தக் கட்டி பிற்காலத்தில் புற்று நோயாக மாறுவதற்கான சந்தர்ப்பமும் மிகவும் குறைவானது. இதனால் யாருக்காவது fibroid கட்டிகள் உள்ளது என்றால் பயப்பட வேண்டியதில்லை.
இது எத்தனை வயதளவில் ஏற்படும்?
பொதுவாக 40 தொடக்கம் 50 வயதளவிலேயே அதிகமான பெண்களுக்கு இது ஏற்பட்டாலும், இளம் பெண்களுக்கும் ஏற்படலாம்.
இது என்ன வகையான அறிகுறிகளை ஏற்படுத்தலாம்?
நான் ஏற்கனவே சொன்னது போல இது எல்லாப் பெண்களிலும் அறிகுறிகளை ஏற்படுத்துவதில்லை.இவை அறிகுறிகளை ஏற்படுத்தும் பொழுது கீழ் வரும் அறிகுறிகள் ஏற்படலாம்.
மாதவிடாய் நேரத்தில் அதிகம் ரத்தம் போகுதல்
அடிவயிற்றிலே எதோ இருப்பது போன்ற உணர்வு
அடிவயிறு வீங்குதல்
அதிகம் சிறு நீர் கழிக்கவேண்டி ஏற்படுதல்
நாரிப் பகுதியின் அடிப்பகுதியில் நோ ஏற்படுதல்
குழந்தையின்மை ஏற்படுவதற்கு இது காரணமாகலாமா?
ஆம், சில கட்டிகள் கருப்பையின் சுவற்றின் உட்புறமாக (அதாவது உருவாகிய சிசு கருப்பையின் உள்ளே ஒட்டிக் கொள்கின்ற இடத்திலே ) இருக்கும் போது குழந்தை சரியாக கருப்பையில் நிலை கொள்ளாமல் அழிந்து போகலாம்.
ஆனால் இவ்வாறு ஏற்படுகிற சந்தர்ப்பம் குறைவு. மற்றும் இந்தக் கட்டிகள் இருக்கும் எல்லாப் பெண்களிலும் இது ஏற்படுவதில்லை.(மிகவும் அரிதானவர்களிலேயே ஏற்படும்).
மற்றும் கருப்பையின் உள்புறமாக இல்லாமல் சற்று வெளிப்புறமாக இருக்கும் கட்டிகளால் குழந்தை உருவாக்கத்திற்கு எந்தப் பாதி[ப்பும் ஏற்படுவதில்லை.
இந்தக் கட்டிகளைக் கொண்ட ஒரு பெண் கர்ப்பம் தரித்த பின்பு பிரச்சினைகள் ஏற்படுமா?
சில வேளைகளில். குறிப்பாக குழந்தை கீழ் இறங்குவதை இந்தக் கட்டிகள் தடுப்பதால் சாதாரணமாக பிள்ளை பிறக்க முடியாமல் போகலாம். இதனால் சிசேரியன் (சத்திர சிகிச்சை) மூலம் குழந்தை பிறக்க செய்யப்பட வேண்டி ஏற்படலாம்.
இந்தக் கட்டிகள் இருப்பது எவ்வாறு உறுதி செய்யப்படலாம்?
ஸ்கேனிங் மூலம்
இதற்கான மருத்துவ முறைகள் என்ன?
இது சத்திர சிகிச்சை மூலம் அகற்றப்படலாம். இது அறிகுறிகளை ஏற்படுத்தாத பெண்களிலே அகற்றப் பட வேண்டிய அவசியமில்லை.
ஆனால் அதிகம் ரத்தம் போகுதல் போன்ற பிரச்சினை ஏற்படுமானால் இவை அகற்றப்படலாம்.
இது இரண்டு விதமாக அகற்றப்படலாம் .ஒன்று கருப்பை பையோடு சேர்த்து அகற்றுதல்(Hysterectomy)
மற்றது கருப்பை பை இருக்க கட்டி மற்றும் அகற்றப்படுதல்(myomectomy).
குறிப்பாக குழந்தை பெறுவதற்காக காத்திருக்கும் இளம் பெண்களில் கருப்பைப் பை இருக்க கட்டிகள் மட்டும் அகற்றப்படும்.
நிலா- புதுமுகம்
- பதிவுகள்:- : 527
மதிப்பீடுகள் : 37
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கருப்பை கட்டிகள் !
அற்புதம் நன்றி நிலா!
எந்திரன்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum