Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
ஆப்பிளை,கடவுளின் உணவு!
4 posters
Page 1 of 1
ஆப்பிளை,கடவுளின் உணவு!
ஆப்பிள்உலகம் முழுவதிலும் அப்பிள் மதிப்பு வாய்ந்த பழமாக மதிக்கப்படுகிறது. ஸ்கண்டினேவிய நாட்டவர்கள் அப்பிளை “கடவுளின் உணவு” என்கின்றனர். நாள்தோறும் ஒரு ஆப்பிள் உண்பது வைத்தியரை விரட்டும் என்பது ஆங்கில மொழி.
அப்பிள் பழத்தில் என்ன சத்துக்கள் இல்லை. உடலை வளர்க்கும் விற்றமின்களும், உடலியல் செயல்களை ஊக்குவிக்கும் தாதுப் பொருட்களும் உடல் உள் உறுப்புக்களும், சுரப்பிகளும் செயற்பட உதவும் நுண்ணூட்டச் சத்துக்களும் பல்வேறு அமிலங்களை சரியாகச் சுரக்கவைத்து, சீர்படுத்த உதவும் அமிலங்களும் அப்பிளில் தங்கியுள்ளன.
அப்பிள் உடல் வளர்ச்சிக்கு ஆரோக்கியம் பெருகுவதற்குரிய பயன்களைத் தருகிறது. விற்றமின் குறைவினால் ஏற்படுகின்ற நோய்களைக் குணப்படுத்தும். அத்துடன் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
அப்பிள் பழம் மட்டுமல்ல அதனுடைய இலைகளும், விதைகளும், வேர்ப்பகுதியும், வேர்ப்பட்டடையும் மருத்துவத் தன்மைகளைக் கொண்டதாகும்.
அழகிய சிவப்பு நிறத்தில், பளபளப்பாக, கண்ணைப் பறிக்கும் விதத்தில் காணப்படும் அழகான பழம் அப்பிள் பழமாகும். அழகு இனிமை, மென்மை என்பவற்றிற்கும் அப்பிளுக்கும் நிறைய தொடர்பு இருக்கின்றது. தங்கப் பழம் என்று புகழப்படும் அப்பிள் சிறியோர் முதல் பெரியோர் வரைக்கும் மிகவும் விரும்பும் பழமாகும்.
அப்பிள் பழத்தின் பிறப்பிடம் மத்திய ஐரோப்பா மற்றம் மேற்கு ஆசிய நாடுகளாகும். உலகம் முழுவதிலும் 6500க்கும் மேற்பட்ட வகைகளில் அப்பிள்கள் காணப்படுகின்றன. அன்றாடம் உடல் ஆரோக்கியம் மேம்படவும் நம் உண்ணும் உணவிலுள்ள நச்சுகளை நீக்கவும், ரத்தத்தில் கலந்துள்ள நுண்கிருமிகளை நீக்கி ரத்தத்தை சுத்தம் செய்யவும் பழங்களை உண்ணுதல் நல்லது. இவற்றில் முதலிடத்தை பிடிப்பவை ஆப்பிள் பழங்களே.
பைரஸ் மேலஸ் என்ற தாவரவியல் பெயர் கொண்ட போமேசியே குடும்பத்தைச் சார்ந்த ஆப்பிள் மரங்கள் குளிர்ச்சியான பிரதேசங்களில் ஏராளமாக விளைகின்றன. கருஞ்சிவப்பு நிறத்தோலை உடைய ஆப்பிள் பழங்களே உண்ணத் தகுந்த பழங்களாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆப்பிளில் நீர்ச்ச த்து, புரதச்சத்து, குளோரோபில், மாலிக் அமிலம், சிட்ரிக் அமிலம், பாஸ்பரஸ் மற்றும் பல ஆர்கானிக் அமிலங்கள் உள்ளன. இவை செரிமானப் பாதையில் ஏற்படும் என்சைம்கள் குறைபாட்டை சீர் செய்வதுடன் பலவிதமான வயிற்றுக் கோளாறுகள் வருவதை தடுக்கின்றன.மது அருந்துபவர்களுக்கு ரத்தத்தில் ஆல்கஹாலின் அளவை குறைக்க ஆப்பிள் பெருமளவு உதவுகிறது. விஸ்கி எனப்படும் மதுவிலுள்ள பல சத்துக்கள் ஆப்பிளில் காணப்படுவதால் தொடர்ந்து ஆப்பிளை சாப்பிட்டு வர விஸ்கி அருந்தும் எண்ணம் கட்டுப்படும். தோல் நீக்காத ஆப்பிளிலிருந்து தயாரிக்கப்படும் பழச்சாறு ரத்தத்தை சுத்தம் செய்து ரத்தத்தில் கலந்துள்ள அதிக அமிலத்தன்மையை நடுநிலைப்படுத்துகிறது. வயிறு தொல்லை உள்ள பொழுது இனிப்பு சேர்க்காத ஆப்பிள் பழச்சாற்றை சாப்பிட்டு வர வயிற்றிலுள்ள ஹைட்ரோகுளோரிக் அமிலம் கார்பானிக் அமிலமாக மாற்றப்பட்டு நெஞ்சுக்கரிப்பு கட்டுப்படுகிறது. செரிமான சக்தி அதிகரிக்கிறது.
ஆப்பிளிலுள்ள மாலிக் அமிலம் மலச்சிக்கலை நீக்கி குடற்பாதையிலுள்ள நுண்கிருமகளை கொல்கிறது. ஆப்பிளை நன்கு மென்று சாப்பிட வாய் மற்றும் தொண்டைப் பகுதியிலுள்ள நுண்கிருமிகள் நீங்குகின்றன. வயதானவர்களுக்கு ஆப்பிள் மேற்தோலானது செரிக்கக் கடினமாக இருக்குமென்பதால் மேற்தோலை நீக்கி உட்கொள்வது நல்லது. ஆப்பிளை அன்றாடம் உட்கொண்டு வந்தால் மருத்துவரை அணுக வேண்டாம் என்பது ஆங்கில பழமொழி. நீர்ச்சத்து ஏராளமாக உள்ள ஆப்பிள் பழத்தை கோடைக்காலத்தில் நன்கு உட்கொள்ளலாம். இதில் ஏராளமான மாவுச்சத்து நிறைந்துள்ளதால் சர்க்கரை நோயாளிகள் தங்கள் சரிவிகித சம உணவுக்கு ஏற்றவாறு மருத்துவரின் ஆலோசனையின் படி ஒன்று அல்லது இரண்டு கீற்றுகள் ஆப்பிளை எடுத்துக் கொள்ளலாம்.

kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: ஆப்பிளை,கடவுளின் உணவு!
உண்மைகள் நிறம்பிய கட்டுரை நன்றி உங்கள் கட்டுரைக்கு.
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: ஆப்பிளை,கடவுளின் உணவு!
:“: :“:மீனு wrote:உண்மைகள் நிறம்பிய கட்டுரை நன்றி உங்கள் கட்டுரைக்கு.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஆப்பிளை,கடவுளின் உணவு!
மீனு wrote:உண்மைகள் நிறம்பிய கட்டுரை நன்றி உங்கள் கட்டுரைக்கு.
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum