சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

பல்கலைக்கழக மாணவர் மத்தியில் பீதியை களைவது அரசின் பொறுப்பு  Khan11

பல்கலைக்கழக மாணவர் மத்தியில் பீதியை களைவது அரசின் பொறுப்பு

Go down

பல்கலைக்கழக மாணவர் மத்தியில் பீதியை களைவது அரசின் பொறுப்பு  Empty பல்கலைக்கழக மாணவர் மத்தியில் பீதியை களைவது அரசின் பொறுப்பு

Post by நேசமுடன் ஹாசிம் Tue 24 May 2011 - 13:22

மாணவருக்கு இராணுவப்பயிற்சி வழங்க நாம் தயாரில்லை
* பகிடிவதையை ஏற்க முடியாது
* பெற்றோர் கண்ணீர் சிந்தும் நிலை ஏற்பட இடமளியேன்
ஜனாதிபதி


பல்கலைக்கழகங்களினுள் பிரவேசிக்கும் மாணவர்கள் மத்தியில் நிலவும் சந்தேகங்களையும், அவர்களது பெற்றோர்களிடம் நிலவும் பீதியையும் போக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்தினுடையது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்று தெரிவித்தார்.

பல்கலைக்கழக மாணவர்களுக்குக் கோட்பாட்டு ரீதியாகவும், செயல்முறை ரீதியாகவும் அளிக்கப்படுகின்ற தலைமைத்துவ மற்றும் சிந்தனைத் திறன் மேம்பாட்டு வதிவிட பயிற்சியை அங்குரார்ப்பணம் செய்து வைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

உயர் கல்வி அமைச்சும், பாதுகாப்பு அமைச்சும் இணைந்து ஒழுங்கு செய்துள்ள இப்பயிற்சி நெறியின் பிரதான அங்குரார்ப்பண வைபவம் அலரி மாளிகையில் நேற்று நடைபெற்றது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இந்நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றுகையில், நீங்கள் 13 வருடங்களுக்கு முன்னர் மூன்று இலட்சம் குழந்தைகளில் ஒருவராக பாடசாலையில் முதலாம் தரத்தில் சேர்ந்தீர்கள். அன்று முதல் கற்று கல்வி பொதுத் தராதர சாதாரண தரம் வரை பரீட்சை எழுதினீர்கள்.

அப்பரீட்சையில் சித்தி அடைந்து க. பொ. த. உயர்தரத்தில் கற்aர்கள். வருடா வருடம் சுமார் மூன்று இலட்சம் மாணவர்கள் க. பொ. த. உ/த பரீட்சை எழுதுகிறார்கள். இவர்களில் சுமார் ஒரு இலட்சத்து ஐம்பதினாயிரம் பேர் சித்தியடைகின்றார்கள். என்றாலும் 23 ஆயிரம் பேரளவில் தான் பல்கலைக்கழக நுழைவைப் பெறுகின்aர்கள். நீங்கள் பெறுமதிமிக்க இளம் பராயத்தினருடன் இணைந்து கொள்ளுகிaர்கள்.

எமது நாட்டுக்கும், சமூகத்திற்கும் திறமையானவர்கள் தான் மிகவும் அவசியமானவர்கள். இன்று செயல் திறன் மிக்கவர்களாகத் திகழும் இளைஞர்களே நாளை நாட்டுக்கும் எமது எதிர்கால சமூகத்திற்கும் தலைமை வழங்கக் கூடியவர்களாவர்.

தினமும் என்னை சந்திக்கும் பெற்றோர் தெரிவிக்கும் அபிப்பிராயங்களும் கருத்துக்களும் பல்கலைக்கழகம் தொடர்பாக அவர்களது உள நிலையை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

தமது பிள்ளைகள் பல்கலைக்கழகம் செல்லும் போது அவர்களுக்கு அங்கு என்ன நடக்கும் என்பதே அவர்களது மனதில் இருக்கும் பிரதான அச்சம். இப்படியான அச்சம் மாணவர்கள் மத்தியிலும் காணப்படுகின்றது. இதே வேளை, பல்கலைக்கழகங்களில் மூன்று வருடங்கள் கற்று பட்டதாரிகளாக வெளியாகும் சிலரிடமும் அச்சம் நிலவு கிறது. இவர்களது அச்சத்துக்குக் காரணம் தொழில் தொடர்பானதே.

இது இவ்வாறிருக்க தமது பிள்ளைகளைப் பாடசாலைகளுக்கு அனுப்பிவிட்டு பெற்றோர் பாடசாலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடக் கூடிய ஒரு சூழலும் அன்று இருந்தது. அந்த பயங்கர சூழலுக் கான காரணியை நாம் முழுமையாக நீக்கி விட்டோம்.

என்றாலும் பல்கலைக்கழகங்கள் தொடர்பாக நிலவுகின்ற அச்சம், பீதியை எமது மாணவர்களை செயல் திறன் மிக்கவர்களாக மேம்படுத்துவதன் மூலமே நீக்க முடியும். இதற்கான வேலைத் திட்டங்களே முன்னெடுக்கப்படுகின்றன. உலகில் பயிற்சிகள் எதனையும் பெறாத மனிதன் எதை எடுத்தாலும் முடியாது என்று தான் சொல்லுவான். அந்த நிலையிலிருந்து எமது இளம் பராயத்தினர் மீட்கப்பட வேண்டும்.

நீங்கள் பொறுமையாளர்களாக இருக்க வேண்டும். அப்பண்பை ஒவ்வொருவரும் வளர்த்துக் கொள்ள வேண்டும். பொறுமையாளர்களே வெற்றி பெறுவர்கள். ஆனால் பொறுமையானது அடிமைத்தனமாக மாறிவிடுவதற்கு இடமளிக்கக் கூடாது.

அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்கா பல்கலைக்கழகத்தில் கல்வி கற்ற சமயம் பகிடிவதைக்கு நன்கு முகம் கொடுத்தார். நானும் சட்டக்கல்லூரி மாணவனாக இருந்த போது பகிடிவதைக்கு முகம் கொடுத்தேன். அன்று என்னை பகிடிவதை செய்தவர் தான் இப்போது பாராளுமன்ற செயலாளர் நாயகமாக கடமையாற்றுகிறார்.

அன்று நான் இளம் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தேன். என்னை பகிடிவதை செய்தவர்களில் பெண்களும் இணைந்திருந்தனர். என்னை மேசை மீது ஏறி நின்று சொற்பொழிவாற்றச் சொன்னார். அப்படியான பகிடிவதை தான் அன்று இருந்தது. ஆனால், இன்று பல்கலைக்கழகங்களில் காணப்படுகின்ற பகிடிவதையை ஒருபோதுமே அனுமதிக்க முடியாது.

எமது பாதுகாப்பு படையினரிடம் காணப்படும் பொறுமையும், சகிப்புத் தன்மையும் உலகில் வேறு எந்த பாதுகாப்பு படையினரிடமும் இருக்க முடியாது. ஒரு புறம் வெடி குண்டுகளின் அச்சுறுத்தல், மறுபுறம் பயங்கரவாதிகளின் தாக்குதல் முயற்சிகள்.

இவற்றுக்கு மத்தியில் எமது படையினர் அப்பாவி மக்களை பாது காப்பதிலும், அவர்களுக்கு உணவளிப்பதிலும் எவ்வாறு பொறுமையாகவும், சகிப்பு தன்மையோடும் செயற்பட்டார்கள், என்பதை சகலரும் அறிவர். அவர்கள் முன் னுதாரணமிக்கவர்களாக திகழுகின்றார்கள். அவர்களது செயல் திறனும், பொறுமையும், சகிப்புத் தன்மையும் எமது மாணவர்களுக்கும் நல்ல முன்னுதாரணமாகும்.

என்றாலும், சிலர் நாம் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இராணுவ பயிற்சி பெற்றுக்கொடுப்பதாக விமர்சிக்கின்றனர். இதில் எதுவிதமான உண்மையுமே இல்லை. பல்கலைக்கழக மாணவர்களுக்கு இராணுவப் பயிற்சி பெற்றுக் கொடுக்க நாம் தயாரில்லை. மாறாக பெருந்தொகை யான மாணவர்களுக்கு பயிற்சிகள் வழங்கக் கூடிய வசதி இராணுவ நிலை யங்களில் தான் உள்ளது. அதனால் தான் அந்த இடங்கள் பயிற்சிக்குரிய இடங் களாகத் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றன.

உங்களில் பெரும் பகுதியினர் இப்போது தான் வீட்டை விட்டு முதன் முறையாக வெளியே வந்திருப்பீர்கள். நீங்கள் பெற்றோரில் தங்கி இருப்பவர்கள். உங்களுக்குப் பொறுப்புக்கள் உள்ளன. நீங்கள் இந்நாட்டு மக்களின் பணத்தில் கல்வி கற்கிaர்கள். அதனால் நீங்களும் விரிவுரையாளர்களும், பேராசிரியர்களும் இந்தப் பொறுப்பிலிருந்து நீங்கிவிட முடியாது.

அன்று சோரத்த தேரர் ‘பல்கலைக்கழக மாணவர்கள் விமர்சகர்களாக ஆய்வாளர்களாக முற்போக்காளர்களாக இருக்க வேண்டும். அவர்கள் பின்பற்றாளர்களாக அல்லாமல் தலைவர்களாகத் திகழ வேண்டும்’ என்றார்.

ஆகவே பல்கலைக்கழக மாணவர்கள் அரச சொத்துக்களை சேதப்படுத்தக் கூடாது. அவர்கள் அவற்றை நேசிக்கக் கூடியவர்களாகத் திகழ வேண்டும். இரத்தம் சிந்தக் கூடாது. இவ்வாறு வன்முறையோடு செயற்பட்டு எதனைத் தான் சாதிக்க முடியும். ஏற்கனவே செயற்பட்டவர்கள் என்னதான் பெற்றுக் கொடுத்திருக்கின்றார்கள். தென் பகுதியில் 60 ஆயிரம் தாய்மாரினதும், வடபகுதியில் ஆயிரக்கணக்கான பெற்றோரினதும் கண்ணீரை நான் பார்த்துள்ளேன். இப்படியான நிலையில் எமது தாய்மாரின் கண்களில் மீண்டும் கண்ணீர் வழிய இடமளிக்க முடியாது.

அதன் காரணத்தினால் பல்கலைக்கழக மாணவர்கள் வன்முறை மனப்பான்மை யிலிருந்து விடுபட வேண்டும். அவர்களுக்கு சரியான வழிகாட்டல் வழங்கப்பட வேண்டும். அவர்களை நாட்டுக்கும், சமூகத்திற்கும் நன்மை பயக்கக் கூடிய வர்களாகக் கட்டியெழுப்ப வேண்டும். இவர்கள் தமக்கு தாமே தலைமை வழங்கக் கூடியவர்களாகத் திகழவேண்டும். இதற்குத் தேவையான வழிகாட்டல்களை பெற்றுக்கொடுக்கவே நடவடிக்கை எடுத்துள்ளோம்.

நீங்கள் இந்த நாட்டின் எதிர்காலத் தலைவர்கள் உங்கள் மத்தியில் அன்பு, கருணை, மனிதாபிமானம், நேசம் மேலோங்க வேண்டும்.

எமது பல்கலைக் கழகங்களிலிருந்து வெளியாகும் பட்டதாரிகள் சகலரும் ஆங்கிலம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் குறித்த அறிவைப் பெற்றிருப்பது மிக அவசியம். அவர்கள் உலகின் எங்கும் கடமையாற்றக் கூடிய தகுதியை பெற்ற வர்களாகத் திகழ வேண்டும்.

நீங்கள் பத்திரிகைகளை வாசியுங்கள். உலகில் என்ன நடக்கிறது என்பது குறித்த அறிவைப் பெற்றுக்கொள்ளுங்கள். உங்களுக்கு மத்தியில் அபிப்பிராய பேதங்கள் இருக்கலாம். அவற்றைப் பொறுமையோடு ஏற்றுக்கொள்ளுங்கள். எனது அமைச்சரவையிலும் வெவ்வேறு கருத்துக்களைக் கொண்டவர்கள் உள்ளார்கள். ஆன போதிலும் சகலரையும் நாட்டைக் கட்டியெழுப்பும் பொது இலக்கில் ஒன்று சேர்த்துள்ளேன். நாம் சகலரும் ஒரே இலக்கிலேயே பயணிக்கின்றோம். இதுவே எமக்கு கிடைத்திருக்கும் வெற்றி.

ஆகவே குரோதம், வைராக்கியம், பகைமை போன்ற மன நிலைகளிலிருந்து விடுபட்டு நாட்டைக் கட்டியெழுப்பக் கூடிய மனப்பான்மை மிக்க பட்டதாரிகளாகத் திகழுங்கள் என்றார்.

இந்நிகழ்வில் உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்கா, பிரதியமைச்சர் நந்தமித்ர ஏக்கநாயக்கா, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, முப்படை தளபதிகள், பொலிஸ் மா அதிபர் உட் பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டார்கள்.
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum