சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Today at 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Today at 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Today at 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Today at 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Today at 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32

» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30

» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19

» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35

» nisc
by rammalar Yesterday at 16:21

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09

» மருந்து
by rammalar Yesterday at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

சுமதியின் ராசி பலன் - திகில் கதை Khan11

சுமதியின் ராசி பலன் - திகில் கதை

Go down

சுமதியின் ராசி பலன் - திகில் கதை Empty சுமதியின் ராசி பலன் - திகில் கதை

Post by மீனு Mon 11 Jul 2011 - 1:19


சுமதியின் ராசி பலன் - திகில் கதை Chathrapathi+Railway

சுமதி அந்த மின்சார ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்து ரொம்ப நேரம் ஆயிற்று.ஒரு ரயிலையும் காணும். மணி மாலை ஆறு. எண்ணாயிற்று.கூட்டம் வேறு சேர்ந்துக் கொண்டிருந்தது.பசி வேறு எடுக்க ஆரம்பித்தது. பொழுது போகவில்லை. அங்கும் இங்கும் உலாத்தினாள். அப்போதுதான் அவள் கண்ணில் பட்டது அது.தினமும் பார்ப்பதுதான்.




எடை பார்க்கும் இயந்திரம். ”உங்கள் எடை, அதிர்ஷ்டம் துல்லியமாக கணிக்கும்... வருக... வருக.இரண்டு கலர் பல்புகள் “மினுக்..மினுக்... என்று மாறி மாறி எரிந்து வா...வா என்று அழைத்தது. ஒரு ரோபோ மாதிரி இருந்தது.




இதில் ஒரு முறை கூட ஏறி எடைப் பார்த்ததில்லை. எடை பார்ப்பவர்களை பார்த்ததுண்டு. துல்லியமாக எடை பார்க்க வேண்டும் என்று சிலர் ஜட்டியை மட்டும் விட்டு மீதி எல்லாவெற்றையும் கழட்டி துல்லியமாக பிசிறுத் தட்டாமல் எடைப் பார்ப்பார்கள். எதோ எக்ஸ்ரே எடுப்பது போல்.சிரிப்பு வரும்.




சுமதிக்கு அன்றைய எடையை விட அன்றைய அதிர்ஷ்டம்தான் முக்கியமாகப் பட்டது. அந்த கலர் பல்புகள் அவளை கண் சிமிட்டி அழைத்துக் கொண்டிருந்தது சுமதிக்கு பொதுவாகவே ராசிபலன்,புத்தாண்டு பலன்,இன்று நாள் எப்படி போன்ற வற்றில் அவ்வளவாக ஆர்வம் இல்லை. ஆனால் இன்றைக்கு இனம் புரியாத ஆர்வம் ஒன்று அரித்துக் கொண்டே இருந்தது.





நேரம் ஆக ஆக் இன்றைய அதிர்ஷ்டம் தெரியவிட்டால் ம்ண்டை வெடித்து விடும் போல் ஒரு படபட்ப்பு வந்து விட்டது.எடுத்தே விடுவது என்று முடிவு செய்து அதன் அருகே சென்றாள்.இன்றைக்கு எனக்கு என்ன ராசி பலன்? தன லாபம்? எதிர்பாராத வெளியூர் பயணம்?




நமட்டுச் சிரிப்புச் சிரித்துக் கொண்டே கனமான காய்கறிப் பையையும், ஆபிசில் கொடுத்த பிரேம் போட்ட மஹா லட்சுமிப் படத்தையும் கிழே வைத்து விட்டு எடை மெஷினில் ஏறினாள்.விர்ர்ர்ர்ர்ர் என்று சத்தம் போட்டு சுத்தி சக்கரம் நின்றது.காசைப் போட்டாள். படக் என்ற சத்தம் வந்து எடை டிக்கெட் பிரிண்ட் ஆகி கவுண்டரில் வந்து விழுந்தது.




கை விட்டு எடுக்கப் போனாள் .. அப்போது ...காது பொளந்து போவது போல் ஒரு வெடி குண்டு சத்தம்.உடம்பு அதிர்ந்து வெல வெலத்தது.அடுத்த ..”பட பட பட வென ....துப்பாக்கி சுடும் சத்தமும்... பயணிகள் கத்தும் சத்தமும், ஒலமும்..அதிர்ச்சியில் உறைந்து பின் பக்கம் பார்த்தாள். யாரோ ஒரு சிறுவன் உடம்பெல்லாம் ரத்த சகதியாகி, கை ஒன்று தனியாகி தொங்கியபடி, ஒலமிட்டபடி இவள் அருகில் சொத்தென்று விழுந்தான் . மிரண்டுப் போய் முகத்தில் சவ களைத்தட்ட “அய்யோ கடவுளே” என்றபடி அந்த எடை கார்டை பார்க்கமல் தன் ஹாண்ட் பேக்கில் போட்டுக் கொண்டு எல்லாவெற்றையும் தூக்கிக் கொண்டு ஒட முடியாமல் ‘தத்தாக்கா பித்தாக்கா” மூச்சு வாங்க எதிரில் தெரிந்த படிக்கட்டை நோக்கி ஓடினாள்.




வழியில் ஒருவர் மிதிப் பட்டு இறந்துக் கிடந்தார். “பதுங்குங்க.... ஒளிஞ்சுகுங்க.... தீவிரவாதி சுடறான்.....” ஒரு ரயில்வே போலீஸ் கத்திக்கொண்டே எதிர் திசையில் ஓடினார். அவர் பின்னால் அடிப் பட்ட ஒருவரை நான்கு பேர் தூக்கிக் கொண்டு ஒடினார்கள்.




கேட்டவுடன் உடம்பு ஒரு குலுக்கு குலுக்கியது.துப்பாகி சுடும் சத்தம் கேட்டுக் கொண்டே இருந்தது.. ஆண்,பெண்,முதியவர்கள்,பிச்சைக் கர்ரர்கள்,சிறுவர்கள் பிளாட்பார சிறு வியாபாரிகள் விழுந்தடித்துக் கொண்டு உயிரைக் கையில் பிடித்தப் படிஅங்கும் இங்கும் சிதறி ஒடினார்கள். பல பேர் உடலில் ரத்தம் சொட்டிக்கொண்டிருந்தது.




படிக்கெட்டில் ஏறி மேல் தளத்தில் வந்து பக்கத்தில் இருந்த இரும்பு தடுப்பிற்குள் நுழைந்து மொட்டை மாடி போல் இருந்த இடத்தில் படுத்துக் கொண்டாள். அவள் மாதிரி நிறைய பேர் தரையோடு ஒட்டியபடி படுத்துக் கிடந்தார்கள்.வலது பக்கத்திலும் ஆண் ,பெண் ,முதியவர்கள் என தரையோடு ஒட்டிப் படுத்திருந்தார்கள்.இவள் அருகில் ஒரு குரங்காட்டியும் பக்கத்தில் சங்கலியில்
கட்டிய குரங்கும் படுத்திருந்தது. அது அவளையே பார்த்துக் கொண்டிருந்தது.




தலையை கவிழ்த்துக் கொண்டாள். மூச்சு முட்டி வேர்த்து விறு விறுத்துப் தெப்பலாக நனைந்துப் போனாள்.பல இடங்களில் சிராய்த்து எரிந்தது. புடவை முழங்கால் வரை தூக்கி காலின் கிழ் காய்கறிப் பை சிதறிக் கிடந்தது.ஒரிரு தக்காளிகள் ந்சுங்கி கால் விரல்களில் பிசுபிசுத்தது. தீவிரவாதி எல்லோரையும் சுட்டு விடுவானா? சுடும் போது வலிக்குமா? துடி துடித்துச் சாவேனா?காலில் விழுந்து கெஞ்சித் தப்பிக்கலாமா?




எனக்கு இன்றைய ராசி பலன் என்ன? உயிரோடு திரும்புவோமா?




தன் குழந்தைகள் ஞாபகம் வந்தது. அழுகை முட்டியது. சத்தம் வராமல் கேவினாள். செல் போன்னை எடுத்தாள். பக்கத்தில் உள்ளவர்கள் ஜாடைக் காட்டி உள்ளே வைக்கச் சொன்னார்கள்.Slient mode ல் வைத்தாள்.அப்படியே முனகியபடியே படுத்து இரண்டரை மணி நேரம் ஓடி விட்டது.இடையிடையே வெடிக்கும் சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது.




எனக்கு இன்றைய ராசி பலன் என்ன?


மெதுவாக பேச்சுக் குரல்கள் கேட்க ஆரம்பித்தது. தலையை தூக்கிப் பார்த்தாள். மணி பத்து. லவுட்ஸ்பீக்கரில் ”பயணிகள் கவனிக்க மேற்கு கேட் வழியாக போய்விடுங்கள். அங்கு போலீஸ் பாது காப்பு உள்ளது. இரண்டு தீவிரவாதிகளைச் சுட்டு விட்டோம்.”




படபடப்பு சற்று குறைந்தது.எழுந்தாள்.உடம்பு கனத்தது. மனது திகிலுடன் சுற்றும் முற்றும் பார்த்தாள்.


எனக்கு இன்றைய ராசிபலன் என்ன?





செல் போனில் விபரத்தை கணவனிடம் சொன்னாள்.அவர்களுக்கு எல்லாம் தெரிந்திருந்தது. சில பயணிகள் கூடி பேசி ஒரு பிரைவேட் டாக்ஸியில் வேண்டிய இடங்களில் இறங்கி சுமதியும் வீடு வந்து சேரும் போது மணி இரவு 12.45 பிரேம் போட்டமஹா லஷ்மிப் படத்தை மார்போடு அணைத்தபடிதான் பிரயாணம் செய்தாள்.வீடு வரும் வரை உடம்பில் நடுக்கம் இருந்தது.




எனக்கு நேற்றைய பலன் என்ன?




வீட்டில் எல்லோரும் தூங்கி விட்டார்கள். இவளுக்குத் தூக்கம் வரவில்லை.அந்த ஸ்டேஷன் நிலவரத்தைப் பார்க்க வேண்டும்.ம்ணி காலை மூன்று மணி. எழுந்து டீவியைப் போட்டாள்.அந்த தீவிரவாதியைப் பார்த்து அதிர்ந்தாள். அட... பாவி..


நீயா...?


சுமதியின் ராசி பலன் - திகில் கதை Terrorist
தான் எடை எடுக்கும் முன் இவன் தான் எடை மெஷினில் ஏறி எடை எடுத்தான். அப்போது அந்த துப்பாக்கி தெரியவில்லை.அந்த அதிர்ஷ்ட வாசகம் ஆங்கிலத்தில் இருந்ததால் இவளிடம் உருது கலந்த இந்தியில் அர்த்தம் கேட்டான். அவள் காடை வாங்கிப் பார்த்தாள் அதில்


" Have a nice and joyful day " என்று இருந்ததை மொழி பெயர்த்துச் சொன்னாள். சிரித்தப்படி மிகுந்த நன்றி என்று பதிலளித்தான்.




அவசரமாக தன் பேக்கை எடுத்தாள்.கை நடுங்க தன் எடை அட்டையை எடுத்தாள். எடை 60kg என்று போட்டிருந்தது. மறு பக்கம் திருப்பலாமா? மார்பு படபடக்க ஆரம்பித்தது. பார்க்க வேண்டாம்...பார்க்கமலேயே அதை துண்டு துண்டாக கிழித்து ஜன்னல் வழியாக வெளியே விட்டெறிந்தாள்.


முற்றும்
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum