சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by rammalar Today at 4:01

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by rammalar Today at 3:57

» லக்கி பாஸ்கர்-படத்தின் முதல் பாடல் வெளியானது!
by rammalar Today at 3:46

» நடிகர் திலீபன் புகழேந்திக்கு ஜோடியாக 5 கதாநாயகிகள்!
by rammalar Today at 3:38

» `துண்டு ஒரு தடவைதான் தவறும்!' - ஹெட்டை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா
by rammalar Today at 3:18

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Yesterday at 8:21

» AUS vs AFG புள்ளிப்பட்டியல் - இந்தியாவுக்கு ஆப்பு வைத்த ஆப்கானிஸ்தான்.. ஆஸி. அரை இறுதி வாய்ப்பு காலி
by rammalar Yesterday at 6:46

» அயோத்தியில் பாஜக தோல்வி எதிரொலி: ஹனுமன் கோயில் மடத் தலைவர் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்
by rammalar Yesterday at 6:40

» விண்ணிலிருந்து பூமிக்கு திரும்பும் ஏவுகலன் சோதனை வெற்றி! ISRO சாதனை!
by rammalar Yesterday at 6:35

» படித்ததில் ரசித்தது-
by rammalar Sun 23 Jun 2024 - 10:56

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...
by rammalar Sun 23 Jun 2024 - 6:27

» அப்பாவின் பாசம் - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:55

» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:52

» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Sat 22 Jun 2024 - 15:50

» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 15:18

» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Sat 22 Jun 2024 - 15:17

» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Sat 22 Jun 2024 - 15:16

» மூக்குத்தி அம்மன்- 2ம் பாகம்
by rammalar Sat 22 Jun 2024 - 15:15

» கன்னட நடிகை வீடியோவால் சைபர் கிரைம் விசாரணை
by rammalar Sat 22 Jun 2024 - 15:14

» ஆன்மிக சிந்தனை
by rammalar Sat 22 Jun 2024 - 15:12

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:10

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:09

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:08

» நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ...
by rammalar Sat 22 Jun 2024 - 12:54

» ஜூன் 22: இன்று ஓரளவு குறைந்த தங்கம் விலை!
by rammalar Sat 22 Jun 2024 - 11:30

» வீட்டை எதிர்த்து தான் கல்யாணம் பண்ணுனேன்.. நடிகை தேவயானி
by rammalar Sat 22 Jun 2024 - 11:14

» சட்னி சாம்பார் - வெப் சீரிஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 10:42

» மீனாட்சி சவுத்ரி
by rammalar Sat 22 Jun 2024 - 7:31

» பயனுள்ள வீட்டு குறிப்புகள்
by rammalar Fri 21 Jun 2024 - 19:47

» உங்க வீட்டுக்கு கருவண்டு வந்தால் என்ன நடக்கும்னு தெரியுமா?
by rammalar Fri 21 Jun 2024 - 15:12

» உலக இசை தினம்
by rammalar Fri 21 Jun 2024 - 4:47

» சர்வதேச யோகா தின வாழ்த்துக்கள்!
by rammalar Fri 21 Jun 2024 - 4:43

» இன்று(ஜூன் 21). வருடத்தின் மிக நீண்ட நாள்.. "கோடைகால சங்கிராந்தி"..!!!
by rammalar Fri 21 Jun 2024 - 4:31

குழந்தை மனம்! Khan11

குழந்தை மனம்!

Go down

குழந்தை மனம்! Empty குழந்தை மனம்!

Post by abuajmal Sun 24 Jul 2011 - 18:35

யற்கையின் மாசுமறுவற்ற மற்றொரு வடிவம் குழந்தை. குழந்தைகளின் பேச்சும் சிரிப்பும் லூட்டியும் தூய்மை. கள்ளம், கபடம் கலக்காதவை. அவர்களுக்கு முன்தீர்மானங்கள் இருப்பதில்லை.

இடம், பொருள் பார்த்துப் பேசவேண்டும், கூடாது என்பதெல்லாம் எதுவும் அவர்களுக்கு இல்லை. அதனாலேயே அவர்களின் பேச்சோ சிரிப்போ நமக்குப் பொத்துக்கொண்டு வரும் சிரிப்பையோ சங்கடத்தையோ ஏற்படுத்திவிடும்.

தன் ஐந்து வயது மகளைக் குளிப்பாட்டும்போது தாய் பெருமையோடு கூறினாள், "இங்கே பாரு! உன் தலைமுடி எவ்ளோ நீளமா வளருது".

அதற்கு மகள் முகத்தைச் சிணுங்கலாக வைத்துக்கொண்டு, "நீதான் என் தலைல நெறய்ய தண்ணி ஊத்துற".

அவர்களது உலகம் வேறு. அவர்களின் குறிக்கோள் மிகவும் எளிதானது. மகிழ்வாய் இருக்க வேண்டும். பசித்தால், விழுந்தால், வலித்தால், ஓர் அழுகை. சமாதானம் செய்து கவனித்துக்கொள்ள பெற்றோராச்சு.



பிரச்சினை தீர்ந்ததா? அடுத்ததாகத் தூக்கம், விளையாட்டு, சிரிப்பு. பெரியவர்கள் நாம்தான் குழந்தைகளுக்கு algorithm, trigonometry என்று அவர்களுடைய எளிய பாலகத்திலேயே திணித்து, கற்றுத்தந்து, அவர்களது குழந்தைத் தன்மையை விரட்டிவிட்டுத்தான் மறுவேலை என்று அடம் பிடிக்கிறோம்.



ஓரமாய் அமர்ந்து நாம் அவர்களிடம் கற்றுக்கொள்ள ஆரம்பித்தால், பலன் ஏராளம். சொப்புப் பாத்திரத்தில் உணவு, பானம் எல்லாமும்கூட கிடைக்கலாம். வயிறு நிறையாது; ஆனால் மனம் இலேசாகும்.

பொதுவாய் அவர்களுக்குச் சிரித்து மகிழக் காரணம் தேவைப்படுவதில்லை; அழவும், சண்டித்தனம் செய்யவும்தான் காரணம் தேவை! அதை பொறுப்பாய் நாம் அவர்களுக்கு அளித்துவிட்டு, ‘எப்பப்பாரு என்ன அழுகை?’ என்று அதட்டல்வேறு.

குழந்தைகளுக்கு நிறவேற்றுமை, ஏற்றத் தாழ்வு, பாரபட்சம், எதுவுமில்லை. கா, பழம், விளையாட்டு, சிரிப்பு, கும்மாளம் அவ்வளவுதான். ஐந்து ஆண்டுகளுக்குப்பின் வாசலுக்குவந்து கும்பிட்டு, அசடு வழியும் எம்.எல்.ஏவைப் பார்த்தாலும் கோபம் வராது. "ஹைய்யா! அந்த மாமா விரல்ல பெர்ஸா மோதிரம்" என்ற வெள்ளேந்தி வியப்பு இருக்கும்.

அதற்காக பெரியவர்கள் நாமும் குழந்தைகள்போல் "தத்தக்கா பித்தக்கா" என்றெல்லாம் மழலையில் பேச ஆரம்பித்துவிட வேண்டும் என்பதல்ல. "நல்ல டாக்டரா பார்த்து காட்டக்கூடாதா? ஆரம்பத்திலேயே காண்பிச்சுட்டா இதெல்லாம் சரிப் பண்ணிடலாம். இப்படித்தான் என் ஒன்றுவிட்ட நாத்தனார் புருஷனுக்கு..." என்று பக்கத்துவீட்டு நல்லுள்ளத்தினர் நம் வீட்டினருக்கு இலவச அட்வைஸ் தருவார்கள்.

இங்கு விஷயம் குழந்தைகளின் மனசு. அவர்களின் மகிழ்வு. குழந்தைகள் நமக்கு ஆசான்.

பெரியவர்களாக வளரும் நாம் பற்பல பிரச்சினைகள், சோதனைகள் என்று தாண்டித் தாண்டி ஓடி ஒரு கட்டத்தில் அலுப்பு மேலிட்டுவிட்டால், சோர்ந்து அமர்ந்துவிடுகிறோம். அத்தகு தேக்கம் நம்மை மந்தமாக்கிவிடும். தெளிந்த நீராய் ஓடும் ஆறு ஓடிக்கொண்டே இருந்தால்தான் அதன் நீர் தெளிவு. தேங்கி நின்றால்? குளமாகி எருமைகள் குளித்து மகிழ்வடையும்! சைக்கிளோ, காரோ எதுவொன்றையும் உபயோகித்துக் கொண்டேயிருந்தால்தான் நல்லநிலையில் இருக்கும். இல்லையெனில் துருப்பிடித்துவிடும். நாம் நகராவிட்டாலும் நாளும் கிழமையும் வயதும் நகர்ந்து கொண்டுதானே இருக்கின்றன. அதனால் கூடவே ஓடாவிட்டால் மனம் மட்டும் முடங்கிவிடும். எனவே காலத்துடன் நகர்வதே உத்தமம்.

நமது செயல்பாடுகளுக்கு வயது தடையில்லை. ஜார்ஜ் பெர்னார்ட் ஷா நோபல் பரிசு பெறும்போது அவரது வயது எழுபது மட்டுமே!

இதில் சூட்சமம் என்ன? வேகமாய் நகர்ந்துகொண்டே இருக்கும்போது மனதிற்கு வருத்தப்பட நேரம் இருப்பதில்லை. அதனால் அது இளமையாகவே இருக்கிறது.

தவிரவும், கையோ, காலோ; திறமையோ, கற்பனையோ - உபயோகப்படுத்தாமல் இருந்தால் அவை தம் ஆற்றலை இழந்துவிடுகின்றன. ஏதோ ஒரு கட்சி ஆட்சிக்குவந்து இலவசமாய் அளித்தார்கள் என்பதற்காக சக்கர நாற்காலியைக் கொண்டுவந்து ஒரு தவம்போல் மூன்று ஆண்டுகளுக்கு அதில் அமர்ந்தவாறே வாழ்க்கையை ஓட்டுகிறீர்கள் என்று வையுங்கள். என்ன ஆகும்? அதன்பிறகு எழுந்து நின்றால் நடக்க இயலாது. கால்கள் நடை மறந்து போய்விடும். பிறகு பிஸியோதெரபிக்காரர், இலவசமெல்லாம் கிடையாது என்று ஃபீஸ் தீட்டிக் கறந்துவிட்டு நடக்கக் கற்றுத்தருவார்.

அது மட்டுமன்றி எந்தத் திறமையையும் பயன்படுத்திக் கொண்டிருந்தால் மட்டுமே அதில் நன்னம்பிக்கை ஏற்பட்டு அது மனதில் துணிவையும் அச்சமின்மையையும் ஏற்படுத்தும். நம்மிடம் இருக்கும் திறமையும் துணிவும் களவு போய்விடும் என்று அபத்தமாக நினைத்துக்கொண்டு யாராவது படுக்கையறையில் புகுந்து, இழுத்துப் போர்த்திக் கொண்டு, கதவையும் அடைத்துக்கொண்டால் எப்படியிருக்கும்? சிலநாட்களில் தானாகவே துணிவு விடைபெறும்; திறமை நமுத்துவிடும்.

வீடு, சன்னல், மேசை, நாற்காலி, மூக்குக் கண்ணாடி என்று ஒவ்வொரு பொருளையும் தூசுதட்டித் துடைத்துப் பாதுகாப்பதைப்போல் நமது செயல்களையும் திறமைகளையும் உபயோகப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். அதாவது நமது மனதை ஆறப்போட்டு விடாமல் அதன் முழு சக்திக்கு ஏற்ப பயன்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். அப்படி இருக்கும்போது, முதுமையில் தளர்ச்சி உடலில் தென்பட்டாலும் மனம் மட்டும் பொலிவுடனேயே இருக்கும்; அது நம்மை இடைவிடாது செலுத்திக் கொண்டேயிருக்கும்.

விடைபெறும் காலம் வரும்வரை இயங்குங்கள்; நல்ல குறிக்கோளுடன் செயலாற்றிக் கொண்டே இருங்கள். மன உற்சாகமும் மகிழ்வும் தேர்தல் அறிக்கை போலன்றி உண்மையாகவே நிகழும்



நன்றி சகோ. நூருத்தீன்
abuajmal
abuajmal
புதுமுகம்

பதிவுகள்:- : 833
மதிப்பீடுகள் : 109

http://www.tndawa.blogspot.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum