சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Today at 2:19

» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Today at 2:11

» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Yesterday at 19:39

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Yesterday at 19:27

» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Yesterday at 19:24

» பல்சுவை 5
by rammalar Yesterday at 17:48

» பல்சுவை - 4
by rammalar Yesterday at 17:06

» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Yesterday at 10:20

» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Yesterday at 8:59

» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Yesterday at 6:47

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Yesterday at 5:29

» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Yesterday at 5:15

» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Yesterday at 5:08

» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Yesterday at 4:51

» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Fri 31 May 2024 - 15:41

» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Fri 31 May 2024 - 15:27

» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Fri 31 May 2024 - 13:17

» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Fri 31 May 2024 - 12:57

» செய்திகள் -பல்சுவை
by rammalar Fri 31 May 2024 - 10:35

» பீட்ரூட் ரசம்
by rammalar Fri 31 May 2024 - 10:07

» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Fri 31 May 2024 - 10:00

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Fri 31 May 2024 - 4:22

» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37

» காக்கும் கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:53

» வரகு வடை
by rammalar Thu 30 May 2024 - 13:40

» கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:35

» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Thu 30 May 2024 - 13:28

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Thu 30 May 2024 - 10:49

» விடுகதைகள்
by rammalar Thu 30 May 2024 - 8:57

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Thu 30 May 2024 - 8:50

» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Thu 30 May 2024 - 8:41

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Thu 30 May 2024 - 5:41

» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Thu 30 May 2024 - 5:37

அருள் மணக்கும் ரமழானை வரவேற்போம்! Khan11

அருள் மணக்கும் ரமழானை வரவேற்போம்!

2 posters

Go down

அருள் மணக்கும் ரமழானை வரவேற்போம்! Empty அருள் மணக்கும் ரமழானை வரவேற்போம்!

Post by நண்பன் Fri 29 Jul 2011 - 14:53

அருள் மணக்கும் ரமழானை வரவேற்போம்!
அருள் நிறைந்த ரமழான் மாதம் பிறக்கும்போது இவ்வரிய சந்தர்ப்பத்தில் ரமழானை வரவேற்று அதனை கண்ணியப்படுத்துவது, ரமழானில் எவ்வாறு நடந்து கொள்வது பற்றிய சில அறிவுறுத்தல்களை சகோதர முஸ்லிம்களுக்கு மத்தியில் பகிர்ந்து கொள்வது சாலச்சிறந்ததும், தலையாயக் கடமையுமாகும்.

வருடத்திலோர் மாதம் அதுவே புனிதம் பூத்துக் குலுங்கும் ரமழான், அது குர்ஆனுடைய மாதம், ரஹ்மத்துடைய மாதம், மஃபிரத்துடைய மாதம், நரக விடுதலை மாதம், பொறுமையுடைய மாதம், தவ்பாவுடைய மாதம், துஆவுடைய மாதம், பிறருடைய சுகதுக்கங்களில் கலந்துரையாடும் மாதம், ஸகாத் ஸதகாவுடைய மாதம், சுவர்க்கம் அலங்கரிக்கப்படும் மாதம், நரகம் மூடப்படுகின்ற மாதம், ஷைத்தான் விலங்கிடப்படுகின்ற மாதம், நரகிலிருந்து அதிகமான பேர் விடுதலை பெறும் மாதம்.

சத்தியத்தை வாழவைத்து அசத்தியத்தை விழவைத்த மாதமாக அது மாறியது. இஸ்லாம் எழுச்சிப் பெற்று ஜாஹிலியத்தின் கோட்டை கொத்தலங்கள் சரிந்து விழுந்த மாதமாக அது காட்சியளிக்கின்றது. அது எமக்கு அருளும், சுவசோபனங்கள், நற்செய்திகள் எண்ணிலடங்காதவை.

பாவத்திலிருந்து விடுதலை பெற்று ஒருவர் நல்லடியாராக தன்னை மாற்றிக்கொள்வதற்கு வல்ல அல்லாஹ் ரமழானில் அமைத்துத்தந்துள்ள சந்தர்ப்பமாகும்.

“ஒருவர் ரமழானை அடைந்தும் பாவ மீட்சி பெற்று தன்னை நல்லடியாராக மாற்றிக்கொள்ளாவிடின் அவன் அல்லாஹ்வின் அன்பிலிருந்து தூரமாகி விடுவானாக!” என்பது கருணை நபி (ஸல்) அவர்களினது பிரார்த்தனையாகும். ‘ரமழான் மாதம் பிறந்துவிட்டது என மன மகிழ்ச்சியடைபவர் சுவர்க்கத்தில் பிரவேசித்து விட்டார்.’ என்பது மாநபி (ஸல்) அவர்களது சுபசோபனமாகும்.

மேலும் ரமழான் மாதத்திலே சங்கைமிகு நோன்பு நோற்பது அனைத்து முஸ்லிம்கள் மீதும் கடமையாக்கப்பட்டுள்ளது. அதேவேளை அவ்வாறு நோன்பு நோற்பது நன்மையையும் சிறப்பையும் எமக்கு பெற்றுத்தருவதுடன் எமது பாவங்கள் மன்னிக்கப்படுவதற்கும் எமது துன்பங்கள் கஷ்டங்கள் அகற்றப்படுவதற்கும் இம்மையிலும் மறுமையிலும் நாம் வெற்றி பெறுவதற்குமான மிகச் சிறந்த வழிமுறையாகவும் விளங்குகின்றது.

இதனை அல்லாஹ¤தஆலா பின்வருமாறு அல்குர்ஆனில் குறிப்பிடுகின்றான். “இறை நம்பிக்கையாளர்களே! உங்களுக்கு முன்னிருந்த (நபிமார்களைப் பின்பற்றிய)வர் மீது கடமையாக்கப்பட்டது போல் உங்கள் மீதும் நோன்பு கடமையாக்கப்பட்டிருக்கிறது.

(அதன் மூலம்) நீங்கள் இறையச்சமுள்ளவர்களாய்த் திகழட்டும்.” (2:183) மேலும் அல்குர்ஆனில் “ரமழான் மாதம் எத்தகையதென்றால் அதில்தான் மனிதர்களுக்கு (முழுமையான) வழிகாட்டியாகவும் மேலும் நேர்வழியின் தெளிவான அறிவுரைகளைக் கொண்டதும், நன்மை, தீமையை பிரித்தரிவிக்கக் கூடியதாகவும் உள்ள குர்ஆன் இறங்கியருளப்பட்டது.

ஆகவே உங்களில் எவர் (அப்புனித) மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதம் முழுவதும் நோன்பு நோற்கட்டும்” (2:185) அல்குர்ஆனின் இவ்விரு வசனங்களும் புனித ரமழான் மாதத்தில்தான் சங்கைமிகு, ஈருலக வெற்றியின் சின்னமான அல்குர்ஆன் அருளப்பட்ட மாதம் என மிக அழகாகவும், தெளிவாகவும், ஆழமாகவும் விளக்கியுரைப்பதோடு மட்டும் அல்லது, நோன்பு அல்லாஹ்வினால் கடமையாக்கப்பட்ட ஒரு இபாதத் ஆகும். அதனை அவனது கட்டளைக்கு முற்றுமுழுதாக அடிபணிந்து அதனை நிறைவேற்றுவது ஒவ்வொரு முஸ்லிமினதும் கடமையாகும் என்பதை தெளிவுப்படுத்துகிறது.

மேலும் அல்குர்ஆன் இறங்கிய ஏற்றம் மிகுந்த ரமழானை எமது நாட்டின் நகரங்களிலும் கிராமங்களிலும் ஒரு சாரார் பக்திமயமாக புனிதமாக வரவேற்கும் அதேவேளை ரமழானின் கண்ணியத்தைப் பாதிக்கும் வகையில் சிலர் நடந்து கொள்வது பெரும் கவலையை அளிக்கிறது. வருடத்தில் வரும் விருந்தாளியை எமது மக்களின் பலர், குறிப்பாக சில இளைய தலைமுறையினர் நடத்தும் முறை வேதனையைத் தருகிறது. இது குறித்து சில அன்பான வேண்டுகோளை சகோதர முஸ்லிம்கள் மத்தியில் முன்வைப்பது குறிப்பிடத்தக்கது. அல்ஹம்துலில்லாஹ்!


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அருள் மணக்கும் ரமழானை வரவேற்போம்! Empty Re: அருள் மணக்கும் ரமழானை வரவேற்போம்!

Post by நண்பன் Fri 29 Jul 2011 - 14:54

1. கண்ணியமக்க ரமழானை அடைந்த பாக்கியத்தை அல்லாஹ்வின் அருளாகக் கருதி அதனை அன்புடன் வரவேற்று நோன்பை நோற்பதுடன் பர்ளான தொழுகைகள், தராவீஹ், வீத்ர் போன்ற ஸ¥ன்னத்தான தொழுகைகள் திலாவதுல் குர்ஆன், ஹிஸ்பு மஜ்ஸிஸ், திக்ரு ஸலவாத், துஆ, தவ்பா, ஸதக்காக்கள் போன்ற நல் அமல்களில் தம்மை ஈடுபடுத்திக்கொள்ள முயற்சித்தல், இப்பெரும் நல் அமல்களுக்காக அனைத்து சகோதர, சகோதரிகளையும் தூண்டுதல்.

2. ரமழாவின் கெளரவத்தைக் குறைக்கும் செயல்களில் ஈடுபடாமல் இருப்தோடு நல் வணக்கங்களுக்கு இடையூடாக அமையக்கூடிய செயல்களைத் தவிர்தல்.

உதாரணம்: வீண் விளையாட்டுக்கள் வேடிக்கை நிகழ்ச்சிகள், தொலைக்காட்சி போன்றவற்றை தவிர்தல்.

3. தேவையற்ற மார்க்க சர்ச்சைகளைத் தவிர்த்தல்.

4. இப்தார் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யும்போது எளிய முறையில் அமைத்துக் கொள்ளல்.

5. பயான் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யும்போது ஒலிபெருக்கிகளை எமது பிரதேச எல்லைகளில் மாத்திரம் செவிமடுக்கும் வகையில் அமைத்துக் கொள்ளல்.

6. பாதையில் கூடி நின்று கதைப்பது பாதைகளின் உரிமைகளை மீறி நடப்பது, பெண்களைத் தொந்தரவு செய்வது, தேவையற்ற முறையில் சப்தமிடுவது, வேடிக்கைக்காக பிறர் பொருட்களைத் திருடுவது, பிறரைப் பரிகாசம் செய்வது போன்ற மார்க்க முரணான செயற்பாடுகளைத் தவிர்த்தல்.

ஆகவே அல்குர்ஆன் இறங்கிய ரமழான் மாதத்திலே ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான நோன்பை பருவ வயதை அடைந்த ஆண்களும், பெண்களும் நோற்பது கடமையாகும். அல்லாஹ்வினால் மனிதனுக்கு அருளப்பட்ட மிகப்பெரும் வணக்கங்களில் வருடத்திற்கொருமுறை நோற்கும் இந்நோன்பு தனது பாவக்கறைகளை எரித்துக்கொள்ள உதவுகின்றது.

ரமழான் என்பதன் பொருளும் இதுவாகும். எனவே மிகச் சிரமத்துடன் நோக்கும் இந்நோன்பை ஒரு நொடியில் வீணாக்கிக் கொள்ளாமல், குறையின்றி சரிவர நிறைவேற்றி அல்லாஹ் உடைய ஆசீர்வாதத்தையும் கட்டளைக்கு முழுமையாக அடிபணிந்து வெளிப்படுத்தி அல்லாஹ்வின் நாட்டத்திற்கு பதிலளித்து அல்லாஹ்வின் கட்டளைக்கு அமைவாக தமது இச்சைகளையும் விருப்பங்களையும் கட்டுப்படுத்தி அல்லாஹ்வின் நெருக்கத்தையும் பெற்று அல்லாஹ்வின் அருளையும் ரமழானின் இறை அச்சம் கொண்டவர்களாக வாழ எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருள் புரிவானாக! ஆமீன்.

மெளலவி
ஆதம் யாkம் (ரஹ்மானி) இக்கிரிகொள்ளாவ


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அருள் மணக்கும் ரமழானை வரவேற்போம்! Empty Re: அருள் மணக்கும் ரமழானை வரவேற்போம்!

Post by பர்வின் Fri 29 Jul 2011 - 15:10

நிச்சயமாக சிறப்பாக வரவேற்கலாம்
பர்வின்
பர்வின்
புதுமுகம்

பதிவுகள்:- : 361
மதிப்பீடுகள் : 27

https://www.facebook.com/home.php#!/profile.php?id=10000209937720

Back to top Go down

அருள் மணக்கும் ரமழானை வரவேற்போம்! Empty Re: அருள் மணக்கும் ரமழானை வரவேற்போம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum