சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Today at 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Today at 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Today at 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Today at 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Today at 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32

» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30

» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19

» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35

» nisc
by rammalar Yesterday at 16:21

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09

» மருந்து
by rammalar Yesterday at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

கால ஓட்டத்தின் மாற்றத்தில் இன்னும் அகலாத தவறுகள் Khan11

கால ஓட்டத்தின் மாற்றத்தில் இன்னும் அகலாத தவறுகள்

Go down

கால ஓட்டத்தின் மாற்றத்தில் இன்னும் அகலாத தவறுகள் Empty கால ஓட்டத்தின் மாற்றத்தில் இன்னும் அகலாத தவறுகள்

Post by பாயிஸ் Mon 5 Sep 2011 - 8:20

அன்றும் இன்றும் ஆறு தவறுகள்
1) அடுத்தவர்களை பின்னுக்குத் தள்ளியோ, அழித்தோ தான் சொந்த நலனைப் பெற முடியும் என்ற தவறான கருத்தைக் கொண்டிருப்பது.

2) மாற்றவோ, சரி செய்யவோ முடியாத விடயங்களுக்காகக் கவலைப்படுவது,

3) நம்மால் செய்ய முடியாத செயல்களை யாராலும் செய்ய முடியாது என்று நினைப்பது.

4) உப்பு சப்பில்லாத சொந்த விருப்பு வெறுப்புகளையும், அபிப்பிராயங்களை யும் தள்ளி வைக்க முடியாதது.

5) மனதைப் பண்படுத்தவும், பக்கு வப்படுத்திக் கொள்ளவும், தவறுவது மற்றும் நல்ல நூல்களைப் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளாதது.

6) நம்மைப் போலவே நினைக்கவும் வாழவும் அடுத்தவர்களைக் கட்டாயப் படுத்துவது,

பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

கால ஓட்டத்தின் மாற்றத்தில் இன்னும் அகலாத தவறுகள் Empty Re: கால ஓட்டத்தின் மாற்றத்தில் இன்னும் அகலாத தவறுகள்

Post by பாயிஸ் Mon 5 Sep 2011 - 8:21

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் முன்பு உரோமாபுரியில் வாழ்ந்த மார்கஸ் டுல்லியஸ் சிசரோ (கி.மு.106-43) ஒரு மிகச் சிறந்த பேச்சாளர், சட்டத்தரணி, அரசியலறிஞர், எழுத்தாளர், கவிஞர், தத்துவஞானி மற்றும் விமர்சகர். அவர் அன்றைய மனிதர்களின் ஆறு தவறு களை முட்டாள்தனமானவை என்று கூறியிருக்கிறார். கால ஓட்டத்தில் எத் தனையோ மாற்றங்கள் வந்து விட்ட போதும் மனிதனிடத்தில் இருந்து இந்த தவறுகள் அகற்றப்படவில்லை. இன்றும் இன்றைய மனிதர்களிடத்திலும் நாம் அந்த தவறுகளைப் பார்க்க முடி கிறது என்பது வருத்தத்திற்குரியதுதான்.

சிசரோ அவருடைய கூர்மையான அறிவால் அன்று கண்டுணர்ந்து இன் றும் நம்மிடையே இருக்கின்ற அந்த தவறுகள் இவை தான். அடுத்தவர்களை பின்னுக்குத் தள்ளியோ, அழித்தோதான் சொந்த நலனைப் பெற முடியும் என்ற தவறான கருத்தைக் கொண்டிருப்பது:

இது குறுகிய காலத்திற்குப் பலன் தருவது போல் தோன்றினாலும் நீண்ட காலத்திற்கு சிறிதும் உதவாத ஒரு வழியாகும். இயல்பாக நியாயமான வழிகளில் நாம் முன்னேறும்போது மற்றவர்களை முந்திக் கொண்டு செல்வது நேர்வழி மட்டுமல்ல. நம் வளர்ச்சியும் இந்த வழியில் நிச்சயமான தாக இருக்கிறது. அதற்குப் பதிலாக மற்றவர்களைப் பின்னுக்குத் தள்ளியும், அழித்தும் முந்தி நிற்க முயன்றால் அதற்கே நம்முடைய காலமும், சக்தியும் முழுவதுமாக செலவாகும். நாம் நின்ற இடத்திலேயே தான் நிற்க வேண்டி வரும். மேலும் அனைவரை யும் பின்னுக்குத் தள்ளுவதோ, முன்னேற விடாது தடுப்பதோ நீண்ட காலத்திற்கு முடிகிற விடயம் அல்ல. எந்தத் துறை யிலும், வாழ்க்கையிலும் வெற்றிபெற விரும்புவோர் இந்தத் தவறான கருத்தை விட்டு விடுவது புத்திசாலித்தனம்.

பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

கால ஓட்டத்தின் மாற்றத்தில் இன்னும் அகலாத தவறுகள் Empty Re: கால ஓட்டத்தின் மாற்றத்தில் இன்னும் அகலாத தவறுகள்

Post by பாயிஸ் Mon 5 Sep 2011 - 8:22

மாற்றவோ, சரி செய்யவோ முடியாத விடயங்களுக்காகக் கவலைப்படுவது:
ஒவ்வொரு மனிதருடைய வாழ்க்கை யிலும் மாற்றவோ, சரி செய்யவோ முடியாத விடயங்கள் கண்டிப்பாக இருக்கவே செய்கின்றன. அதற்கெல்லாம் கவலைப்படுவதும், கண்ணீர் விடுவதும் எந்த விதத்திலும் நமக்கு உதவப் போவதில்லை. நமக்காகப் பரிதாபப்பட்டு எதுவும் மாறி விடப்போவதில்லை. மாற்ற முடியாத விடயங்களை ஏற்றுக் கொள்ளும் அளவு மனம் இல்லாவிட் டாலும் அவற்றை சகித்துக் கொள்ளும் அளவாவது பக்குவத்தை நாம் வளர்த் துக்கொள்ள வேண்டும். இல்லாது விட்டால் வாழ்க்கை முடிவில்லாத கவலையாகவே இருந்து விடும்.


நம்மால் செய்ய முடியாத செயல்களை யாராலும் செய்ய முடியாது என்று நினைப்பது:
நம் அறிவுக்கும் சக்திக்கும் எட்டாத விடயங்கள் ஏராளமாகவே இருக்கின்றன. இன்று இருக்கும் எத்தனையோ அறி வியல் அற்புதங்கள் ஒரு காலத்தில் மனிதனால் கற்பனையாலும் கூட நினை த்துப் பார்க்க முடியாததாகவே இருக்கி ன்றன. சிசரோவின் காலத்தில் வானொலி, தொலைபேசி, விமானம், மோட்டார் வாகனங்கள், கணினிகள் போன்றவை மனிதர்களுக்கு விந்தையிலும் விந்தை யாக இருந்திருக்கும். அது போல இக்காலத்தில் நினைத்துப் பார்க்கவும் முடியாத எத்தனையோ அற்புதங்கள் எதிர்காலத்தில் சாதாரண சமாச்சாரங்கள் ஆகி விடமுடியும். அப்படி இருக்கையில் தனி மனிதர்களான நாம் நம்மால் முடி யாதது வேறு எவ ராலும், முடியாது என்று நினைப்பது கற்பனையான கர்வமாகவும், அறிவின் குறைபாடா கவேதான் இருந்து விட முடியும்.

பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

கால ஓட்டத்தின் மாற்றத்தில் இன்னும் அகலாத தவறுகள் Empty Re: கால ஓட்டத்தின் மாற்றத்தில் இன்னும் அகலாத தவறுகள்

Post by பாயிஸ் Mon 5 Sep 2011 - 8:22

உப்பு சப்பில்லாத சொந்த விருப்பு வெறுப்புகளையும், அபிப்பிராயங்களை யும் தள்ளி வைக்க முடியாதது:
உலகையே உலுக்கும் சம்பவங்கள் அன்றாடம் நடக்கின்றன. ஜப்பானில் ஏற்பட்ட நில நடுக்கம், சுனாமி போன்றவற்றினால் இலட்சக்கணக்கான மக்கள் வீடிழந்து உற்றார் உறவினர்களை இழந்து, சில நொடிகளில் தங்கள் வாழ்வின் பல கால உழைப்பின் செல்வதை இழந்து நின்று அவல நிலைக்கு வந்ததைப் பார்த்தோம்.

மனித வாழ்க்கையின் நிலைமை அந்த அளவு நிச்சயமற்றதாக இருக்கை யில் நான் சொன்னது போல் அவன் நடக்கவில்லை. இவன் என்னை மதிக்கவில்லை. என்னிடம் விலை உயர்ந்த கார் இல்லை. என்னை அநாவசியமாக சிலர் விமர்சிக்கிறார்கள். சொன்ன நேரத்தில் வேலை நடக்க வில்லை என்ற சில்லறை விடயங்களில் மனம் கொதிக்கிற அல்லது வெம்புகிற மனோபாவம் நகைக்கப்பட வேண்டியதே அல்லவா? நான் பெரியவன், அதை எல்லோரும் அங்கீகரிக்க வேண்டும். என்னைக் கவனிக்க வேண்டும். என் விருப்பப்படி அனைத்தும் நடத்தப்பட வேண்டும் என்ற எண்ணங்கள் ஒதுக்கி வைக்க முடியாதது. குறுகிய மனங்களின் சாபக்கேடு. எந்தப் பெரிய பிரச்சினை கள் இல்லாவிட்டாலும் இந்த மனோ பாவம் இருந்து விட்டால் அது போதும் சுகவாழ்வையும் நரகமாக மாற்றுவதற்கு.


மனதைப் பண்படுத்தவும் பக்குவப்படுத் திக் கொள்ளவும் தவறுவது மற்றும் நல்ல நூல்களையும் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளாதது:
வாழ்க்கையில் செளகரியங்களையும் செல்வத்தையும் அதிகரித்துக்கொள்ள மனிதன் தன் வாழ்நாள் முழுவதும் கடுமையாக உழைக்கிறான். ஏனென்றால் அதை அளக்க முடிகிறது. மற்றவர்கள் அதை வைத்துத் தான் மதிக்கிறார்கள் என்ற சிந்தனையையும் பொதுவாக எல்லோரிடமும் பார்க்க முடிகிறது. ஆனால் மனம் அந்த அளவு வெளிப்படையாகத் தெரிவதில்லை என்பதால் அதைப் பண்படுத்திக் கொள்ளவோ பக்குவப்படுத்திக் கொள்ளவோ பெரும்பாலான மனிதர்கள் பெரிதாக முயற்சி மேற்கொள்வதில்லை. ஆனால் உண்மையில் தனி மனித நிம்மதியும், மகிழ்ச்சியும் அவன் மனதின்

பிரமிப்பை ஏற்படுத்தலாமே ஒழிய மனதை அவை எல்லாம் நிரப்பி விடுவதில்லை.
கல்வியும் பெரும்பாலான மக்களுக்குக் கல்லூரிகளோடு முடிந்து விடுகிறது. நல்ல தரமான நூல்களை அதற்குப் பிறகும் படித்து அறிவையும், பண்பாட்டையும் வளர்த்துக் கொள்ளும் பழக்கம் குறைவான மக்களிடத்திலேயே இன்றும் உள்ளது. சிசரோ அன்று உரோமானியர்களிடம் கண்ட இந்தக் குறை உரோமாபுரியின் வீழ்ச்சிக்கான காரணங்களில் ஒன்றாக இருந்தது என்பதை வரலாறு சொல்கிறது. எனவே வீழ்ச்சியை விரும்பாத மனிதன் எல்லா விதங்களிலும் மனதைப் பண்படுத்திக் கொள்வது மிக முக்கியம்.

பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

கால ஓட்டத்தின் மாற்றத்தில் இன்னும் அகலாத தவறுகள் Empty Re: கால ஓட்டத்தின் மாற்றத்தில் இன்னும் அகலாத தவறுகள்

Post by பாயிஸ் Mon 5 Sep 2011 - 8:24

நம்மைப் போலவே நினைக்கவும் வாழ வும் அடுத்தவர்களைக் கட்டாயப் படுத்துவது:
நான் நினைப்பது தான் சரி, என்னுடைய வழிமுறைகள் தான் சிறந்தவை என்று நினைப்பது மிகப் பெரிய தவறு. அப்படி நினைப்பதோடு நின்று விடாமல் அடுத்தவர்களையும் அப்படியே நினைக்கவும், நடந்துகொள்ளவும் எதிர்பார்ப்பதும் கட்டாயப்படுத்துவதும் மிகப் பெரிய குற்றம். ஆனால் அன்றிலிருந்து இன்று வரை நிறைய மனிதர்களிடம் இந்தக் குற்றமுள்ள போக்கை நாம் காணமுடிகிறது. நம் வாழ்வின் போக்கைத் தீர்மானிக்கும் சுதந்திரம் நமக்கு உள்ளது. ஆனால் அடுத்தவர்கள் எண்ணங்களும், கொள்கைகளும், வாழ்க்கை முறைகளும் நம்முடையதைப் போலவே இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பது கிட்டத்தட்ட அவர்களை அடிமைப்படுத்த நினைக்கும் முனைப்பே. நம் வழி உண்மையாகவே சிறந்ததாகவே உள்ளது என்று வைத்துக்கொண்டாலும் அதை அடுத்தவரிடம் பலவந்தமாகத் திணிக்க முடியாது. அப்படித் திணிப்பது வெற்றியையும் தராது. நம்முடைய நகலாக உலகம் இருக்க முடியாது. இருக்கவும் தேவையில்லை என்று உணர்வது மிக முக்கியம்.

ஆயிரக்கணக்கான ஆண்டுகள் கழிந்தும் தாக்குப்பிடித்து வந்துள்ள இந்தத் தவறுகள் நம்மிடம் இருக்கிறதா என்று நேர்மையுடன் சோதித்துப் பார்ப்பது நல்லது. இருந்தால் அவற்றை நம்மிடம் இருந்து நீக்கிப் பயனடைந்து மற்றவர்களும் அப்படி நீக்கிக் கொள்ள விரும்பும்படி நல்ல முன் உதாரணமாக வாழ்ந்தால் அது வாழ்க்கையின் மிகப் பெரிய வெற்றியாக இருக்கும்.

இலங்கையிலிருந்து என். கனேஷ்
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

கால ஓட்டத்தின் மாற்றத்தில் இன்னும் அகலாத தவறுகள் Empty Re: கால ஓட்டத்தின் மாற்றத்தில் இன்னும் அகலாத தவறுகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum