சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Yesterday at 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

முஸ்லிம் பிரதிநிதிகள் பாதுகாப்பு செயலருடன் சந்திப்பு  Khan11

முஸ்லிம் பிரதிநிதிகள் பாதுகாப்பு செயலருடன் சந்திப்பு

2 posters

Go down

முஸ்லிம் பிரதிநிதிகள் பாதுகாப்பு செயலருடன் சந்திப்பு  Empty முஸ்லிம் பிரதிநிதிகள் பாதுகாப்பு செயலருடன் சந்திப்பு

Post by நேசமுடன் ஹாசிம் Mon 19 Sep 2011 - 12:04

பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கும், முஸ்லிம் பிரதிநிதிகளுக்குமிடையிலான சந்திப்பு பிரதியமைச்சர் பைசர் முஸ்தபாவின் ஏற்பாட்டில் அவருடைய இல்லத்தில் நடைபெற்றது.

இச்சந்திப்பில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பிரதிநிதிகள், இலங்கை முஸ்லிம் கவுன்சில் பிரதிநிதிகள், வை.எம்.எம்.ஏ. பிரதிநிதிகள் உள்ளிட்ட பல்வேறு முஸ்லிம் அமைப்பின் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

இந்தச் சந்திப்பில் முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது. முஸ்லிம்கள் தமது அடையாளத்தை உறுதிப்படுத்தும் வகையில் தொப்பி அணிந்து படம் எடுப்பதற்கு விதிக்கப்பட்டிருக்கும் தடை தொடர்பில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவர் அஷ்-ஷெய்க் ரிஸ்வி முப்தி, பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் கவனத்துக்குக் கொண்டுவந்தார். இந்த நடவடிக்கையானது முஸ்லிம்களுடைய உரிமையைப் பறிக்கும் வகையில் அமைந் திருப்பதாக அவர் எடுத்துக் கூறினார்.

இதற்குப் பதிலளித்த பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, இந்த விடயம் தொடர்பில் ஆட்பதிவுத் திணைக் களத்தின் தலைவருடன் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததாக இச்சந்திப்பில் இலங்கை முஸ்லிம் கவுன் சில் சார்பில் கலந்துகொண்ட எம்.என். அமீன் கூறினார்.

சிலாபத்தில் இந்துக் கோவிலில் மிரு கங்களைப் பலிகொடுப்பதற்கு ஏற்படுத் தப்பட்ட தடையைச் சுட்டிக்காட்டியதுடன், எதிர்காலத்தில் முஸ்லிம்களுக்கும் இவ்வா றான பிரச்சினை ஏற்படலாம் என்பது பற்றியும் பாதுகாப்பு அமைச்சின் செய லாளருக்கு எடுத்துக் கூறப்பட்டது.

குழப்பநிலை ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காகவே சிலாபத்தில் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டதாகக் கூறிய பாதுகாப்புச் செயலாளர், முஸ்லிம்களின் ஹஜ் பெருநாளை முன்னிட்டு குர்பான் நிகழ்வுக்கு தடை ஏற்படாதவாறு அனைத் துப் பொலிஸ் நிலையங்களுக்கும் சுற்றுநிருபம் அனுப்பிவைக்கப்படும் என்றும் கூறியதாக அமீன் தெரிவித்தார்.

அதேநேரம், அநுராதபுரத்தில் ஏற்பட்ட முஸ்லிம்களுக்கு எதிரான சம்பவம் குறித்தும் ஆராயப்பட்டது. இவ்வாறான சம்பவங்கள் எதிர்காலத்தில் இடம்பெறாது தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதிமொழி வழங்கிய பாதுகாப்புச் செயலாளர், யுத்தம் முடிந்தாலும் சில சக்திகள் அமைதியைக் குழப்ப முயற்சிக்கின்ற போதும் அது தடுக்கப்படும். அநுராதபுரம் சம்பவம் குறித்து உரிய நடவடிக்கை எடுக் கப்படும் என்றும் உறுதிமொழி வழங்கியதாக இச்சந்திப்பில் கலந்துகொண்ட என்.எம்.அமீன் மேலும் தெரிவித்தார்.

இச்சந்திப்பில் கொழும்பு மாநகரசபைக்கு ஐ.ம.சு.மு. முன்னணி சார்பில் மேயர் வேட்பாளராகப் போட்டியிடும் மிலிந்த மொரகொட, இலங்கை முஸ்லிம் கவுன் சில் பிரதிநிதிகள் சார்பில் என்.எம்.அமீன், ஹில்மி மொகமட், அகில இலங்கை வை.எம்.எம்.ஏ பிரதிநிதிகள், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்


முஸ்லிம் பிரதிநிதிகள் பாதுகாப்பு செயலருடன் சந்திப்பு  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

முஸ்லிம் பிரதிநிதிகள் பாதுகாப்பு செயலருடன் சந்திப்பு  Empty Re: முஸ்லிம் பிரதிநிதிகள் பாதுகாப்பு செயலருடன் சந்திப்பு

Post by நண்பன் Mon 19 Sep 2011 - 13:15

பார்க்கலாம் என்ன எப்படி நடக்கிறது என்று பச்சோந்திகள் போல் மாறி மாறி பேசுகிறார்கள் நம்ப முடிய வில்லை :!.: :!.:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

முஸ்லிம் பிரதிநிதிகள் பாதுகாப்பு செயலருடன் சந்திப்பு  Empty Re: முஸ்லிம் பிரதிநிதிகள் பாதுகாப்பு செயலருடன் சந்திப்பு

Post by நேசமுடன் ஹாசிம் Mon 19 Sep 2011 - 13:16

நண்பன் wrote:பார்க்கலாம் என்ன எப்படி நடக்கிறது என்று பச்சோந்திகள் போல் மாறி மாறி பேசுகிறார்கள் நம்ப முடிய வில்லை :!.: :!.:

ஆமாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்


முஸ்லிம் பிரதிநிதிகள் பாதுகாப்பு செயலருடன் சந்திப்பு  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

முஸ்லிம் பிரதிநிதிகள் பாதுகாப்பு செயலருடன் சந்திப்பு  Empty Re: முஸ்லிம் பிரதிநிதிகள் பாதுகாப்பு செயலருடன் சந்திப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum