Latest topics
» அன்னையர் தின வாழ்த்துகள்by rammalar Today at 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Yesterday at 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
சீனாவின் மையக் குறி இந்தியா என்பதில் யாருக்கும் சந்தேகமில்லை
Page 1 of 1
சீனாவின் மையக் குறி இந்தியா என்பதில் யாருக்கும் சந்தேகமில்லை
சீனாவை சமாளிக்க புதிதாக ஒரு லட்சம் வீரர்களை தேர்வு செய்ய இந்திய ராணுவம் முடிவு செய்திருப்பது தாமதமான நடவடிக்கை என்றாலும் வரவேற்க வேண்டிய முடிவு. சீனர்கள் நல்லவர்கள், அத்துமீற மாட்டார்கள் என்ற நம்பிக்கையால் முன்னேற்பாடு இல்லாமல் அலட்சியமாக இருந்ததால் 1962ல் செம்படை இங்கே நுழைந்தபோது தடுத்து நிறுத்த இயலாமல் போனது.
அதன் விளைவாக காஷ்மீர் மாநிலத்தின் 38,000 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பை சீனா இன்று வரை தன் வசம் வைத்திருக்கிறது. அது போக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீர் பகுதியில் 5,180 சதுர கி.மீ நிலத்தை தானமாக பெற்று அனுபவித்து வருகிறது.
அதன் பிறகு ஐம்பது ஆண்டுகள் கடந்த நிலையில் எத்தனையோ மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டன. இந்தியா கணிசமாக முன்னேறி பலம் வாய்ந்த நாடாக உருவெடுத்துள்ளது. பிரச்னை என்னவென்றால் சீனாவும் இதே காலகட்டத்தில் நம்மைவிட பல மடங்கு செல்வமும் பலமும் பொருந்திய நாடாக வளர்ச்சி அடைந்துள்ளது. அதனால் இந்தியாவை பகிரங்கமாக மிரட்டுகிறது.
அருணாசல பிரதேசம் தன்னுடையது என உரிமை கொண்டாடுகிறது. காஷ்மீர் நமக்கு சொந்தமில்லை என்று கூறி அங்கிருந்து செல்லும் பயணிகளுக்கு தனி விசா கொடுக்கிறது. நம்மை சுற்றியிருக்கும் பாகிஸ்தான், பங்களாதேஷ், மியான்மர், நேபாள், பூட்டான், இலங்கை நாடுகளுக்கு அள்ளிக் கொடுத்து அவர்களை இந்தியாவுக்கு எதிராக திருப்புவதிலும் தீவிர கவனம் செலுத்துகிறது. வியட்னாம் அருகே தென்சீன கடலில் எண்ணெய் கிணறு தோண்ட ஒப்பந்தம் போட்டால், ‘எங்கள் கடலில் அத்துமீறி நுழைந்தால் அடி விழும்’ என மிரட்டுகிறது.
ஜப்பான் தொடங்கி லாவோஸ் வரையுள்ள எல்லா கீழ்த்திசை நாடுகளுக்கும் தன்னை எஜமானாக பாவித்துக் கொண்டு அவ்வப்போது பிரசங்கம் செய்தாலும் சீனாவின் மையக் குறி இந்தியா என்பதில் யாருக்கும் சந்தேகமில்லை & இந்திய அரசை தவிர. சீனாவுடன் நமக்கொன்றும் பிரச்னை இல்லை என இதுவரை அசட்டு சிரிப்புடன் சமாளித்துக் கொண்டிருந்த மத்திய அரசு 64,000 கோடியில் ராணுவத்தை நவீனப்படுத்தவும் ஒரு லட்சம் சிப்பாய்களை சீன எல்லையில் நிறுத்தவும் எடுத்திருக்கும் முடிவு நிலைமை இன்னும் மோசமாவதற்குள் விழித்துக் கொண்டதை காட்டுகிறது. இதுதான் சீனாவுக்கு புரியும் மொழி.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|