சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Today at 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Today at 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Today at 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32

» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30

» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19

» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35

» nisc
by rammalar Yesterday at 16:21

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09

» மருந்து
by rammalar Yesterday at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

வருமா மெகா கூட்டணி? Khan11

வருமா மெகா கூட்டணி?

3 posters

Go down

வருமா மெகா கூட்டணி? Empty வருமா மெகா கூட்டணி?

Post by அப்துல்லாஹ் Mon 5 Dec 2011 - 9:07

வருமா மெகா கூட்டணி? Mekaa%2Bkoottani

வரும் லோக்சபா தேர்தலில் தி.மு.க., தலைமையில், "மெகா கூட்டணி' அமைக்க அச்சாரம் போடும் வகையில், 17 கட்சிகளின் தலைவர்கள் இன்று சென்னையில் "கை'கோர்க்க உள்ளனர்.
ஓரிரு ஆண்டுகளில் வரவுள்ள லோக்சபா தேர்தலுக்கு, "குறி' வைத்து அரசியல் கட்சிகள், "கூட்டணிக் காய்'களை நகர்த்த ஆரம்பித்து விட்டன. இருப்பினும், இடையில் வந்த உள்ளாட்சித் தேர்தலில் அனைத்துக் கட்சிகளும் தனி ஆவர்த்தனம் செய்ததால், நிலைமை மாறிப் போய் இருக்கிறது. இதனால், லோக்சபா தேர்தலில் தனித்துப் போட்டியிடும் வாய்ப்பு உண்டா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

சந்திப்புகள் தந்த சிந்திப்பு: பா.ஜ., கட்சியின் அகில இந்திய தலைவர் நிதின் கட்காரியை சமீபத்தில் தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் சந்தித்து பேசினார். முன்னாள் துணை பிரதமர் அத்வானியின் ரத யாத்திரை, குஜராத் முதல்வர் மோடியின் உண்ணாவிரத நிகழ்ச்சியில் அ.தி.மு.க., பார்லிமென்ட் குழுத் தலைவர் தம்பிதுரை பங்கேற்று, ஆதரவு தெரிவித்தார். இந்த சந்திப்புகளை வைத்து, கட்சிகளும், கூட்டணிகளும் இடம்பெயருமோ என்ற சிந்தனை, அரசியல் நோக்கர்களுக்கு வந்துள்ளது. இப்போதைக்கு மத்தியில் ஆட்சியை தக்க வைப்பதற்காக, தி.மு.க., அணியில் காங்., நீடிக்கும் என்று காங்கிரசார் சொல்லி வந்தாலும், தேர்தல் வந்தால் அ.தி.மு.க., பக்கம் ரூட் போடுவதற்கும் இப்போதே துண்டு போடும் முயற்சியும் நடக்கிறது. இதற்காகத்தான், அவ்வப்போது, முதல்வர் ஜெயலலிதாவும், மத்திய அரசுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பா.ஜ., பக்கம் நேசக்கரம் நீட்டுவதற்கும் முயன்று வருகிறார்.

"கை' கழுவினால்...: இதற்கிடையில், இரு கழகங்களும் காங்., கட்சியை கை கழுவினால், காங்கிரஸ், தே.மு. தி.க.,வை இணைத்து மாற்று அணி அமைக்க வாய்ப்பு உள்ளதாகக் கணிக்கப்படுகிறது. லோக்சபா தேர்தலை பொறுத்தவரையில், மத்தியில் பிரதமர் யார்? என்ற கோஷத்தை முன் வைக்கும் கட்சிகள் தான் வெற்றி பெறும் என்பதால், தேசியக் கட்சிகளுடன் கூட்டணி வைக்க வேண்டிய நிர்பந்தம், திராவிடக் கட்சிகளுக்கு ஏற்பட்டுள்ளது. கூட்டிக் கழித்து பார்க்கும்போது, லோக்சபா தேர்தலில் அனைத்து கட்சிகளும் கூட்டணி அமைத்து தான் போட்டியிடும் என்பது உறுதியாகியுள்ளது. அதற்கு முன்னோட்டமாக, மெகா கூட்டணி அமைவதற்கு ஒத்திகை பார்க்கும் வகையில், இன்று சென்னையில், 17 கட்சிகளின் தலைவர்களும் ஒரே மேடையில் சந்திக்க வாய்ப்பு வந்துள்ளது. இதை வைத்து பலரும், கண், மூக்கு, வாய் வைத்து அதற்கு உருவம் கொடுக்க முயற்சிக்கின்றனர்.

விசாரணை அறிக்கை: பரமக்குடி, மதுரை, இளையான்குடி உள்ளிட்ட இடங்களில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் போது விசாரணை அறிக்கை வெளியிடும் நிகழ்ச்சி, இன்று மாலை லயோலா கல்லூரியில் நடக்கிறது. விசாரணை அறிக்கையை மும்பையைச் சேர்ந்த நீதிபதி சுரேஷ் வெளியிடுகிறார். இந்த அறிக்கை குறித்து, அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தங்களது கருத்துக்களை பதிவு செய்கின்றனர். தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின், ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், விடுதலைச் சிறுத்தைகள் பொதுச் செயலர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலர் ராமகிருஷ்ணன், மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா, சமத்துவப் படை தலைவர் சிவகாமி மற்றும் உதிரி கட்சிகளின் தலைவர்கள் உட்பட மொத்தம் 17 கட்சிகளின் தலைவர்கள் ஒரே மேடையில் பங்கேற்கின்றனர்.

வருமா மெகா கூட்டணி: நீண்ட இடைவெளிக்கு பின், குறிப்பாக ஆறு ஆண்டுகள் கழித்து, எதிரும், புதிருமாக இருந்த தலைவர்களான ஸ்டாலினும், வைகோவும் ஒரே மேடையில் சந்திப்பதும், ராமதாஸ், கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் மீண்டும் கூடிப் பேசுவது, லோக்சபா தேர்தலில் மெகா கூட்டணி அமைவதற்கு அச்சாரமாக அமையுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

வருமா மெகா கூட்டணி? Empty Re: வருமா மெகா கூட்டணி?

Post by kalainilaa Mon 5 Dec 2011 - 9:12

தேர்தல் வந்தால் தான் கழுதை குதிரைப்பக்கம்
போவதும் குதிரை கழுதையாய் மாறுவதும் தெரிந்தக் கதை தானே
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

வருமா மெகா கூட்டணி? Empty Re: வருமா மெகா கூட்டணி?

Post by jasmin Mon 5 Dec 2011 - 11:10

நன்றாக சொன்னீர்கள் கலை இதுதான் உண்மை
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

வருமா மெகா கூட்டணி? Empty Re: வருமா மெகா கூட்டணி?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum