சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Today at 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Yesterday at 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

பில்கேட்ஸ் – பின் தொடர வேண்டிய சாதனையாளர்! Khan11

பில்கேட்ஸ் – பின் தொடர வேண்டிய சாதனையாளர்!

2 posters

Go down

பில்கேட்ஸ் – பின் தொடர வேண்டிய சாதனையாளர்! Empty பில்கேட்ஸ் – பின் தொடர வேண்டிய சாதனையாளர்!

Post by யுவராஜா Thu 29 Nov 2012 - 11:13

மாவீரன் லெனினின் வாழ்வில் ஒரு நிகழ்ச்சி. அப்போது அவருக்கு வயது 10. முதல் முதலாய் ஒரு படகில் ஏறிக்கடலில் போகும் வாய்ப்பைப் பெறுகிறார் லெனின். பத்து வயதுச் சிறுவனை கடல் பயணம் பரவசப்படுத்தியிருக்க வேண்டு மல்லவா? அதுதான் இல்லை!
அந்தப்படகில் கரியை அள்ளிப்போடும் தொழிலாளியை கவனித்துக் கொண்டிருந்தார்லெனின். “இவர் ஏன் இவ்வளவு சிரமப்படுகிறார். இவரது பணிச் சுமையைக் குறைக்க என்ன வழி” என்று யோசிக்கத் தொடங்கி விட்டார்.
மக்கள் தலைவராய் மலரப் போகிறார் என்பதற்கு பருவத்திலேயே அடையாளம் தெரிந்தது. அப்படித்தான் பில்கேட்ஸின் வாழ்க்கையும்.
தந்தை வழக்கறிஞர். தாய் ஆசிரியை. சிறுவனாய் இருந்த பில்கேட்ஸிடம், என்னவாகப் போகிறாய் என்று யாராவது கேட்டால் “பளிச்” சென்று பதில் வருமாம் “கோடீஸ்வரன்” என்று.
இன்று உலகக் கோடீஸ்வரர்களுக்கெல்லாம் கோடீஸ்வரராக உயர்ந்திருக்கும் பில்கேட்ஸிடம் வெற்றிமுகம், பள்ளிப்பருவத்திலேயே கம்ப்யூட்டர் மீது கொண்ட காதலால் ஆரம்பமானது.
எட்டாம் வகுப்பு படிக்கும் போது, பத்தாம் வகுப்பு படிக்கும் தன் தோழன் பால் உடன் சேர்ந்து கம்ப்யூட்டர் பயிலத் தொடங்கியவர் பில்கேட்ஸ்.
புரோகிராமர்களாக வருவதில் அந்த வயதிலேயே அளவு கடந்த ஆர்வம் அவர்களுக்கு.
பால்-பில் கூட்டணி கம்ப்யூட்டர் துறையில் வெகு வேகமாக முன்னேறிக் கொண்டிருந்தது.
கம்ப்யூட்டர் நிறுவனம் தொடங்கும் கனவில் இருவரும் இருந்தபோது, எமராபர்ட்ஸ் என்பவர் MITS நிறுவனத்தில் மைக்ரோசாப்ட் மைக்ரோ ப்ராஸஸருடன் கூடிய கம்ப்யூட்டரை நன்றாக உருவாக்க விரும்பினார். அடிப்படையில் குறைகள் நிறைந்திருந்த அந்த “ஆல்பர்” பால்-பில் கவனத்தைக் கவர பேஸிக் அடிப்படையில் புரோகிராம் வடிவமைக்க முன்வந்தார்கள். வெற்றியும் பெற்றார்கள்.
இந்த இருவரும் இணைந்து தொடங்கியது தான் மைக்ரோசாப்ட் நிறுவனம். புதிய திறமை களை அரவணைத்து பெருமளவில் வளர்ந்தது மைக்ரோசாஃப்ட் நிறுவனம்.
உலகின் கவனத்தை ஈர்க்கும் விதமாக மைக்ரோ சாஃப்ட் வளர்ந்தபோது பில்கேட்ஸின் வயது இருபது.
ஒவ்வொரு முயற்சியிலும் ஏராளமான சறுக்கல்கள் எதிர்கொண்டன பில்கேட்ஸை. சற்றும் தளராத உறுதியுடன் புதிய புதிய இலக்குகளை வகுத்துக்கொண்டு அவற்றை நோக்கி முன்னேறிக்கொண்டே இருந்தார் அவர்.
அப்படி உருவானவைதான் ஆப்பிள் I, ஆப்பிள் II, Cobol, Pascal, Fortran போன்றவை.
கம்ப்யூட்டர் துறையில் தனக்கு முன்னரே கொடி நாட்டிய நிறுவனங்களைக் கூட புறங்காணும் விதமாய் பில்கேட்ஸின் உழைப்பும் திட்டமிடலும் இருந்து வந்துள்ளன.
இந்தக் கட்டுரையை எழுதிக் கொண்டிருக் கும் வேளையில் இந்தியாவில் 1100 நிறுவனங்களின் போக்கையும் நிலையையும் ஆய்வு செய்யும் சிட்ரஸ் 100 என்கிற நிறுவனத்தில் ஆய்வறிக்கை வெளியாகியது.
இந்தியாவுக்கு பில்கேட்ஸ் சமீபத்தில் வருகை தந்ததையடுத்து அந்நிறுவனத்திற்கு அங்கீகாரம் கூடியதாகவும், இந்தியாவில் முதல்நிலையைத்தொடர்ந்து மைக்ரோசாஃப்ட் தக்கவைத்துக் கொண்டுள்ளதாகவும் அந்த ஆய்வு அறிவித்தது.குறிப்பாககடந்த அக்டோபர் 31 – நவம்பர் 30க்குள் நடுவிலும் மைக்ரோசாஃப்ட் மலை போல் நிமிர்ந்து நிற்க முக்கியக் காரணம், பில்கேட்ஸின் வருகை என்கிறது அந்த ஆய்வு.ஒரு தனி மனிதனின் மீது வணிகச் சந்தை வைத்திருக்கும் நம்பிக்கை அந்த நிறுவனத்தை நிகரற்ற உயரங்களுக்கு உயர்த்தும் என்பதற்கு இது இணையற்ற எடுத்துக்காட்டு.
பில்கேட்ஸ் – ஒரு கோடீஸ்வரரின் சாதனைச் சரித்திரம் என்னும் தலைப்பில் திரு ஆர்.பி.சாரதி எழுதிய புத்தகம், மதி நிலையத்தால் வெளியிடப் பட்டுள்ளது.
இந்த நூலிலும் பில்கேட்ஸ் வாழ்வு குறித்த அரிய தகவல்கள் அடங்கியுள்ளன. இதோ… அவற்றிலிருந்து சில பகுதிகள், உங்களுக்காக…….
கூட்டுமுயற்சி
பில்கேட்ஸ் என்ற மனித எந்திரம் போதும் என்று ஓய்ந்து விடுவதே இல்லை.
ஐபிஎம் கம்ப்யூட்டர் உலகத்தின் மாபெரும் சக்தி. கம்ப்யூட்டரை வருங்காலத்துக்கு அழைத்துச்செல்ல வடிவமைக்கும் நிறுவனம்….. வசதி நிறைந்த நிறுவனம், பில்கேட்ஸுக்கு விண்டோஸால்ஓரளவு புகழ் கிடைத்த போதிலும் எதிர்பார்த்த மிகப்பெரும் அளவுக்குப் பணம் கிடைக்கவில்லை.
பில்கேட்ஸ் புத்திசாலி. மீண்டும் ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து தொழில் முன்னேற்றங்காண விரும்பினார். ஐபிஎம் நிறுவனக் கம்ப்யூட்டர்கட்கு விண்டோவைப் பயன்படுத்தினால் நல்ல இலாபம் கிடைக்கும். ஆனால் ஐபிஎம் அதற்குத் தயாராயில்லை. மறுத்து விட்டது.
பில்கேட்ஸ் தம் மைக்ரோ ஸாஃப்ட் நிறுவனம் தனிநபர் கம்ப்யூட்டர் துறையில் பெற்றுள்ள அனுபவத்தையெல்லாம் விளக்கிப் பார்த்தார். ஐபிஎம்மின் பிடிவாதம் தளர்ந்தது.
அவர்கள் விரும்பும் வகையில் விண்டோஸ் மாதிரியை மாற்றியமைக்கவும், இரு நிறுவனங்களும் இதில் இணைந்து செயல்படுவதெனவும் முடிவு செய்யப்பட்டது.
கூட்டு முயற்சியின் விளைவுகள் ஓஸ்/2 ((os/2) ) மற்றும் ப்ரஸென்டேஷன் மானேஜர் (Presentation manager) ஓஸ்/2 தனிநபர் கம்யூட்டருக் காக வடிவமைக்கப்பட்டது.
ஓஸ்/2 (os/2) மாதிரியில் வரைகலை இயக்கங்களுக்காக அமைக்கப்பட்டதே ப்ரெஸன்டேஷன் மானேஜர்.
பிஸி மாகஸீனின் ((PC magazine) சாதாரண மாகப் படைப்பாளிகட்கு அளிக்கப்படும் விருது 1986ல் விதிவிலக்காகப்
பில் கேட்ஸுக்கே வழங்கப்பட்டது.
பில்கேட்ஸைத் தோல்விகள் எப்படித் தளரச் செய்வதில்லையோ அப்படியே விருதுகளும், வெற்றிகளும் மயக்கத்தில் ஆழ்த்திவிடுவதில்லை.
மைக்ரோஸாஃப்ட் குதிரையும் லோடஸ் குதிரையும் கம்ப்யூட்டர் களத்தில் வெகு வேகமாக முன்னே பின்னே என்று ஒடிக்கொண்டிருந்தன. மைக்ரோஸாஃப்ட் பெறும் சிறிய அளவிலான வெற்றிகள் பில்கேட்ஸின் வானக் கனவுகட்குப் போதுமானவையாக இல்லை. மேலும் லோடஸ் மைக்ரோஸாஃப்டின் ஜப்பானிய களத்திலும் காலைவைக்கத் தொடங்கிவிட்டது.
லோடஸ்ஸை அதன் துறையிலேயே சந்திக்கும் எண்ணத்துடன்தான் பில்கேட்ஸ் தம் எக்ஸெல் மாதிரியின் விண்டோ வடிவங்களைத் திறமையாகத் திட்டமிட்டார்.
பில்கேட்ஸ் எக்ஸெல் மாதிரியைத் தனிநபர் கம்ப்யூட்டருக்குப் பயன்படுத்தும் விதத்தில் மாற்றியமைக்கும்போது மிகவும் கண்ணும் கருத்துமாகச் செயல்பட்டார்.எக்ஸெல்லை விண்டோஸுக்குப் பயன்படுத்திய போதும் தொலைநோக்குடனேயே செயல்பட்டார்.
யுவராஜா
யுவராஜா
புதுமுகம்

பதிவுகள்:- : 53
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

பில்கேட்ஸ் – பின் தொடர வேண்டிய சாதனையாளர்! Empty Re: பில்கேட்ஸ் – பின் தொடர வேண்டிய சாதனையாளர்!

Post by Muthumohamed Thu 29 Nov 2012 - 20:38

pala saathanaikal padaitha bilgates varalaaru pathinthatharku mikka nandri பில்கேட்ஸ் – பின் தொடர வேண்டிய சாதனையாளர்! 480414
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum