சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Today at 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Yesterday at 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

இலங்கை முஸ்லிம்களின் பூர்வீகத்தேடல்: Khan11

இலங்கை முஸ்லிம்களின் பூர்வீகத்தேடல்:

2 posters

Go down

இலங்கை முஸ்லிம்களின் பூர்வீகத்தேடல்: Empty இலங்கை முஸ்லிம்களின் பூர்வீகத்தேடல்:

Post by ansar hayath Sun 30 Dec 2012 - 13:43

இலங்கையின நவீன வரலாற்றில், இலங்கை முஸ்லிம்களாகிய நாம் பல சந்தர்ப்பங்களில் நமது பூர்வீகத்தை தேடும் முயற்சியை மேற்கொண்டு வந்திருக்கின்றோம். 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஐ.எல்.எம். அப்துல் அஸீஸ், அறிஞர் சித்திலெப்பை போன்ற அறிஞர்களினால் நமது சமூகத்தின் பூர்வீகத் தேடல் தொடக்கி வைக்கப்பட்டது. ஏறக்குறைய அதே காலப்பகுதியில் மர்ஹும் அஹமது லெப்பை போன்ற அவ்வளவு ‘புகழ் பெறாத’ நபர்கள் நமது பூர்வீகத்துக்கான சான்றுகளை வலுவாக ஆவணப்படுத்தியிருக்கின்றார்கள்.( பார்க்க: தென்கிழக்கு இலங்கை முஸ்லிமகளின் மாண்மியத்திற்கு முன்னோரளித்த அருஞ்செல்வம்)

இதன் பின்னர் 20 ஆம் நூற்றாண்டின் மத்திய பகுதியில் சேர். ராசிக் பரீத் போன்ற தலைவர்கள் இலங்கை முஸ்லிம்களைத் தனித்துவப் படுத்தக்கூடிய வகையில் நடைமுறை ரீதியான செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்திருக்கின்றனர். இவர்களுக்கு அடுத்த கட்டத்தில் மர்ஹும் அல்லாமா. எம்.எம். முஹம்மது உவைஸ், கலாநிதி சுக்ரி போன்றவர்களினால் இப்பணி புலமைத்துவ மட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வந்திருக்கின்றது.

பின்பு 20ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியைப் பார்க்கின்றோம். நமது மக்களின் தனித்துவத்தையும் அதன் ஊடாக நமது பூர்வீகத்தையும் முன்னரங்கிற்குக் கொண்டு வந்த மகத்தான காலகட்டமாக அது உருவெடுத்த அற்புதத்தை நாம் காண்கிறோம். ஆரம்பத்தில் 1977 பொதுத் தேர்தல்களின்போது மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரப் மற்றும் உதுமான் லெப்பை போன்றவர்களினால் இலங்கை முஸ்லிம்களின் பூர்வீகமும், தனித்துவமும் பிரச்சாரமாக்கப்பட்டன. 1980 களின் பிற்பகுதியில் இருந்து நமது பூர்வீகமும் தனித்துவமும் நமக்கென ஒரு தனியான அரசியல் இயக்கத்தை உருத்திரட்டி வடிவமைக்கின்ற அளவுக்கு வலிவும் ஆற்றலும் கொண்டு உயர்ந்தெழுந்தன.

இந்தக்கட்டத்தில் முஹம்மது சமீம், ஷாஜஹான், கலாநிதி ஹஸ்புல்லா, யூ.எல். நஜிமுத்தீன் போன்றோர் இந்தத் தளத்தில் கனதியான தடங்களைப் பதித்திருப்பதைக் காண்கின்றோம். இவையனைத்தினதும் திரட்சியாகவும், உயரெழுட்சியாகவும் அமைந்த மகத்தான நிகழ்வொன்று 21 ஆம் நூற்றாண்டின் தலைவாசலில் நம்மத்தியில் இடம் பெற்றது. ‘முஸ்லிம் தேசப் பிரகடனம்’ என்ற எழுச்சி மிக்க கோஷத்துடன் முழங்கிய ஓலுவில் பிரகடனமானது நமது மக்களின் தனித்துவத்தையும் சுய நிர்ணயத்தையும் அழகும், நேர்த்தியும், உறுதியும் ஒருங்கே கொண்டதாய் எடுத்தியம்பிற்று.

இந்த நிகழ்வுகளில் எதுவுமே தனிமனிதத் திறமையை வெளிப்படுத்துவதற்காகவோ, தனி நபர் ஆர்வத்தின் விளைவாகவோ அல்லது பெருமித உணர்வு கொண்டோ முன்னெடுக்கப்படவில்லை. மாறாக இந்நிகழ்வுகளுக்குப் பின்புலமாக, நமது மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட அடக்குமுறைகளும், உரிமை மறுப்புக்களும், தனித்துவ நிராகரிப்புக்களும் அமைந்திருந்தன. பலிகொள்ளப்பட்ட ஆயிரக்கணக்கான நமது மக்களின் உயிர்கள், இழக்கப்பட்ட கோடிக்கணக்கான நம் சொத்துக்கள், கடும் வெறுப்புடன் ஒதுக்கித் தள்ளப்பட்ட நமது உரிமைகள், கால் நூற்றாண்டை நெருங்குகின்ற நமது மக்களின் அகதி வாழ்க்கை, மாறாத் துயரம், கொடிய அச்சம், கோர நினைவுகள்…. என அடக்கு முறையின் அனைத்து வடிவங்களையும் தனக்குள் செரித்தெழுந்ததன் சமூக விளைவுகளாக இவை அமைந்திருக்கின்றன.

வலி நிரம்பிய இப்பயணத்தில் தமது பூர்வீகத்தின் மீதும் தனித்துவத்தின் மீதும் நமது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையானது, உறுதியான அச்சாணியாகச் செயற்பட்டு வந்திருக்கின்றது. எம் உரிமைகள் மீதும், எம் இருப்பின் மீதும், எம் உயிர்களின் மீதும் விழுந்த ஒவ்வொரு அடியும், எமது ஒவ்வொரு இழப்பும் இந்த அச்சாணியை முன்னோhக்கி நகர்த்துவதற்கான உந்து விசைகளாகச் செயற்பட்டு வந்திருப்பதை இப்போது நாம் தெளிவாக உணர்கிறோம்.

நாம் என்றுமே பின் வாங்கியதில்லை, சோர்ந்ததில்லை, சளைத்ததுமில்லை. எமது தனித்துவமும் உரிமைகளும் மறுக்கப்பட்ட ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நாம் மேலும் வீறு கொண்டு முன்சென்றிருக்கின்றோம். எம் தனித்துவத்திற்கான ஆதாரங்களை முனைப்புடன் தேடியிருக்கின்றோம். அயரா முயற்சியுடனும் தளரா உறுதியுடனும் நமது தனித்துவத்தை நிலைநாட்டி வந்திருக்கின்றோம்.

ஒரு தூக்கணாங் குருவியைப் போன்று, நமக்குக் கிடைத்த சிறுசிறு ஆதாரங்களையும் பெருநம்பிக்கையுடன் சேகரித்து நமது பூர்வீகத் தனித்துவத்தை நிரூபிப்பதற்கான ஒரு உறுதியான அடித்தளத்தை உருவாக்கி வந்திருக்கின்றோம். இந்த வலுவான அடித்தளத்தின் மீது, இலங்கை முஸ்லிம்களின் பூர்வீகத்தை, அதன் சகல பரிணாமங்களும் உள்ளடங்கியதாக, முழு நிறை வடிவில் கட்டியெழுப்புவதற்கான சாத்தியத்தை நாம் இப்போது பெற்றிருக்கிறோம்.

இது வரைககும் சொல்லப்பட்டு வந்திருப்பது போன்று, நமது பூர்வீகமானது அரேபிய ஆண்வழியில் இருந்து ஆரம்பிக்கவில்லை. மாறாக நமது பூர்வீகம், உலகின் முதல் மனிதர்களான ஆதம், ஹவ்வா (அலை) அவர்களில் இருந்து ஆரம்பிக்கின்றது. இந்நாட்டினதும், இந்த உலகத்தினதும் முதல் மனித சமூகம் இலங்கை முஸ்லிம்களாகிய நாமே என்ற கருத்துக்கள் இப்போது உரையாடலுக்குட்படுத்தப்பட்டு வருகின்றன. ஏறக்குறை ஒரு நூற்றாண்டு காலத்துக்குப் பின்னர், இப்போது சோனகர் என்ற எமது பூர்வீக பதம் தீவிர சொல்லாடலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இந்த ஒரு நூற்றாண்டு கால இடைவெளிக்குள் சோனகர் என்ற பதம் கொண்டுள்ள அர்த்தங்களும், இப்பதத்தை மீண்டும் முளைவிப்பதற்கான சூழ் நிலைகளும் முற்றிலும் வேறுபட்டவைகளாக உள்ளன.

முதலாவதாக, சோனகர் என்ற பதமானது முன்னர் போன்று அரேபியர்களுடன் இணைந்ததாக இப்போது முன்வைக்கப்படவில்லை. மாறாக அரேபிய ஆண்வழி என்ற கருத்தாக்கத்தை முற்றாக மறுதலித்தவாறும் இலங்கை முஸ்லிம்களின் பூர்வீகத்தை, உலகின் முதல் மனிதர்கள் வாழ்ந்த இடமான சுவனத்துடன் இணைத்ததாகவும் சோனகர் (சுவனகர்) என்ற பதம் முன்வைக்கப் பட்டிருக்கின்றது. ஆதம் (அலை) அவர்களும் ஹவ்வா (அலை) அவர்களும் சுவனத்தில் வாழ்ந்ததன் காரணமாகத்தான், அவர்களின் நேரடிச் சந்ததியான இலங்கை முஸ்லிம்கள் வரலாறு நெடுகிலும் சுவனகர் (சோனகர்) என அழைக்கப்பட்டு வந்திருக்கிறார்கள் என்ற வாதம் இப்போது வலுவாக முன்வைக்கப்பட்டிருக்கின்றது.

இரண்டாவதாக, ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் சோனகர் என்ற நமது பூர்வீக அடையாளமானது, தமிழர் அரசில் தலைமையின் ஆதிக்கத்துக்கு எதிரானதாக மட்டுமே முன்வைக்கப்பட்டது. ஆனால் இப்போது தமிழ் ஆதிக்க நிலைப்பாட்டுக்கு எதிராக மட்டுமன்றி, சிங்கள ஆதிக்க கருத்தியல் செயல்பாட்டுக்கு எதிராகவும் இப்பதம் முன்வைக்கப்படுகிறது.

மூன்றாவதாக, முன்னர் சோனகர் என்ற முன்வைப்பானது பெரிதும் புலமைத்துவ நிலைப்பட்டதாகவும், நமது சமூகத்தின் ஒரு குறிப்பிட் பிரிவினரால் மட்டும் முன்னெடுக்கப் பட்டதாகவுமே அமைந்திருந்தது. ஆனால் சோனகர் என்ற நமது பூர்வீக அடையாளம் வெகுஜனத் தன்மை கொண்டதாக இப்போது மாறியிருக்கிறது. நமது மக்களினால் ஆர்வத்துடன் உள்வாங்கப்பட்டு, அவர்களின் ஆன்மாவுக்குள் இரண்டறக் கலக்கின்ற அம்சமாக இது மாறியிருக்கின்றது.

நான்காவதாக, முன்னர் சோனகர் என்ற அடையாளப் படுத்தலானது நமது மொழி விடயத்தில் பலவீனமான நிலையில் இருந்தது. நமது மக்களின் மொழியாக தமிழை ஏற்றுக்கொள்கின்ற நிலைக்கு அன்று அது ஆளாகியிருந்தது. ஆனால் இன்றைய சோனகர் என்ற முன்வைப்போ நமக்குரிய மொழியான சோனக மொழியை மீளக் கண்டெடுத்திருக்கின்றது. வரலாற்றில், வேவ் வேறு சந்தர்ப்பங்களில் தமது உரிமைகளுக்காகப் போராடிய சமூகங்கள் தமது போராட்டத்தின் உந்துசக்திகளில் ஒன்றாக தமது மொழிகளையும் படுயன்படுத்தி வந்திருக்கின்றன. ஆனால் தமது போராட்டத்தினூடாக தமக்குரிய சொந்த மொழியை அடையாளம் கண்டு, மீள் வளர்ப்புச் செய்கின்ற முதல் சமூகமாக, இலங்கை முஸ்லிம்களாகிய நாம் திகழ்கிறோம்.

இவ்வாறு சோனகர் என்ற நமது சமூக அடையாளமானது, கருத்தியல் ரீதியான உள்ளடக்கத்திலும் வெகுஜனப் பண்பிலும் முன்னைய முன்வைப்புக்களிலிருந்து, முற்றிலும் வேறுபட்டதாக இன்று அமைந்திருக்கிறது. இந்த முன்வைப்பானது இன்று நமது மக்களை சூழ்ந்து நெருக்குகின்ற ஆதிக்கச் சூழலுடன் அச்சொட்டாகப் பொருந்துவதாக அமைந்திருக்கிறது. தமக்கிடையே, ஆயுத ரீதியாக கடும் மோதலில் ஈடுபட்டிருக்கின்ற சிங்கள, தமிழ் ஆதிக்கக் கருத்தியல்களையும், செயற்பாடுகளையும் முறையாக எதிர்கொண்டு, நமது மக்களின் இருப்பையும், உரிமைகளையும் நிலைநாட்டுவதற்குரிய ஒரு வலிமைமிக்க கோட்பாட்டு ஆயுதமாக சோனகர் என்ற எமது பூர்வீகம் இன்று மேலெழுந்து வருகின்றது.

அருவருப்பான சீண்டல்களுக்கும், உரிமை மறுப்புக்களுக்கும், கேவலமான பிரச்சாரங்களுக்கும், கடுமையான ஆக்கிரமிப்புக்களுக்கும் ஓயாது ஆளாகி வருகின்ற நாம், இவற்றிலிருந்து நம்மை விடுவித்து, நமது இருப்பையும் உரிமைகளையும் இந்நாட்டில் உறுதியாக நிலை நாட்டவேண்டிய தீவிர அவசியத்தில் இப்போது இருக்கிறோம். நம்மை பிரதிநிதித்துவப் படுத்துவதாகக் கூறுகின்ற அரசியல் தலைமைகளின் பேரம் பேசல்களுக்காகக் காத்திருக்காமல், நாம் வெகுஜன ரீதியாக எமது பூர்வீகத் தனித்துவத்தையும், உரிமைகளையும் உறுதியாக வெளிப்படுத்த வேண்டிய அவசியம் இப்போது உருவாகியுள்ளது. இவ்வாறு வெகுஜன ரீதியாக எமது உணர்வுகளை வெளிப்படுத்தும்போது ஒரு புறம் அது நமது அரசியல் தலைமைகளின் செயற்பாடுகளில் தீவிர தாக்கங்களை ஏற்படுத்துவதாக அமையும். அதே நேரத்தில் எமது அறிவியல் துறை சார்ந்தோர் மத்தியில் சிந்தனை ரீதியாக புரட்சிகரமான மாற்றங்களை ஏற்படுத்துவதற்கும் இது வழி வகுக்கும். இவ்வாறான வெகுஜனப் பின்புலத்துடன் எமது அறிவுத்துறையினர், நமது பூர்வீகம் தொடர்பான ஆய்வுகளில் தொடர்ந்தும் பங்கேற்கும்போது, நமது பூர்வீகமானது மேலும் சிறப்பாகவும் மேலும் துல்லியமாகவும் மேலும் மெருகுடனும் வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உருவாகும். இன்ஷா அல்லாஹ்!

இலங்கை முஸ்லிம்களின் பூர்வீகத்தேடல்: 528529_510135399019762_415477544_n

(The Historical Research of Sri lankan Moor and Islam)
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

இலங்கை முஸ்லிம்களின் பூர்வீகத்தேடல்: Empty Re: இலங்கை முஸ்லிம்களின் பூர்வீகத்தேடல்:

Post by Muthumohamed Sun 30 Dec 2012 - 13:52

இலங்கை முஸ்லிம்களின் பூர்வீகத்தேடல்: 480414
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

இலங்கை முஸ்லிம்களின் பூர்வீகத்தேடல்: Empty Re: இலங்கை முஸ்லிம்களின் பூர்வீகத்தேடல்:

Post by ansar hayath Sun 30 Dec 2012 - 14:38

Muthumohamed wrote:இலங்கை முஸ்லிம்களின் பூர்வீகத்தேடல்: 480414

:!+: :];:
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

இலங்கை முஸ்லிம்களின் பூர்வீகத்தேடல்: Empty Re: இலங்கை முஸ்லிம்களின் பூர்வீகத்தேடல்:

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum