சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by rammalar Yesterday at 16:08

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Yesterday at 16:01

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by rammalar Yesterday at 4:01

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by rammalar Yesterday at 3:57

» லக்கி பாஸ்கர்-படத்தின் முதல் பாடல் வெளியானது!
by rammalar Yesterday at 3:46

» நடிகர் திலீபன் புகழேந்திக்கு ஜோடியாக 5 கதாநாயகிகள்!
by rammalar Yesterday at 3:38

» `துண்டு ஒரு தடவைதான் தவறும்!' - ஹெட்டை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா
by rammalar Yesterday at 3:18

» AUS vs AFG புள்ளிப்பட்டியல் - இந்தியாவுக்கு ஆப்பு வைத்த ஆப்கானிஸ்தான்.. ஆஸி. அரை இறுதி வாய்ப்பு காலி
by rammalar Mon 24 Jun 2024 - 6:46

» அயோத்தியில் பாஜக தோல்வி எதிரொலி: ஹனுமன் கோயில் மடத் தலைவர் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்
by rammalar Mon 24 Jun 2024 - 6:40

» விண்ணிலிருந்து பூமிக்கு திரும்பும் ஏவுகலன் சோதனை வெற்றி! ISRO சாதனை!
by rammalar Mon 24 Jun 2024 - 6:35

» படித்ததில் ரசித்தது-
by rammalar Sun 23 Jun 2024 - 10:56

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...
by rammalar Sun 23 Jun 2024 - 6:27

» அப்பாவின் பாசம் - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:55

» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:52

» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Sat 22 Jun 2024 - 15:50

» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 15:18

» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Sat 22 Jun 2024 - 15:17

» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Sat 22 Jun 2024 - 15:16

» மூக்குத்தி அம்மன்- 2ம் பாகம்
by rammalar Sat 22 Jun 2024 - 15:15

» கன்னட நடிகை வீடியோவால் சைபர் கிரைம் விசாரணை
by rammalar Sat 22 Jun 2024 - 15:14

» ஆன்மிக சிந்தனை
by rammalar Sat 22 Jun 2024 - 15:12

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:10

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:09

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:08

» நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ...
by rammalar Sat 22 Jun 2024 - 12:54

» ஜூன் 22: இன்று ஓரளவு குறைந்த தங்கம் விலை!
by rammalar Sat 22 Jun 2024 - 11:30

» வீட்டை எதிர்த்து தான் கல்யாணம் பண்ணுனேன்.. நடிகை தேவயானி
by rammalar Sat 22 Jun 2024 - 11:14

» சட்னி சாம்பார் - வெப் சீரிஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 10:42

» மீனாட்சி சவுத்ரி
by rammalar Sat 22 Jun 2024 - 7:31

» பயனுள்ள வீட்டு குறிப்புகள்
by rammalar Fri 21 Jun 2024 - 19:47

» உங்க வீட்டுக்கு கருவண்டு வந்தால் என்ன நடக்கும்னு தெரியுமா?
by rammalar Fri 21 Jun 2024 - 15:12

» உலக இசை தினம்
by rammalar Fri 21 Jun 2024 - 4:47

» சர்வதேச யோகா தின வாழ்த்துக்கள்!
by rammalar Fri 21 Jun 2024 - 4:43

ஐதராபாத் குண்டு வெடிப்பு முக்கிய தடயங்கள் சிக்கின Khan11

ஐதராபாத் குண்டு வெடிப்பு முக்கிய தடயங்கள் சிக்கின

Go down

ஐதராபாத் குண்டு வெடிப்பு முக்கிய தடயங்கள் சிக்கின Empty ஐதராபாத் குண்டு வெடிப்பு முக்கிய தடயங்கள் சிக்கின

Post by *சம்ஸ் Mon 25 Feb 2013 - 7:55

ஐதராபாத் குண்டு வெடிப்பு முக்கிய தடயங்கள் சிக்கின


ஐதராபாத் குண்டு வெடிப்பு முக்கிய தடயங்கள் சிக்கின I1302251ஹைதராபாத் குண்டு வெடிப்புச் சம்பவம் குறித்து முக்கியமான தடயங்கள் கிடைத்துள்ளன.
புலன் விசாரணையை துரிதப்படுத்த 15 சிறப்பு படைகள் அமைக்கப்பட்டுள்ளன. எனவே
குற்றவாளிகள் விரைவில் பிடிபடுவார்கள் என்று ஆந்திர உள்துறை அமைச்சர் பி. சபீதா
இந்திரா ரெட்டி தெரிவித்துள்ளார்.
இரட்டை குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பாக மாநில தலைமைச் செயலகத்தில் முதல்வர் கிரண்
குமார் ரெட்டி தலைமையில் உயர்நிலைக் கூட்டம் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. இதில்
அமைச்சர்கள், அரசு உயரதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.
அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சபீதா கூறியது:- குண்டு வெடிப்பு
தொடர்பாக முக்கியத் தடயங்கள் கிடைத்துள்ளன. எனவே இதில் தொடர்புடைய குற்றவாளிகளை
விரைவில் கண்டுபிடிப்போம்.
இது தொடர்பாக விசாரிக்க 15 சிறப்புப் பொலிஸ் படைகள் அமைக்கப் பட்டுள்ளன. ஒவ்வொரு
குழுவிலும் வெவ்வேறு பிரிவுகளில் நிபுணத்துவம் பெற்ற 10 முதல் 15 பொலிஸார்
இடம்பெற்றுள்ளனர்.
தாக்குதல் திட்டங்களை முறியடித்துள் ளோம். நகரின் முக்கிய இடங்களில் மொத்தம் 3,500
கண்காணிப்பு கெமராக்கள் நிறுவப்பட்டுள்ளன. 1995 ஆம் ஆண்டு முதலே ஹைதராபாத நகரம்
பயங்கரவாதத் தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது. பலமுறை இதுபோன்ற தாக்குதல் திட்டங்களை
முன்னதாகவே கண்டறிந்து முறியடித்துள்ளோம். ஒரு சில நேரங்களில் அசம்பாவிதங்கள்
நிகழ்ந்துவிடுகின்றன என்றார். இயல்பு நிலை திரும்பியது,
குண்டு வெடிப்பு நிகழ்ந்த தில்சுக் நகர் பகுதி சனிக்கிழமை மீண்டும் இயல்பு
நிலைக்குத் திரும்பியது. அப்பகுதியில் இருந்த வர்த்தக நிறுவனங்கள், கடைகள் அனைத்தும்
திறக்கப்பட்டன. போக்குவரத்தும் வழக்கம் போல் இருந்தது. தில்சுக் நகர் பகுதி
ஹைதராபாத் - விஜயவாடா நெடுஞ்சாலையில் உள்ளது. இங்கு கல்வி நிறுவனங்கள், வேலை
வாய்ப்பு பயிற்சி மையங்கள், அரசு அலுவலகங்கள், வணிக வளாகங்கள் அதிகம் உள்ளன.

துப்பு கொடுத்தால்
ரூ. 10 லட்சம்

குண்டு வெடிப்புச். சம்பவத்தில் தொடர்புடையவர்கள் குறித்து தகவல் தருபவர்களுக்கு 10
லட்சம் ரூபா வழங்கப்படும் என்று ஆந்திர காவல்துறை அறிவித்துள்ளது. இந்த சம்பவத்தில்
இந்தியன் முஜாகிதீன் பயங்கரவாதிகளுக்கு தொடர் உள்ளது என்கிற சந்தேகம் மேலும்
வலுத்துள்ளதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது ஹைதராபாத் தில்சுக் நகர் பகுதியில்
வியாழக்கிழமை நிகழ்ந்த இரண்டை குண்டு வெடிப்பில் 16 பேர் உயிரிழந்தனர். காயமடைந்த
117 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் ஒரு
சிலரது நிலைமை மோசமாகவே உள்ளது.
2007ம் ஆண்டு ஹைதராபாத்தில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் காயமடைந்த அப்துல் வாஷி
மிர்ஷா (23) வேலையில்லாத இளைஞர், தில்சுக் நகர் குண்டுவெடிப்பிலும் சிக்கி
காயமடைந்துள்ளார். எனவே, அவர் பயங்கரவாதிகளுடன் தொடர்புயவராக இருக்கலாம் என்று
செய்திகள் வெளியாகி யுள்ளன. இது தொடர்பாக கேள்விக்கு பதிலளித்த ஹைதராபாத் நகர பொலிஸ்
கமிஷனர் அனுராக் சர்மா, ‘காயமடைந்த அனைவரிடம் இருந்தும் தகவல்கள் சேகரிக்கப்பட்டன.
அவரிடம் அதேபோல் தான் விசாரணை நடத்தப்பட்டது. மற்றபடி அவர் சந்தேகத்துக்குரிய நபராக
கருதப்படவில்லை என்று விளக்கமளித்தார்.

விரைவில் கைது செய்வோம் - கமிஷனர்
விசாரணையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து ஹைதராபாத் நகர பொலிஸ் கமிஷனர் அனுராக்
சர்மா கூறியது, குண்டு வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்த இடத்தில் இருந்து
சேகரிக்கப்பட்ட தடயங்கள் ஆய்வுக்கு உள்படுத்தப்பட்டன. அதில் இருந்து பல முக்கிய
தகவல்கள் பெறப்பட்டுள்ளன. எனவே இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் விரைவில் கைது
செய்யப்படுவார்கள். நகரம் முழுவதுமே உஷார்படுத்தப் பட்டுள்ளது. சந்தேகத்தின்
அடிப்படையில் பல இளைஞர்களிடம் விசாரணை நடத்தியுள்ளோம். ஆனால் எவரும் கைது
செய்யப்படவில்லை. சம்பவம் நடந்த இடத்தில் உள்ள கண்காணிப்பு கெமராவில் பதிவான
வீடியோக்களை மட்டுமன்றி நகர் முழுவதும் பதிவாகியுள்ள வீடியோக் களையும் தீவிரமாக
ஆய்வு செய்து வரு கிறோம்.

சம்பவ இடத்தில் இருந்த கெமராக்களை பயங்கரவாதிகள்
முன்கூட்டியே செயலிழக்கச் செய்துவிட்டனர் என்று வெளியாகியுள்ள செய்திகள் தவறானவை
என்றார். ஆனால் நகரில் உள்ள 303 கண்காணிப்பு கெமராக்களில் 38 கெமராக்கள் இயங்கவில்லை
என்பதை அவர் ஒப்புக்கொண்டார். “உளவுத்துறை தகவலை ஆந்திர பொலிஸார் தீவிரமாக கவனத்தில்
எடுத்துக்கொள்ளவில்லை என்று கூறப்படுவது தவறு. பயங்கரவாதத்தை முறியடிப்பில் பொலிஸார்
பலமுறை வெற்றிபெற்றுள்ளனர். எப்போதாவது ஒருமுறைதான் இதுபோன்ற நிகழ்வுகள் ஏற்பட்டு
விடுகின்றன. சம்பவத்தை நேரில் பார்த்தவர்களிடமும், குண்டு வெடிப்பில்
காயமடைந்தவர்களிடம் இருந்தும் தகவல்கள் பெறப்பட்டுள்ளன என்று அனுராக் சர்மா
கூறினார்.
நன்றி தினகரன்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum