சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by rammalar Yesterday at 16:08

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Yesterday at 16:01

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by rammalar Yesterday at 4:01

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by rammalar Yesterday at 3:57

» லக்கி பாஸ்கர்-படத்தின் முதல் பாடல் வெளியானது!
by rammalar Yesterday at 3:46

» நடிகர் திலீபன் புகழேந்திக்கு ஜோடியாக 5 கதாநாயகிகள்!
by rammalar Yesterday at 3:38

» `துண்டு ஒரு தடவைதான் தவறும்!' - ஹெட்டை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா
by rammalar Yesterday at 3:18

» AUS vs AFG புள்ளிப்பட்டியல் - இந்தியாவுக்கு ஆப்பு வைத்த ஆப்கானிஸ்தான்.. ஆஸி. அரை இறுதி வாய்ப்பு காலி
by rammalar Mon 24 Jun 2024 - 6:46

» அயோத்தியில் பாஜக தோல்வி எதிரொலி: ஹனுமன் கோயில் மடத் தலைவர் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்
by rammalar Mon 24 Jun 2024 - 6:40

» விண்ணிலிருந்து பூமிக்கு திரும்பும் ஏவுகலன் சோதனை வெற்றி! ISRO சாதனை!
by rammalar Mon 24 Jun 2024 - 6:35

» படித்ததில் ரசித்தது-
by rammalar Sun 23 Jun 2024 - 10:56

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...
by rammalar Sun 23 Jun 2024 - 6:27

» அப்பாவின் பாசம் - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:55

» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:52

» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Sat 22 Jun 2024 - 15:50

» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 15:18

» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Sat 22 Jun 2024 - 15:17

» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Sat 22 Jun 2024 - 15:16

» மூக்குத்தி அம்மன்- 2ம் பாகம்
by rammalar Sat 22 Jun 2024 - 15:15

» கன்னட நடிகை வீடியோவால் சைபர் கிரைம் விசாரணை
by rammalar Sat 22 Jun 2024 - 15:14

» ஆன்மிக சிந்தனை
by rammalar Sat 22 Jun 2024 - 15:12

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:10

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:09

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:08

» நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ...
by rammalar Sat 22 Jun 2024 - 12:54

» ஜூன் 22: இன்று ஓரளவு குறைந்த தங்கம் விலை!
by rammalar Sat 22 Jun 2024 - 11:30

» வீட்டை எதிர்த்து தான் கல்யாணம் பண்ணுனேன்.. நடிகை தேவயானி
by rammalar Sat 22 Jun 2024 - 11:14

» சட்னி சாம்பார் - வெப் சீரிஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 10:42

» மீனாட்சி சவுத்ரி
by rammalar Sat 22 Jun 2024 - 7:31

» பயனுள்ள வீட்டு குறிப்புகள்
by rammalar Fri 21 Jun 2024 - 19:47

» உங்க வீட்டுக்கு கருவண்டு வந்தால் என்ன நடக்கும்னு தெரியுமா?
by rammalar Fri 21 Jun 2024 - 15:12

» உலக இசை தினம்
by rammalar Fri 21 Jun 2024 - 4:47

» சர்வதேச யோகா தின வாழ்த்துக்கள்!
by rammalar Fri 21 Jun 2024 - 4:43

வீட்டு மனை வாங்கப்போறீங்களா?... உஷார் மக்களே! Khan11

வீட்டு மனை வாங்கப்போறீங்களா?... உஷார் மக்களே!

Go down

வீட்டு மனை வாங்கப்போறீங்களா?... உஷார் மக்களே! Empty வீட்டு மனை வாங்கப்போறீங்களா?... உஷார் மக்களே!

Post by Muthumohamed Sat 16 Mar 2013 - 19:20

வீட்டு மனை வாங்கப்போறீங்களா?... உஷார் மக்களே! Land_img

பல டிவி சேனல்களில் இப்போதெல்லாம் அடிக்கடி தென்படும் விளம்பரங்கள் இவை...

இருபதே அடியில் சுவையான குடிநீர்...

காற்றோட்டமான மனைப்பிரிவு... (அதுசரி... அக்கம்பக்கத்தில எதுவுமேயில்லாத காட்டுக்குள் காற்றோட்டத்துக்கு என்ன குறைச்சல்?!!!)

உடனே புக் செய்பவர்களுக்கு பத்திரப்பதிவு, பட்டா, EC முற்றிலும் இலவசம்...

மனைக்கு அருகிலேயே ரெயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டாண்டு, கோவில், மருத்துவமனை, கல்லூரி, பள்ளிகள்...

முழுவதும் கம்பிவேலி அமைக்கப்பட்டது...

நேஷனல் ஹைவேஸிலிருந்து மிக அருகில்...

சென்னை கோயம்பேடுக்கு பத்து நிமிடத்துக்கு ஒரு பேருந்து வசதி...

உடனே வீடு கட்டி குடியேறலாம்...

இன்றைய சிறு முதலீட்டில் நீங்கள் நாளைய கோடீஸ்வரர்...

பலநேரங்களில் இந்த விளம்பரங்களைப்பார்த்து நான்கூட யோசித்திருக்கிறேன் அங்கெல்லாம் சில மனைகள் வாங்கிப்போடலாம் என்று...
தவறில்லை...

ஆனால் இதில் நூறு சதவீதம் நம்புவதற்குமில்லை... இது போன்ற பிஸினெசில்
ஏமாற்றுக்காரர்களும் கலந்திருப்பது நம்மில் பெரும்பாலானோர்க்கு
தெரிவதில்லை. அதிலும் மிகவும் குறைந்தவிலையில் எங்கோ ஆள்நடமாட்டமில்லாத காட்டுக்குள் விற்கப்படும் மனைகளுக்கு பெரும்பாலும் ஏழைகளும், பாமர மக்களும்தான் பலிகடா என்பதால் ஏஜெண்டுகளுக்கு கொண்டாட்டம்தான்.சரி, மனைவாங்கும்போது கவனிக்கவேண்டியவைகளும், எதிர்கொள்ளவிருக்கும் ரிஸ்க்குகளும் என்னென்ன?...

* சில மனைப்பிரிவுகளில் ஒரே இடம் நாலைந்துபேருக்கு பதிவுசெய்யப்படுவது
ஒருவழியான ஏமாற்றுவேலை. பெரும்பாலான மனைப்பிரிவுகள் ஆள்நடமாட்டமில்லாத இடங்களில் இருப்பதால் வாங்கியவர்கள் அதில் வீடு கட்ட பலஆண்டுகள் ஆகும் என்பதால் இந்தவிதமான பிரச்சினைகள் வெளியில்வர பல ஆண்டுகள் ஆகும். ஆதலால் கூடியமட்டும் உடனடியாக வீடுகட்டி குடியேறும் வகையில் உள்ள மனைப்பிரிவுகளிலேயே இடம் வாங்குவது நல்லது.

* மனைப்பிரிவை கண்டிப்பாக பார்வையிட்டு சுற்றியிருக்கும் நிலஅமைப்புகளை கவனித்து அதன்பின்னர் மனைவாங்குவதுகுறித்து முடிவெடுங்கள். ஏனென்றால் பெரும்பாலான மனைப்பிரிவுகள் விவசாயநிலங்கள் என்பதால் தாழ்வான மற்றும் நீர்தேங்கும் வகையிலான நிலப்பகுதியாக இருக்கலாம்.மனைகளை வாங்கும்போது மழைக்காலமாக இருந்தால் அதன் நீர்தேங்கும் நிலை குறித்து நமக்கே தெரிந்துவிடும். ஆனால் நல்ல வெயில் காலத்தில் மனைகளை பார்வையிட்டு வாங்கும்போது அதன் சுற்றுப்புறத்தை ஆராய்ந்து அறிந்துகொள்வதுநல்லது.

* சிலமனைப்பிரிவுகள் விவசாயநிலம் என்ற நிலையிலிருந்து கன்வெர்ஷன் செய்யப்படாமல்இருக்கலாம். பலபேருக்கு இந்த கன்வெர்ஷன் என்ற விஷயம் தெரியாது. ஆகவே நிலம் வாங்கும் முன் பத்திரப்பதிவு அலுவலகத்திலோ அல்லது லோக்கல் பஞ்சாயத்து அலுவலகத்திலோ நீங்கள் வாங்க இருக்கும் மனைப்பிரிவு குறித்து விவசாயநிலமா?, வீடு கட்ட முடியுமா?, பஞ்சாயத்து / ஊராட்சி மற்றும் இன்னபிற அலுவலகங்களால் அங்கீகரிக்கப்பட்ட மனைப்பிரிவா என்பதையும் விசாரித்துக்கொள்வது நல்லது. ஏற்கனவே ஏஜெண்டுகளால்
சரிகட்டப்பட்டிருப்பார்கள் என்றாலும்கூட ஒருமுறை லோக்கல் வி.ஏ.ஓ மற்றும்
சர்வேயர்களிடம் விசாரிப்பதும் நல்லதுதான்.

* அதுபோலவே இருபதே அடியில்சுவையான குடிநீர், நாற்பதேஅடியில் சுவையான குடிநீர் என்பதெல்லாம் பெரும்பாலும் டூபாக்கூர்தான். ஒருமுறை எனது புராஜெக்ட் ஒன்றில் போர்வெல் பாயிண்ட் மார்க்கிங்க்குகாக வாட்டர் டிவைனர் ஒருவரை அழைத்திருந்தேன். அவர் கூறிய சில செய்திகள் நம்ப முடியாத அளவுக்கு அதிர்ச்சியளித்த ரகம். அவரது ரிலேஷன் ஒருவர் ரியல் எஸ்டேட் பிஸினெசில் இருக்கிறாராம். அவரது மனைப்பிரிவில் கிணறுபோல பதினைந்து அடி அல்லது இருபது அடி ஆழத்தில் பள்ளம் அமைத்துக்கொள்வாராம். பெரும்பாலான மனைப்பிரிவு விசிட்டுகள் ஏஜெண்டுகளாலேயே இலவசவிசிட் என்று குறிப்பிட்ட நாள்களில் மட்டுமே நடத்தப்படுவதால் அந்த விசிட்டுகளுக்கு முந்தைய நாட்கள் அல்லது அந்த நாளின் காலையில் லாரியில் மினரல் வாட்டர் கொண்டுவந்து போர்வெல் அல்லது கிணறு போன்ற அமைப்புகளை நிரப்பிவிடுவார்களாம். மனைப்பிரிவை பார்வையிடவருவோர்கள் இந்தத்தண்ணீரை குடித்துப்பார்த்துவிட்டு அசந்துபோவது நடக்குமாம். ஆகவே அவர்கள் விசிட்களில் முதல்முறை செல்லும்போதே மனையின் வழிகளை மனதில் நிறுத்திக்கொண்டு மற்றுமொரு சாதாநாளில் நாமே தனியே சென்று மனைப்பிரிவை பார்வையிடுவது கண்டிப்பாகசெய்யவேண்டிய ஒன்று என்பதை மனதில் கொள்ளுங்கள்.
அவ்வாறு நாம்தனியே சென்று ஏஜெண்டுகள் இல்லாத நேரத்தில் மனைப்பிரிவை
பார்வையிடுவது பல்வேறு ரகசியங்களை வெளிக்கொண்டுவந்து நம்மை
உஷார்படுத்தலாம்.

* மனைவாங்கும்முன் அதன் டாக்குமெண்ட் நகல்கள்
அனைத்தையும் கேட்டுவாங்கிஒருமுறையாவது உங்களுக்குத்தெரிந்த ஏதாவதொரு வக்கீலிடம் காண்பித்து லீகல் ஒப்பீனியன் எனப்படும் டாக்குமெண்ட் சரிபார்த்தலை செய்வது மிக அவசியம். டாக்குமெண்ட்டுகள் வாசிக்கும்போது நமது பார்வை வேறு, லாயர்களின் பார்வை வேறு என்பதால் இதன்மூலம் பல எதிர்கால வில்லகங்களை நிச்சயம் தவிர்க்கலாம்.

* செங்கல்பட்டும் சென்னைதான்... அரக்கோணமும் சென்னைதான்... என்ற கவர்ச்சியான விளம்பரங்களைநம்பி எங்கோ வெகுதூரத்தில் மனைவாங்குவதை தவிர்ப்பது நல்லது. உடனே வீடு கட்ட முடியாதவர்கள் மனை வாங்கும்போது முடிந்தளவு அடிக்கடி சென்று பார்த்து தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளுமளவுக்கு உள்ள இடத்திலேயே மனை வாங்குவது நல்லது. அதேப்போல கண்ட கழுதைகள் எல்லாம் டி.வி.யில் தோன்றி விளம்பரப்படுத்துவதை மட்டும் நம்பாமல் நமது சுயபரிசோதனையில் மனையை
வாங்கலாமா? வேண்டாமா? என்று முடிவெடுத்து வாங்குவதே சிறந்தது.
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

வீட்டு மனை வாங்கப்போறீங்களா?... உஷார் மக்களே! Empty Re: வீட்டு மனை வாங்கப்போறீங்களா?... உஷார் மக்களே!

Post by Muthumohamed Sat 16 Mar 2013 - 19:23

* தனிப்பட்ட மனைகளை வாங்கும்போது அக்கம் பக்கத்தில் இருப்பவர்களிடம் அந்த மனை பற்றியும் அந்த ஏரியா பற்றியும் விசாரித்து வாங்குவது நல்லது. ஏனெனில்நீங்கள் வாங்கப்போகும் மனையில் டாக்குமெண்ட்டிற்கு அப்பாற்பட்டு ஏதாவது வில்லங்கம் இருக்கிறதா என்பதும், அந்தப்பகுதியில் எதிர்காலஅரசாங்கத்திட்டங்கள் எதாவது வரவிருக்கிறதா என்பதும் இதுபோன்ற அக்கம்பக்கத்து விசாரணையின் மூலம் எளிதாக தெரிந்து கொள்ளலாம்.

* இது எல்லாவற்றுக்கும் மேலாக சிட்டியில் மனை வாங்குபவர்கள் கவனிக்கவேண்டிய முக்கியமான விஷயம் அரசாங்கம் சம்பந்தப்பட்ட வில்லங்கம். ஒரு மனைக்கு நீங்கள் EC போட்டுப்பார்க்கும்போது அதில் ஒரு விஷயம் இருக்கும். இந்த EC அரசாங்கம் சம்பந்தப்பட்ட வில்லங்கங்கள் எதற்கும் கட்டுப்படாதது என்று. இது சாதாரண விஷயமல்ல. மனை வாங்குபவர்கள் மிகமுக்கியமாக கவனிக்கவேண்டிய விஷயமிது. நில உச்சவரம்பு சட்டம் என்று ஒன்றிருப்பது நம்மில் பலபேருக்குத்தெரியாது. Land Ceiling Act என்ற அந்த சட்டத்தின் கீழ் குறிப்பிட்ட அளவுக்கு மேல் நிலம் வைத்திருந்த பலரது நிலங்கள் அரசாங்கத்தால் கையகப்படுத்தப்பட்டிருக்கும். இதில் கொடுமை என்னவென்றால் நாம் போட்டுப்பார்க்கும் EC யில் இந்த விஷயங்கள் வராது. அதேப்போல் பத்திரப்பதிவு அலுவலகத்திலும் சீலிங் லேண்டு என்பதற்கான எந்தத்தகவலும் லின்க் செய்யப்படாததால் அவர்களும் அந்த நிலத்தை உங்கள் பெயரில் பதிவு செய்துகொடுப்பார்கள். உங்களிடம் பேரண்ட் டாக்குமெண்டிலிருந்து நீங்கள் உங்கள் பெயரில் பதிவு செய்தது வரையிலான அனைத்து டாக்குமெண்ட்டுகளும் இருந்தும் அந்த நிலத்திற்கு ஓனர் நீங்களல்ல. அது அரசு நிலம் என்பது எவ்வளவு கொடுமை?... நீங்கள் உச்சநீதிமன்றம்வரை சென்றாலும் உங்களுக்கு ஆதரவாக தீர்ப்பு வராது. எப்போது நினைத்தாலும் அரசு நிலத்தை நீங்கள் ஆக்கிரமித்ததாகக்கூறி உங்கள் இடத்தை அரசாங்கம் எடுத்துக்கொள்ளலாம். நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்து வாங்கிய நிலம், எல்லா டாக்குமெண்ட்டுகளும் உங்கள் பெயரில் இருந்தும் உங்களுக்குச்சொந்தமில்லை என்பது எவ்வளவு கொடுமையான விஷயம். இது பெரும்பாலான வக்கீல்கள்கூட மாட்டியிருக்கும் விஷயம் என்பது இதற்கான மனுகொடுக்கும் அலுவலகத்தில் குவிந்திருக்கும் மனுக்களை பார்க்கும்போதுதான் தெரிகிறது. சரி… இதில் ஏமாறாமல் இருப்பது எப்படி?... நிலம் வாங்கும் முன் EC, லீகல் ஒப்பீனியன்,லொட்டு லொசுக்கு இப்படி எல்லாவற்றையும் பார்க்கும் நாம் கையோடு சம்பந்தப்பட்ட நிலத்தின் சர்வே எண், தனிப்பட்டா ஆகியவற்றை அந்த ஏரியா வி.ஏ.ஓ மற்றும் சர்வேயர் ஆகியோரிடம் உறுதி செய்து அந்த இடம் சீலிங் இல்லை என்பதையும், எதிர்கால அரசாங்க புராஜெக்ட்டுகள் எதுவும் அந்த இடத்தில் வரவில்லை என்பதையும் உறுதிபடுத்திக்கொள்ளவேண்டும்.
எல்லா ரியல் எஸ்டேட் நிறுவனங்களும் ஏமாற்றுக்காரர்களும் அல்ல.எல்லா ரியல் எஸ்டேட் நிறுவனங்களும் நம்பி வாங்குமளவுக்கு நல்லவர்களும் அல்ல. அதேப்போல வீடு கட்டுவதற்கென்று சிறுக சிறுக சேமித்து நிலம் வாங்கும்போது ஏமாறாமல் இருக்கத்தான் இந்த முன்னெச்சரிக்கை பதிவே தவிர மற்றபடி எல்லோரும் கெட்டவர்கள், எல்லோரையும் சந்தேகப்படுங்கள் என்பதல்ல இந்தப்பதிவின் நோக்கம். அதேப்போல மேற்கூறிய விஷயங்கள் மட்டுமின்றி இதில் சொல்ல விட்டுப்போன இன்னும் பல விஷயங்கள்கூட இருக்கலாம்.

கவர்ச்சியான விளம்பரங்களையும், எதிர்காலத்திற்கான முதலீடு என்று உங்களை நீங்களே சமாதானப்படுத்திக்கொண்டும் தீர ஆராயாமல் உங்கள் சேமிப்பை கண்ட மனைகளின் மீது கொட்டாமல்... மனை வாங்கும்போது நன்றாக ஆராய்ந்து, யோசித்து உங்கள் முதலீட்டை சரியான வகையில் நிர்வகித்து பயன்பெறுங்கள் மக்களே.

ஆல் தி பெஸ்ட்...!

http://jeevanathigal.blogspot.com/2013/03/blog-post_16.html
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum