Latest topics
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!by rammalar Today at 4:22
» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Yesterday at 17:41
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Yesterday at 15:38
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Yesterday at 15:37
» காக்கும் கை வைத்தியம்
by rammalar Yesterday at 13:53
» வரகு வடை
by rammalar Yesterday at 13:40
» கை வைத்தியம்
by rammalar Yesterday at 13:35
» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Yesterday at 13:28
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Yesterday at 10:49
» விடுகதைகள்
by rammalar Yesterday at 8:57
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Yesterday at 8:50
» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Yesterday at 8:41
» மொக்க ஜோக்ஸ்
by rammalar Yesterday at 5:41
» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Yesterday at 5:37
» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Yesterday at 4:12
» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Yesterday at 4:01
» மாம்பழ குல்ஃபி
by rammalar Wed 29 May 2024 - 15:43
» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Wed 29 May 2024 - 15:41
» மோர்க்களி
by rammalar Wed 29 May 2024 - 15:40
» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Wed 29 May 2024 - 15:30
» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Wed 29 May 2024 - 15:26
» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Wed 29 May 2024 - 15:21
» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Wed 29 May 2024 - 15:15
» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Wed 29 May 2024 - 15:07
» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Wed 29 May 2024 - 13:52
» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Wed 29 May 2024 - 12:07
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Wed 29 May 2024 - 9:32
» இது, அது அல்ல -(குட்டிக்கதை)- மெலட்டூம் நடராஜன்
by rammalar Wed 29 May 2024 - 9:06
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Wed 29 May 2024 - 3:46
» பல்சுவை-3
by rammalar Tue 28 May 2024 - 20:24
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Tue 28 May 2024 - 17:14
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Tue 28 May 2024 - 17:09
» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Tue 28 May 2024 - 17:05
» நகைச்சுவை கதைகள்
by rammalar Tue 28 May 2024 - 12:02
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Tue 28 May 2024 - 11:19
கபினி அணை நிரம்பி வருவதால் மேட்டூர் அணைக்கு நீர் வர வாய்ப்பு
3 posters
Page 1 of 1
கபினி அணை நிரம்பி வருவதால் மேட்டூர் அணைக்கு நீர் வர வாய்ப்பு
மேட்டூர், ஜுன். 24-
ஒவ்வொரு ஆண்டும் காவிரி டெல்டா பாசன விவசாயத்துக்காக மேட்டூர் அணை ஜுன் மாதம் 12-ந் தேதி திறக்கப்படுவது வழக்கம். கடந்த ஆண்டு செப்டம்பர் 17-ந் தேதி அணை திறக்கப்பட்டது. இந்த ஆண்டு இன்னும் அணை திறக்கப்படுவதற்கான அறிகுறியே இல்லை.
அணையில் 80 அடி தண்ணீர் இருந்து போதிய நீர்வரத்து இருந்தால் மட்டுமே அணை திறக்கப்படுவதற்கான சாத்தியக்கூறு உள்ளது. இன்று காலை 8 மணி நிலவரப்படி அணையின் நீர் மட்டம் 15.72 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து 80 கன அடியாக உள்ளது.
அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 900 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. பருவ மழை கைகொடுத்து கர்நாடக அணை நிரம்பினால் மட்டுமே அங்குள்ள அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்படும் என்ற சூழ்நிலை இருந்தது.
நல்ல மழை பெய்து கர்நாடக அணைகள் நிரம்பினால் மட்டுமே தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பது பற்றி பரிசீலிக்கப்படும் என்று ஏற்கனவே கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறி இருந்தார். தற்போது வருண பகவான் கைகொடுத்து காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. நீர்வரத்து அதிகரிப்பால் கர்நாடக அணைகள் ஒவ்வொன்றாக நிரம்பி வருகின்றன.
இதனால் மேட்டூர் அணைக்கு நீர் வர வாய்ப்பு உள்ளது. கர்நாடகத்தில் உள்ள கிருஷ்ணராஜசாகர் அணையின் நீர் மட்டம் நேற்று ஒரே நாளில் 3 அடி உயர்ந்து உள்ளது. தற்போது அந்த அணையின் நீர் மட்டம் 80 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து 2420 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து 1177 கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
அதே போல கபினி அணைக்கும் நீர்வரத்து அதிகரித்து உள்ளது. 48 மணி நேரத்தில் கபினி அணை நிரம்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அணை நிரம்பினால் உபரி நீர் அப்படியே திறக்கப்படும். அப்படி திறக்கப்படும் தண்ணீர் நேரடியாக மேட்டூர் அணைக்கு வரும். தற்போது கபினி அணையில் இருந்து 1000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
இன்னும் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டு இருப்பதால் கபினி அணைக்கு நீர்வரத்து அதிகரித்து மேட்டூர் அணைக்கு தண்ணீர் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கர்நாடக முதல் -மந்திரி சித்தராமையாவின் உத்தரவை அந்த மாநில அரசு நிறைவேற்றும் என்ற நம்பிக்கையில் காவிரி டெல்டா பாசன விவசாயிகள் காத்து இருக்கிறார்கள்.
மேட்டூர் அணையை நம்பித்தான் தமிழகத்தில் 16 லட்சத்து 50 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறுவது குறிப்பிடத்தக்கது. தென்மேற்கு பருவ மழையால் கன்னியாகுமரி, நெல்லை, தேனி,கோவை உள்ளிட்ட பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. பாபநாசம், மணி முத்தாறு, சேர்வலாறு, பேச்சிப்பாறை உள்ளிட்ட பல அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.
முல்லைப் பெரியாறு வைகை உள்ளிட்ட அணைகளுக்கும் கோவையில் உள்ள சிறுவாணி மற்றும் அமராவதி, ஆழியாறு ஆகிய அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்து உள்ளது. தமிழகத்தில் உள்ள பல்வேறு அணைகள் நிரம்பி வரும் சூழ்நிலையில் மேட்டூர் நீர் மட்டம் மட்டும் மிக மோசமாக இருப்பதால் காவிரி டெல்டா பாசன விவசாயிகள் கவலையில் இருந்தனர்.
தற்போது கர்நாடகாவில் நல்ல மழை பெய்து அந்த மாநிலத்தில் உள்ள அணைகள் நிரம்பி மேட்டூர் அணைக்கு தண்ணீர் திறக்க வாய்ப்பு உள்ளதால் டெல்டா பாசன விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். ஏற்கனவே காவிரி டெல்டா பகுதிகளில் விவசாயிகள் நிலத்தடி நீர் மற்றும் மும்முனை மின்சாரத்தால் நடவு பணிகளை தொடங்கி விட்டனர்.
தற்போது மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வரும் சூழ்நிலை உருவாகி உள்ளதால் இந்த ஆண்டு விவசாயிகளுக்கு ஒரளவு சாகுபடிக்கு தண்ணீர் வர வாய்ப்பு உள்ளது. இதனால் விவசாயத் தேவை போக குடிநீர் தேவையும் பூர்த்தி ஆகும் சூழ்நிலை உள்ளது.
சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி,புதுக்கோட்டை, பெரம்பலூர், தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர் ஆகிய 11 மாவட்டங்களுக்கும், ராமநாதபுரம் மற்றும் வேறு மாவட்டங்களின் குடிநீர் தேவைக்கும் பாதிப்பு வராது என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: கபினி அணை நிரம்பி வருவதால் மேட்டூர் அணைக்கு நீர் வர வாய்ப்பு
எப்படியோ விவசாயிகள் நன்றாக விவசாயம் செய்தால் நல்லது தான்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Similar topics
» அன்னையரின் வாழ்க்கை ஓராயிரம் பாத்திரங்களால் நிரம்பி வழிகிறது!
» முல்லைப்பெரியாறு அணைக்கு நிலநடுக்கத்தால் பாதிப்பு ஏற்படாது
» மேட்டூர் அணையில் கூடுதலாக தண்ணீர் திறப்பு
» மேட்டூர் அணையின் நீர்மட்டம் கடும் சரிவு
» காற்றழுத்த தாழ்வு நிலை நீடித்து வருவதால் மேலும் மழை
» முல்லைப்பெரியாறு அணைக்கு நிலநடுக்கத்தால் பாதிப்பு ஏற்படாது
» மேட்டூர் அணையில் கூடுதலாக தண்ணீர் திறப்பு
» மேட்டூர் அணையின் நீர்மட்டம் கடும் சரிவு
» காற்றழுத்த தாழ்வு நிலை நீடித்து வருவதால் மேலும் மழை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|