சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Yesterday at 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

சிறுநீரக வியாதி உள்ளவர்களுக்கான உணவு முறைகள் Khan11

சிறுநீரக வியாதி உள்ளவர்களுக்கான உணவு முறைகள்

Go down

சிறுநீரக வியாதி உள்ளவர்களுக்கான உணவு முறைகள் Empty சிறுநீரக வியாதி உள்ளவர்களுக்கான உணவு முறைகள்

Post by *சம்ஸ் Sun 13 Feb 2011 - 19:57

சிறுநீரக வியாதி உள்ளவர்களுக்கான உணவு முறைகள் Diet1
நமது கலாட்சாரத்திலும், நடைமுறை வாழ்க்கையிலும் உணவு மிக முக்கிய பங்கினை வகிக்கின்றது. எண் ஜாண் உடம்பும் வாழ்வது ஒரு ஜாண் வயிற்றிற்கு என்பது ஒரு பழமொழி உணவு நம் உடலுக்கு ஊட்டமளிப்பது மட்டுமின்றி சுக உணர்வு, அன்பு ஆகியவற்றையும் சேர்த்து அளிக்கின்றது நம் அனைவருக்கும் பிடித்த உணவுகள், பிடிக்காத உணவுகள் என்று உண்டு. நம் ஒவ்வொருவருக்கும் உடல் எடை அதிகம் என்பதால் உணவின் அளவை குறைக்கவோ அல்லது எடை குறைவு என்பதால்

அதிகமாக சாப்பிடவோ குறைக்கவோ அல்லது எடை குறைவு என்பதால் அதிகமாக சாப்பிடவோ குறைக்கவோ அல்லது எடை குறைவு என்பதால் அதிகமாக சாப்பிடவோ வேண்டியிருக்கலாம். எது எப்படியிருந்தாலும் நம் அன்றாட வாழ்க்கையில் உணவின் பங்கு என்பது மிக முக்கியம்.

இருதய வியாதி, சர்க்கரை வியாதி, உயர் இரத்த அழுத்தம் போல சிறுநீரக வியாதி உள்ளவர்களும் தங்கள் உணவு முறைகளில் பல வித மாற்றங்கள் செய்ய வேண்டி வரும் ஆரம்பத்தில் இவை மிக கடினமாகவும் வாழ்வின் (நாக்கின்) சுவையையே இழந்து விட்டது போன்ற ஒரு மனோ நிலைக்கு கொண்டு சென்றாலும் கொஞ்சம் மன உறுதியும் நாக்குக் கட்டுப்பாடும் இருந்தால் வெகு விரைவில் இவை பழக்கப்பட்டு ஒரு சாதாரண விசயமாகி விடக் கூடும்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சிறுநீரக வியாதி உள்ளவர்களுக்கான உணவு முறைகள் Empty Re: சிறுநீரக வியாதி உள்ளவர்களுக்கான உணவு முறைகள்

Post by *சம்ஸ் Sun 13 Feb 2011 - 19:57

சீறுநீரக வியாதி என்பது ஒரு எல்லாம் அடங்கிய பொதுவான சொல். சிறுநீரக பாதிப்பு, சிறுநீரக செயலிழப்பு (கிட்னி பெயில்யர்), சிறுநீரக கற்கள், சிறுநீரக தாரை அழற்சி (KINDEY INFECTION -கிட்னி இன்பெக்ஷன்), சிறுநீரக புரத ஒழுக்கு (நெப்ராடிக் சிண்ட்ரோம்- NEPHROTIC SYNDROME), சிறுநீரகத்தால் உயர் இரத்த அழுத்தம் என பல விதமான சிறுநீரக வியாதிகள் உள்ளன. இதில் உங்கள் சிறுநீரக பாதிப்பின் தன்மையை உணர்ந்து சிறுநீரக மருத்துவரின் ஆலோசனையும் கேட்டு இந்த கையேட்டை நீங்கள் உபயோகிக்கவும்.

எத்தகைய சிறுநீரக வியாதி உள்ளவர்களுக்கும் அந்நோய்க்கு தக்கபடி உணவு முறைகள், தண்ணீரின் அளவு இவற்றில் பல மாற்றங்கள் செய்ய வேண்டி வரலாம். சிலருக்கு ஆரம்பத்தில் மாற்றங்கள் செய்ய வேண்டி வரலாம். சிலருக்கு ஆரம்பத்தில் இம்மாற்றங்கள் மிகக் கடினமானதாகவும் இயலாத ஒன்றாகவும் தோன்றக் கூடும். அதிலும் சர்க்கரை வியாதியுடன் கூடிய சிறுநீரக செயலிழப்பிற்கு பெருமளவு மாற்றங்கள் வேண்டி வரும்.

அத்தகைய ஒருவர் இவ்வாறு கூறினார்.

எனது உணவு ஆலோசகர் கூறியது போல செய்ய வேண்டும் என்றால் நான் ஏதேனும் உணவுப் பொட்டலத்தை வாங்கி அதில் உள்ள உணவையெல்லாம் தூக்கி வெளியே எறிந்து விட்டு மீதமுள்ள காகித்தை மட்டும் சாப்பிட வேண்டியதுதான் என்று உண்மையில் இதை இப்படி எடுத்துக் கொள்ள வேண்டியது இல்லை. நீங்கள் இந்த கையேட்டை படிப்பதன் மூலம் உங்கள் வாழ்க்கையை எளிதாக்க நாங்கள் முயற்சிக்கிறோம்.

இம்முயற்சியில் எங்கள் குறிக்கோள் உங்கள் வாழ்க்கையை உங்கள் கட்டுப்பட்டுக்குள் வைக்க உதவி செய்வது நீங்களே உங்கள் உணவுகளை தேர்ந்தெடுப்பதற்கு உங்களை தயார் செய்வது. இதனை நாங்கள் கீழ்கண்ட படிகளாக செய்ய திட்டமிட்டுள்ளோம்.

1. உணவுகளின் அடிப்படை உண்மைகள்,
2. சரிவிகித சத்துக்களை எவ்வாறு பெறுவது?
3. காலை, மதியம், இரவு என எவ்வாறு உங்கள் உணவுப் பட்டியலை திட்டமிடுவது?
4. இப்போதுள்ள உணவுப்பழக்கங்களை எவ்வாறு மாற்றிக் கொள்வது?


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சிறுநீரக வியாதி உள்ளவர்களுக்கான உணவு முறைகள் Empty Re: சிறுநீரக வியாதி உள்ளவர்களுக்கான உணவு முறைகள்

Post by *சம்ஸ் Sun 13 Feb 2011 - 20:00

உணவியலின் அடிப்படைகள்

சிறுநீரக வியாதி உள்ளவர்களுக்கான உணவு முறைகள் Diet2
நாம் உண்ணும் உணவு வகைகளை ஒரு பிரமிட் அல்லது ஒரு முக்கோண வடிவில் நாம் கீழே கண்டபடி அடுக்கலாம். இதன் கடைசித் தட்டில் நம்முடைய பிரதான உணவுகள் (Staple Food) – தென்னிந்தியர்களுக்கு அரிசி சாதம் இவை. முக்கியமாக நமக்கு இயங்குவதற்கு தேவையான சக்தியை கொடுக்கின்றன. அடுத்த தட்டில் காய்கறிகளும் பழங்களும் உள்ளன. இவற்றில் உள்ள விட்டமின்கள், தாது உப்புக்கள் ஆகிய உயிர் சத்துக்கள் நம் உடலுக்கு இன்றியமையாதவை. அடுத்த தட்டில் புரதச் சத்துள்ள பால், பால்பொருட்கள், மாமிச வகைகள். அடுத்த கடைசி தட்டில் நாம் விரும்பி உண்ணும் ஆனால் நிஜத்தில் மிகக் குறைவாக சாப்பிட வேண்டிய இனிப்பு வகைகள்,
எண்ணையில் செய்த பலகாரங்கள் ஆகியவை உள்ளன. இந்த உணவு பிரமிடில் உள்ளவாறு அந்தந்த வகை உணவுகளை அந்தந்த அளவு உண்பது என்பது ஆரோக்யமான முறையாகும். இவ்வாறு சரிவிதமாக உண்பது என்பது சிறுநீரக நோய் உள்ளவர்களுக்கும் பொருந்தும்.
சிறுநீரக வியாதி உள்ளவர்களுக்கான உணவு முறைகள் Diet3
கலோரீஸ், கலோரீஸ்
சிறுநீரக வியாதி உள்ளவர்களுக்கான உணவு முறைகள் Diet4
கலோரீஸ் என்றால் என்ன? கலோரி ( Calory ) என்பது நம் உணவில் சக்தியை அளக்கும் ஒரு அளவுகோல். நம் உடல் ஒரு இயந்திரம் என்று வைத்துக் கொண்டால் அது இயங்க பெட்ரோல், டீசல் பொன்ற எரிசக்தி தேவை. உணவுகளில் உள்ள இத்தகு எரிசக்தியை நாம் கலோரி என்ற அலகு மூலம் அளக்கின்றோம். இது அளவிற்கு அதிகமானால் கொழுப்பாக மாறி உடலில் சேர்க்கப்பட்டு நம் உடல் எடை கூடும். அதுவே கலோரிகள் தேவையை விட குறைவாக இருந்தால் நம் உடல் எடை குறையும்.

என்றால் எனக்கு எவ்வளவு கலோரிகள் தேவை ?

நம் அனைவருக்கும் நம் உடல் எடை, செய்யும் வேலை ஆகியவற்றை பொறுத்து தகுதியான கலோரிகள் தேவை. சிறுநீரக செயலிழப்பு உள்ளவர்களுக்கும் டயாலிசிஸ் செய்பவர்களுக்கும் ஒரு நாளுக்கு அவரது எடையில் ஒரு கிலோவிற்கு 35 கலோரி என வேண்டும் அன்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. நாம் ஒவ்வொரு நாளும் எவ்வளவு கலோரிகள் உணவாக எடுத்துக் கொள்கிறோம் என்பதை அறிய நீங்கள் சாதாரணமாக எடுத்துக் கொள்ளும் உணவுகளை ஒரு காகிதத்தில் சில நாட்களுக்கு எதையும் விடாமல் பட்டியலிட்டுக் கொடுத்தால் அதை வைத்து உங்கள் உணவியல் வல்லுநர் கணக்கிட்டுக் கூறுவார். உங்கள் உணவில் உள்ள கலோரிகள் உங்கள் தேவைக்கு அதிகமானதாக இருந்தால் குறைக்கவோ அல்லது குறைவாக இருந்தால் கூட்டவோ வேண்டும்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சிறுநீரக வியாதி உள்ளவர்களுக்கான உணவு முறைகள் Empty Re: சிறுநீரக வியாதி உள்ளவர்களுக்கான உணவு முறைகள்

Post by *சம்ஸ் Sun 13 Feb 2011 - 20:02

சிறுநீரக வியாதி உள்ளவர்களுக்கான உணவு முறைகள் Diet5
பொதுவாக சிறுநீரக செயலிழப்பு நோயாளிகளுக்கு சிறுநீரகங்களின் செயல்திறன் குறையக் குறைய பசி குறைய ஆரம்பிக்கும் அத்தோடு இரத்தத்தில் கழிவு உப்புக்களின் மிகுதியால் சிலருக்கு வாந்தி, விக்கல், புரதம் அதிகம் உள்ள உணவுகள் பிடிக்காமல் போவது, மனத்தளர்ச்சியின் காரணமாக சரியான அளவு எடுத்துக் கொள்ளாமல் போவது போன்ற பல காரணங்களால் அவர்கள் உண்ணும் உணவில் உள்ள கலோரிகள், விட்டமின் சத்துக்கள் ஆகியன தேவையை விட மிகவும் குறைவாகவே இருக்கின்றது.


இதனால் கடை நிலை நிரந்திர சிறுநீரக செயலிழப்பு நோயாளிகள் பலரும் படிப்படியாக அவர்களின் எடையை இழக்கவே செய்கின்றார்கள். இந்த நிலைமையில் உள்ளவர்களுக்கு டயாலிசிஸ் சிகிச்சை தேவைப்படுகின்றது. இவர்கள் டயாலிசிஸ் (ஹீமோ டயாலிசிஸ் அல்லது பெரிடோனியல் டயாலிசிஸ்) ஆரம்பித்த சில நாட்களில் நல்ல பசி எடுக்க ஆரம்பித்து ஓரளவிற்கு உண்ணும் அளவும் அதிகரித்து எடை கூடவும் ஆரம்பிக்கின்றது. ஆனால் சிலருக்கு சரியான அளவு டயாலிசிஸ் செய்தும் பசியில் முன்னேற்றம் தெரியவில்லை என்று சொல்லி சரியாக சாப்பிடாமல் இருப்பார்கள். இவர்கள் முயற்சி செய்து தங்கள் உணவியல் நிபுணரின் ஆலோசனைப்படி அவர்கள் உண்ணும் உணவின் அளவை கூட்ட முயற்சிக்க வேண்டும். அதற்கு கீழ்கண்ட வழிமுறைகள் உதவலாம்.


1. நீங்கள் வழக்கமாக மூன்று முறை சாப்பிடுவதற்கு பதிலாக அந்த அளவையே பிரித்து 6 முறையாக உண்ணலாம். இதனால் நீங்கள் ஒவ்வொரு முறையும் குறைவாகவே சாப்பிட்டாலும் மொத்த உணவின் அளவு அதிகமாகும். கலோரிகள் கூடும்.
2.உங்களுக்கு ஒத்துக் கொள்கின்ற பிடித்த (ஆனால் அனுமததிக்கப்பட்ட)உணவுகளை அதிகமாக எடுத்துக் கொள்ளுங்கள்.
3. அதிக கலோரிகள் உள்ள உணவுகளாக மாமிச உணவுகள் போன்றவற்றை அதிகம் எடுத்துக் கொள்ளலாம்.
4. சில வகை உணவுகள் இப்போது உங்களுக்கு பிடிக்காமல் இருந்தால் அவைகளை வேறு விதமாக முயற்சி செய்து பாருங்கள்.(உதாரணமாக சிறிது நெய் சேர்த்து
சிறுநீரக வியாதி உள்ளவர்களுக்கான உணவு முறைகள் Doctors2
சாப்பிடுதல்,தாளிக்காமல் சாப்பிடுதல், பூண்டு வெங்காயம் இல்லாமல் சமைத்து சுவைத்துப் பார்த்தல்)

5. இரத்தத்தில் கொழுப் பை அதிகப்படுத்தாத எண்ணை வகைகளை(கனோலா எண்ணை, ஆலிவ் எண்ணை, சோள எண்ணை) (T.V விளம்பரங்களில் வருவது போல சஃபோலா,சூரியகாந்தி எண்ணை அல்ல) தாளிக்க, வறுக்க உபயோகித்தால் கொழுப்பில்லாத கலோரிகள் உணவில் கூடும்.
6. அமைதியான சூழ்நிலையில் நிதானமாக சாப்பிடுங்கள்.
7. கலோரிகள் அதிகமுள்ள சத்துணவு கலந்த(சிறுநீரக மருத்துவரால் பரிந்துரைக்கப்படும்) பானங்களை தண்ணீர், காபி, தேநீருக்கு பதிலாக சாப்பிடுங்கள்.
8. புரதச் சத்திற்கு மருத்துவரால் பரிந்துரைக்கப்படும் ஊட்டச்சத்து மருந்துகளை முடிந்த வரை பவுடராக மற்ற உணவுகளில் கலந்து சாப்பிடுங்கள். திரவங்களாகவும் கிடைக்கும் சில வகை புரத ஊட்டு மருந்துகள் நீங்கள் தினமும் குறிப்பிட்ட அளவு எடுத்துக் கொள்ள வேண்டிய திரவ அளவிற்குள் அடங்க வேண்டும் என்பதால் சிரமாக இருக்கலாம்.
9. உணவுகளை குளிர்ச்சியாக நிறமூட்டாமல் (உதாரணமாக கேசரி பவுடர் சேர்த்தல்), அதிக மசாலா சேர்க்காமல் எளிதில் மென்று சாப்பிடக் கூடிய வகையில் சமைத்து சாப்பிட்டால் உணவின் அளவை அதிகரிக்கலாம்.
10. பசியை அதிகரிக்கும் சில மருந்துகளை உங்கள் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் நீங்கள் எடுத்துக் கொள்ளலாம்.
11. உடற்பயிற்சி செய்வதன் மூலம் உங்கள் பசி கூடும்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சிறுநீரக வியாதி உள்ளவர்களுக்கான உணவு முறைகள் Empty Re: சிறுநீரக வியாதி உள்ளவர்களுக்கான உணவு முறைகள்

Post by *சம்ஸ் Sun 13 Feb 2011 - 20:03

சிறுநீரக வியாதி உள்ளவர்களுக்கான உணவு முறைகள் Diet6
உணவின் அங்கங்கள்.
மாவுச் சத்து (கார்போஹைட்ரேட் - Carbohydrate)

மாவுச் சத்து என்பது உணவில் உள்ள ஸ்டார்ச் எனப்படும் மூலகங்களால் நமக்கு கிடைக்கின்றது.

மாவுச் சத்து உணவு செரிமானம் செய்யப்பட்டு இரத்தத்தில் சர்க்கரையாக கிரகிக்கப்படுகின்றது. நம் இரத்தத்தில் உள்ள சர்க்கரை நம் உடலின் பல்வேறு உறுப்புக்களும் இயங்க எரிபொருளாக உபயோகப்படுத்தப்படுகின்றது. சொல்லப் போனால் நீங்கள் சரியான அளவு மாவுச் சத்தை எடுத்துக் கொள்ளளாிட்டால் உங்கள் உடல் இயந்திரம் உங்கள் தசைகளில் உள்ள புரதச் சத்தை எரிபொருளாக சக்தியை உண்டாக்க எடுத்துக் கொள்ளக் கூடும் இதனால் தசைகள் வலுவிழந்து மெலிந்து விடும். இதனால்தான் மாவுச் சத்து என்பது நம் உணவின்


பெரும்பாகத்தை எடுத்துக் கொள்கிறது. மேலும் உணவு பிரமிடின் அடிப்படை தளமாகவும் உள்ளது மாவுச் சத்துகளிலும் பல வகைகள் உள்ளன.

1. சர்க்கரை வகைகள்- இவை எளிய வகை மாவுச் சத்துக்களாகும். எளிதில் ஜீரணிக்க வல்லவை. நம் உடலுக்கு உடனடியாக எரிபொருளாகவும் உபயோகப்படும். அதே சமயம் சர்க்கரை நோய் உள்ளவர்கள் இவைகளை எடுத்துக் கொண்டால் அவர்களுக்கு இரத்தத்தில் சர்க்கரை உடனே கூடவும் செய்யும். உதாரணங்கள்-அஸ்கா, நாட்டுச் சக்கரை, க்ளுகோஸ், தேன், பாலில் உள்ள லாக்டோஸ் பழங்களில் உள்ள ஃப்ரக்டோஸ், ஜாம், சிரப் இவைகளில் உள்ள சுக்ரோஸ் எனப்படும் சர்க்கரைகள் முதலியன.
2. ஸ்டார்ச்சுகள்-இவை பலவகை சர்க்கரைகள் சிக்கலாக இணைந்து உண்டாகும் கூட்டுப் பொருளாகும். இவை உள்ள உணவுகள் தானியங்களான அரிசி, கோதுமை, ராகி போன்றவை மற்றும் இவற்றிலிருந்து தயாரிக்கப்படும் சாதம், ரோடி, சப்பாத்தி போன்றவையும் ஆகும். இவ்வுணவுகளில் மாவுச்சத்து மட்டுமல்லாமல் விட்டமின்கள், நார்ச் சத்து, தாதுப்பொருட்கள் ஆகியனவும் உள்ளன. எனவே எளிய சக்கரைகளை விட ஆரோக்யமானவை. ஸ்டார்ச்சுகளே நாம் உண்ணும் உணவில் பிரதான மாவுச் சத்துப் பொருளாகும். இவை குடலில் செரிக்கப்பட்டு எளிய வகை சர்க்கரைகளான க்ளூகோஸ் போன்றவையாக மாற்றப்பட்டு கிரகிக்கப்படுகின்றன. இவற்றிலும் சில ஸ்டார்ச்சுகள் எளிதில் செரிக்கப்பட்டு வேகமாக கிரகிக்கப்படுவதால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை வேகமாக உயர்த்தக் கூடும். இது சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லதல்ல. ஒரு உணவு இரத்தத்தில் சர்க்கரையைததிகருக்கும் தன்மையை அதனுடைய சர்க்கரை குறியீட்டு எண் (Glycemic index) மூலம் அறியலாம். நார்ச்சத்து நிறைந்த உணவுகள் உதாரணமாக முழு கோதுமையில் செய்யப்பட்ட மாவு, பாலில் செய்யப்படாத அரிசி போன்றவை இரத்தத்தில் சர்க்கரையை வேகமாக அதிகப்படுத்துவதில்லை. நார்ச்சத்து நீக்கப்பட்ட மைதா போன்றவைகளால் செய்யப்பட்ட புரோட்டா, ரொட்டி போன்றவை சர்க்கரையை வேகமாக அதிகப்படுத்தும். உங்கள் உணவியல் நிபுணர் உங்கள் எடை, சர்க்கரை வியாதி உள்ளதா இரத்தத்தில் கொழுப்புச் சத்து ஆகியவற்றை பொறுத்து உங்களுக்கு தகுந்த மாவுச் சத்து உணவுகளை சரியான அளவில் பரிந்துரைப்பார்.

கொழுப்புச்சத்து

தற்போது பத்திரிக்கைகளிலும், டி.வி.யிலும் கொழுப்புச் சத்தைப் பற்றியும் அதன் கெடுதல்களைப் பற்றியும் கொலஸ்டிரால் இல்லாத எண்ணையென்றும் பல விதமாக சொல்கின்றனர். கொழுப்பு என்றாலே கெடுதல் என்ற அர்த்தம் இப்போது வந்துவிட்டது. பொதுவாக இந்தியாவிலும் கூட நாம் இப்போது நம் தேவையை விட அதிகம் கொழுப்புச் சத்து உள்ள உணவுகளை எடுத்துக் கொள்கிறோம் என்பது உண்மைதான். ஆனால் நம் உடலிற்கு சக்திக்கும், சில வகை ஹார்மோன்களை உண்டாக்கவும், சில விட்டமின் சத்துகளை குடலிருந்து உறிஞ்சவும் சிறிது கொழுப்பு அவசியம். இது பொதுவாக நாம் உண்ணும் உணவில் கிடைத்து விடுகின்றது.

சிறுநீரக வியாதி, சிறுநீரக செயலிழப்பு அதனோடு உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் கொழுப்புச் சத்து குறைவாக உள்ள, நல்ல கொழுப்புச் சத்து உள்ள உணவுகளை உண்பது அவர்களின் இதயத்திற்கும் மிகவும் நல்லது. கெட்டியாக உள்ள கொழுப்புக்கள் உதாரணமாக வெண்ணெய், நெய், மாமிசங்களிலுள்ள கொழுப்புகள் (ஆழ்கடல் மீன்கள் தவிர), வனஸ்பதி ஆகியவற்றில் இரத்த குழாய்களை அடைப்பு ஏற்படுத்தும் கொழுப்புகள் அதிகம் உள்ளன. இவற்றை தவிர்ப்பது நல்லது.

திரவ எண்ணெய்களிலும் கீழ்கண்ட எண்ணெய்கள் இரத்தக் குழாய்களை அடைக்கும் கொழுப்பை குறைவாகக் கொண்டவை. ஆலிவ் எண்ணெய் (இந்தியாவில் கிடைக்கின்றது. ஆனால் விலை சற்று அதிகம்), சோயா எண்ணெய், மக்காச் சோள எண்ணெய், சூரியகாந்தி, சஃபோலா எண்ணெய்கள், நல்லெண்ணெய் ஆகியன. அதிலும் ஒரே எண்ணெயை உபயோகிக்காமல் வேறு வேறு எண்ணெய்களை கலந்து அளவு குறைவாக உபயோகிப்பது நல்லது. நான் -ஸ்டிக் பாத்திரங்களை உபயோகித்து சமைத்தல், ஆவியில் தண்ணீரில் வேக வைத்தல், மைக்ரோவேவ் ஓவன் கொண்டு சமைத்தல், தாளிக்காமல் சாப்பிடுவது, போன்ற முறைகளால் எண்ணெயின் அளவைக் குறைக்கலாம். எண்ணெய் அதிகம் உள்ள உணவுப் பொருட்கள், எண்ணெயில் பொறித்த பலகாரங்கள் ஆகியவற்றை தவிர்த்தல் நல்லது


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சிறுநீரக வியாதி உள்ளவர்களுக்கான உணவு முறைகள் Empty Re: சிறுநீரக வியாதி உள்ளவர்களுக்கான உணவு முறைகள்

Post by *சம்ஸ் Sun 13 Feb 2011 - 20:05

சிறுநீரக வியாதி உள்ளவர்களுக்கான உணவு முறைகள் Diet7
புரதச் சத்து

நம் உடலுக்கு புரதச்சத்தும் இன்றியமையாத ஒன்று. பல்வேறு உறுப்புகளின் திசுக்கள், தசைகள், தோல், இரத்த அணுக்கள், நகம், உரோமம் ஆகிய அனைத்துமே முக்கியமாக புரதச் சத்தினாலேயே அமைக்கப்பட்டுள்ளன. அதுவல்லாமல் நொதி (ஹார்மோன்), ஜீரணச் சத்து (என்ஜைம்), நோய் எதிர்ப்புச் சத்துக்கள் (ஆன்டிபாடீஸ்),இரத்தத்தில் அல்புமின், இரத்த சிவப்பணுக்களில் ஹீமோக்ளோபின், சதைகளில் மையோக்ளோபின் புரதங்களில் பலவகை உண்டு. ஆனால் இவை அனைத்தும் அமினோ அமிலம் எனப்படும் அலகுகாளல் ஆனவை. இவைகளில் சில வகை அமினோ அமிலங்கள் நாம் உணவின் மூலமே பெற முடியும். மற்றவற்றை நம் உடல் மாவுச்சத்து கொழுப்புச் சத்து உணவுகளிலிருந்து உண்டாக்கிக் கொள்ள முடியும்.

நாம் உண்ணும் உணவில் புரதம் மிகவும் குறைந்தால் சதைகள், திசுக்கள் பலவீனமடைந்து இளகத் தொடங்கி விடும். எனவே உணவில் புரதம் அவசியம். அதிலும் உயர்தரப் புரதம் என்பவை அனைத்து அமினோ அமிலங்களும் உள்ளடங்கியவை. முட்டை, பால், இறைச்சி (மீன், கோழி முதலான), சோயாவில் செய்த உணவுகள் (உதாரணம் - சோயா பௌடர், மீல் மேக்கர்) இவை உயர்தர புரதங்களாகும். பருப்புகள், தானியங்கள் ஆகியவற்றில் உள்ள புரதம் இரண்டாம் தர புரதமாகும்.

புரதச் சத்துக்கள் நம் உடலின் பல்வேறு தேவைகளுக்கு உபயோகப்படுத்தப்பட்ட பின் பல்வேறு கழிவுப்புக்கள் மீதமாகின்றன. சிறுநீரக செயலிழப்பில் இவைகளின் அளவு படிப்படியே பல மடங்கு அதிகமாகின்றது. இதனாலேயே சிறுநீரக செயலிழப்பில் புரதச்சத்தினை குறைவாக எடுத்துக் கொள்ளச் சொல்லப்படுகின்றது. மேலும் சிறுநீரகச் செயலிழப்பு உள்ளவர்களுக்கு புரதச் சத்துள்ள ஆகாரங்கள் பிடிக்காமல் போய் விடுகின்றது நமது இந்திய உணவில் புரதச்சத்து பருப்புகளில் இருந்து பிரதானமாகவும், அரிசி, கோதுமை போன்ற தானயங்களிலிருந்து குறைவாகவும் கிடைக்கின்றது. எனவே சாப்பாட்டில் பருப்பை மிகவும் குறைத்துக் கொள்ள பொதுவாக நம் நாட்டு சிறுநீரக செயலிழப்பு நோயாளிகளுக்கு அறிவுறுத்தப்படுகின்றது.ஆனால் இந்த அறிவுரை அனைவருக்கும் பொருந்தாது. முற்றிய சிறுநீரக செயலிழப்பினால் டயாலிசிஸ் செய்பவர்களுக்கு டயாலிசின் போது புரதம் வீணாகின்றது.சிறுநீரக வியாதி உள்ளவர்களுக்கான உணவு முறைகள் Diet8
இந்தியர்கள் வெள்ளைக்காரர்கள் போலல்லாது தினமும் உணவில் புரதம் எடுத்துக் கொள்வது குறைவே ஆகும்.

இந்தியர்களுக்கு சிறுநீரக செயலிழப்பில் புரதத்தை அதிகம் குறைக்கச் சொன்னால் பல சமயம் உடல் எடை மிகக் குறைந்து சதைகள் பலவீனமாகி அடிக்கடி நோய்வாய்ப்படுவது அடிக்கடி நடக்கின்றது. எனவே நோயாளியின் உடல் நிலை, எடை, இரத்தத்தில் அல்புமின் என்ற புரதத்தின் அளவு ஆகியவற்றைப் பொறுத்து சிறுநீரகச் செயலிழப்பில் புரதம் குறைக்கவோ கூட்டவோ சொல்லப்படும்.

சில வகை சிறுநீரக பாதிப்புக்களில் - நெப்ராடிக் சிண்ட் ரோம் - சிறுநீரில் அதிக புரதச் சத்து வீணாகின்றது. இவர்கள் தினமும் அதிக புரதம் எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டிருப்பார்கள். இவ்வாறு சிறுநீரக நோய்களில் புரதம் அதிகம் எடுத்துக் கொள்வதும் உயர்தர புரதம் அதிகம் எடுத்துக் கொள்வது நல்லது. சிலருக்கு பசி குறைவு, ருசி இன்மை காரணமாக அதிக புரதம் உணவாக எடுத்துக் கொள்ள முடியாவிட்டால் புரதச் சத்து மருந்து பொடிகள் சிறுநீரக மருத்துவரால் பரிந்துரைக்கப்படும் இவற்றை பாலிலோ, தண்ணீரிலோ அல்லது மற்ற உணவுகளில் கலந்தோ எடுத்துக் கொள்ளலாம். எனவே புரதத்தை சரியான அளவிற்கு எடுத்து உங்கள் மாதாந்திர இரத்த பரிசோதனையில் இரத்தத்தில் அல்புமின் அளவு 4 கி.க்கு குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இதற்கு உங்கள் உணவியல் நிபுணர் பெரும் துணயாயிருப்பார்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சிறுநீரக வியாதி உள்ளவர்களுக்கான உணவு முறைகள் Empty Re: சிறுநீரக வியாதி உள்ளவர்களுக்கான உணவு முறைகள்

Post by *சம்ஸ் Sun 13 Feb 2011 - 20:06

உப்பு (சாதாரண உப்பு-மேஜை உப்பு) – சோடியம் (sodium chloride)
சிறுநீரக வியாதி உள்ளவர்களுக்கான உணவு முறைகள் Diet9
உங்கள் சிறுநீரக மருத்துவர் உங்களுக்கு சிறுநீரக வியாதி உள்ளது என்பதை உப்பு இருக்கிறது என்று எளிமையாக சொல்லியிருக்கக் கூடும் உங்களில் நிறையப் பேர் இந்த செய்தியை உங்கள் இரத்தத்தில் நாம் தினம் உணவில் சேர்த்துக் கொள்ளும் உப்பு அதிகமாக இருப்பதாக தவறாக எண்ணிக் கொள்கின்றோம். இதனால் நிறையப் பேர் சாப்பாட்டில் உப்பே இல்லாமல் கொஞ்ச நாட்கள் சாப்பிட்டு விட்டு அடுத்த முறை மருத்துவரைப் பார்க்கும் போது நான் சாப்பாட்டில் உப்பே சேர்க்கவில்லை. எனவே இப்போது இரத்தத்தில் உப்பு குறைந்திருக்குமல்லவா? என்று கேட்பது நம் நாட்டில் அடிக்கடி நடக்கும் ஒரு நிகழ்வு. ஆனால் சிறுநீரக மருத்துவர் உங்களுக்கு புரிவதற்காக உப்பு என்று சொன்னது உண்மையில் நாம் சாப்பிடும் சாதரண உப்பையல்ல. உடலிலேயே உணவிலிருந்தும் வேறு வகையாகவும் உற்பத்தியாகும் பல்வேறு வகையான கழிவுப்புகளையே அவர் உப்பு என்று பொதுவாகக் கூறியிருக்கிறார், அப்படியென்றால் சாப்பாட்டில் சேர்க்கும் உப்பிற்கும் சிறுநீரக பாதிப்பிற்கும் என்ன சம்பந்தம்? நம் உடலில் இந்த சாதாரண உப்பிற்கு என்ன வேலை? சிறுநீரக பாதிப்பில் சாப்பாட்டில் உப்பை குறைக்க வேண்டுமா? இல்லையா? நாம் சாப்பாட்டில் சேர்க்கும் உப்பிற்கு சோடியம் என்ற இரசாயனப் பெயர் உண்டு, நம் உடல் நரம்புகள், மூளை சீராக இயங்கவும். இரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கவும், உடலில் தண்ணீரின் அளவு/விகிதம் சரியாக இருக்கவும் சோடியம் எனப்படும் இந்த சாதாரண உப்பு ஒரு நாளைக்கு 1.000 மி.கி. அளவு தேவைப்படுகின்றது. நாம் அனைவரும் இந்த தேவையை விட மிக அதிகமாகவே (3000 முதல் 6,000 மி.கி வரை) எடுத்துக் கொள்கின்றோம். அதிலும் கடைகளில் விற்கப்படும் கொறிக்கும் பொருட்கள், உணவு விடுதிகளில் தரப்படும் உணவுகள், டின்களில் அடைத்து விற்கப்படும் உணவுப் பொருட்கள் (உணவின் சுவையைக் கூட்டவும் கெட்டுப் போகாமல் இருக்கவும்) உப்பை தாராளமாக சேர்த்தே தயாரிக்கின்றார்கள். நம் இந்திய உணவிலும் நாம் சராசரியாக 3,000 முதல் 5,000 மி.கி வரை உப்பைச் சேர்த்துக் கொள்கின்றோம். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கடல் நீரிலிருந்து

உப்பை எளிதாக எடுத்து உபயோகிப்பதை மனிதன் அறிந்திராத காலத்தில் உப்பு ஒரு அபூர்வ கிடைப்பதற்கரிய சத்தாக இருந்தது. அப்போது மனிதர்கள் உப்பினை ஒரு சுவை நிறைந்த பண்டமாக உணர்ந்திருந்தனர். ஆனால் தற்காலத்தில் மிக எளிதில் உப்புக் கிடைத்தாலும் உப்பின் மீது கொண்ட ஆசை அப்படியே இருப்பதால் நம் அனைவருக்கும் உப்புள்ளஆகாரங்கள் மிகவும் பிடிக்கின்றன. (உப்பில்லா பண்டம் குப்பையிலே என்பது பழமொழி). ஆனால் நிஜத்தில் நம் அனைவருக்கும் நாம் இப்போது எடுத்துக் கொள்வதை விட மிகவும் குறைவான உப்பே தேவைப்படுகின்றது.

நம்மில் சிலருக்கு அதிக உப்பை தொடர்ந்து பலகாலம் எடுத்துக் கொள்வதால் உயர் இரத்த அழுத்தம், இதய வியாதி, மூளை இரத்தக் குழாய் அடைப்பால் வாத நோய் ஆகியன வரலாம். சிறுநீரக பாதிப்பு உள்ளவர்களிலும் பலருக்கு சிறுநீர் குறைவாக பிரிவதால் உடலில் சோடியம், தண்ணீர் ஆகியவை உபரியாக சேர்வதால், கை, கால் வீக்கம், உயர் இரத்த அழுத்தம் ஆகிய தொந்திரவுகள் வரலாம். இவர்களுக்கு சாப்பாட்டில் சோடியம் என்ற உப்பின் அளவை மருத்துவரின் பரிந்துரைப்படி குறைவாக சாப்பிட வேண்டி வரும். சிறுநீரக பாதிப்புள்ளவர்களிலும் இரத்த அழுத்தம் குறைவாக உள்ளவர்கள் உடல் வீக்கம் இல்லாதவர்கள் பல சமயம் உணவில் உப்பின் அளவை அதிகரிக்க வேண்டிக் கூட வரும் சில வகை சிறுநீரக பாதிப்புகள் முற்றிலும் குணமாகக் கூடியவை. பாதிப்பு உள்ள சமயத்தில் உப்பு குறைவாகவும் குணமடைந்த பின்னர் உப்பைச் சேர்த்து எடுத்துக் கொள்ளவும் பல சமயம் சிறுநீரக மருத்துவர் கூறுவதுமுண்டு. எனவே மருத்துவர் உங்களுக்கு சிறுநீரக பாதிப்பு உள்ளதாக (உப்பு உள்ளது என்று) சொல்லி விட்டார் என்பதற்காக நீங்களாகவே உணவில் உப்பைக் குறைத்துக் கொள்ளக் கூடாது.

ஆனால் நிரந்தர சிறுநீரக செயலிழப்பு முன்னேறிய நிலையில் உள்ள பலருக்கும், நெப்ரோடிக் சிண்ட்ரோம் வியாதி உள்ளவர்களுக்கும் எந்த சிறுநீரக பாதிப்பானாலும் உயர் இரத்த அழுத்தம் கூட உள்ளவர்களுக்கும், கை, கால், உடல் வீக்கம் உள்ளவர்களுக்கும் உணவில் உப்பை பெருமளவு (உங்கள் உணவியல் நிபுணர் வரையருத்தபடி) குறைத்துக் கொள்வது மிகவும் நல்லது. சிறுநீரக நோயாளிகள் உப்பை குறைக்க இரண்டு முக்கிய காரணங்கள் உள்ளன.

1. தற்போது உங்கள் சிறுநீரகங்களால் நீங்கள் குடிக்கும் அவ்வளவு தண்ணீரையும் வெளியேற்ற முடிவதில்லை. நீங்கள் எடுத்துக் கொள்ளும் சோடியம் என்ற உப்பு தண்ணீரை ஒரு காந்தம் போல் செயல்பட்டு ஈர்க்கின்றது. மேலும் ஒரு ஸ்பான்ஜ் போல தண்ணீரை உடலிற்குள் சேர்த்து வைத்துக் கொள்கிறது. அது மட்டுமன்றி அதிக உப்பு தாகத்தை தூண்டி அதிக தண்ணீரையும் குடிக்க வைக்கின்றது. நீங்கள் உப்பைக் குறைப்பதன் மூலம் உடலில் தண்ணீர் சேராமலும் தாகத்தைக் கட்டுப்படுத்தவும் செய்யலாம்.
2. உயர் இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், சிறுநீரக பாதிப்பு இம்மூன்றும் சேர்ந்துள்ளவர்களுக்கு இதய நோய், வாத நோய் ஆகியவை வர அதிக வாய்ப்பு உண்டு. உணவில் உப்பை குறைப்பதனால் இவை வரும் வாய்ப்பும் பெருமளவு குறைகின்றது. உணவில் உப்பை எவ்வாறு குறைப்பது? நீங்கள் உங்கள் பாதிப்பின் தன்மையை பொறுத்து எவ்வளவு உப்பு எடுத்துக் கொள்ளலாம் என்று உங்கள் சிறுநீரக மருத்துவரும் உணவியல் நிபுணரும் முடிவு செய்து கூறியிருப்பார்கள். அது மிகவும் குறைவாக உங்களுக்கு தோன்றலாம். ஆனால் பெரும்பாலானவர்கள் சில வாரங்களில் இதற்கு நன்கு பழகிவிடுகின்றார்கள். இப்போதுதான் உணவின் உண்மையான சுவையை நன்கு உணர முடிகின்றது என்று சொல்பவர்களும் உண்டு. டயாலிசிஸ் சிகிச்சை முறையாக செய்பவர்களுக்கு ஒரு நாளைக்கு 2,000 மி.கி. அளவு உப்பு பொதுவாக அனுமதிக்கப்படுவது உண்டு.



உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சிறுநீரக வியாதி உள்ளவர்களுக்கான உணவு முறைகள் Empty Re: சிறுநீரக வியாதி உள்ளவர்களுக்கான உணவு முறைகள்

Post by *சம்ஸ் Sun 13 Feb 2011 - 20:08

உணவில் உப்பைக் குறைக்க சில ஆலோசனைகள்.

1. கடைகளில், பேக்கரியில் வாங்கும் உணவுகளைத் தவிர்க்கவும். ஆயத்த உணவுகள், பாக்கெட்டுகளில் கிடைக்கும் உணவுகள் இவற்றில் எவ்வளவு சோடியம் உள்ளது என்பது சில சமயம் அதன் அட்டையில் அச்சிடப்பட்டிருக்கலாம். அவற்றை ஆராய்ந்து உங்களுக்கு ஏற்றதா என்று முடிவு செய்யலாம்.
2. ஊறுகாய், அப்பளம், முறுக்கு மிக்ஷர் போன்ற நொறுக்கு தீனிகள், பீட்ஸா, சீஸ், கருவாடு உப்புக்கண்டம் போன்ற உப்பு அதிகமான ஆகாரங்களை அறவே தவிர்க்கவும்.
3. சாப்பாட்டில் உப்பில்லாமல் சமைக்கவும். ஒரு ஸ்பூன் உப்பு என்பது 2,130 மி.கி சோடியம்.
சிறுநீரக வியாதி உள்ளவர்களுக்கான உணவு முறைகள் Diet10

4. சாதாரண உப்பிற்கு பதிலாக மாற்று உப்புக்களான லோனா உப்பு, இந்துப்பு, வறுத்த உப்பு ஆகியவற்றையும் தவிர்க்கவும். இவற்றில் சோடியமுக்கு பதிலாக பொட்டாசியம் இருக்கும் சிறுநீரக செயலிழப்பில் பொட்டாசியம் உப்பும் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று.
5. வீட்டிலே தயாரித்த மசாலாப் பொருட்கள் நறுமணப் பொருட்கள் ஆகியவற்றை உப்பிற்கு பதிலாக சுவை கூட்ட உபயோகிக்கலாம். கடைகளில் விற்கப்படும் ரெடிமேட் மசாலாக்கள் உப்பு அதிகம் சேர்க்கப்பட்டவை.
6. எலுமிச்சை சாறு, வினிகர் ஆகியவற்றை உப்பிற்கு பதில் உபயோகிக்கலாம்.

பொட்டாசியம்

சிறுநீரக வியாதி உள்ளவர்களுக்கான உணவு முறைகள் Diet11
சிறுநீரக வியாதி உள்ளவர்களுக்கான உணவு முறைகள் Diet12

நம் இரத்ததில் உள்ள பொட்டாசியம் என்ற இரசாயனம் நம் நரம்புகளுக்கு தசைகளுக்கும் ஒரு தூதுவன் போல செயல்படுகின்றது இதன் அளவு இரத்தத்தில் குறைந்தாலோ அல்லது அதிகமானாலோ தசைகள் முக்கியமாக இதயம் அதன் துடிப்பையே நிறுத்தி விடக்கூடும். சாதாராணமாக நம் உணவில் உள்ள பொட்டாசியத்தை தேவையான அளவு வைத்துக் கொண்டு மீதியை வெளியேற்றுவது ஆரோக்யமான சிறுநீரகத்தின் வேலை. உங்களுக்கு சிறுநீரக செயலிழப்பு இருக்குமானால் அதிகமான பொட்டாசியத்தை வெளியேற்ற முடியாமல் இரத்தத்தில் அதன் அளவு அதிகமாகி இதயத் துடிப்பை அது பாதித்து விடலாம்.
உங்கள் மாதாந்திர இரத்த பரிசோதனைகளில் பொட்டாசியத்தின் அளவு பார்க்கப்படும். அதிகமாக இருந்தால் அதற்குறிய மருத்துவம் மட்டுமின்றி உணவில் பொட்டாசியத்தின் அளவையும் கட்டுப்படுத்துவது அவசியம் உங்கள் உணவியல் நிபுணர் இதற்கு தகுந்த அறிவுறை வழங்குவார். பொதுவாக பொட்டாசியம் அதிகமாக உள்ள உணவுகள் பழங்கள், பழச் சாறுகள், இளநீர், காய்கறிகள், கீரைகள், இன்ஸ்டன்ட் காபி, சாக்லேட் போன்றவை.

சிறுநீரக செயலிழப்பினால் டயாசிலிஸ் செய்து கொண்டிருப்பவரனால் உங்களுடைய தினசரி பொட்டாசியத்தின் அளவு 2,000-3,000 மி.கி வரை பொதுவாக இருக்கும். இரத்தத்தில் பொட்டாசியத்தின் அளவு 5.5 MeQ - புள்ளிகளை விட அதிகம்இருந்தால் உணவில் பொட்டாசியத்தின் அளவை இன்னும் குறைக்க வேண்டி இருக்கும்.

பெட்டாசியம் உப்பு குறைக்கப்பட்ட உணவுத்திட்டம் தவிர்க்க வேண்டிய உணவுப்பொருட்கள்

பழங்கள், பழச்சாறுகள், பதப்படுத்தப்படுத்தப்பட்ட பழச்சாறு குளிர்பானங்கள் இளநீர், ஹார்லிக்ஸ், பொர்ன்விட்டா, காம்பளான், பூஸ்ட் போன்ற ஆரோக்யா பானங்கள் ஜாம், ஜெல்லி, சாஸ் போன்றவை உலர்ந்த பழங்கள் (திராட்சை, அத்திப்பழம், பேரீச்சம்பழம் போன்றவை) கொட்டை வகைகள் (முந்திரி, பாதாம், பிஸ்தா போன்றவை) புதினா, வெங்காய மற்றும் தேங்காய் சட்னி, பச்சை காய்கறிகள் மற்றும் சாலட்டுகள், சாக்லேட், கோகோ சிக்கரி (இன்ஸ்டன்ட் காபி) கலந்த உணவுப் பொருட்கள் சாஸ் மற்றும் டின்னில் அடைத்து விற்கற்படும் பதப்படுத்தப்பட்ட உணவுகள்.

குறிப்பு -1 ஆப்பிள், அன்னாசி, கொய்யா, பப்பாளி மற்றும் பேரிக்காய் ஆகிய பழங்கள் மட்டும் அனுமதிக்கப்பட்ட அளவு சிலருக்கு மட்டும் (அதிக பட்ச அளவு 100கி) வாரம் 2-3 முறை உண்ணலாம். காய்கறிகளை தோல்சீவி அதிக தண்ணீரில் நன்கு வேக வைத்து தண்ணீரை வடித்து மீண்டும் சமைத்து உண்ணவும்.
குறிப்பு - 2 காய்கறி, கீரைகள் அவற்றின் பொட்டாசியம் அளவை பொருத்து 3 குழுமங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. முதல் குழுமத்தில் உள்ளவற்றை 1-2 கப் தினமும் பயன்படுத்தலாம். 2ஆம் மற்றும் 3ஆம் குழும காய்கறிகளை பொட்டாசியம் நீக்கிய பிறகே குறைவாக பயன்படுத்த வேண்டும்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சிறுநீரக வியாதி உள்ளவர்களுக்கான உணவு முறைகள் Empty Re: சிறுநீரக வியாதி உள்ளவர்களுக்கான உணவு முறைகள்

Post by *சம்ஸ் Sun 13 Feb 2011 - 20:13

சிறுநீரக வியாதி உள்ளவர்களுக்கான உணவு முறைகள் 2222210

பாஸ்பரஸ் (பாஸ்பேட்)

பாஸ்பேட் என்கின்ற இரசாயனம் நம் எலும்புகளில் கால்சியம் (சுண்ணாம்பு சத்து) சத்துக்கு அடுத்தபடி அதிகமாக உள்ளது. நம் உடலின் பல்வேறு திசுக்கள் சக்தியை உபயோகிக்க பாஸ்பேட் ஒரு வழியாக செயல்படுகின்றது, மேலும் கால்சியத்துடன் சேர்ந்து எலும்புகள், பற்களை உறுதியாக வைத்திருக்கின்றது. நம் இரத்தத்தில் உள்ள பாஸ்பேட்டின் அளவையும் உடலில் மொத்த பாஸ்பேட்டின் அளவையும் சிறுநீரகங்கள்தான் நிர்ணயிக்கின்றன. சிறுநீரக செயலிழப்பில் உபரியாக உள்ள பாஸ்பேட் வெளியேற முடியாமல் இரத்தத்தில் பாஸ்பேட்டின் அளவு அதிகரிக்கின்றது . அதிக பாஸ்பேட் தோலில் படிந்து அதிக நமைச்சலையும், எலும்புகளில் படிந்து அவைகளை வலுவிழக்கவும் செய்கின்றது. இரத்தத்தில் அதிக பாஸ்பேட் எலும்புகளிலிருந்து கால்சியத்தை ஈர்த்து அவற்றை மேலும் வலுவிழக்கச் செய்கின்றது. அதிக பாஸ்பேட் கால்சியத்துடன் இணைந்து தோல் , மூட்டுகள், கண்கள் போன்ற பல திசுக்களில் படிந்து பல்வேறு உபாதைகளை உண்டாக்கலாம்.

இரத்தத்தில் கால்சியம், பாஸ்பேட் இவைகளின் அளவு மாறுபடும்போது அவை பாராதைராயிட் என்ற சுரப்பியிலிருந்து வெளிப்படும் பாராதார்மோன் என்ற ஹார்மோனின் அளவை அதிகரித்து அதனால் எலும்புகளிலிருந்து மேலும் கால்சியம் உறிஞ்சப்பட்டு மென்மேலும் எலும்புகள் பலவீனமைடையக் கூடும். இதனால் எலும்புகளில் வலி, எளிதில் எலும்புகள் உடைதல் ஆகியன நேரிடலாம்.

இந்த விளைவுகளை தவிர்க்க இரத்தத்தில் கால்சியம் மற்றும் பாஸ்பேட்டின் அளவை சரியான அளவு வைத்திருக்க வேண்டியது அவசியம். உங்கள் இரத்தத்தில் கீழ்க்கண்ட அளவுகள் இருக்க வேண்டியது அவசியம்.

கால்சியம் - 8.5-10.5மி.கி., பாஸ்பேட் - 3.5-5.5 மி.கி., பாராதார்மோன் 100-300pg/ml நீங்கள் உங்கள் இரத்தத்தில் பாஸ்பேட்டின் அளவை எப்படி சரியான அளவு வைத்திருப்பது?
சிறுநீரக வியாதி உள்ளவர்களுக்கான உணவு முறைகள் Diet13
இதற்குஇரண்டு வழிகள் உள்ளன. உணவிலுள்ள பாஸ்பேட்டை அதனுடன் இணைந்து குடல் கிரகிக்க விடாமல் சில மருந்துகள், (ஹைபோபாஸ், செவால்மிர் போன்றவை) இவற்றை உங்கள் சிறுநீரக மருத்துவர் பரிந்துரைப்பார் இவற்றை உணவுடன் சேர்த்து எடுத்துக் கொள்ள வேண்டும். இரண்டாவது உணவில் பாஸ்பேட்டின் அளவையே கட்டுப்படுத்தவது. பொதுவாக உயர்தர புரதம் உள்ள உணவுகள் (பால், முட்டை, கோழி, மீன் போன்ற அசைய உணவுகள்) பாஸ்பேட் சத்தை குடலிலேயே கட்டி வைக்கும் மேற்கூறிய மருந்துகளை மருத்துவரின் ஆலோசனைப்படி தேவையான அளவு எடுத்துக் கொள்வதால் அவைகளிலுள்ள பாஸ்பேட் உடலிற்குள் கிரகிக்கப்படாமல் தடுக்கப்படுகின்றது.
இதனை மீறி உங்கள் மாதாந்திர இரத்தப் பரிசோதனையில் இரத்தத்தில் பாஸ்பேட் அதிகமாக இருந்தால் நீங்கள் உணவியல் நிபுணரை கலந்து பாஸ்பேட் அதிகம் உள்ள உணவுகளையும் குறைத்துக்கொள்ள வேண்டி இருக்கும்.

விட்டமின்கள்

சிறுநீரக செயலிழப்பு இல்லாமல் மற்ற வகை சிறுநீரக வியாதி மட்டும் உங்களுக்கு இருந்தால் உங்களுக்கு விட்டமின் சத்துக்கள் என்று கூடுதலாக வேண்டியதில்லை. ஆனால் சிறுநீரக செயலிழப்பு இருந்தால் உங்களுக்கு பிரத்யேகமாக சில விட்டமின்கள் தேவைகள் வேண்டி வரும் மற்றவர்கள் எடுத்துக் கொள்ளும் பொதுவான விட்டமின் மாத்திரைகள் உங்களுக்கு பொருந்தாது மேலும் உங்களுக்கு உண்டான பல்வேறு உணவுக் கட்டுப்படுகளால் உங்களுக்கு தேவையான விட்டமின்கள் உணவிலிருந்தே கிடைப்பது கடினம். எனவே சிறுநீரக மருத்துவர் உங்களுக்கு பிரத்யேக விட்டமின் மாத்திரைகளை பரிந்துரைப்பார் அவைகளை மட்டுமே நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். அதேபோல மூலிகைகள் கலந்த விட்டமின் மாத்திரைகளும் நேராக மருந்து கடைகளில் வாங்கி சாப்பிடுவதும் கண்டிப்பாகக் கூடாது . பொதுவாக சிறுநீரக மருந்து செயலிழப்பு உள்ளவர்களுக்கும் டயாலிசிஸ் செய்பவர்களுக்கும் கீழ்க்கண்ட விட்டமின்கள் மட்டுமே தேவைப்படும் விட்டமின்
B1-1.-5மி.லி, B2-1.2-1.5மி.லி, B 6-10மி.கி, B 9-0.8-1.0மி.கி B 12-0.002 மி.கி, C-60மி.கி.

பயோட்டின் -0.03-01 மி.கி. கீழ்க்கண்ட விட்டமின்கள் மிக எளிதில் உணவிலிருந்தே கிடைப்பது மட்டுமல்லாமல் சிறுநீரக செயலிழப்பில் அதிக அளவு உடலில் சேமித்து வைக்கபடுகின்றன. எனவே இவைகளை நீங்கள் எடுத்துக் கொள்ளக்கூடாது. விட்டமின் A,K,E ஆகியன. விட்டமின் D சிறுநீரக செயலிழப்பில் ஒவ்வொருவருக்கும் வேறுபடும். விட்டமின் C 60மி.கி.க்கு மேல் தினம் எடுத்தால் அது ஆக்சலேட் எனப்படும். உப்பாக மாறி மூட்டுகளிலும், எலும்புகளிலும் படிந்து வலி உண்டாக்கும்.

சிறுநீரக செயலிழப்பு உள்ளவர்களுக்கு என்று தனியாக வடிவமைக்கப்பட்ட விட்டமின் மாத்திரைகளில் மேற்கூறிய விஷயங்கள் கணக்கிலெடுக்கப்பட்டு தயாரிக்கப்படுகின்றன. சிறுநீரக மருத்துவரின் ஆலோசனைப்படி அவைகளை மட்டுமே நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சிறுநீரக வியாதி உள்ளவர்களுக்கான உணவு முறைகள் Empty Re: சிறுநீரக வியாதி உள்ளவர்களுக்கான உணவு முறைகள்

Post by *சம்ஸ் Sun 13 Feb 2011 - 20:16

தண்ணீர் / திரவங்கள் - உங்கள் தண்ணீரில் நீங்களே மூழ்கி விடாதீர்கள்
சிறுநீரக வியாதி உள்ளவர்களுக்கான உணவு முறைகள் Diet14
பெரும்பாலான சிறுநீரக வியாதிகளிலும் சிறுநீரக செயலிழப்பிலும் உங்கள் சிறுநீரகங்களால் நீங்கள் தினமும் பருகும் தண்ணீர்/திரவங்கள், உணவிலிருந்து கிடைக்கும் திரவங்கள் ஆகியவற்றை தேவைக்கேற்றபடி வெளியேற்ற முடிவதில்லை. இதனால் உபரியாக உடலில் தண்ணீர் சேர்ந்து கை, கால், முகம் வீக்கம், உடல் எடை கூடுதல் என நேர்கின்றது. மேலும் தலை வலி, சக்தியின்மை, நுரையீரல்களில் நீர் சேர்வதால் மூச்சுத் திணறல் இதயத்திற்கு அதிக வேலைப்பழு, அதனால் இதயச் செயலிழப்பு உயர் இரத்த அழுத்தம் ஆகியன வரலாம். நீங்கள் எவ்வளவு சிறுநீர் கழிக்கின்றீர்கள் எந்த வகை டயாலிசிஸ் சிகிச்சை செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பதை பொறுத்து உங்களுக்கு எவ்வளவு தண்ணீர் குடிக்கலாம் என்று வரையருக்கப்பட்டிருக்கும்.
மேலும் உணவில் உப்பை குறைப்பதன் மூலம் தாகத்தைக் கட்டுப்படுத்தி நீங்கள் குடிக்கும் தண்ணீரின் அளவை குறைத்துக் கொள்வது எளிதாக இருக்கும்.

என் உடலில் உபரி நீர் சேர்வதை எப்படி நான் அறிந்து கொள்வது?

நீங்கள் தினமும் எடை பார்த்தால் திடீரென எடை கூடும் முதலில் பாதம் கணுக்கால் இவைகளில் விரல் கொண்டு அழுத்தினால் குழி விழும், ஜாக்கெட், மோதிரம் டைட்டாகி விடும். கண்பார்வையில் மாற்றம் உண்டாகலாம். சிறுநீரக செயலிழப்பின் ஆரம்பக் கட்டத்தில் நீர் மாத்திரைகள் எனப்படும் மாத்திரைகள் எடுத்துக் கொள்வதால் சிறுநீரின் அளவை அதிகரித்து உபரி நீரை வெளியேற்றலாம். ஆனால் முன்னேறிய சிறுநீரக செயலிழப்பில் இந்த மருந்துகள் வேலை செய்வதில்லை. அல்லாமலும் குடிக்கும் நீரின் அளவைக் கட்டுப்படுத்தி மாத்திரைகள் குறைவாக உபயோகிப்பதே எப்போதும் நல்லது.

கிட்னி ஃபெயில்யர் (சிறுநீரக செயலிழப்பு) நோயாளிகளுக்கும் (டயாலிசிஸ்) செய்து கொண்டிருப்பவர்களுக்கு குடிக்கும் தண்ணீரின் அளவை கட்டுபடுத்த உதவியான சல குறிப்புகள்

1. குறிப்பிட்ட நேரங்களில் தண்ணீர் குடிப்பது என்ற வழக்கமிருப்பவர்கள் அதை விட்டு விட வேண்டும். உங்களுக்கு கொடுக்கப்பட்ட தண்ணீரின் அளவை ஊட்டச்சத்து மிக்க பால், சூப், பாயாசம் போன்ற திரவங்களாக குடிக்க முயற்சி செய்யுங்கள், டீ, காபி, குளிர் பானங்கள் இவற்றை தவிர்த்து விடுங்கள்.
2. தாகமான சமயத்தில் கடினமான மிட்டாய்கள் (உதா: அரஞ்சு மிட்டாய்) வாயில் போட்டு சூப்பவோ, அல்லது சூயிங்கம் போட்டு மெல்லவோ செய்யலாம். எலுமிச்சம் பழத்தை வெட்டி சப்பிக் கொண்டு இருக்கலாம்.
3. நல்ல குளிர்ந்த நீரை ஃப்ரிட்ஜில் வைத்திருந்து தாகமான சமயத்தில் வாயில் இட்டு கொப்புளித்து துப்பி விட வேண்டும். விழுங்கக்கூடாது.
4. மாத்திரை, மருந்துகளை சாப்பிடும் நேரத்தில் நீரின்றி அல்லது குறைந்த நீரில் விழுங்க முயற்சிக்கவும்.
5. எடை பார்க்கும் மெசின் வீட்டில் இருந்தால் தினமும் காலையும் மாலையும் எடை பார்க்கவும் உங்கள் எடை தினமும் ½ கிலோவிற்கு மேல் ஏறாமல் நீரின் அளவை குறைத்துக் கொள்ள இது உதவும்.
6. உங்களுக்கு ஒதுக்கப்பட்ட தண்ணீரின் அளவை காலையில் தனியே எடுத்து முடிந்தால் ஃப்ரிட்ஜினுள் வைத்துக் கொண்டு அதிலிருந்து மட்டுமே அருந்துங்கள். குளிர்ந்த நீர் சூடான நீரை விட நன்கு தாகத்தை தணிக்கும். சூடான உணவு திரவங்களை தவிர்க்கவும்.உடம்பை முடிந்த வரை குளிர்ச்சியாக வைத்து இருக்கவும்.
7. திரவங்களை அருந்தும் போது மிகச் சிறய டம்ளர்களை உபயோசிக்கவும். குடிக்கும் போதும் சிறிது, சிறிதாக உறிஞ்சி குடிக்க வேண்டும். கடகட என்று பெரிய மடக்குகளாக குடிக்க கூடாது.
8. உங்களுக்கு அனுமதிக்கப்பட்ட பழச்சாறுகளை ஐஸ் ட்ரேயில் வைத்து ஐஸ் க்யூப்புகளாக ஆக்கி தாகம் எடுத்தால் இவற்றை உறிஞ்சலாம்.
9. தாகமாக உள்ள போது பட்டர், ஜாம் வைத்த பன், சூயிங் கம் அல்லது ஜெல்லி இவற்றை வாயில் போட்டு மெல்லலாம். பல நேரங்களில் வாய் உலர்ந்தால் உண்டாகும் தாக உணர்ச்சி இதன் மூலம் சரியாகும். உடலுக்கு ஊட்டமும் கிடைக்கும்.
10. முடிந்த வரை ஏதேனும் காரியத்தில் உங்களை ஈடுபடுத்தி சுறுசுறுப்பாக இருக்க முயற்சி செய்யுங்கள். வெறுதே சும்மா உட்கார்ந்திருந்தால் தண்ணீரைப் பற்றியே நினைவு சுற்றிக் கொண்டு நீர் குடிக்க தூண்டும்.
11. நீங்கள் சர்க்கரை வியாதியுள்ளவாரானால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமானால் தாகம் அதிகரிக்கும். மருந்துவரின் உதவியுடன் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.
12. நீங்கள் முக்கியமாக உண்ணும் உணவுகளில் உப்பின் அளவை மருத்துவரின் பரிந்துரைப்பிற்கேற்ப மிகவும் குறைத்துக் கொள்ள வேண்டும். ஊறுகாய், அப்பளம், கருவாடு போன்ற உப்பு மிக அதிகமாக உள்ள உணவுகளை அறவே தவிர்க்க வேண்டும். உடம்பில் சாப்பிடும் உப்பு அதிகமானால் தண்ணீரும் கூடும் இரத்த அழுத்தம் கூடும் இருதயத்திற்கு வேலை அதிகமாகும்.
13. நீங்கள் அதிகமாக தண்ணீர் குடித்து அதிக எடை கூடி டயாலிசிஸ் வந்தால் அந்த அதிகப்படியான தண்ணீரை எடுக்க முற்படும் போது கால் கெண்டைபிடித்தல், வாந்தி, மயக்கம் முதலான தேவையற்ற தொந்தரவுகள் ஏற்படும், மேலும் டயாலிசில் இரத்தத்தை சுத்தப்படுத்தும் பணியும் சரியாக நடக்காது. எனவே இந்த காரணங்களுக்காக குடிக்கும் நீரின் அளவை மருத்துவர் அனுமதித்த அளவுக்குள் கட்டுப்படுத்துதல் டயாலிசிஸ் செய்து கொண்டிருப்பவர்களுக்கு மிக முக்கியமானதாகும்.

நாம் உணவு உண்பது சக்திக்காகவும் உடலை ஆரோக்யமாக பராமரிக்கவும்தான். ஆனால் நாம் உண்ணும் உணவுகள் நமது கலாட்சாரம், தனிப்பட்ட சுவைகள் (விருப்பு, வெறுப்புக்கள்) குடும்பத்தின் உணவுப் பழக்கங்கள், உள்மன ஆரோக்யம், ஒவ்வொருவரின் சுயக்கட்டுப்பாடு ஆகியவற்றை பொறுத்ததாகும்.
மேற்கூறிய ஆலோசனைகளை சிறுநீரக நோயாளியான நீங்கள் எவ்வளவு தூரம் நீங்கள் புரிந்து பின்பற்றி உங்கள் வாழ்க்கை மற்றும் உணவு முறைகளை மாற்றிக் கொண்டு உங்களின் ஆரோக்யத்தை காப்பாற்றிக் கொள்ள தயாராக உள்ளது உங்கள் கையில்தான் உள்ளது. உங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களையும் இவைகளை பின்பற்றுவதிலுள்ள கஷ்டங்களையும் உங்கள் சிறுநீரக மருத்துவரிடம் எப்போதும் கலந்து ஆலோசித்து உதவி பெறுங்கள். பின்வாங்காது முயற்சித்தால் முடியாதது எதுவுமில்லை.

நன்றி தமிழ் கிட்னி


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சிறுநீரக வியாதி உள்ளவர்களுக்கான உணவு முறைகள் Empty Re: சிறுநீரக வியாதி உள்ளவர்களுக்கான உணவு முறைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum