சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Today at 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Today at 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Today at 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 7:42

» தீக்குளியல் & சந்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32

» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30

» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19

» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35

» nisc
by rammalar Yesterday at 16:21

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09

» மருந்து
by rammalar Yesterday at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

தமிழர்கள் அணிந்து வந்த அணிகளின் (நகைகளின் பெயர்):‍ Khan11

தமிழர்கள் அணிந்து வந்த அணிகளின் (நகைகளின் பெயர்):‍

4 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

தமிழர்கள் அணிந்து வந்த அணிகளின் (நகைகளின் பெயர்):‍ Empty தமிழர்கள் அணிந்து வந்த அணிகளின் (நகைகளின் பெயர்):‍

Post by Nisha Mon 2 Jun 2014 - 17:18

தமிழர்கள் அணிந்து வந்த அணிகளின் (நகைகளின் பெயர்):‍
1. தலையணி:
தாழம்பூ, தாமரைப்பூ, சொருகுப்பூ, சாமந்திப் பூ, அடுக்குமல்லிப் பூ, இலை, அரசிலை, பதுமம், சரம், பூரப்பாளை, கோதை, வலம்புரி.

2. காதணி:
தோடு, கொப்பு, ஓலை, குழை, இலை, குவளை, கொந்திளவோலை,
கன்னப்பூ, முருகு, விசிறி முருகு, சின்னப்பூ, வல்லிகை, செவிப்பூ, மடல்.

3. கழுத்தணிகள்:
கொத்து, கொடி, தாலிக்கொடி, கொத்தமல்லிமாலை, மிளகு மாலை,
நெல்லிக்காய் மாலை, மருதங்காய் மாலை, சுண்டைக்காய் மாலை, கடுமணி மாலை, மாங்காய் மாலை, மாதுளங்காய் மாலை, காரைப்பூ அட்டிகை, அரும்புச்சரம், மலர்ச்சரம், கண்டசரம், கண்டமாலை, கோதை மாலை, கோவை.

4. புய அணிகலன்கள்:
கொந்திக்காய்.

5. கை அணிகலன்:
காப்பூ, கொந்திக்காய்ப்பூ, கொலுசு.

6. கைவிரல் அணிகலன்கள்:
சிவந்திப் பூ, மோதிரம், அரும்பு, வட்டப்பூ.

7. கால் அணிகலன்கள்:
மாம்பிஞ்சு கொலுசு, அத்திக்காய் கொலுசு, ஆலங்காய் கொலுசு.

8. கால்விரல் அணிகள்:
கான் மோதிரம், காலாழி, தாழ், செறி, நல்லணி, பாம்பாழி, பில்லணை, பீலி, முஞ்சி, மெட்டி.

9. ஆண்களின் அணிகலன்கள்:
வீரக்கழல், வீரக் கண்டை, சதங்கை, அரையணி, அரைநாண்,
பவள வடம், தொடி, கங்கணம், வீரவளை, கடகம், மோதிரம்,
கொலுசு, காப்பு, பதக்கம், வகுவலயம், கழுத்தணி, வன்னசரம்,
முத்து வடம், கடுக்கண், குண்டலம் ஆகியனவாகும்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

தமிழர்கள் அணிந்து வந்த அணிகளின் (நகைகளின் பெயர்):‍ Empty Re: தமிழர்கள் அணிந்து வந்த அணிகளின் (நகைகளின் பெயர்):‍

Post by Nisha Mon 2 Jun 2014 - 17:22

இயற்கையோடு இணைந்த நமது தமிழர் வாழ்க்கையில் இந்த அணிகலன் எப்படி மருத்துவ ரீதியாகபயன்படுகிறது என்பதனை காண்போம்.

நம்மவர்களின் ஆடை அணிகலன்கள் உடல் ¡£தியாக, மருத்துவம் சம்பந்தப்பட்டது. நம் முன்னோர்கள் பின்பற்றும் சம்பிரதாயச் செயல்களுக்கு எல்லாம் கண்டிப்பாக ஏதாவது ஒரு காரணம் இருக்கும்.

திருமணத்தின் போது மணப்பெண்ணுக்கு மெட்டி அணிவிப்பதை காணலாம். திருமணமான பெண்கள் கால் விரலில் மிஞ்சி அணியவேண்டும் என்பதுகாலங்காலமாய்ப்
பின்பற்றப்படும் தமிழ் மக்களின் சம்பிராதாயச் செயலாகும்.
[பெருவிரலுக்குஅடுத்தவிரலில்இந்தமெட்டிஅணிவிக்கப்படுகிறது.]

ஆனால் நாகரிகம் வளர்ந்து விட்ட இக்காலத்தில் திருமணமான பெண்கள் மிஞ்சி அணிய வெட்கப்படுகின்றனர். திருமணமானதற்கு அடையாளமாய் தாலி இருந்தால் மட்டும் போதும், மிஞ்சி தேவையில்லை என அவர்கள் எண்ணுகிறார்கள்.

அந்த விரலிருந்து ஒரு நரம்பு கர்ப்பபைக்கு செல்கிறது.பெண்களின் கருப்பை நரம்புகளுக்கும் கால் விரல் நரம்புகளுக்கும் ஒருவித தொடர்பு உள்ளது. கால் விரலில் மிஞ்சி அணிவதால் கருப்பையின் நீர்ச் சமநிலை எப்போதும் பாதிப்படைவதில்லை.

பெண்கள் கர்ப்பம் அடையும்போது ஏற்படும் மயக்கம், வாந்தி, சோர்வு, பசியின்மை ஏற்படும். கர்ப்பகாலத்தின் போது இந்த நரம்பினை அழுத்தி தேய்த்தால் மேற்கண்ட நோவுகள் குறையும். இதனை எப்போதும் செய்துக்கொண்டு இருக்க முடியாது
என்பதற்காக வெள்ளியிலான மெட்டி அணிவித்தார்கள்.

காரணம், நடக்கும்போது இயற்கையாகவே அழுத்தி, உராய்த்து நோவைக் குறைக்கிறது. கருப்பை பாதிப்புகள் ஏதும் வரக்கூடாது என்பதால்தான் காலில் மிஞ்சி அணியும் பழக்கத்தை நம் முன்னோர்கள் உருவாக்கியிருக்கின்றார்கள்

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

தமிழர்கள் அணிந்து வந்த அணிகளின் (நகைகளின் பெயர்):‍ Empty Re: தமிழர்கள் அணிந்து வந்த அணிகளின் (நகைகளின் பெயர்):‍

Post by Nisha Mon 2 Jun 2014 - 17:24

கொலுசு
பொதுவாக, உடல் ரிதிராக ஆண்களைவிட பெண்களுக்கு உணர்ச்சி அதிகம். அந்த உணர்ச்சி ஆண்களை விட மிஞ்சி விடக்கூடாது என்பதற்குதான் இந்த கொலுசு.

உணர்ச்சிகள் பெருவிரலிருந்து தொடங்கி குதிக்கால் பின் நரம்பு வழியாக உச்சம் தலைக்கு ஏறுகிறது. வெள்ளிக் கொலுசு குதிக்கால் நரம்பினை உரச, உரச உணர்ச்சிகள் குறைந்து கட்டுப்படுகிறது.

[சில விவாகரமான விஷயங்கள் *இலை மறை கனியாக* இருக்க வேண்டும் என்பதற்காக இப்படி மறைவாக வைத்தனர் நமது முன்னோர்கள்]

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

தமிழர்கள் அணிந்து வந்த அணிகளின் (நகைகளின் பெயர்):‍ Empty Re: தமிழர்கள் அணிந்து வந்த அணிகளின் (நகைகளின் பெயர்):‍

Post by Nisha Mon 2 Jun 2014 - 17:25

அரைநாண்க் கொடி[அரணாக்கொடி]

உடலுக்கு நடுப் பகுதி இடுப்பு. மேலிருந்து கீழாக, கீழ்லிருந்து மேலாக ஒடும் இரத்தம் இடுப்புக்கு வரும்போது [+ / -- ] சம நிலைக்கு
கொண்டு வர இந்த அரைநாண்க்கொடி உதவுகிறது.

மகாபாரத்தில் திருடாஸ்தரன் தன் மகன் துரியோதனன் போருக்கு போகுமுன் தலையிருந்து தொட்டு சீர்வாதம் செய்து, வழங்கி வரும்போது இடுப்புக்கு வந்தவுடன் துரியோதனன் கட்டியிருந்த அரைநாண்க்கொடியால் இடுப்புக்கு கீழ் சீர்வாதம் வழங்க முடியவில்லை. பின் துரியோதனன் தொடை பிளந்து இறந்த கதை எல்லோரும் அறிந்ததே. இந்த அரைநாண்க்கொடி உடல் பாதுகாப்புக்கும் பயன்படுகிறது.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

தமிழர்கள் அணிந்து வந்த அணிகளின் (நகைகளின் பெயர்):‍ Empty Re: தமிழர்கள் அணிந்து வந்த அணிகளின் (நகைகளின் பெயர்):‍

Post by Nisha Mon 2 Jun 2014 - 17:30

மூக்கு குத்துவது, காது குத்துவது [துளையிடுவது] உடலில் உள்ள வாயுவை [காற்றை] வெளியேற்றுவதற்கு. [ release ]

கைரேகை, ஜோசியம் பார்ப்பவர்கள் ஆண்களுக்கு வலது கையும் பெண்களுக்கு இடதுகையும் பார்த்து பலன் கூறுவது வழக்கம். ஆண்களுக்கு வலப் புறமும் பெண்களுக்கு இடப் புறமும் பலமான, வலுவான பகுதிகளாகும்.

ஞானிகளும் ரிஷிகளும் தியானம் செய்துபோது வலது காலை மடக்கி இடது தொடை மீது போட்டு தியானம் செய்வார்கள். இதற்கு காரணம் இடது காலை மடக்கி தியானம் செய்யும் போது வலது பக்கமாக சுவாசம் போகும். வலது என்றால் தமிழில் வெற்றி என்று பொருள். வலது பக்கமாக சுவாசம் செல்லும்போது தியானம்,
பிராத்தனை எல்லாம் கண்டிப்பாக பலன் தரும்.

அதனால் இந்த நாடியை அடக்குவதாக இருந்தால் வலது பக்க சுவாசத்திற்கு மாற்றவேண்டும். அதே மாதிரி ஒரு அமைப்புத்தான் மூக்குத்தி.

நமது மூளைப் பக்கத்தில் ஹிப்போதெலமஸ் என்ற பகுதி இருக்கிறது. நரம்பு மண்டலங்களை கட்டுப்படுத்தக் கூடிய, செயல்படக் கூடிய அளவு சில பகுதிகள் உள்ளன.
அந்தப் பகுதியில் சில உணர்ச்சி பிரவாகங்கள் உள்ளன. இதனைச் செயல்படுத்துவதற்கு
அந்தப் பகுதி துணையாக இருக்கிறது. இப்படி இந்தப் பகுதியை அதிகமாக செயல் படுத்துவதற்கும் பெண்ணின் மூக்கில் இடது பக்கத்தில் குத்தக்கூடிய முக்குத்தி வலது பக்க மூளையை நன்றாக செயல் படவைக்கும்.

இடது பக்கத்தில் முளை அடைப்பு என்றால் வலது பக்கத்தில் நன்கு வேலை செய்யும். வலது பக்கம் அடைத்தால் இடது பக்கம் உள்ள மூளை அதிகமாக இயங்கும்.

இன்றைய நம்முடைய மனித வாழ்க்கைக்கு அதிகமாக இந்த இடது பக்க மூளையை அடைத்துவலது பக்கமாக வேலை செய்ய வைக்கிறோம். அதனால் வலது கை, வலது கால் எல்லாமே பலமாக உள்ளது.

பெண்கள் முக்குத்தி அணியும்போது, முன் நெற்றிப் பகுதியில் இருந்து ஆலம் விழுதுகள் போல்சில நரம்புகள் நாசி துவாரத்தில் இறங்கி கீழே வரும். இப்படி விழுதுகள் மூக்குப் பகுதியிலும், ஜவ்வு போல மெல்லிய துவாரங்களாக இருக்கும்.

ஆலம் விழுதுகள் போல உள்ள மூக்குப் பகுதியில் ஒரு துவாரத்தை ஏற்படுத்தி அந்த துவாரத்தில் தங்க முக்குத்தி அணிந்தால், அந்த தங்கம் உடலில் உள்ள வெட்பத்தை கிரகித்து தன்னுள்ளே ஈர்த்து வைத்துக் கொள்ளும் சக்தியைப் பெறும். அதுமட்டுமல்ல, மூக்கின் மடல் பகுதியில் ஒரு துவாரம் ஏற்பட்டால் அதன் மூலம் நரம்பு மண்டலத்தில் உள்ள கெட்ட வாயு அகலும்.

சிறுமிகளுக்கு மூக்குத்தி அணிவிப்பது கிடையாது. பருவப் பெண்களுகே முக்குத்தி அணிவிக்கப்ப்டுகிறது. பருவ வயதை அடைந்த பெண்களுக்கு கபாலப் பகுதியில் அதாவது, தலைப்பகுதியில் சிலவிதமான வாயுக்கள் இருக்கும்.

இந்த வாயுக்களை வெளிக்கொண்ருவதற்கு ஏற்படுத்தட்டதுதான் இந்த மூக்கு குத்துவது. மூக்கு குத்துவதால் பெண்களுக்கு ஏற்படக்கூடிய சளி, ஒற்றைத் தலைவலி, மூக்கு சம்பந்தமான தொந்தரவுகள், பார்வைக் கோளாறு சரி செய்யப்படுகின்றன்.
இன்றைக்கு நாகரிகம் வளர்ந்து விட்டதால் சில பெண்கள் வலதுப் பக்கம் மூக்குத்தி அணிகிறார்கள். ஆனால், சாஸ்திர ரீதியாக இடப்பக்கம்தான் பெண்கள் மூக்குத்தி அணியவேண்டும். இடது பக்கம் குத்துவதால் சில மாற்றங்கள் ஏற்படும். சிந்தனா
சக்தியை ஒரு நிலைப்படுத்துகிறது. மனதை அமைதிப்படுத்துகிறது. தியானம், பிராத்தனையில் ஈடுபட உதவுகிறது.

ஒற்றைத்தலைவலி, நரம்பு சம்பந்தமான நோய்கள், மனத்தடுமாற்றம் ஏற்படாமல் இருக்க முக்குத்தி உதவுகிறது என்று ஞானிகளும் ரிஷிகளும் கூறியிருக்கின்றனர்.

உடலிலுள்ள வெப்பத்தைக் கிரகித்து நீண்ட நேரம் தன்னுள்ளே வைத்திருக்கூடிய ஆற்றல் தங்கத்துக்கு இருக்கிறது. தங்க நகைகளைப் பெண்கள் அணிவதன் மூலம் உடலில் ஏற்படும் அதிக வெப்பம் உணர்ச்சியாக மாறுவதிலிருந்து தடைப்பட்டுபோகும். அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு, ஆகிய நால்வகைப் பண்புகள் உடையவர்களாகத் திகழ முடியும்.

தங்க நகைகள் அணிவதால் உணர்ச்சிப் பிரவாகம் தடைப்பட்டு பெண்களின் உடல் வெப்பம் சம நிலையடைகிறது. இதனால் அவர்களது வாழ்க்கை தர்ம நெறிகளுக்கு உட்பட்டு சீராக அமையும்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

தமிழர்கள் அணிந்து வந்த அணிகளின் (நகைகளின் பெயர்):‍ Empty Re: தமிழர்கள் அணிந்து வந்த அணிகளின் (நகைகளின் பெயர்):‍

Post by Nisha Mon 2 Jun 2014 - 17:33

தஞ்சை இராஜராஜீசுவரம் கோவிலின் சுவர்களில் உள்ள கல் வெட்டிகளின் வழியே அக்காலத்தில் பெண்டிரும் ஆண் மக்களும் அணிகலன்கள் பூணுவதில் இப்போது போல் அப்போது மிகவும் ஆர்வம் கொண்டிருந்ததை அறிந்து கொள்ள முடிகிறது. அவர்கள் அப்போது அணிந்து மகிழ்ந்த நகைகளின் மாதிரியில் தானே கோவிலுக்கு அணிகலன்களை அளித்திருக்க முடியும்? அதனால் கல் வெட்டுகளில் காணப்படும் நகைகள் அந்த நாள் நடைமுறைப் பாணியில் இருந்தவை எனக் கொள்ளலாம்.

கல்வெட்டுகளின் படி அப்போது பயன்பாட்டில் இருந்து கோவிலுக்கு அளிக்கப்பட்ட சில
நகைகளின் பெயர்கள் :--

ஏகவல்லி [கழுத்து அணி - ஒற்றைச் சரமாலை]
காறை [கழுத்து அணி ]
கச்சோலம் [ இடை அணி]
கலாவம் [இடை அணி]
காந்த நாண் புள்ளிகை [கழுத்து அணி]
மோதிரம் [இரத்தினம் முத்து ]
முத்து மாத்திரை [காது அணி]
பஞ்சசாரி [ஐந்து சங்கிலி கொண்டது ]
பதக்கம்.

என்கிறது கல்வெட்டில் எழுதப்பட்டுள்ள பேரரசர் இராஜ ராஜனின் ஆணை. இதில் சிறப்பு என்ன வெனில் ஒவ்வொரு அணிகலனின் முழுவிபரமும் குறிக்கப்பட்டுள்ளது. நகையின் எடை, அது செய்யப்பட்ட தன்மை,
அதில் பொருந்திருக்கும் முத்து,பவளம், வைரம் போன்றவற்றின் விபரம், அதன் மாதிரி ஆகிய எல்லாம் மிகத் துல்லியமாக எழுதப்பட்டிருகின்றன.

எடுத்துக்காட்டாக பேரரசர் இராஜராஜன், ஒரு தெய்வத்திற்கு 16 தங்க வளையல்களை அளித்திருந்தார். அவை ஒவ்வொன்றின் எடை ஐந்து கழஞ்சி ஆறு மஞ்சடி. ஒவ்வொரு வளையலிலும் ஏறத்தாழ 316 முத்துக்கள் கோர்க்கப்பட்டிருந்தன அவற்றின் எடை 155 கல்.

இந்த பதினாறு வளையல்களின் மொத்த மதிப்பு 403 காசுகள். பேரரசரின் பட்டத்து அரசி லோக மகாதேவி 13 வகை நகைகள் அளித்திருந்தார். அவற்றில் 471 முத்துக்களும் 20 பவளங்களும் இருந்தன. பேரரசர் மாத்திரம் கொடுத்திருந்த நகைகள் 42,000 கழஞ்சுப் பொன்.

அணிகலன்களில் பயன்படுத்தப்பட்ட தங்கம், முத்து போன்றவை எப்படி எடை போடப்பட்டனஎன்ற செய்திகளும் தரப்பட்டுள்ளன. சோழர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட
''குடிஞைக்கல்'' முறையில் ''ஆடவல்லான் மேரு விடங்கன் '' என்ற பெயர் கொண்ட கல்லாலும் எடை போடப்பட்டன. அணிகலன்களை நிறுக்கும்போது, நகைகளின் சரடு, சட்டம், செப்பாணி, அரக்கு ஆகியவையும் நகைகளின் பகுதிகளாகவே கொண்டு எடை போடப்பட்டன என்கின்றன கல்வெட்டுகள். தங்கத்தின் மாற்று
அளவிடப்பட்டது பற்றிய சுவையான செய்தியும் காணப்படுகிறது. பேரரசர் அளித்த பொன் நகையில் தரத்திற்கு கால் மாற்று குறைவாகவே இருந்ததாம்.

தண்டவாணிக்கு கால் கால் காந்திகை ( கழுத்து அணி)
கடகம்,கொப்பு ( காதணி)
மகுடம், குதம்பை ( காதணி)
பட்டம் (மகுடம்)
பட்டக் காறை ( தாலியை கோர்க்கும் பூண் நூல்)
சப்தசரி ( ஏழு சங்கிலிகள்)
சிடுக்கு, சூடகம் (வளையல்)
பாத சாயலம் ( கால் அணி)
சூரி சுட்டி (நெற்றியில் அணிவது)
வீரப்பட்டம் (தலையில் அணிவது)
வாளி (காதணி)
காறை கம்பி (காதணி)
திருகு, மகரம் (காதணி)
உருட்டு திரிசரம் ( கழுத்து அணி)
தூக்கம் (காதணி)
நயனம் (கண்மூடி)
பொற்பூ,பொட்டு.
பாசமாலை
தோள் வளை
தாலி
தாலி மணிவடம்
தாழ்வடம்
தகடு
திரள்மணி வடம்
வளையல்
வடுக வாளி
வடம்
தோடு
திருவடிக்காறை
கால் வடம்
கால் மோதிரம்
சன்ன வடம் திருகு
கால் காறை
கைக் காறை மாலை

பயன் படுத்தப்பட்ட முத்துக்களில் 23 வகையும் இரத்தினங்களில் 11 வகையும், வைரங்களில் 11 இருந்தன என்று தெரிகிறது. சில நகைளின் பயன்பாடு இப்போது வழக்கில் இல்லாது போய்விட்டது.

இப்படி மிகுந்த இறை உணர்வுடனும் கலைச் சிந்தையுடனும் உருவாக்கப்பட்ட படிமங்களும் அவற்றிற்கு அணிவித்து அழகு பார்க்க அளிக்கப்பட்ட அணிகலன்களும் உலகின் எந்தக் கோடியில் உள்ளனவா... தெரியவில்லை
.
http://vallipuram-temple.blogspot.ch/20 ... chive.html

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

தமிழர்கள் அணிந்து வந்த அணிகளின் (நகைகளின் பெயர்):‍ Empty Re: தமிழர்கள் அணிந்து வந்த அணிகளின் (நகைகளின் பெயர்):‍

Post by ahmad78 Tue 3 Jun 2014 - 13:17

தகவல்களுக்கு நன்றி

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

தமிழர்கள் அணிந்து வந்த அணிகளின் (நகைகளின் பெயர்):‍ Empty Re: தமிழர்கள் அணிந்து வந்த அணிகளின் (நகைகளின் பெயர்):‍

Post by Nisha Tue 3 Jun 2014 - 13:31

ahmad78 wrote:தகவல்களுக்கு நன்றி

இன்று முதல் உங்கள் பெயர் தகவலுக்கு நன்றி என்றழைக்கபடும் சார்..

மேலே அத்தனை நகைகளில் பெயர் பட்டியலில் போட்டிருக்கின்றதே.. அதில் எது எங்களுக்கு கிப்டாக் வாங்கித்தருவிங்கன்னு சொல்லுங்க?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

தமிழர்கள் அணிந்து வந்த அணிகளின் (நகைகளின் பெயர்):‍ Empty Re: தமிழர்கள் அணிந்து வந்த அணிகளின் (நகைகளின் பெயர்):‍

Post by ahmad78 Tue 3 Jun 2014 - 13:43

எது வேணும்னு கேளுங்க

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

தமிழர்கள் அணிந்து வந்த அணிகளின் (நகைகளின் பெயர்):‍ Empty Re: தமிழர்கள் அணிந்து வந்த அணிகளின் (நகைகளின் பெயர்):‍

Post by Nisha Tue 3 Jun 2014 - 13:48

ஹலோ சார்.. கவனமாக கேட்க சொல்லணும். எது வேண்டும்னு கேட்டால் ஒன்றும் வேண்டாம்னு சொல்லிருவோம் தப்பிச்சிரலாம்னு நினைச்சிங்களா _* 

எல்லாவகையிலும் ஒவ்வொன்றாய் வாங்கி கொடுங்கன்னு சொன்னால் என்ன தான் செய்விங்க..  :dance: 

நட்பு திரியில் மனம் திறப்போம் அகம் நிறைவோமில் இருக்கும் கேள்விகளுக்கு உங்கள் பதில் எதிர்பார்க்கின்றேன் சார்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

தமிழர்கள் அணிந்து வந்த அணிகளின் (நகைகளின் பெயர்):‍ Empty Re: தமிழர்கள் அணிந்து வந்த அணிகளின் (நகைகளின் பெயர்):‍

Post by ahmad78 Tue 3 Jun 2014 - 13:52

வெள்ளிக்கிழமைக்குள் பதில் தந்துருவேன்.

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

தமிழர்கள் அணிந்து வந்த அணிகளின் (நகைகளின் பெயர்):‍ Empty Re: தமிழர்கள் அணிந்து வந்த அணிகளின் (நகைகளின் பெயர்):‍

Post by Nisha Tue 3 Jun 2014 - 13:56

பதில் வெள்ளிக்கிழமைக்குள்

நகை எப்போதான் கிடைக்குமாம்? முன்னாடி கேட்ட கேள்வியை விட்டு பின்னாடி கேட்ட கேள்விக்கு பதில் சொல்லி தப்பிக்க பார்க்கிறிங்களோ?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

தமிழர்கள் அணிந்து வந்த அணிகளின் (நகைகளின் பெயர்):‍ Empty Re: தமிழர்கள் அணிந்து வந்த அணிகளின் (நகைகளின் பெயர்):‍

Post by ahmad78 Tue 3 Jun 2014 - 14:03

ஊருக்கு வாங்க வாங்கித்தந்திர்றேன்.

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

தமிழர்கள் அணிந்து வந்த அணிகளின் (நகைகளின் பெயர்):‍ Empty Re: தமிழர்கள் அணிந்து வந்த அணிகளின் (நகைகளின் பெயர்):‍

Post by Nisha Tue 3 Jun 2014 - 14:13

பானு நண்பன் , ஹாசிம் எல்லோரும் சாட்சிகையெழுத்து போடுங்க.. நம்ம முஹைதீன் சொன்ன சொல் மாற மாட்டார் தானே!

உங்களுக்கு நிஷாவைத்தெரியாது.. தெரியாமல் வாக்கு தந்திட்டிங்க.. மாட்டிக்கிட்டீர்கள் சார்!

ஜஸ்ட் ஒரு கிராம் தங்கமாச்சும் உங்ககிட்ட இருந்து கிப்டாக வாங்காமல் சென்னையை விட்டு புறப்படுவதில்லை எனும் சபதமெடுத்து புறப்பட தயாராகுகின்றேன்!

டன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

தமிழர்கள் அணிந்து வந்த அணிகளின் (நகைகளின் பெயர்):‍ Empty Re: தமிழர்கள் அணிந்து வந்த அணிகளின் (நகைகளின் பெயர்):‍

Post by ahmad78 Tue 3 Jun 2014 - 14:17

அப்படியாவது புறப்பட்டு வாங்க.

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

தமிழர்கள் அணிந்து வந்த அணிகளின் (நகைகளின் பெயர்):‍ Empty Re: தமிழர்கள் அணிந்து வந்த அணிகளின் (நகைகளின் பெயர்):‍

Post by பானுஷபானா Tue 3 Jun 2014 - 14:22

Nisha wrote:பானு நண்பன் , ஹாசிம் எல்லோரும் சாட்சிகையெழுத்து போடுங்க.. நம்ம முஹைதீன்  சொன்ன சொல் மாற மாட்டார் தானே!

உங்களுக்கு நிஷாவைத்தெரியாது.. தெரியாமல் வாக்கு தந்திட்டிங்க.. மாட்டிக்கிட்டீர்கள் சார்!

ஜஸ்ட் ஒரு கிராம் தங்கமாச்சும் உங்ககிட்ட இருந்து கிப்டாக வாங்காமல் சென்னையை விட்டு புறப்படுவதில்லை எனும் சபதமெடுத்து புறப்பட தயாராகுகின்றேன்!

டன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்!

முஹைதீன் மாறமாட்டார் மாறமாட்டார் இதுக்கு நான் சாட்சி
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

தமிழர்கள் அணிந்து வந்த அணிகளின் (நகைகளின் பெயர்):‍ Empty Re: தமிழர்கள் அணிந்து வந்த அணிகளின் (நகைகளின் பெயர்):‍

Post by Nisha Tue 3 Jun 2014 - 14:26

ahmad78 wrote:அப்படியாவது புறப்பட்டு வாங்க.

ஹோட்டல் ஆர்டர் மட்டும் இல்லாவிட்டால் அடுத்த வாரமே புறப்படு துபாய்க்கு வந்திருவேன் சார்.

சுவிஸிலிருந்து இந்தியா, இலங்கைக்கு துபாய் அல்லது கட்டார்தான் டான்சிட் தெரியுமா..

என்ன செய்வது நம்ம தொழிலையும் கவனிக்க வேண்டி இருக்கே.. அடுத்த வருடம் நிச்சயம் வருவோம்ல.. நான்கு வாரவிடுமுறையில் வருவோம் சாரே!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

தமிழர்கள் அணிந்து வந்த அணிகளின் (நகைகளின் பெயர்):‍ Empty Re: தமிழர்கள் அணிந்து வந்த அணிகளின் (நகைகளின் பெயர்):‍

Post by Nisha Tue 3 Jun 2014 - 14:27

பானுவின் நம்பிக்கைகண்டு மகிழ்ச்சிம்மா!
தொடரட்டும்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

தமிழர்கள் அணிந்து வந்த அணிகளின் (நகைகளின் பெயர்):‍ Empty Re: தமிழர்கள் அணிந்து வந்த அணிகளின் (நகைகளின் பெயர்):‍

Post by ahmad78 Tue 3 Jun 2014 - 14:28

வாங்க வாங்க எப்பவேன்னாலும் சொல்லிட்டு வாங்க தயாராய் இருக்கேன்.

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

தமிழர்கள் அணிந்து வந்த அணிகளின் (நகைகளின் பெயர்):‍ Empty Re: தமிழர்கள் அணிந்து வந்த அணிகளின் (நகைகளின் பெயர்):‍

Post by Nisha Tue 3 Jun 2014 - 14:30

வாங்கத்தான் வருவோம் சார்,

வாங்க என சொல்லா விட்டாலும் இனி கேட்டு க்கேட்டு வாங்கிருவோம்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

தமிழர்கள் அணிந்து வந்த அணிகளின் (நகைகளின் பெயர்):‍ Empty Re: தமிழர்கள் அணிந்து வந்த அணிகளின் (நகைகளின் பெயர்):‍

Post by rammalar Tue 3 Jun 2014 - 15:01

*_  *_
-
இவங்க எத்தனை வகை நகை அணிந்திருக்காங்க..?!
-

தமிழர்கள் அணிந்து வந்த அணிகளின் (நகைகளின் பெயர்):‍ 408080_300595633337977_172340196163522_822134_1571530102_n
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 23972
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

தமிழர்கள் அணிந்து வந்த அணிகளின் (நகைகளின் பெயர்):‍ Empty Re: தமிழர்கள் அணிந்து வந்த அணிகளின் (நகைகளின் பெயர்):‍

Post by Nisha Tue 3 Jun 2014 - 15:07

அம்மாடி!?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

தமிழர்கள் அணிந்து வந்த அணிகளின் (நகைகளின் பெயர்):‍ Empty Re: தமிழர்கள் அணிந்து வந்த அணிகளின் (நகைகளின் பெயர்):‍

Post by பானுஷபானா Tue 3 Jun 2014 - 15:23

ahmad78 wrote:வாங்க வாங்க எப்பவேன்னாலும் சொல்லிட்டு வாங்க தயாராய் இருக்கேன்.

ஆமா சொல்லிட்டு வாங்க. ஆர்டர் குடுக்க சுலபமா இருக்கும்.

வீட்டை பூட்டிக்கிட்டு போக பெரிய பூட்டுக்கு ஆர்டர்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

தமிழர்கள் அணிந்து வந்த அணிகளின் (நகைகளின் பெயர்):‍ Empty Re: தமிழர்கள் அணிந்து வந்த அணிகளின் (நகைகளின் பெயர்):‍

Post by Nisha Tue 3 Jun 2014 - 15:27

அதென்ன பானு மஞ்சள் வர்ணமேக்கப்பில் ஏதோ புரியாத மொழியில் எழுதி இருகிங்க... இது தான் முஹைதீன் உங்களிடம் சொன்ன உண்மையா?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

தமிழர்கள் அணிந்து வந்த அணிகளின் (நகைகளின் பெயர்):‍ Empty Re: தமிழர்கள் அணிந்து வந்த அணிகளின் (நகைகளின் பெயர்):‍

Post by பானுஷபானா Tue 3 Jun 2014 - 15:33

Nisha wrote:அதென்ன பானு மஞ்சள் வர்ணமேக்கப்பில் ஏதோ புரியாத மொழியில் எழுதி இருகிங்க... இது தான் முஹைதீன் உங்களிடம் சொன்ன உண்மையா?

அச்சச்சோ கண்டுபிடிச்சிட்டாங்களே *# 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

தமிழர்கள் அணிந்து வந்த அணிகளின் (நகைகளின் பெயர்):‍ Empty Re: தமிழர்கள் அணிந்து வந்த அணிகளின் (நகைகளின் பெயர்):‍

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum