சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by rammalar Yesterday at 16:08

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Yesterday at 16:01

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by rammalar Yesterday at 4:01

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by rammalar Yesterday at 3:57

» லக்கி பாஸ்கர்-படத்தின் முதல் பாடல் வெளியானது!
by rammalar Yesterday at 3:46

» நடிகர் திலீபன் புகழேந்திக்கு ஜோடியாக 5 கதாநாயகிகள்!
by rammalar Yesterday at 3:38

» `துண்டு ஒரு தடவைதான் தவறும்!' - ஹெட்டை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா
by rammalar Yesterday at 3:18

» AUS vs AFG புள்ளிப்பட்டியல் - இந்தியாவுக்கு ஆப்பு வைத்த ஆப்கானிஸ்தான்.. ஆஸி. அரை இறுதி வாய்ப்பு காலி
by rammalar Mon 24 Jun 2024 - 6:46

» அயோத்தியில் பாஜக தோல்வி எதிரொலி: ஹனுமன் கோயில் மடத் தலைவர் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்
by rammalar Mon 24 Jun 2024 - 6:40

» விண்ணிலிருந்து பூமிக்கு திரும்பும் ஏவுகலன் சோதனை வெற்றி! ISRO சாதனை!
by rammalar Mon 24 Jun 2024 - 6:35

» படித்ததில் ரசித்தது-
by rammalar Sun 23 Jun 2024 - 10:56

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...
by rammalar Sun 23 Jun 2024 - 6:27

» அப்பாவின் பாசம் - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:55

» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:52

» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Sat 22 Jun 2024 - 15:50

» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 15:18

» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Sat 22 Jun 2024 - 15:17

» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Sat 22 Jun 2024 - 15:16

» மூக்குத்தி அம்மன்- 2ம் பாகம்
by rammalar Sat 22 Jun 2024 - 15:15

» கன்னட நடிகை வீடியோவால் சைபர் கிரைம் விசாரணை
by rammalar Sat 22 Jun 2024 - 15:14

» ஆன்மிக சிந்தனை
by rammalar Sat 22 Jun 2024 - 15:12

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:10

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:09

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:08

» நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ...
by rammalar Sat 22 Jun 2024 - 12:54

» ஜூன் 22: இன்று ஓரளவு குறைந்த தங்கம் விலை!
by rammalar Sat 22 Jun 2024 - 11:30

» வீட்டை எதிர்த்து தான் கல்யாணம் பண்ணுனேன்.. நடிகை தேவயானி
by rammalar Sat 22 Jun 2024 - 11:14

» சட்னி சாம்பார் - வெப் சீரிஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 10:42

» மீனாட்சி சவுத்ரி
by rammalar Sat 22 Jun 2024 - 7:31

» பயனுள்ள வீட்டு குறிப்புகள்
by rammalar Fri 21 Jun 2024 - 19:47

» உங்க வீட்டுக்கு கருவண்டு வந்தால் என்ன நடக்கும்னு தெரியுமா?
by rammalar Fri 21 Jun 2024 - 15:12

» உலக இசை தினம்
by rammalar Fri 21 Jun 2024 - 4:47

» சர்வதேச யோகா தின வாழ்த்துக்கள்!
by rammalar Fri 21 Jun 2024 - 4:43

முதல் முயற்சியில் முழு வெற்றி! Khan11

முதல் முயற்சியில் முழு வெற்றி!

2 posters

Go down

முதல் முயற்சியில் முழு வெற்றி! Empty முதல் முயற்சியில் முழு வெற்றி!

Post by ராகவா Mon 16 Jun 2014 - 16:29

எடுத்த எடுப்பிலேயே இந்திய அரசியல் வரலாற்றில், ஒரு புதிய மைல் கல்லை நட்டு, சாதனை புரிந்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. ஒரே கல்லில் மூன்று மாங்காய்களை வீழ்த்தி, பலரை ஆச்சரியத்திலும், சிலரை அதிர்ச்சியிலும் ஆழ்த்தியிருக்கிறார்.

எப்படி?பிரதமர் மோடி தன் பதவி ஏற்பு விழாவிற்கு, 'சார்க்' நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்து, அவர்களை அதில் கலந்து கொள்ள செய்ததன் மூலம், மூன்று முக்கிய செய்திகளை உலகிற்கு வெளிப்படுத்தி இருக்கிறார்.

ஒன்று, தெற்காசிய பிராந்தியத்தில், இந்தியா தலைமை வகிக்கும் வல்லமை பெற்ற நாடு என்பதை, பாகிஸ்தான் உட்பட பிற உறுப்பு நாடுகளுக்கும் புரிய வைப்பது; இரண்டாவது, சீனாவின் கொள்கையான இந்தியாவை, அதன் அண்டை நாடுகளிடமிருந்து தனிமைப்படுத்தி, ஆசிய, பசிபிக் பகுதிகளில் தன்னை எதிர்க்க எந்த சக்தியும் இல்லை என்று, அதன் மமதையை மட்டம் தட்டுவது; மூன்றாவது, பா.ஜ., அரசின் வெளியுறவுக் கொள்கையில், அதன் தோழமைக் கட்சிகள் உட்பட எந்தக் கட்சியும் தலையிடுவதை தடுப்பது.

பிரதமர் மோடி எடுத்த, அடுத்த அதிரடி நடவடிக்கை, அயல்நாடுகளிலுள்ள வங்கிகளில், இந்தியர்களால் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் பல லட்சம் கோடி கருப்பு பணத்தை வெளிக் கொணரவும், அதில் தொடர்புடைய குற்றவாளிகளை இனம் காணவும், சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்தது.தன்முதல் அமைச்சரவை கூட்டத்திலேயே, பிரதமர் மோடி எடுத்துள்ள இந்த நடவடிக்கை, ஊழலை முழுவதுமாக ஒழிப்பதிலும், நேர்மையான ஆட்சி நடத்துவதிலும், அவர் கொண்டிருக்கும் மிகுந்த அக்கறையை காட்டுகிறது. இப்புலனாய்வு குழுவின் தலைவராக, ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.பி.ஷாவும், துணைத் தலைவராக, மற்றொரு ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி அரிஜித் பசாயத் என்பவரும் நியமிக்கப்பட்டிருப்பதும், ஐ.பி., -- ரா - சி.பி.ஐ., போன்ற புலனாய்வு பிரிவுகளின் அதிகாரிகளும் நியமிக்கப்பட்டிருப்பது இதன் சிறப்பு அம்சம். பா.ஜ., அரசின் இந்த அதிரடி நடவடிக்கை, காங்., புள்ளிகளின் வயிற்றில் புளியை கரைத்துள்ளது.

வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கருப்பு பணத்தை மீட்டு, இந்தியா கொண்டு வரவும், பணத்தை பதுக்கி வைத்திருக்கும் நபர்கள் மீது, குற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ள கோரி, மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.உச்ச நீதிமன்றம் ௨௦௧௧ ஜூலை மாதத்திலேயே, ஒரு சிறப்பு புலனாய்வு குழுவை அமைக்கும்படி, முந்தைய மன்மோகன் சிங் அரசுக்கு உத்தரவிட்டது. ஆனால், மன்மோகன் சிங் அரசு அத்தகைய சிறப்பு புலனாய்வு குழுவை அமைப்பதற்கு பதிலாக, உச்ச நீதிமன்றம் தன் உத்தரவை மறு பரிசீலனை செய்து, அதை திரும்ப பெற வேண்டும் என்று, மேல் முறையீடு செய்தது. ஆனால், உச்ச நீதிமன்றம் அந்த வேண்டுகோளை நிராகரித்து, உடனடியாக சிறப்பு புலனாய்வு குழுவை அமைக்கும்படி, மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.அத்துடன், எதிர்காலத்தில் கருப்பு பண நடமாட்டத்தை முழுவதுமாக தடுக்க, அதற்கான வழிமுறைகளை கண்டறிந்து, விரிவான ஆய்வறிக்கை தயாரிக்கும் அதிகாரத்தையும், உச்ச நீதிமன்றம், சிறப்பு புலனாய்வு குழுவுக்கு அளித்துள்ளது.

'வலுவே வழக்கு' என்பது தமிழக கிராமப்புறங்களில் வழக்கில் இருந்து வரும் ஒரு பழமொழி. எந்த பிரச்னையாக இருந்தாலும், அதில் வலுவுள்ளவனுக்கே இறுதி வெற்றி கிட்டும் என்பது இதன் பொருள். இது தனி மனிதனுக்கு மட்டுமின்றி, நாட்டிற்கும் பொருந்தும். முந்தைய காங்கிரஸ் அரசின் கையாலாகாத தனத்தின் காரணமாகவே, அண்மை காலத்தில் இந்தியா, இலங்கை, வங்கதேசம் போன்ற சின்னஞ்சிறு நாடுகளிலும் கூட, இந்தியா சிறுமைப்பட வேண்டிய பரிதாப நிலை உண்டாயிற்று. தெற்காசிய பகுதிகளில், இந்தியா வலிமையுள்ள நாடாக இருந்தும் முதுகெலும்பில்லாத காங்., தலைவர்களின் செயல்பாடுகளால் தான், இழிநிலை இந்தியாவிற்கு ஏற்பட்டது. பிரதமர் மோடியின் முதல் நடவடிக்கையிலேயே, இந்த இழிநிலை போக்கப்பட்டுள்ளது. இந்தியாவிற்கு அண்டை நாடுகளிடமும், உலக வல்லரசுகளிடமும் மதிப்பும், மரியாதையும் அதிகரித்துள்ளது.

தமிழக அரசியல் கட்சிகள், இலங்கை அதிபர் ராஜபக்ஷேவுக்கு பிரதமர் மோடி அவரது பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ள விடுத்த அழைப்பை கண்டித்து, கண்டன அறிக்கைகள் வெளியிட்டு, கண்டனக் குரல்கள் எழுப்பி, போராட்டங்கள் நடத்தின. ஏதோ இவர்கள் தான், இலங்கை தமிழர்களின் பாதுகாவலர்கள் போலவும், மோடி, இலங்கை தமிழர்களுக்கு எதிரி போலவும், தமிழக அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பொறுப்பின்றி செயல்பட்டது வேதனையை அளித்தது.
பதவியேற்பு முடிந்த கையோடு, பிரதமர் மோடி, இலங்கை அதிபர் ராஜபக்ஷேவோடு நடத்திய பேச்சு வார்த்தையின் போது, தமிழக மீனவர்கள் மற்றும் இலங்கை தமிழர்களின் பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியிருக்கிறார். இதன் மூலம் ராஜீவ் - ஜெயவர்தனே ஒப்பந்தத்தின், ௧௩வது பிரிவை அமல்படுத்துவதற்கும், இலங்கை தமிழர்கள் சிங்களருக்கு சமமான உரிமைகளை பெறுவதற்கும், தமிழர் பகுதிகளில் நடைபெற்று வரும் நிவாரணப் பணிகள் துரிதமாக நடைபெறுவதற்கும் வழிவகுத்துள்ளார்.

தமிழக அரசியல் கட்சிகளின் தலைவர்கள் நினைப்பது போல், இலங்கை தமிழர் பிரச்னைகளைத் தீர்ப்பது, ஓரிரு நாட்களில் செய்து முடிக்கும் மாயாஜால வித்தை அல்ல. அதற்கு உலக நாடுகள் மற்றும் இலங்கை அரசின் ஒத்துழைப்பும் தேவை. மோடி செயல்திறன் மிக்கவர். தான் எடுத்துக் கொண்ட எந்த முயற்சியிலும் இறுதிவரை போராடும் மன வலிமை பெற்றவர். வைகோ, கருணாநிதி, திருமாவளவன் போன்றோர், இதை புரிந்து கொள்ள வேண்டும். நடைமுறைக்கு ஒத்துவராத விஷயங்களைப் பேசி, தமிழ் சமுதாயத்தை தொடர்ந்து ஏமாற்றி வருவதை, இவர்கள் கைவிட வேண்டும்.ஆரம்பம் முதலே, தமிழக அரசியல் கட்சிகளில் பல, இலங்கைத் தமிழர் பிரச்னையை தங்களது அரசியல் ஆதாயத்திற்காகவே பயன்படுத்தி வந்துள்ளன என்பது தான், நிதர்சனமான உண்மை. ராஜபக்ஷே போர்க் குற்றவாளியா, நிரபராதியா என்று தீர்மானிக்கும் அதிகாரம், சர்வதேச நீதிமன்றத்திடம் தான் உள்ளது. இந்திய அரசிடம் இல்லை.

யதார்த்த நிலை இவ்வாறிருக்க, ராஜபக்ஷே குற்றவாளி என்று நிரூபிக்கப்படும் நாள் வரை, இலங்கையில் தமிழர் பகுதிகளில் நிவாரணப் பணிகள் எதுவும் நடைபெறக் கூடாது என்பது தான், இங்கே உள்ள அரசியல் தலைவர்களின் எண்ணம் போலும்.நாட்டின் பாதுகாப்பையும், பொருளாதார முன்னேற்றத்தையும் அமைதியான சூழலால் தான் உறுதி செய்ய முடியும். அண்டை நாடுகளுடன் மோதல் போக்கை கடைப்பிடிப்பதால், இந்தியாவுக்கு தொடர்ந்து சர்வதேச அளவில், பல துறைகளிலும் பின்னடைவைத்தான் ஏற்படுத்தும்.முந்தைய காங்கிரஸ் அரசின் தவறான வெளியுறவுக் கொள்கையால், சீரழிந்து போயிருந்த அண்டை நாடுகளுடனான உறவை சீர் செய்யவும், காங்கிரஸ் அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையால் சீரழிந்து போயிருக்கும் இந்தியப் பொருளாதாரத்தை சீர்படுத்துவதும், மோடியின் தலைமையில் உள்ள அரசுக்கு மிகப் பெரிய சவால்கள்.

எனவே, இலங்கைத் தமிழர் பிரச்னையை மட்டும் பிரதானமாக வைத்து, பா.ஜ.,வின் மத்திய அரசுக்கு நெருக்கடிகள் தருவதை, தமிழக அரசியல்வாதிகள் கைவிட்டு, பிரதமர் மோடியின் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளுக்கு ஊக்கமளிக்க வேண்டும். கட்சிகள் கொள்கைகளால் மாறுபடலாம். தேச நலனில் வேறுபட முடியாது.
ராஜபக்ஷே, நவாஷ் ஷெரீப் போன்றோரின் தந்திரங்கள், ராஜ தந்திரியான பிரதமர் மோடியிடம் எடுபடாது என்பதை, தமிழக அரசியல் தலைவர்கள் நம்பலாம்.
இ-மெயில்:Krishna_samy2010@yahoo.com

- ஜி.கிருஷ்ணசாமி- -
கூடுதல் காவல் துறை கண்காணிப்பாளர்
(பணி நிறைவு)
எழுத்தாளர், சிந்தனையாளர்
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

முதல் முயற்சியில் முழு வெற்றி! Empty Re: முதல் முயற்சியில் முழு வெற்றி!

Post by jaleelge Tue 17 Jun 2014 - 1:43

எந்தத் தந்திரங்கள், ராஜ தந்திரியான பிரதமர் மோடியிடம்

எடுபடாது என்பதை நானும் நம்புகிறேன்.
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum