சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Today at 16:18

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Today at 16:06

» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Today at 15:53

» ரசித்தவை...
by rammalar Today at 13:49

» ஆரிய பவன்
by rammalar Today at 11:33

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Today at 10:54

» இதுதான் கலிகாலம்…
by rammalar Today at 9:34

» வாசமில்லா மலரிது
by rammalar Today at 9:21

» தேனில்லா மலர்...
by rammalar Today at 9:17

» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 7:36

» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Today at 7:32

» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Today at 7:23

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Today at 6:08

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Yesterday at 19:05

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Yesterday at 18:58

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Yesterday at 18:52

» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Yesterday at 10:53

» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Yesterday at 10:30

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Sun 12 May 2024 - 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Sun 12 May 2024 - 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

சினிமாவை காப்பாற்றுங்கள்...! பிரதமர் மோடிக்கு, நடிகர் விஜய் கடிதம்!! Khan11

சினிமாவை காப்பாற்றுங்கள்...! பிரதமர் மோடிக்கு, நடிகர் விஜய் கடிதம்!!

3 posters

Go down

சினிமாவை காப்பாற்றுங்கள்...! பிரதமர் மோடிக்கு, நடிகர் விஜய் கடிதம்!! Empty சினிமாவை காப்பாற்றுங்கள்...! பிரதமர் மோடிக்கு, நடிகர் விஜய் கடிதம்!!

Post by ராகவா Thu 19 Jun 2014 - 21:43

சினிமாவை காப்பாற்றுங்கள்...! பிரதமர் மோடிக்கு, நடிகர் விஜய் கடிதம்!! NT_140619171847000000சினிமாவிற்கு விதிக்கப்பட்டு இருக்கும் சேவை வரியை நீக்கி, சினிமாவை காப்பாற்றுங்கள் என பிரதமர் நரேந்திர மோடிக்கு, நடிகர் விஜய் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய். சமீபத்தில் நடந்து முடிந்த பார்லிமென்ட் தேர்தலில், தமிழகத்தில் பிரசாரம் செய்ய மோடி வந்தார். அப்போது மோடியை, நடிகர் விஜய் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார். மேலும் அவர் தேர்தலில் வெற்றி பெற்று, பிரதமரான போது அவருக்கு வாழ்த்தும் தெரிவித்து இருந்தார். இந்நிலையில் சினிமாவை காப்பாற்ற கோரி, மோடிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது...

இந்தியாவை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல தாங்கள் எடுத்து வரும் பல அரிய திட்டங்களும், அதிரடி நடவடிக்கைகளும் பாராட்டுதலுக்குரியது. எல்லா துறையை போல சினிமாவையும் நீங்கள் நேசிப்பவர் என்பதால் இந்த கோரிக்கையை தங்களுக்கு வைக்கிறேன். சினிமா என்பது மக்களை மகிழ்விக்கும் பொழுதுபோக்கு சாதனம் மட்டும் கிடையாது, அரசுக்கு பல கோடி வருவாயை பெற்று தரும் துறையாகும். அப்படிப்பட்ட துறை கடந்த பல ஆண்டுகளாக பல பிரச்னைகளை சந்தித்து வருகிறது. பல திரையரங்கங்கள் கல்யாண மண்டபங்களாகவும், வணிக வளாகங்களாகவும் மாறி வருகின்றன.

சேவை வரியால் பாதிப்பு...

மத்திய- மாநில அரசுகளுக்கு சினிமா மூலம் பலவிதமான வரிகள் நேரடியாகவும், மறைமுகமாகவும் செலுத்தப்படுகின்றன. ஆனால் கடந்த ஆட்சியில் புதிதாக சுமத்தப்பட்ட சேவை வரியால் இந்திய சினிமா பெரிதளவில் பாதிப்படைந்துள்ளது. பல காலங்களாக இந்த தொழிலை மட்டுமே நம்பியிருந்த லட்சக்கணக்கான தயாரிப்பாளர்கள், தியேட்டர் அதிபர்கள், விநியோகஸ்தர்கள், ஏற்றுமதியாளர்கள், நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள், சின்னத்திரை கலைஞர்கள், மற்றும் கோடிக்கணக்கான தொழிலாளர்கள் என அனைவரும் பாதிப்படைந்துள்ளனர்.

கோடிக்கணக்கான தொழிலாளர் வேலை இழப்பர்...

குறிப்பாக சினிமா தொழிலில் கொடிகட்டி பறந்த பல முன்னணி நிறுவனங்களும், முக்கிய தயாரிப்பாளர்களும் நஷ்டத்தாலும் விரக்தியாலும் வேறு தொழிலுக்கு செல்லும் மற்றும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது. இதேநிலை நீடிக்குமானால் திரைப்படம் எடுக்க முதலீட்டாளர்கள் பயந்து ஒதுங்கி விடுவார்கள். இதனால் சினிமா தொழில் பாதிப்பதோடு இந்த தொழிலை நம்பியிருக்கும் கோடிக்கணக்கான தொழிலாளர்களும் வேலையில்லாத நிலைக்கு தள்ளப்படுவார்கள்.

சினிமா துறையை காப்பாற்றுங்கள்..

கடந்த ஆட்சியில் அமிதாப்பச்சன், ஷாருக்கான், சரத்குமார், மம்முட்டி, மோகன்லால், வெங்கடேஷ், பவன்கல்யாண் மற்றும் இந்திய திரைப்பட வர்த்தக சபைகளும், இந்திய தொழிலாளர்கள் சம்மேளனமும் சேவை வரியை ரத்து செய்ய போராடினார்கள். மனுக்களும் கொடுத்துள்ளார்கள். இருப்பினும் திரையுலகிற்கு எதிராக சேவை வரி உள்ளது. ஆகவே சினிமாத்துறைக்கு எதிராகவும், சினிமாத்துறையை நசுக்கி வரும் சேவை வரியை நீக்கி அழிந்து வரும் இந்திய திரையுலகை காப்பாற்றும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

உலக அரங்கில் இந்திய சினிமா முதலிடம் பிடிக்கும்...

இதன் மூலம் பல தரமான படைப்புகள் வருவதோடு உலக அரங்கில் இந்திய படைப்புகளும் பேசப்படும். மேலும் பல புதிய முதலீட்டாளர்களும், புதிய திறமையாளர்களும் இந்திய சினிமாவுக்கு வருவார்கள். உலக அரங்கில் இந்திய சினிமா முதன்மை இடத்தை பிடிக்க உற்சாகமூட்டுமாறு சக கலைஞனாக தங்களை வேண்டி கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

--தினமலர்
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சினிமாவை காப்பாற்றுங்கள்...! பிரதமர் மோடிக்கு, நடிகர் விஜய் கடிதம்!! Empty Re: சினிமாவை காப்பாற்றுங்கள்...! பிரதமர் மோடிக்கு, நடிகர் விஜய் கடிதம்!!

Post by நண்பன் Thu 19 Jun 2014 - 21:46

மோடி சார் இந்தியாவை வல்லரசாக்குங்கள் அமெரிக்காவுக்கு கடன் கொடுங்கள் அப்படியே உங்க நாட்டில் எனக்கொரு வேலைகொடுங்கள்
சினிமாவில் நடிக்க கிடிக்க


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சினிமாவை காப்பாற்றுங்கள்...! பிரதமர் மோடிக்கு, நடிகர் விஜய் கடிதம்!! Empty Re: சினிமாவை காப்பாற்றுங்கள்...! பிரதமர் மோடிக்கு, நடிகர் விஜய் கடிதம்!!

Post by rammalar Fri 20 Jun 2014 - 6:15

அரசுக்கு பல கோடி ரூபாய் வருமானம் பெற்றுத் தரும்
தொழில்...!
-
இது ஒரு அப்பட்டமான பொய்...!!!
-
தியேட்டரில் உற்பத்தி செலவுக்கு ஏற்ப டிக்கெட்
விலை நிர்ணயித்துக்கொள்ள அரசு அனுமதிக்கிறது.
-
முதல் வாரத்தில் டிக்கெட் விலை ரூ 200
அடுத்த வாரம் ரூ 100
அதற்கு அடுத்த வாரம் ரூ50
பின்னும் படம் ஓடினால் மட்டுமே டிக்கெட்டில்
அச்சாகி இருக்கும் உண்மையான விலைக்கு
ரசிகன் படம் பார்க்க முடியும்..!
-
டிக்கெட் விலை சராசரியாக ரூ 200 க்கு விற்கும்போது
அந்த விலைக்கேற்ப சேவை வரி, தமாஷா வரி
செலுத்துவதில்லை என்பதே உண்மை...!
-
சினிமாத் துறையில் இருப்பவர்கள் முதலில்
தியேட்டருக்கு மக்களை படம் பார்க்க ஈர்க்க
வேண்டும்...
-
குறைந்த கட்டணம் நிர்ணயித்தால் திருட்டு
சி.டி.யைத் தடுக்க முடியும்...
-
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24089
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

சினிமாவை காப்பாற்றுங்கள்...! பிரதமர் மோடிக்கு, நடிகர் விஜய் கடிதம்!! Empty Re: சினிமாவை காப்பாற்றுங்கள்...! பிரதமர் மோடிக்கு, நடிகர் விஜய் கடிதம்!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum