சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Today at 12:07

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Today at 9:32

» இது, அது அல்ல -(குட்டிக்கதை)- மெலட்டூம் நடராஜன்
by rammalar Today at 9:06

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Today at 3:46

» பல்சுவை-3
by rammalar Yesterday at 20:24

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Yesterday at 17:14

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Yesterday at 17:09

» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Yesterday at 17:05

» நகைச்சுவை கதைகள்
by rammalar Yesterday at 12:02

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Yesterday at 11:19

» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Yesterday at 6:26

» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Yesterday at 6:17

» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Yesterday at 5:10

» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Yesterday at 5:05

» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Yesterday at 4:34

» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Yesterday at 4:29

» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Mon 27 May 2024 - 20:32

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Mon 27 May 2024 - 18:15

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35

» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24

» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Sun 26 May 2024 - 13:04

» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Sun 26 May 2024 - 10:26

» அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அன்னதானம்..! தமிழக வெற்றிக் கழகம் அதிரடி.!!
by rammalar Sun 26 May 2024 - 10:24

» வயிறு வலிக்க சிரிக்கணுமா இந்த காமெடி-யை பாருங்கள்
by rammalar Sun 26 May 2024 - 9:42

» மனசு கஷ்டமாக இருந்தால் இந்த படத்தை பாருங்கள் கவலை பறந்து போகும்
by rammalar Sun 26 May 2024 - 9:40

» சியர்ஸ் கேர்ள்ஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
by rammalar Sun 26 May 2024 - 9:13

» முருகப்பெருமான் சாந்தமே வடிவாக
by rammalar Sun 26 May 2024 - 9:04

» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Sun 26 May 2024 - 6:11

» * வைகறையில் துயில் எழு.
by rammalar Sun 26 May 2024 - 5:57

» சென்னையில் செம மழை... ஐபிஎல் இறுதிப்போட்டி முற்றிலும் பாதித்தால் கோப்பை யாருக்கு? - ரூல்ஸ் இதுதான்!
by rammalar Sun 26 May 2024 - 5:44

» இன்பம் கொண்டாடும் மாலை இதுவே உல்லாச வேளை
by rammalar Sat 25 May 2024 - 15:43

காரிருளில் கரைசேர்க்க உதவும் கலங்கரை போன்றது கலிமா Khan11

காரிருளில் கரைசேர்க்க உதவும் கலங்கரை போன்றது கலிமா

Go down

காரிருளில் கரைசேர்க்க உதவும் கலங்கரை போன்றது கலிமா Empty காரிருளில் கரைசேர்க்க உதவும் கலங்கரை போன்றது கலிமா

Post by நண்பன் Fri 18 Feb 2011 - 15:22

காரிருளில் கரைசேர்க்க உதவும் கலங்கரை போன்றது கலிமா
இஸ்லாத்தின் அச்சாணியாக, ஆணிவேராக, சத்தியப் பிரமாணம் செய்யும் சன் மார்க்க மந்திரமாகிய கலிமாவின் அந்தஸ்தை, அதன் மகத்துவத்தை சொற்ப வரிகளுக்குள் முடக்கிவிடலாம் என முயற்சிப்பது முயற் கொம்புக்கு முடிச்சுப் போட முடியும் நிலைக்கு ஒப்பானதாகும்.

இது ஒரு பரந்து பட்ட எல்லையற்ற ஆழியை விட மிகமிக விசாலமானது. இதற்காகவே தான் இந்த உலகமும், உலகில் உண்டான வஸ்துக்களும் படைக்கப்பட்டுள்ளன. இக்கலிமாமட்டும் இல்லையென்றால்..... உலகில் எதுவுமே தோன்றியிருக்காது.

அதி அற்புதமாம் அருள் மறை அல்குர் ஆனின் அடிநாதமாக, பக்கம் பக்கமாக சுற்றிச் சுழன்று ஏகத்துவத்தின் தாகம் தீர்க்கும் கலிமாவின் கருப்பொருளாக ஒலித்துக்கொண்டிருப்பதை அதனைத் தூய எண்ணத்தோடு புரட்டிப்பார்க்கும் எவரும் எளிதில் விளங்கிக்கொள்வர்.

வணக்கத்திற்குரியோன் ஏக வல்லோனாகிய அல்லாஹ் ஜல்ல ஜலா ஹுவைத் தவிர வேறுயாரும் இல்லை என்றும், அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அவனின் திருத்தூதரும், அடியாரும் ஆவார்கள் என்ற சத்தியவாக்கை சித்தம் ஏந்தி, பக்தியோடு பவனிவருவதற்கு முக்தியாக அமைவதே இப்பொன்னான கலிமாவென்றால் அது மிகையாகாது.

இதனை உலகில் நிலை நாட்டுவதற்காகத்தான் அல்லாஹு றப்புல் இஸ்ஸத் காலத்துக்குக்காலம் நபி மார்களை , றசூல் மார்களை அனுப்பி தாம் சார்ந்த சமூகத்தவர் மத்தியில் கலிமா என்ற முத்தான சொத்தை அமானிதமாக வழங்கி இப்பணியைத் தொடக்கி வைத்தான். சூரியன் என்ற சோதியாம் கலிமாஉமுன் பனி என்ற குபிர்கள் ஒவ்வொன்றாய் ஆட்டம் கண்டு மெல்லமெல்ல தன் இருட்டு குகைக்குள் பலவீனமாகி பதுங்கத் தொடங்கின.

இப்பசுமைப் புரட்சியின் உந்துதலால்தான் சத்தியத்திற்கும், அசத்தியத்திற்கும் இடையிலான தவிர்க்க முடியாத சுமார் அறுபத்தைந்து யுத்தங்கள் நிகழ்ந்துள்ளன. இதில் அல்லாஹ்வின் தூதர் நபி(ஸல்) அவர்கள் பிரசன்னமாயிருந்த யுத்தங்கள் (கஸ்வத்) இருபத்தேழு என்றும், பிரசன்ன மாயிராத யுத்தங்கள் (ஸரிய்யத்) முப்பத்தைந்து என்றும், பிரசன்னமாகி அண்ணல் நபி (ஸல்) அவர்கள் நேரடியாகவே சமர் புரிந்த யுத்தங்கள் ஒன்பது எனவும் வரலாற்றேடுகளில் பார்க்கின்றோம்.

இக்கலிமாவை உலகில் நிலைநாட்டுவதற்கு அயராது பாடுபட்டு, உடல், பொருள், ஆவி, அனைத்தையும் அல்லாஹ்வுக்கென்றே அர்ப்பணித்து இறுதி மூச்சுவரை கலிமாவோடு போராடி உயிர் நீத்த உத்தம நபியின் சத்திய தோழர்களின் நெஞ்சை உருக்கும் சம்பவங்கள் நிறைந்த வரலாறுகளை ஏடுகளில் பார்க்கின்றோம்.

அனலெனக் கொதிக்கும் பாலைவன சுடுமணலில் தோலை உரித்து, இழுத்து வதை செய்த கல்நெஞ்சம் கொண்டோர்கள் மத்தியிலும், கொண்ட கொள்கையில் கிஞ்சித்தும் நெறிபிறழாது அல்லாஹு அஹத்... அல்லாஹு அஹத் .. என்ற கலிமாவின் தாரக மந்திரத்தை உளப்புழகாங்கிதத்தோடு உச்சரித்தவாறே வீர மரணம் எய்திய வரலாற்று நாயகராம் எங்கள் மதிப்பிற்குரிய ஹஸ்ரத் பிலால் (ரலி) அவர்களின் தியாகத்தின்முன், போலிகளின் அடாவடித்தனம் புஸ்வாணமாகிப் புதையுண்டுபோன வரலாற்றுச் சம்பவங்கள் இன்றும் எம்மவர்கள் மத்தியிலென்ன? உலகம் உள்ளவரை நினைவுகூரப்படும் என்பதில் சிறிதும் சந்தேகமே இல்லை.

இம்மேலான கலிமாவின் மேன்மை பற்றி அல்லாஹ் அல்குர்ஆனில் வர்ணிக்கும்பொழுது, ‘கலிமா தையிபாவிற்கு அல்லாஹ் எவ்வளவு அழகான உதாரணம் கூறுகிறான் என்பது உமக்குத் தெரியாதா? இக்கலிமா ஒரு உயர்தரமான மரத்திற்கு ஒப்பானது, அதனுடையவேர் பூமியினுள் உறுதியாகப்பதிந்து, சிளைகள் வானளாவ விரிந்து, வியாபித்திருக்கின்றன.

அது அவனுடைய கட்டளைப்படி அதற்குரிய காலத்தில் கனியைக் கொடுத்துக்கொண்டே இருக்கிறது. மனிதர்கள் நல்ல முறையில் விளங்கிக் கொள்வதற்காக அல்லாஹ் அவர்களுக்கு இவ்வுதாரணங்களைக் கூறுகிறான். இன்னும் தீய கலிமாவுக்கு (அதாவது, குப்ருடைய கலிமாவுக்கு உதாரணமாக பூமியின் மேல் பாகத்தில் இருந்து வேர்கள் பிடுங்கப்பட்டு அதற்கு பூமியில் உறுதியான தன்மை இல்லாத ஒரு கெட்ட மரத்தைப் போன்றதாகுமெனக் கூறுகின்றான், (அல்குர்ஆன்:14:24. 25.26) மேலும், உம்முடைய இரட்சகனின் கலிமா உண்மையாலும், நீதியாலும் பூரணமடைந்துவிட்டது


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

காரிருளில் கரைசேர்க்க உதவும் கலங்கரை போன்றது கலிமா Empty Re: காரிருளில் கரைசேர்க்க உதவும் கலங்கரை போன்றது கலிமா

Post by நண்பன் Fri 18 Feb 2011 - 15:22

(06:115) என அல்குர்ஆனில் அல்லாஹ் அழகாகப் பிரஸ்தாபிக்கின்றான். இன்னும் இக்கலிமாவின் உயர்வுக்குச் சான்றாக பின்வரும் நபிமொழி நம் சந்தைக்கு நல்ல விருந்தாக அமைகிறது. றசூலுல்லாஹ் (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ ஸஈ தினில் ஹுத்ரி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். மூஸா (அலை) அவர்கள் அல்லாஹுத ஆலாவிடம், யாஅல்லாஹ், நான் உன்னை திக்ர் செய்து உன்னை அழைக்கும்படியான ஒரு துஆவை எனக்கு நீ கற்றுத் தருவாயாக! என வேண்டியபோது, ‘லாஇலாஹ இல்லல்லாஹு என்று கூறி வருவீராக என அல்லாஹ் பதிலளித்தான்.

யாஅல்லாஹ்! உன்னுடைய அடியார்கள் அனைவரும் இக்கலிமாவைத்தானே சொல்லிக்கொண்டிருக்கிறார்கள் என்று மூஸா (அலை) அவர்கள் கூறியதும், “லாஇலாஹ இல்லல்லாஹு” என்று ஓதி வருவீராக! என அல்லாஹ் மீண்டும் கூறினான். மறுபடியும் மூஸா (அலை) அவர்கள் யா அல்லாஹ்! எனக்கு மட்டும் பிரத்தியேகமாக ஒன்றை வழங்க வேண்டும் என நான் விரும்புகிறேன் என்று கேட்டார்கள்.

அப்பொழுது, அல்லாஹ் ஜல்ல ஜலாலுஹு, மூஸாவே, ஏழு வானங்களையும் ஏழு பூமிகளையும், அதில் உண்டான வஸ்துக்களையும் தராசின் ஒரு தட்டிலும், ‘லாஇலாஹ இல்லல்லாஹ்’ என்ற கலிமாவை மறுதட்டிலும் வைத்தால் ‘லா இலாஹ இல்லல்லாஹு என்ற கலிமாவுடைய தட்டு கீழே தாழ்ந்துவிடும் என அருளினான்.

(நூல்கள், நசாயி, இப்னு ஹிப்பான்) இச்சம்பவத்தின் ஊடாக நாம் விளங்கும படிப்பினை என்ன? கலிமாவின் அபார சக்திக்கு முன்னால் எதுவும் முந்த முடியாதென்பது தெட்டத் தெளிவாகிறதல்லவா. உள்ளத்தை சுத்தப்படுத்தக்கூடியது, என்ற கருத்தில் அமைந்த ‘ஜலாஉல்குலூப்’ என்ற இக்கலிமாவின் மேன்மையை உணர்ந்த சேக்மார், ஒலிமார் இறைநேசர்கள், தான்விடும் ஒவ்வொரு மூச்சும் கலிமாவாகவே இருக்க வேண்டுமென்ற முயற்சியில் அயராது பாடுபட்டார்கள்.

நபி (ஸல்) அவர்களுடைய காலத்தில் நடந்த ஒரு சம்பவம் எல்லோரினதும் படிப்பினைக்காக இங்கு விபரிக்கப்படுகிறது. மரணத் தறுவாயில் இருந்த ஒரு வாலிபரின் நாவில் இருந்து கலிமா வெளிவர முடியாதிருந்த சம்பவம் பற்றி அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் பிரஸ்தாபிக்கப்பட்டதும் அவர்கள் அங்கு வந்து வாலிபரை அணுகி விசாரித்தார்கள்.

அதற்கு அவ்வாலிபர், யாரசூலுல்லாஹ் உள்ளத்தில் பூட்டுப் போடப்பட்டுள்ள ஒரு நிலை காணப்படுகிறது என்று கூறினார். இவரைப் பற்றி விசாரித்தறிந்ததில், இவர்தனது தாய்க்கு அதிகம் நோவினை தரக்கூடியவராக இருந்ததால், அத்தாய், அவர் மேல் அதிகம் கோபம் கொண்டிருப்பதாக அறிய வந்தது.

உடனே, உத்தம நபியவர்கள் அத்தாயை வரவழைத்து ஒரு பிரம்மாண்டமான நெருப்பை மூட்டி அதில் உன்மைகனைப் போட நீ சம்மதிப்பாயா? என வினவினார்கள். ‘இல்லை, நாயகமே! நான் சம்மதிக்கமாட்டேன், என்றதும், அப்படியானால் உன் மகன் ‘செய்த பாவத்தை மன்னித்துவிடு எனக்கூற, அத்தாய் மன்னித்துவிட்டார். அதன் பின்’, கலிமாவை மொழிவாயாக’ என அவ்வாலிபரிடம் கூறப்பட்டபோது,

நாவில் இருந்த முடிச்சு அவிழ்க்கப்பட்டு கலிமா மொழிந்ததன் காரணமாக நரக நெருப்பில் இருந்து அவ்வாலிபர் விடுதலை நபிமண (ஸல்) அவர்கள் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்திய வரலாறு ஹதீஸ் கிரந்தங்களில் காணப்படுகிறது.

மேலும், ஒரு ஹதீஸில் இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது, ‘லா இலாஹ இல்லல்லாஹ்’ உடையவர்களுக்கு அவர்களுடைய கபுறுகளிலும் மஹ்சர் மைதானத்திலும் வெருட்சி என்பது கிடையாது. அவர்கள் தங்கள் தலைகளில் ஒட்டிக்கொண்டிருக்கும் மண்ணை தட்டியவர்களாக எங்களை விட்டும் கவலையைப் போக்கி வைத்த அல்லாஹுதஆலாவுக்கே எல்லாப் புகழும் என்று கூறியவர்களாக கப்றுகளில் இருந்து எழுந்து வரும் காட்சி என் கண்முன்னே தெரிகிறது. என றசூலுல்லா (ஸல்) அவர்கள் கூறியது தபறானீ, பைஹகீ என்ற நூல்களில் பதிவாகியுள்ளது.

இன்னும் நபி ஸல் அவர்கள் சஹாபாப் பெருமக்களுடன் அமர்ந்திருந்தபோது, உஹது மலை அளவை விட நன்மை தரக்கூடிய ஒரு அமலை சொல்லித்தரட்டுமா? எனக் கேட்டுவிட்டு ‘லா இலாஹ இல்லல்லாஹு என்ற கலிமா உஹது மலையைவிட அதிக நன்மை தரக்கூடிய தென்ற அருள்வாக்கு இம்ரான் இப்னு ஹுசைன் (ரலி) அவர்கள் வாயிலாக ‘ஜம் உஸ்ஸவாயித்’ என்ற கிரந்தத்தில் வரையப்பட்டுள்ளது.

கலப்பற்ற தூய இஹ்லாசோடு கூறப்படும் இக்கலிமாவானது, நடுக்கடலில் தத்தளிக்கும் மாலுமியைக் கரைசேர உதவும் கலங்கரை விளக்காக, நாளை மறுமையில் அல்லாஹ்விடம் மன்றாடும் உற்ற நண்பனாக வந்து உதவிக்கரம் நீட்டும் என்பதில் எள்ளளவும் சந்தேகமேயில்லை.’ பற்பல சிறப்புகளைத் தாங்கியுள்ள இக்கலிமாவை அல்லாஹ் நாடியவர்களுக்கு மட்டுமே சன்மானமாக வழங்கியுள்ளான்.

உத்தம நபி (ஸல்) அவர்களை உயிரிலும் மேலாக மதித்து வளர்த்த பெரியதந்தை அபூ தாலிப், அல்லாஹ்வின் நெருக்கத்திற்குப் பாத்திரமான ஹஸ்ரத் இப்றாஹீம் நபி அவர்களின் பாசமிகுதந்தை, நபி நூஹ் (அலை) அவர்கள் உதிரத்தில் சிந்திய மகன் கண்ஆன் போன்றோர்களுக்கே கலிமா மொழியும் பாக்கியம் கிடைக்கவில்லை என்பது சிந்திக்க வேண்டிய விடயமாகும்.

இது நமக்குக் கிடைத்திருக்கிறதென்றால் அது அல்லாஹ் நம்மீது வைத்திருக்கும் பாசத்தின் பரிசாகவும் அமையலாம்.

எனவே, எம்மிடம் அமானிதமாக ஒப்படைக்கப்பட்ட விலைமதிப்பற்ற இக்கலிமாவின் பொருள் உணர்ந்து, தேவையற்ற குப்ரிய்யத்தான அனாசார அட்டூழியங்களில் இருந்து விலகி, நாம்விடும் ஒவ்வொரு மூச்சும் இறுதிவரை கலிமா என்ற கலங்கரை ஒளியில் சங்கமமாகி கரைசேர வணக்கத்திற்குரிய ஏகவல்லோனாகிய அல்லாஹ் நம்மனைவர்க்கும் நல்லருள்பாளிப்பானாக! லாஇலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர் ரசூலுல்லாஹ். (ஆமீன்)

கலாபூஷணம்
கே. எம். ஏ. அkஸ்
சாய்ந்தமருது-11


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum